முத்து மாமாவிடம் மன்னிப்பு...

|

காலையில் எழும்போதே மனதிற்குள் ஏதோ வலி, இனம்புரியா கவலை. ஏதோ பாரமாய் அழுத்துவதாய் உண்ர்ந்தேன். ஏதும் சாப்பிடக்கூட தோன்றவில்லை. இன்று முதல் மதிய வேலை என்பதால் கிளம்பி கடமைக்கு சாப்பிட்டுவிட்டு பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.

எப்போதும் மிகச்சரியான நேரத்துக்கு வரும் பேருந்து இன்று தாமதமாய் வர இன்னமும் குழப்பம் அதிகரித்தது.

என்னவென்று புரியாமலேயே ஒரு வழியாய் அலுவலகம் சென்று சேர்ந்தவுடன் அம்மாவிடம் இருந்து அழைப்பு. மீட்டிங்கில் இருந்ததால் முடிந்தபின் அவர்களை அழைத்தேன். அவர்கள் 'பிரபு' என பேச ஆரம்பித்த விதமே ஏதோ சரியில்லாத்துபோல் தோன்ற, 'முத்து மாமா இறந்துவிட்டார்' என சொல்ல, அதிர்ந்து உறைந்தேன்.

'முத்து மாமாவா?' கிறுகிறுவென வந்தது. என் அத்தை வீட்டுக்காரர். என்மேல் அவ்வளவு பாசமாய் இருப்பார்.

ஹார்ட் அட்டாக்காம், காலையில் இட்லி சாப்பிட்டிருக்கிறார். பின் மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்து கத்தி அத்தையை கூப்பிட்டிருக்கிறார். நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்தவர், அடுத்த ஐந்தே நிமிடத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இரவு விமானத்தை பிடித்தாலும் அடுத்த நாள் பத்து மணி வாக்கில்தான் போய் சேர இயலும். அப்பாவிடம் சொன்னபோது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் வரவேண்டாம் என சொல்லிவிட்டார். மாலையே எல்லாம் முடிந்துவிடும் எனவும் சொன்னார்.

வேலையில் நாட்டமில்லை. பொங்கி வரும் கண்ணீர், அவரைப்பற்றிய நினைவுகள் என்னை முழுமையாய் ஆட்கொள்ள, அப்படியே அவரால் பீடிக்கப்பட்டு இருந்தேன்.

சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் நேரே அத்தை வீட்டுக்குத்தான். எங்கள் ஊரைவிட அது இன்னும் குக்கிராமம்.

காலையில் எழும் வரை எனக்காக காத்திருப்பார். பிரபு எழுந்துட்டியா என உற்சாகமாகி, காட்டுப்பக்கம் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

காலைக்கடன்களை முடித்து வேப்பங்குச்சியை ஒடித்து கொடுத்து, பின் கிணற்றிலோ அல்லது தண்ணீர் எடுத்துவிட்டு தொட்டியிலோ குளித்துவிட்டு, அங்கிருக்கும் அந்த ஊரின் ஒரே கடைக்கு என்னை அழைத்துச்செல்வார். டீயினை ஸ்பெசல்-ஆக போடச் சொல்லுவார்.

காலையில் சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விளையாடிவிட்டு மாலை காட்டுக்கு வரச்சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.

அவர் வயதொத்த நண்பர்களுக்கெல்லாம் என்னை அறிமுகம் செய்துவைப்பார். நிறைய கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை எனக்கு தெளிவாக சொல்லுவார். கோவில் திருவிழாக்களில் செய்யும் முறைகளைப்பற்றி விளக்கமாக சொல்லுவார்.

அத்தையிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் சமைக்கச் சொல்லுவார். நுங்கு, இளநீர், கடலை என எல்லாம் கொண்டுவந்து தருவார். அவர் தந்த ஊக்கத்தில் தான் மரமேறவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக்கொண்டேன். அந்த வயதில் என் வயதொத்த நண்பர்களுடன் கூட அவ்வளவு நெருக்கமாய் இருந்தது கிடையாது.

சில வருடங்களுக்கு முன் அவரின் உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டும் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. வீட்டிற்கு வந்தபோது போனில் அழைத்தேன். நிறைய நேரம் பேசியதோடு மட்டுமல்லாமல் இருவருமே அழுதோம். அவருக்கென்று தனியே மொபைல் வைத்திருப்பதாய் அறிந்து அழைத்தேன். நிறைய அறிவுறைகள் சொன்னார்.

'வெளிநாட்டுல இருந்து என்னடா பண்றே, இங்க வந்து தாய் புள்ளங்களோட இருக்காம' என சொல்லிவிட்டு, 'நான் செத்தா வருவேல்ல' என பொசுக்கென கேட்டார்.

'என்ன மாமா இப்படி கேக்குறீங்க'ன்னு கேட்டதற்கு, 'இல்லடா, உன் வேலை போக்குவரத்து எப்படியோ, வர முடியிதோ இல்லையோ' என சொன்னார்.

'அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா! கண்டிப்பா வருவேன், உங்களுக்கும் ஒன்றும் ஆகாது' என சொன்னேன்.

இன்று அவர் சொன்னது போல்தான் ஆகியிருக்கிறது. என்மேல் மிகப்பிரியமாயும், என் நலனில் மேல் அதீத அக்கறையும் கொண்ட, உண்மையான பாசத்தை செலுத்தியவர்களுல் ஒருவரான என் முத்து மாமா இன்று இல்லை.

இன்று மானசீகமாய் மன்னிப்பு கேட்கும் நான், அவரிடம் கண்டிப்பாய் இன்னுமொருமுறை கேட்பேன் என் பணி முடித்து இப்பூவுலகை விட்டு சென்று அவரை சந்திக்கும்போது. (அவ்வாறெல்லாம் இருந்தால்...)

21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

உங்கள் மாமாவுக்கு அஞ்சலிகள்

உங்களுக்கு ஆறுதல்கள் பிரபா

தராசு said...

மாமாவுக்கு அஞ்சலிகள் பிரபாகர்.

நெருங்கிய உறவின் இழப்பு என்பது வேதனி மிகுந்தது. சீக்கிரம் ஆறுதல் அடைய பிரார்த்திக்கிறேன்.

vasu balaji said...

மாமாவுக்கு அஞ்சலிகள். இத்தனை நேசம் வைத்திருக்கும் உங்களுக்கு வார்த்தைகள் ஆறுதலாகாது. ஆயினும், ஏற்றுக் கொள்ளுங்கள் பிரபா.

நர்சிம் said...

வருத்தமாக இருக்கிறது பிரபாகரா.

கலகலப்ரியா said...

sorry anna..

சங்கர் said...

Sorry anne

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ...

Unknown said...

அனுதாபங்கள்

Unknown said...

ரொம்ப வருத்தமா இருக்கு..

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.. உங்களுக்கு என் ஆறுதல்கள்.

Paleo God said...

பிரார்த்தனையும், ஆறுதல்களும் பிரபா..

VR said...

நெஞ்சு ரொம்ப கனமாயிடுச்சு அண்ணே. உங்கள் மாமா உங்களுடன் உணர்வு பூர்வமாக என்றும் இருப்பார்.

நாகராஜன் said...

மாமாவுக்கு எனது அஞ்சலிகள்... உங்களுக்கு எனது ஆறுதல்கள் பிரபாகர். வருத்தப்படாதீங்க... உங்களுக்கு அவரது நினைவுகள் என்றும் துணை நிற்கும். நம்மளை மாதிரி நாடு விட்டு நாடு வந்து இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி மனது வருத்தமான சம்பவங்கள் ரொம்பவே இருக்குதுங்க... இதே மாதிரி ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது... காலம் எல்லா மனக்கவலைகளையும் களைந்து விடும்...

க ரா said...

மனசு ரொம்ப கனமாயிடுச்சு. அவரின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்திகிகிறேன்.

Ramesh said...

மாமாவுக்கு இதய அஞ்சலிகள். உங்களுக்கு ஆறுதல்மொழிகள் ஆயிரம்...
உணர்வு மனசுக்குள்

PPattian said...

என் அஞ்சலிகள்..

Chitra said...

பிரியமான இழந்து தவிக்கும் உங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். உங்கள் மாமாவுக்கு அஞ்சலி.

Henry J said...

unga blog romba nalla iruku

High Definition Youtube Video Download Free

visit 10 to 15 Website and EARN 5$

CineMa Tickets Booking Online

புலவன் புலிகேசி said...

மாமாவிற்கு என் அஞ்சலிகள் அண்ணா...உங்கள் பாசம் அவருக்குத் தெரிந்திருக்கும்...

settaikkaran said...

மிகவும் உருக்கமான பதிவு! மாமாவுக்கு அஞ்சலிகள்!!

பிரபாகர் said...

உங்களின் ஆறுதல்கள் என் மனப்பாரத்தை நிறையவே குறைத்திருக்கிறது. ஆறுதல் சொன்ன அனைத்து அன்பு இதயங்களும் என் அன்புகலந்த நன்றி...

பிரபாகர்...

ரோஸ்விக் said...

மாமாவுக்கு அஞ்சலிகள்.

அவரை பிரிந்து வாடும் உங்களுக்கும், அத்தையின் குடும்பத்திற்கும் என் ஆறுதல்கள் அண்ணா.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB