பதிவர்கள் பட்டிமன்றம்...மூன்றாம் நாள்...

|

(படிக்காதவங்க முதல் மற்றும் இரண்டாம் நாளை படிச்சிட்டு வந்துடுங்களேன்)

(பொன்னாத்தாள் ஒரு மிடறு மினரல் வாட்டரை ஸ்டைலாக குடித்துவிட்டு)

ஆளப்பாத்து எடைபோடக்கூடாதுங்கறதுக்கு உதாரணமா நம்ம சேட்டை சும்மா கலக்கியிருக்காரு. எங்கண்ணன் பேசினதையும், சேட்டை பேசினதையும் கவுன்ட்டர் அட்டாக் செஞ்சி பேசப்போறது சினிமா சீர்படுத்துகிறதுங்கற அணியோட தலைவர், நம்ம வானம்பாடிகள் பாலா சார். வாங்க சார், வந்து உங்க சிஷ்யருங்கள டரியலாக்குங்க..

(பாலாண்ணே, பிரபா பாவம்..., கொஞ்சம் கம்மியா - கதிர்)

எல்லோருக்கும் வணக்கம்... உண்மைய சொல்லப்போனா நான் எதிர் அணியில் இருந்திருக்க வேண்டியவன் ரோர்க், டொமினிக் பாத்திரத்தை கேரி கூப்பரும் பேட்ரிஷியா நீலும் நடிச்சி பார்த்திருக்காம இருந்தா! அவர்களின் முதல் சந்திப்பில் டோமினிக்கின் கண்களைப் பார்த்து மயங்கி உங்களுக்கும் இடுகையில் காண்பித்து மயங்க வைத்திருக்கிறேன். அந்த படத்தை இன்று வரை எத்தனை தடவை பார்த்திருப்பேன் தெரியுமா? எண்ணுவதற்கு இங்கிருப்போரின் கை கால் விரல்கள் கூட பத்தாது.

(அண்ணே நம்மாளுங்களுக்கு புரியற மாதிரி லோக்கல் படங்களையும் சொல்லலாம்லே - மணிஜீ)

காதலைப்பத்தி பிரபா நிறைய எழுதியிருக்காப்ல, அதுக்கு என்னோட இடுகையிலயே அவர் மண்புழுவ பம்புன்னு காமிச்சி பல்பு வாங்குனத பதிலா சொல்லியிருக்கேன். இருந்தும் அவரு திருந்தின மாதிரி தெரியல. எங்கள் அணியில் இருக்கும் கேபிள் இன்னிக்கும் யூத்துன்னு சொல்லி எல்லாத்தயும் நம்பவெச்சிகிட்டிட்ருக்காரு, அதுக்கு காரணம் அவரு சீர்படுத்துத்துங்கற அணியில இருக்கிறதாலதான். அதே சமயம் பிரபா தன்ன மார்க்கண்டேயன்னு சொன்னாலும் நம்பத்தயாரா இல்ல, காரணம் சீரழிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டு மேக்கப் பண்ண தெரியாததால!

(இப்படியெல்லாம் ஒர் ரகசியம் இருக்கா - பிரபா)

எங்க அணிய சேர்ந்த தண்டோரவின் அதீத ரசிப்புத்தன்மையைப் பாராட்டி அகில உலக ரீமா ரசிகர் மன்றத்துல இருந்து பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள்.. இது ஒன்றே போதாதா சினிமா சீர்ப்படுத்துகிறது என்பதற்கு? மணிஜீக்கு கிடைத்த புகழ் எதிர் அணியினருக்கு ஏன் கிடைக்கவில்லை? காரணம் இளமையை ரசித்து என்றும் இளமையாய் இருக்க அவர்களுக்கு தெரியவில்லை.

(அண்ணே நானும்தான் ஸ்ரேயா வெறியன் - சேட்டை)

அதோ அங்கிருக்கும் சேட்டை அருகிலிருக்கும் பிரபாவிடம் நானும் ஸ்ரேயா ரசிகன் என சொல்வது என் காதில் கேட்கிறது. அவ்வாறு சொல்பவர் சினிமாவால் அரசாங்கத்துக்கு வருமானமில்லாததால் சீரழிவு என்கிறார், அரசாங்கமே ஒரு சினிமா என்பது புரியாமல்.

(பலத்த கைத்தட்டல்... அடிச்சாரு பாருய்யா! நெத்தியடி.. - மணிஜீ)

பீர் சாப்பிடுவதைப் பற்றி விலாவாரியாக சொல்கிறார் சேட்டை. புரட்சித்தலைவரின் படங்களைப் பார்த்திருப்பாரானால் மதுவைப்பற்றி பேசியிருப்பாரா?

(அப்புறம் ஏய்யா நீ சரக்கடிக்கிற? - கேபிள் மணீஜீயிடம்)

சினிமாவில நாற்பது வயசுக்கு மேலத்தான் ஹீரோக்கள், ஸ்கூல், காலேஜுக்கு போறாங்க. இத பார்த்துட்டு பக்கத்து வீட்டிலிருக்கு ராமாமிர்தம், தனக்கு ஐம்பது வயதுங்கறதையும் மறந்து ஜீன்ஸ் டி-ஷர்ட்டோட ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்க சென்று வந்தார். நடுவர் பிரியா கூட சினிமாவினை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார் என்பதை கூடுதலாக சொல்லி, என்றும் இளமையாய் இருக்க வைக்கும் சினிமா சமுதாயத்தை சீர்படுத்துகிறது என்பதை எனது அணியின் சார்பார் அறுதியிட்டு கூறி விடைபெறுகிறேன், வணக்கம்...

(சினிமா போயிட்டு தலைவலின்னு தானே எழுதியிருந்தேன்? - ப்ரியா)

அருமையா பாலா சார் சொல்லியிருக்கிறார். இதுக்கெல்லாம் எப்படி நம்ம கதிரு கசியவிட்டு கதிகலங்க வெக்கிறாருன்னு பார்ப்போம், வாங்க கதிர்...

(கண்ணாடியை மெதுவாய் சரி செய்து, அரங்கத்தை, எல்லோரையும் ஐந்தாறு வினாடிகள் மவுனமாய் ஒரு முறை பார்த்து வர, போதும் கதிர் மௌனத்தை கசியவிடுங்க - ப்ரியா)

எல்லோருக்கும் வணக்கமுங்கோ. வானம்பாடிகள் அண்ணே சினிமா இளமையா இருக்க உதவுதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டதா நினைச்சிட்டு போயிருக்காருங்க. எத்தனை சினிமாக்கள் மோசம்னு அவரு என்கிட்ட போன்ல சொல்லியிருக்காரு தெரியுங்களா? அவரு பார்த்த ஒரு படம் சூப்பரா இருந்துங்களாம், நானும் நேத்து ஒரு படத்த பார்த்துட்டு சிலாகிச்சி எழுதுன மாதிரி.

(இப்போதான் படம் பாத்து எழுத ஆரம்பிச்சிருக்காரு... விளம்பரம் - கேபிள்)

அதுக்காக ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி, ஒரு படத்த வைத்து சினிமாவை பதம் பார்க்க முடியுங்களா? கேபிள் சொன்னது போல் சினிமா சோறு இல்லங்க, கொத்து பரோட்டா. இத ஞாபகத்துல வெச்சுக்குங்கண்ணா!

நான் போன வாரம் பெங்களூர் போயிருந்தேனுங்க. வழியில கார் ரிப்பேர் ஆகி படாத பாடுபட்டுகிட்டிருப்ப ரொம்ப பசிச்சதுங்க. பக்கத்துல இருந்த ஒரு ரோட்டோரக் கடையில் கொத்து பரோட்டா சாப்பிட்டுட்டு அதில் பட்ட அவஸ்தை எனக்குத்தானுங்க தெரியும். எல்லா கடை கொத்து பரோட்டாவும் சுகாதாரமான முறையில் செய்யப்படறதில்லைங்க, அதுமாதிரிதான் சினிமாவும்.

(அரங்கம் அதிர கைத்தட்டல்... அப்படி போடு அருவாள - ப்ரியா)

(அதான் இடுகையே ஒரு வாரத்துக்கு இல்லையா? - வானம்பாடிகள்)

காதலுக்கு கண்ணில்லைன்னு எல்லா சினிமாவிலும் சொல்றாங்களே, கண் தானம் செய்யனும்னு ஏனுங்க சொல்றதில்ல? இதிலிருந்தே தெரியல சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறதுன்னு?

(அட இங்கயுமா? - மணிஜீ)

ஒரு பாட்ல பெரிய ஆளா மார்றத சினிமாவில் காட்றத உண்மைன்னு நம்பி, எத்தனை பேர் பாட்ட கேட்டுகிட்டே இருக்காங்க, அதால எவ்வளவு வாய்ப்புங்களை இழக்கிறாங்க தெரியுங்களா? புள்ளிவிவரமெல்லாம் வேணும்னா நாளைக்கு சொன்றேனுங்க.

(எப்பா தப்பிச்சோம் - கேபிள்)

(பாட்டு கேக்கறதோட ரகசியம் இதுதானா - சேட்டை)

தனி மனிஷங்கள துதிபாடறத என்னிக்குமே கண்டிக்காம இருந்ததில்லைங்க. மணிஜீ ரீமாதான் அழகுன்னு சொல்றது மற்றவங்களையெல்லாம் அழகில்லன்னு சொல்ற மாதிரி தானுங்கோ அர்த்தம்?

எனவே பிரபா, சேட்டை சொன்ன மாதிரி காதலை கொச்சைப்படுத்தற, அரசாங்கத்துக்கு இம்மியளவும் பிரயோஜனமில்லாத சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது, சீரழிக்கிறதுன்னு சொல்லி, நல்ல தீர்ப்ப கொடுங்கன்னு கேட்டுகிட்டு மணியடிக்கறதுக்கு முன்னாலயே முடிச்சிக்கிறேனுங்க..., நன்றி... வணக்கம்.

(பலத்த கைத்தட்டல், மணியடிக்க மறந்ததை சொன்னவுடன், சட்டெனெ மணியினை எடுத்து அடித்த நடுவர் பொன்னாத்தாள் தனது இறுதி முடிவினை அறிவிக்கத் தொடங்குகிறார்)

முடிவ உடனே சொல்லிட முடியுமா? பொன்னாத்தாளின் பொன்னேட்டில் பதிக்கும் முடிவோட கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடலாம்...

18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

:)). யப்பா. விட்டா ப்ராக்ஸி போடுவீங்க போல. நல்லா வந்திருக்கு. கலக்குங்க:))

பழமைபேசி said...

விடாதீங்க...தொடர்ந்து கலக்குங்க..

இரும்புத்திரை said...

செமையா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

போட்டு தாக்கு... போட்டு தாக்கு...

விடாதீங்க... போட்டு தாக்குங்க..

இதில அண்ணன் பழமைபேசியும், தல ஆரூரானும் இருந்திருந்தா இன்னும் கள கட்டியிருக்கும்.

settaikkaran said...

யெப்பா! சந்தடி சாக்குலே எல்லாரையும் போட்டு இப்படி கலாய்க்கிறீங்களே சாமீ! :-))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பிரபாகர்.. இந்த ரூட்டும் நல்லாத்தான் இருக்கு. தொடருங்க.. :)

துபாய் ராஜா said...

அடைப்புக்குறிக்குள் இருப்பது எல்லாம் அசத்தல். அனைவரது பேச்சும் கற்பனை கலக்கல்.

Unknown said...

சூப்பர்

sathishsangkavi.blogspot.com said...

நண்பா....

எல்லாத்தையும் போட்டு இந்தத் தாக்கு தாக்கறீங்க......

கலக்கல்....

எல்லாரும் பாவம்.... ஆனா விட்றாதீங்க....

நேசமித்ரன் said...

//கேபிள் சொன்னது போல் சினிமா சோறு இல்லங்க, கொத்து பரோட்டா.//

தூள் கிளப்பிறீங்க தொடருங்க ....

:)

புலவன் புலிகேசி said...

செம கலாசல்..கலக்குங்க தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Chitra said...

சூப்பர்

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
:)). யப்பா. விட்டா ப்ராக்ஸி போடுவீங்க போல. நல்லா வந்திருக்கு. கலக்குங்க:))
//
நன்றிங்கய்யா!

//
பழமைபேசி said...
விடாதீங்க...தொடர்ந்து கலக்குங்க..
//
நன்றிங்கண்ணா!

//
இரும்புத்திரை said...
செமையா இருக்கு.
//
நன்றி அர்விந்த்!

பிரபாகர் said...

//
இராகவன் நைஜிரியா said...
போட்டு தாக்கு... போட்டு தாக்கு...

விடாதீங்க... போட்டு தாக்குங்க..

இதில அண்ணன் பழமைபேசியும், தல ஆரூரானும் இருந்திருந்தா இன்னும் கள கட்டியிருக்கும்.
//
அடுத்தாப்ல பாத்துக்குவோங்கண்ணா!

//
சேட்டைக்காரன் said...
யெப்பா! சந்தடி சாக்குலே எல்லாரையும் போட்டு இப்படி கலாய்க்கிறீங்களே சாமீ! :-))
//
நன்றி சேட்டை நண்பா!

//
ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பிரபாகர்.. இந்த ரூட்டும் நல்லாத்தான் இருக்கு. தொடருங்க.. :)
//
நன்றிங்க செந்தில், அன்பிற்கு, ஆதரவுக்கு...

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
அடைப்புக்குறிக்குள் இருப்பது எல்லாம் அசத்தல். அனைவரது பேச்சும் கற்பனை கலக்கல்.
//
நன்றிங்க ராஜா...

//
முகிலன் said...
சூப்பர்
//
நன்றி தினேஷ்...

//
Sangkavi said...
நண்பா....

எல்லாத்தையும் போட்டு இந்தத் தாக்கு தாக்கறீங்க......

கலக்கல்....

எல்லாரும் பாவம்.... ஆனா விட்றாதீங்க....
//
நன்றிங்க நண்பா! முடிஞ்ச அளவுக்கு!

பிரபாகர் said...

//
நேசமித்ரன் said...
//கேபிள் சொன்னது போல் சினிமா சோறு இல்லங்க, கொத்து பரோட்டா.//

தூள் கிளப்பிறீங்க தொடருங்க ....

:)
//
நன்றி நேசமித்ரன்...

//
புலவன் புலிகேசி said...
செம கலாசல்..கலக்குங்க தல
//
நன்றி புலிகேசி...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-)))
//
நன்றிங்கய்யா!

//
Chitra said...
சூப்பர்
//
நன்றிங்க சித்ரா...

சிநேகிதன் அக்பர் said...

கலக்கலோ கலக்கல்.

நல்ல நகைச்சுவை.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB