எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்

|

ஊர்ல அந்த மூனு பேருக்கும் வியாக்கியானம் பேசறதுதான் வேலை. அவங்களுக்கு ஒரு குறை இருந்துச்சி, அது தூரத்துல இருக்கிறத சரியா பாக்க முடியாது.

எப்பவும் ஒருத்தரவிட இன்னொருத்தர் பெரிய ஆளுன்னு வியாபிக்கிறதுல மும்மரமா இருப்பாங்க. உதாரணமா பாத்தீங்கன்னா, ஒரு நாளு ஒருத்தர் 'அதோ மலையில வெள்ளை கலர்ல யானையை தெரியுது' ன்னு சொன்னாரு.

இன்னொருத்தர் உடனே, 'ஆமா அதுக்கு கருப்பா ரெண்டு தந்தம் இருக்குது' ன்னாரு'. மூனாவது ஆளு 'கரெக்ட், நெத்தியில பாருங்க புள்ளியா கருப்பா ஒரு மச்சம் கூட இருக்கு' ன்னாரு.

இப்படியெல்லாம் பேசினாலும் படு விவரமான ஆளுங்க. இவங்களுக்கு தெரியாத ஊர் விஷயமே இருக்காது. நுனி விரல்ல வெச்சுருப்பாங்க.

ஊர்ல இருக்கிறவங்களுக்கு கண்பார்வை பத்தி அரசல் புரசல தெரியும், ஆனா கேக்க பயம். ஏதாச்சும் அதப்பத்தி கேக்கப்போனா அவங்களோட மைனஸ் பாய்ண்ட எடுத்துவிட்டு பேச விடாம செஞ்சிடுவாங்க.

உதாரணமா ஒருத்தர் ஏதோ கேக்கப்போக , 'உன் கொழுந்தியாளுக்கு பக்கத்து தெருவில இருக்கிறவனோட தொடர்பாமே' ன்னு கேக்க அதுக்கப்புறம் கேட்டவரு அங்க இருந்திருப்பாருங்கறீங்க?

ஊருக்காரங்களுக்கு இவங்களுக்கு எப்படி மணி கட்டறதுன்னு தெரியல. ஆனா தானாவே அதுக்கான சமயமும் வந்துச்சி.

முப்பது வருஷத்துக்கு அப்புறமா சிவன் கோவில புதுப்பிச்சி கும்பாபிஷேகம் நடத்த இருந்தாங்க. விழாவ நல்லா சிறப்பா செஞ்சி கோபுர உச்சில ஒரு கல்வெட்டு பதிக்க இருந்தாங்க.

இதுதான் சமயம்னு, எல்லார் முன்னாடியும் கல்வெட்டில இருக்கிறத படிச்சு கண் பார்வை கூர்மைன்னு நிரூபிக்கனும்னு மூனு பேரும் முடிவு பண்ணினாங்க.

மொத ஆளு சிற்பி வீட்டுக்கு போனாரு. நைசா சிற்பிகிட்ட கல்வெட்டில என்ன எழுதியிருக்குன்னு சொல்லு நூறு ரூபா தர்றேன்னு கேட்டாரு. சிற்பி நூற வாங்கிட்டு 'சிவமயம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.

கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ஆளு வந்தாரு. சிற்பி 'வாய்யா கல்வெட்டில என்னா எழுதியிருக்கிறேன்னு தெரியனுமா' ன்னாரு.

திகைச்சி போய் பாக்க, 'இல்ல இப்போதான் ஒருத்தர் கேட்டுட்டு போறாரு' ன்னாரு. இரு நூறா கொடுத்து, 'வேற எதாச்சும் எழுதியிருந்தா சொல்லு' ன்னு கேட்க,

'மேல பொடிசா 'ஓம்' னு எழுதியிருக்கேன்' னு சொன்னாரு.

அதே மாதிரி மூனாவது ஆளும் பணம் கொடுத்து கல்வெட்டில கீழ இருக்கிற 'சிற்பி சோமு' ங்கறத தெரிஞ்சிட்டாரு.

கும்பாபிஷேகம் நல்லபடியா முடிஞ்சது. எல்லாத்தையும் கை தட்டி மொத ஆளு கூப்பிட்டாரு.

'இங்க பாருங்க, என்னோட கண் பார்வை பயங்கற கூர்மைன்னு நிரூபிக்கிறேன்' னு சொல்லிட்டு,

மேல உத்து பாத்துட்டு, 'ஆகா என்ன அழகா சிவமயம்னு எழுதியிருக்கு' ன்னு சொல்லிட்டு கன்னத்துல போட்டுட்டாரு.

ரெண்டாவது ஆள், 'அதென்னா பெருசா, அதுக்கு மேல சின்னதா ஓம்னு எழுதியிருக்கு பாருங்க' ன்னாரு.

மூனாவது ஆள், 'அட போங்கப்பா இதெல்லாம் பெருசா, எல்லத்துக்கும் கீழ பொடிசா சிற்பி சோமுன்னு அழகா எழுதியிருக்கு' ன்னு சொன்னாரு.

ஊர்மக்கள் ஆச்சர்யப்பட்டு பலமா கை தட்டி, 'உங்களோட கண்பார்வை பயங்கர கூர்மைன்னு ஒத்துக்கறோம், ஆனா ஒரு விஷயம், அந்த கல்வெட்ட அங்க இன்னும் பதிக்கவே இல்ல' ன்னாங்க...

கொஞ்சம் மாறுதல்களோட மீள் பதிவு..

9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நர்சிம் said...

ம்ம். கலக்குங்க பிரபா..

Anonymous said...

hahahahahahaha

nalla iruku....

Veliyoorkaran said...

நன்றி அண்ணன்...உங்க பின்னூட்டத்த கவனிக்காம அந்த பதிவையே டெலிட் பண்ணிட்டேன்..கூடிய சீக்கிரம் பார்ப்போம் அண்ணேன்..!

Veliyoorkaran said...

நீங்க பெரிய மனுஷன் அண்ணேன்...!!

ரோஸ்விக் said...

//எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்//

நான் இங்கேயே படிச்சது தான்... ரொம்ப நாளைக்கு முன்னாடி...

பையன் போட்டோ எல்லாம் கலக்கலா இருக்குது... :-)

ரோஸ்விக் said...

வெளியூரு நீ எங்க ராசா இருக்கே?? இப்புடி சுத்தல்ல விடுரே...??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. நிசமாவே நீங்க பிரபாகர்தானா?..
கலக்குறீங்க..

பிரபாகர் said...

//
நர்சிம் said...
ம்ம். கலக்குங்க பிரபா..
//
நன்றி நர்சிம்...

//
Sachanaa said...
hahahahahahaha

nalla iruku....
//
நன்றிங்க!

//
Veliyoorkaran said...
நன்றி அண்ணன்...உங்க பின்னூட்டத்த கவனிக்காம அந்த பதிவையே டெலிட் பண்ணிட்டேன்..கூடிய சீக்கிரம் பார்ப்போம் அண்ணேன்..!
//
கண்டிப்பா! அந்த நாள எதிர்பார்க்கிறேன்...

//
Veliyoorkaran said...
நீங்க பெரிய மனுஷன் அண்ணேன்...!!
//
ஆஹா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்க!

//
ரோஸ்விக் said...
//எங்கேயோ படிச்சது - கண்பார்வையும் கல்வெட்டும்//

நான் இங்கேயே படிச்சது தான்... ரொம்ப நாளைக்கு முன்னாடி...

பையன் போட்டோ எல்லாம் கலக்கலா இருக்குது... :-)
//
மீள்ஸ்தானே! நன்றி ரோஸ்விக்!

//
ரோஸ்விக் said...
வெளியூரு நீ எங்க ராசா இருக்கே?? இப்புடி சுத்தல்ல விடுரே...??
//
புடிச்சிடுவோம், சீக்கிரம்...

//
பட்டாபட்டி.. said...
சார்.. நிசமாவே நீங்க பிரபாகர்தானா?..
கலக்குறீங்க..
//
நன்றி பட்டா, சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க!

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா. அருமை.அருமை.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB