தண்ணீர் சிக்கனம் சொல்லி
தவறாம எல்லாரும் இப்போ
கண்ணீர் வரவே எழுதி
கதறுராங்களே மச்சான்
உண்மையில இது சரியா
உரைத்திடுங்க என் மச்சான்
என்னத்தயெல்லாம் செஞ்சா
ஏதுவாயிருக்கும் என் மச்சான்....
சிக்கனம் எப்போ தேவை
சிந்திச்சி பாரு நீ புள்ள
இக்கணம் ஏதும் இருந்தா
இறுக்கி சுருக்கு நாம
சிக்கனமாகவே இருந்து
சீர்ப்படுத்தலாம் புள்ள
பொக்குனு ஏதுமின்றி
பேசுவது சரியா புள்ள
முக்கிய விசயமெல்லம்
முழுசாவே மறந்ததால..
பக்குவமா உனக்கு நானும்
பாட்டுல சொல்லுறேன் கேளு
வெளையும் நிலமும் வீடாக போச்சி
வான நிலையும் மாறியுமே போச்சி
கழனி போயி பாடுபட்டாலும்
கைகாசு தானே கைவிட்டு போச்சி
மாசு சேர்ந்து மக்களுக்கெல்லாம்
மாசம் புது நோய் சேர்ந்திடலாச்சு
வீசுற காத்தும் விஷமாக ஆச்சு
விஞ்ஞானம் வளர வளமை போச்சு
மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால...
நாக்கு ருசிக்கவே நல்லா தின்னு
மூக்கு துடைச்சி முகத்தை துடைச்சி
கைதுடைக்கும் மென்காகிதமுமே
மரத்த அழிச்சி செஞ்சது புள்ள
வாகனங்களும் விடுற புகையும்
வாழ்வ அழிச்சி நாள சுருக்குது
வானத்தில ஓசோன் ஓட்டையும்
வெயிலா மாறி ஆளயும் கொல்லுது
பூகம்பம் வருது பூமியும் பொங்குது
பொசுக்குன்னுதான் மக்கள சாய்க்குது
ஆகவேண்டியத செய்யலையின்னா
அவதிப்படுமே சந்ததி புள்ள
என்ன செய்யனும் ஏது செய்யனும்
எடுத்து சொல்லுங்க என்னன்பு மச்சான்
சொன்னத கேட்டு சிந்தையில் போட்டு
சந்ததிங்களுக்கு நல்லது செய்வோம்....
மண்ண சொரண்டுற வேலைய விட்டு
மரத்த வளர்க்கும் வேலையப் பாப்போம்
தண்ணீர தேக்க அணைகள் கட்டி
தரணியெல்லாம் செழிப்பா மாத்தி
உயிர் காக்கும் விவசாயம்
உயர்ந்திடவே வழிகள் செய்வோம்
சாயங்களின் கழிவு எல்லாம்
சுத்தப்படுத்தி நதியைக் காப்போம்
தாயைப்போன்ற இயற்க்கையத
தாங்கிக்காத்தா போதும் புள்ள
மாயமின்றி மந்திரமின்றி
மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!
மிச்சர்கடை
4 weeks ago
17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//தாயைப்போன்ற இயற்க்கையத
தாங்கிக்காத்தா போதும் புள்ள
மாயமின்றி மந்திரமின்றி
மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!//
நண்பா பின்னீடிங்க வரிகள் அனைத்து நச் என மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுகிறது...
நச்
வழக்குப்பேச்சில் எழுதுவது மிகவும் கடினமான கலை. அதிலும் கவிதை எழுதியிருக்கீங்கன்னா, சூப்பர்!
அண்ணே! புஷ்பவனம் குப்புசாமி ஆவியா உங்க உடம்புக்குள்ள புகுந்துட்டாரா?? ஒரே நாட்டுப்புற பாட்டா இருக்குது... :-))
நல்லாயிருக்கு... :-)
சூப்பரப்பு...
நாட்டுபுற பாடல் மாதிரியே இருக்கு..
கீப் இட் அப்
நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தமிழில் அறிவுரைகள் சொல்றது எல்லாருக்கும் ரீச் ஆவும்ணே..
அண்ணா நீங்க புஷ்பவனம் குப்புசாமிக்கு போட்டியா நாட்டுப்புறப்பாடல் எழுதலாம்...
ம்ம். நல்லாருக்கு பிரபா
அருமையான கவிதை பிரபாகர்..
நாட்டுப்புறப் பாடல் பாணி உங்களுக்கு நன்றாக வருகிறது.
இயற்கையைப் பத்தி நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு விசயமும் 100/100 உண்மை.. யார் கேட்பார்கள்?
//மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால...//
எவ்வளவு சொன்னாலும் இந்தத் தப்பைத் திரும்பத் திரும்ப செஞ்சிட்டிருக்கோம்....
எளிய நடையில் எதுகையும் மோனையும் மாறாமல் பிண்ணி பெடலெடுத்து இருகிறீர்கள்.
என்னைப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இதுபோல் எழுதினால் தான் விளங்கும்.
என்னுடைய அறிவிற்கு 1 + 1 = 2 என்று அறிவதற்கே calculator யை தேடுபவன் நான். நானெல்லாம் எங்கே நேசமித்திரன் போன்றோரது கவிதைகளை விளங்கிக்கொள்வது. அவரே ஒரு (கோனார்) உரை எழுதினால் (எளிய நடையில்) தான் உண்டு.
நீங்கள் தேவலாம். 50 % ஆவது புரிந்தது.
வாழ்த்துக்கள்.
கேபிள் சங்கர் சிங்கை வந்த போது 'டகிலாவும் ஷகிலாவும்' புக் கொடுக்காமலேயே போய்விட்டார்.
நாட்டுப்புற பட்டு ஸ்டைல்ல ஒரு நல்ல முயற்சி
//
ஈரோடு கதிர் said...
:)
//
நன்றி கதிர்...
//
Sangkavi said...
//தாயைப்போன்ற இயற்க்கையத
தாங்கிக்காத்தா போதும் புள்ள
மாயமின்றி மந்திரமின்றி
மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!//
நண்பா பின்னீடிங்க வரிகள் அனைத்து நச் என மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுகிறது...
//
நன்றி நண்பா, உங்கள் ஊக்கம் இன்னும் எழுதத் தோணுது...
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
நச்
//
நன்றிங்கய்யா...
//
சேட்டைக்காரன் said...
வழக்குப்பேச்சில் எழுதுவது மிகவும் கடினமான கலை. அதிலும் கவிதை எழுதியிருக்கீங்கன்னா, சூப்பர்!
//
நன்றி நண்பா!
//
ரோஸ்விக் said...
அண்ணே! புஷ்பவனம் குப்புசாமி ஆவியா உங்க உடம்புக்குள்ள புகுந்துட்டாரா?? ஒரே நாட்டுப்புற பாட்டா இருக்குது... :-))
நல்லாயிருக்கு... :-)
//
அவரு இன்னும் உயிரோடத்தானே இருக்காரு...
//
இராகவன் நைஜிரியா said...
சூப்பரப்பு...
நாட்டுபுற பாடல் மாதிரியே இருக்கு..
கீப் இட் அப்
//
ரொம்ப நன்றிங்கண்ணா...
//
முகிலன் said...
நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தமிழில் அறிவுரைகள் சொல்றது எல்லாருக்கும் ரீச் ஆவும்ணே..
//
நன்றி முகிலன்... ஊக்கமா இருக்கு...
//
கலகலப்ரியா said...
அண்ணா நீங்க புஷ்பவனம் குப்புசாமிக்கு போட்டியா நாட்டுப்புறப்பாடல் எழுதலாம்...
//
நன்றி சகோதரி...
//
வானம்பாடிகள் said...
ம்ம். நல்லாருக்கு பிரபா
//
ரொம்ப நன்றிங்கய்யா!
//
ச.செந்தில்வேலன் said...
அருமையான கவிதை பிரபாகர்..
நாட்டுப்புறப் பாடல் பாணி உங்களுக்கு நன்றாக வருகிறது.
இயற்கையைப் பத்தி நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு விசயமும் 100/100 உண்மை.. யார் கேட்பார்கள்?
//
நன்றி செந்தில். இதை எழுத ஊக்கம் கொடுத்தது நீங்கள்தான்...
//
புலவன் புலிகேசி said...
//மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால...//
எவ்வளவு சொன்னாலும் இந்தத் தப்பைத் திரும்பத் திரும்ப செஞ்சிட்டிருக்கோம்....
//
நன்றி புலிகேசி...
//
Punnakku Moottai said...
எளிய நடையில் எதுகையும் மோனையும் மாறாமல் பிண்ணி பெடலெடுத்து இருகிறீர்கள்.
என்னைப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இதுபோல் எழுதினால் தான் விளங்கும்.
என்னுடைய அறிவிற்கு 1 + 1 = 2 என்று அறிவதற்கே calculator யை தேடுபவன் நான். நானெல்லாம் எங்கே நேசமித்திரன் போன்றோரது கவிதைகளை விளங்கிக்கொள்வது. அவரே ஒரு (கோனார்) உரை எழுதினால் (எளிய நடையில்) தான் உண்டு.
நீங்கள் தேவலாம். 50 % ஆவது புரிந்தது.
வாழ்த்துக்கள்.
கேபிள் சங்கர் சிங்கை வந்த போது 'டகிலாவும் ஷகிலாவும்' புக் கொடுக்காமலேயே போய்விட்டார்.
//
நன்றி பாலா... என்னிடம் இருப்பதை தருகிறேன்...
//
Dr. Srjith. said...
நாட்டுப்புற பட்டு ஸ்டைல்ல ஒரு நல்ல முயற்சி
//
ரொம்ப நன்றிங்க... உங்க முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு...
//உயிர் காக்கும் விவசாயம்
உயர்ந்திடவே வழிகள் செய்வோம்
சாயங்களின் கழிவு எல்லாம்
சுத்தப்படுத்தி நதியைக் காப்போம்//
அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment