லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...
சங்கர் நாராயண் - (நம்ம கேபிள் அண்ணா தாங்க!))
(இந்த புத்தகத்தினை ஆன்லைனில் வாங்க இங்கே அழுத்தவும்...)
முத்தம்:
ஒரு எண் மாறி அழைப்பதால் வரும் அபயக்குரலோடு ஒரு பெண்ணின் குரல். அந்த பெண்ணை சந்தித்து அவளின் துயரை எப்படி போக்குகிறான் என்பது தான் இச் சிறுகதை. மாடலாகவேண்டும் எனும் மோகத்தால் எப்படி ஒரு பெண் சீரழிகிறாள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதை அழ்காய் சொல்லியிருக்கிறார். படிக்கும் நமக்கு ஒரு பரபரப்பு... முத்தம், படித்தபின் நமது பிரியமானவரிடம் கிடைத்தார்போல் உணர்வு.
லெமன் ட்ரீயும்..இரண்டு ஷாட் டக்கீலாவும்...
தெரியாத நாளையைப் பற்றி எண்ணாமல் தெரிந்த இன்றைய பொழுதை அனுபவி எனும் கருத்தில் இக் கதை. இதை கதையில் வரும் அந்த நபரே சொல்ல்வதாய் வைத்திருக்கிறார். சந்தோஷம் என்றால் என்ன என்பதையும் அதற்கு வயது ஒரு தடையில்ல என்பதையும் தனது குறும்பான வர்ணனைகள், நவீன கலாச்சாரத்தின் நிகழ்வுகளோடு சொல்லியிருக்கிறார்.
கல்யாணம்...
முதிர் கண்ணனை பற்றிய கதை (முதிர் கன்னிக்கு எதிர்ப்பதம் என்னங்க?) கொஞ்சம் விரசமாயிருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாய் சொல்லி, திட்டி சாத்துவதன் மூலம் இறுதியில் முடிவை உணர்த்திவிடுகிறார்.
ஆண்டாள்...
சிறுவயதுமுதல் ஆண்டாளின் மேல் அசாத்திய அன்பு, ஆறுவருடம் தொடர்பறுந்து பார்க்கும் ஒரு நாள், பேசி கிடைக்கும் அவமானத்தால், ஆண்டாள் இல்லை என சொல்ல, ஆண்டாள்தான் என தெரிந்தாலும் ஆண்டாளாய் இருக்கக்கூடாது என எண்ணுகிறோம் கதை நாயகனைப்போல நாமும். எதார்த்தமான ஒரு கதை.
ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ்...
ஒரு அழகான காதல் கதை, இரண்டாவது கிளைமாக்ஸ் தேவையில்லை என்பேன். மெலிதாய் ஆரம்பித்து, காதலை சொல்லுவதாய் வைத்து அழகாய் ஒரு திருப்பம்.
தரிசனம்...
சாமியார்கள் செய்யும் தகிடுதித்தங்கள்... புரிந்தாலும் அமைதியாய். கணவன் மனைவியை வைத்து அழகாய் சொல்லியிருக்கிறார்..
போஸ்டர்...
சினிமா திரைக்கதை போன்று, ஒரு சீரியல் போஸ்டர் படுத்தும் பாட்டை வைத்து பல கோணங்களின் நகரும் கதை...
துரை...நான்...ரமேஷ் சார்...
சினிமா மோகத்தால் சீரழிந்த ஒரு பெண்ணின் கதையை காதலோடு துவக்கி, கட் பண்ணுவதில் முடிக்கிறார். முடிவு கொஞ்சம் அதிர்ச்சியாய்த்தான் இருக்கிறது. நம்பியவர்களின் வஞ்சகம் எதையும் செய்ய வைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். அந்த பெண்ணின் மேல் பரிதாபமாய் வருகிறது.
என்னை பிடிக்கலையா...?...
அதீத அன்புக்காக ஏங்கும் ஒரு பணக்காரனின் மனைவி. ஆரம்பத்தில் காதலியாய் இருந்தபோது கிடைத்த எல்லாம் திருமணத்திற்குப்பின் கணவன் பிசினஸில் ரொம்ப பிஸியாக கிடைக்காமல் போக, வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் ரமேஷோடு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதன் பிண்ணனியிலான கதை, வித்தியாசமான ஒரு கோணத்தில்.
காமம் கொல்...
சாமியார்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கதையின் மூலம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளைஞன். அவனைத்தேடி வரும் குடும்ப சாமியார் (அவர்தான் அவனுக்கு பெயர் வைத்ததாய் சொல்கிறார்). காமத்தை அடக்குவது பற்றி பேசி, முடிவில்... படித்துப்பாருங்கள்.
ராமி...சம்பத்...துப்பாக்கி...
இதில் தலைப்பில் உள்ள மூன்றும்தான் முக்கிய கதாபாத்திரம் இந்த கதையில்... கடைசியில் அவள் அவனை அணுக, தற்கொலை செய்து கொள்ள தூண்ட காரணம்... என எல்லாத்தையும் நம் யூகத்துக்கு யூத் விட்டு விட்டு விடுகிறார்.
மாம்பழ வாசனை...
ஒருவனின் அதீத காதலும், யதார்த்தமாய் ஒரு பெண்ணைப்பற்றியும் மாம்பழ வாசனையோடு... கடைசியாய் எப்படி காத்திருக்கிறான் என படியுங்கள்...
நண்டு...
எழுதியதில் ரொம்ப..... பிடித்த கதை. கணவருக்கு பிளட் கேன்சர்... அதை அறிந்த மனைவியின் மனநிலை. ரொம்பவும் சென்சிடிவான கணவர் எப்படி எதிர்கொள்வார் என பதபதைப்பு, கடைசி பாராவில் பதில் சொல்லியிருக்கிறார்.
இவை யாவும் நான் படித்து உணர்ந்து எழுதியவை. படித்துப் பாருங்களேன், உங்களுக்கும் ஒத்துப்போகிறதாவென...
மிச்சர்கடை
4 weeks ago
20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
விமரிசனம் நல்லாருக்கு பிரபா.
e-book irukkaa
குடுகுடுப்பை said...
e-book irukkaa
rippeeeetteeey
ம் நான் முன்னமே விமர்சித்து விட்டேன் அண்ணா...
ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
வெல் செட் பிரபா அண்ணே..
// குடுகுடுப்பை said...
e-book irukkaa //
வேலை அதிகமாக இருப்பதால் பிரபா அண்ணன் ஈ ஓட்டுவதில்லையாம். அதனால் ஈ புக் இல்லை என சொல்லச் சொன்னார்.
இராகவன் நைஜீரியா said ,
//வேலை அதிகமாக இருப்பதால் பிரபா அண்ணன் ஈ ஓட்டுவதில்லையாம். அதனால் ஈ புக் இல்லை என சொல்லச் சொன்னார்.//
Blog / பின்னூட்டம் போடறேதே வேலை இல்லாம ' ஈ ' ஓட்டும் போது தானே தலைவரே.
புத்தகம் வேண்டும் அண்ணா...
இன்னொரு புத்தகம் இனி கேபிளார் போட்டாத் தான் விமர்சனம். :-)
நன்றி பிரபா..
ரோஸ்விக் அடுத்த முறை பாலா வரும் போது கொடுத்தனுப்புகிறேன்.
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
Anna Very nice.
நல்ல விமரிசனம் !!
இப்பதான் படிச்சீங்களோ... விசர்சனம் தூள்... அண்ணா....
ஒவ்வொரு கதையும் உங்க பார்வையில சிறப்பாவே இருக்குங்க தலைவரே....
வாங்கிப் படித்து விட வேண்டியது தான்! விமர்சனம் ட்ரைலர் மாதிரி விறுவிறுப்பு!
//
வானம்பாடிகள் said...
விமரிசனம் நல்லாருக்கு பிரபா.
//
நன்றிங்கய்யா...
//
குடுகுடுப்பை said...
e-book irukkaa
//
லின்க் கொடுத்திருக்கேன்...
//
முகிலன் said...
குடுகுடுப்பை said...
e-book irukkaa
rippeeeetteeey
//
நானும்...
//
புலவன் புலிகேசி said...
ம் நான் முன்னமே விமர்சித்து விட்டேன் அண்ணா...
//
படித்திருக்கிறேன் புலிகேசி, நன்றி...
//
இராகவன் நைஜிரியா said...
ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
வெல் செட் பிரபா அண்ணே..
//
நன்றிங்கண்ணே!
//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
e-book irukkaa //
வேலை அதிகமாக இருப்பதால் பிரபா அண்ணன் ஈ ஓட்டுவதில்லையாம். அதனால் ஈ புக் இல்லை என சொல்லச் சொன்னார்.
//
ஆஹா, நன்றிங்கண்ணே!
//
Punnakku Moottai said...
இராகவன் நைஜீரியா said ,
//வேலை அதிகமாக இருப்பதால் பிரபா அண்ணன் ஈ ஓட்டுவதில்லையாம். அதனால் ஈ புக் இல்லை என சொல்லச் சொன்னார்.//
Blog / பின்னூட்டம் போடறேதே வேலை இல்லாம ' ஈ ' ஓட்டும் போது தானே தலைவரே.
//
ஆகா, என்ன ஒரு விளக்கம்!
//
ரோஸ்விக் said...
புத்தகம் வேண்டும் அண்ணா...
இன்னொரு புத்தகம் இனி கேபிளார் போட்டாத் தான் விமர்சனம். :-)
//
சீக்கிரம் போட்டிடுவார்...
//
Cable Sankar said...
நன்றி பிரபா..
ரோஸ்விக் அடுத்த முறை பாலா வரும் போது கொடுத்தனுப்புகிறேன்.
//
நன்றிங்கண்ணா...
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
//
நன்றிங்கய்யா...
//
suresh said...
Anna Very nice.
//
நன்றி சுரேஷ்...
//
தேவன் மாயம் said...
நல்ல விமரிசனம் !!
//
ரொம்ப நன்றிங்க!
//
VELU.G said...
இப்பதான் படிச்சீங்களோ... விசர்சனம் தூள்... அண்ணா....
//
இடுகையிலயே படிச்சாலும் ரெண்டாவது தடவையா படிச்சி எழுதினேன்...
//
க.பாலாசி said...
ஒவ்வொரு கதையும் உங்க பார்வையில சிறப்பாவே இருக்குங்க தலைவரே....
//
நன்றி இளவல்...
//
சேட்டைக்காரன் said...
வாங்கிப் படித்து விட வேண்டியது தான்! விமர்சனம் ட்ரைலர் மாதிரி விறுவிறுப்பு!
//
நன்றி நண்பா, அவசியம் படியுங்கள்...
Post a Comment