காலையில ஒரே சத்தம், 'ஐயோ பாம்பு கடிச்சிடுச்சி'ன்னு. எல்லாரும் ஒடி பார்த்தோம். பக்கத்து வீட்டு ஆயா மாட்டு தொழுவத்த சுத்தம் செய்யறப்போ கால்ல கடிச்சிடுச்சி.
சின்ன பையன்னு என்ன கிட்ட விடல. உடனே என்னோட அர்னாகயித்த(அரைஞான் கயிறு) அவுத்து கொடுத்து கடிச்சதுக்கு மேல இருக்க கட்ட சொன்னேன். சின்னப்பையன் சொல்றான்னு கூட பாக்காம மாமா வாங்கி பட்டுன்னு நல்லா இறுக்கி மொழங்காலுக்கு கீழ கட்டிட்டாரு.
குடிக்கிறது நீசத்தண்ணி(நீராகாரம்) கொடுத்தாங்க. நல்லா பேசிகிட்டு இருந்தாங்க. கடிச்ச இடத்துல கிழிச்சி வாய வெச்சி ரத்தத்த உறிஞ்சி துப்பனும்னு சொன்னேன்.
மாமா என்ன செய்யின்னு சொல்ல, கரும்பு தின்னு வாயில கிழிச்சி புண்ணு இருக்கு, புண்ணு இல்லாதவங்கதான் செய்யனும்னு சொன்னேன். கட்டு போட்டதே தேவையில்ல, ஏதோ சொன்னேன்னு பண்ணினேன், சும்மா கம்முனு இருன்னுட்டாரு.
அந்த பாம்ப கண்டுபிடிச்சி அடிச்சிட்டாங்க, கருப்பா மெலிசா என் கையில ஒரு மார் அளவுக்கு இருந்துச்சி. கொஞ்ச நேரத்துல ஒரு பூசாலி(பூசாரி) வந்தாப்ல. மந்திரம் பாடமெல்லாம் போட்டு கயித்த அவுத்துடுங்க, எல்லாம் சரியாப்போச்சின்னாரு. கொஞ்ச நேரத்துல அந்த ஆயா சவமா போச்சி.
எதுத்தாப்புல இருந்த மரத்துல அந்த பூசாலிய பொணத்த எடுக்கிற வரைக்கும் கட்டிபோட்டு வெச்சிருந்தாங்க. பக்கத்துலையே அந்த கடிச்ச பாம்ப கிளையில கட்டி தொங்க விட்டிருந்தாங்க.
*****
வெள்ளிக்கிழம சாயங்காலம், பள்ளிக்கூடம் விட்டதும் குஷியா ரெண்டுநாள் லீவுங்கறதால ரோட்டாரமா பாட்டுப்பாடி புளியம்பழம் பொறுக்கிக்கிட்டு ஒரு கழியில எங்க பையெல்லாம் கோத்து ஆளுக்கு பக்கமா வீதம் போட்டு தூக்கிகிட்டு வந்தோம். அப்போ ஊருக்கு முன்னால இருக்கிற ஏரிக்கர ஓரமா கொஞ்சம் கும்பல் இருந்துச்சி. எல்லாரும் ஹே...ன்னு கத்திகிட்டு ஒடி பார்த்தோம்.
ஒரு குறவரு பாம்ப வெச்சி வேடிக்க காட்டிக்கிட்டிருந்தாரு. விரல் மெலிசுதான் இருந்துச்சி, வயிறு நடுவில உப்பி போயி, சின்னோண்டு நல்லப்பாம்பு அது, எலியினை முழுங்கிட்டு நகர முடியாம மெதுவா ஊர்ந்துகிட்டு இருந்துச்சி. சுத்திலும் நாங்களும் சேர இன்னும் கூட்டம் அதிகமாச்சு.
சின்ன குச்சியில தலையில தட்டினாரு. சட்டுன்னு கோவம் வந்து படமெடுத்து கொத்தவந்துச்சி. குட்டிப்பாம்புன்னாலும் படம் எடுத்து சீறும் போது பயமா இருந்துச்சி... அது கலைச்சிப்போற வரையிலும், எங்களுக்கு அலுத்துப்போற வரைக்கும் வேடிக்க காமிச்சாரு.
கடைசியா, 'இன்னிக்கு வெள்ளிக்கிழம நான் அடிக்கமாட்டேன், யாரவது ஒருத்தரு அடிச்சிக் கொல்லுங்க' ன்னு சொல்ல ஏற்கனவே 'பாம்புன்னா எனக்கு பயமே இல்லடி' ன்னு கத விட்டதால பசங்க எல்லாரும் என்ன பாக்க குச்சிய வாங்கி வழியில்லாம கண்ண முடிகிட்டு ஒரே அடி, சுருண்டு விழ அதுக்கப்புறம் எல்லாரும் மாத்தி மாத்தி அடிக்க பாம்பு ஒரு வழியாச்சு...
வீட்டுக்கு வந்து பெருமையா சொல்ல, பாட்டி ஒரே திட்டு, 'வெள்ளிக்கிழமையும் அதுவுமா இந்த மாதிரி பண்ணிட்டு வந்திருக்கியே' ன்னுட்டு 'பாம்ப புடிக்கிற கொறவன் வெள்ளிக்கிழம அடிக்கமாட்டானாம், இவரு அடிப்பாராம், அறிவு வேணாம்? கருமம், கருமம்....'ன்னு இன்னும் அதிகமா திட்டி, குளிக்க சொல்லி ஒரு மாசத்துக்கு பாம்பு புத்துக்கு பால் ஊத்த சொல்லி படுத்தி எடுத்துச்சி...
*******
மாமா பொண்ண பயங்கரமா லுக் விட்டுகிட்டிருந்தாலும் நம்மள அது கண்டுக்கறதே இல்ல. வாய தொறந்து ஒரு வார்த்தை பேசாது. ஒருநாள், மாமா வீட்டுல பக்கத்துல ஏதோ பரபரப்பா இருக்க, அதுக்கு காரணம் ஒரு பெரிய நல்லப்பாம்புன்னு தெரிஞ்சது. நான் ஹீரோ கணக்கா வேகமா ஒடி பாக்க, தெரியாம வீட்டுக்குள்ள புகுந்த பாம்பு ஒன்னு நல்லா பிலிம் காட்டிகிட்டு இருந்துச்சி.
உடனே ஒரு பெரிய குச்ச எடுத்துகிட்டு போய் அடிக்கிறேன் பேர்வழின்னு பாம்புக்கு மேல பிலிம் காட்டிகிட்டு இருந்தேன். ஓடு கட்டத்துல பாம்பு சர்ருன்னு வெளியே போக, ஒளிய இடமில்லாம வீட்டு ஓரமா போயிகிட்டிருந்துச்சி. நாம அடிக்கிற அடி பாம்பைத் தவிர எல்லா இடத்துலயும் பட்டுகிட்டு இருந்துச்சி.
தறியில வேலை பாக்குற ராமு ஒடி வந்து என்ன ஒதுங்க சொல்லிட்டு, கிடந்த ஒரு சின்ன குச்ச வெச்சி அது தலையில ஒன்னு போட, குச்சி முறிஞ்சி ஸ்கேல் சைசுக்கு ஆயிடுச்சி. பாம்பு நல்லா படமெடுத்து ஆட ஆரம்பிச்சிடுச்சி.
கடிக்க வர்றதையும் பொருட்படுத்தாம துணிச்சலா அந்த சின்ன குச்சால அடிச்சி கொன்னாப்ல. எல்லாரும் அவர பாராட்ட, நம்ம பேர சொல்லி. 'ரொம்பவும் துணிச்சலா அடிக்க முயற்சி பண்ணினாப்ல' ன்னு அத்த சொல்ல, 'அடிச்சது யாரு' ன்னு நம்மாளு நக்கலா கேட்டு சிரிச்சுது... அடிச்ச ராமு வழக்கம்போல பாம்ப காசு போட்டு எரிச்சி ஒரு வாரம் புத்துக்கு பால ஊத்துனாப்ல.
*****
ரொம்ப வருஷத்துக்கு முன்னால பையன், மனைவியோட கடைத்தெருவுக்கு போயிருந்தேன். ஒரு பாம்பாட்டி பாம்ப வெச்சி பயங்கரமா வித்தை காட்டிகிட்டிருந்தார். படமெடுத்து ஆட, விஷ முறிவுக்கு மருந்து என விற்பனை ஜோரா போயிகிட்டிருன்தது. பாம்பு கடிச்சா அதோட கடிவாய்ல வெச்சா போதும். வேற வைத்தியமே தேவையில்லன்னு சொல்லி கிட்டிருந்தாப்ல. யாராவது துணிச்சல் இருக்கிறவங்க பாம்புகிட்ட கைய நீட்டுங்கன்னு சொல்ல, சட்டுன்னு கைய நீட்டினேன்.
பாம்பு கடிக்கவும் இல்ல, விஷத்த முறிக்கவும் இல்ல. காரணம்? உங்களுக்கு நல்லா தெரியுமே!
மிச்சர்கடை
4 weeks ago
33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
ஓஓஒ. நீங்கதான் ஸ்னேஏஏஏஏஏஏஏஏஏஏக் பிரபாகரோ:)). நல்லாருக்கு அலப்பறை
சூப்பர் கமெண்ட் பாலாண்ணே :) அந்த பாட்டி நிலைமை தான் :(
பாம்ப அடிச்சா பால் ஊத்தி புதைக்கணு வெள்ளிகிழமை அடிக்ககூடாது இதெல்ல ஊர்ல இன்னும் ஓடிட்டுதான் இருக்கு சார் ...
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ....
பிரபாகரைக் கண்டால் பாம்பே நடுங்கும்....
எப்பூடி !!!
நல்லவன்
சிங்கை கருப்பு
நல்லா சொன்னாங்கைய்யா பாம்புக் கதை......
:-))))
:)
இங்கிட்டு சிங்கப்பூரில் லேகியம் விக்கிறவங்க ரப்பர் பாம்புகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மலேசியாவில் உயிர் பாம்புகளை வைத்திருப்பார்கள்.
சிங்கையில் விலங்குகளை பொது இடத்தில் வைத்திருக்க தடை இருக்கிறது. :)
பிரபா சொன்னதை மிஸ் பண்ணிட்டீங்களே..:(
கேபிள் சங்கர்
பாலா சார் கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு..:)))
---
ஆனா நான் பாம்ப (நல்ல பாம்போ கெட்ட பாம்போ) அடிக்க மாட்டேங்க.:)))
பாம்படி சித்தர்-னு ஒரு போர்டு வச்சு புதுத் தொழில் தொடங்கிறலாம்...
பாம்பைக் கண்டா ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பயப்படுறாரு...! (எனக்கும் ரொம்ப பயங்க). பதிவிலே பாம்புன்னு பார்த்ததுமே பயந்து கணினியை விட்டு எட்டி உட்கார்ந்துகிட்டேன்.
/புத்துக்கு பாம்பு ஊத்துனாப்ல. //
பால்??
ஆமா கடைசியில எதுக்கு பாம்பு உங்களைக் கடிக்கலை?
ஹிஹி...
||ஒரு வாரம் புத்துக்கு பாம்பு ஊத்துனாப்ல.||
பாம்பா பாலா... இல்ல பாலா சாரை இல்ல... இல்ல சாரைன்னு நான் பாம்பை சொல்லலை.... அட ச்சை... இதாம்பா இந்த டமிலோட ப்ராப்ஸ்... ஸ்னேக்கா மில்க்காண்ணா..?
உங்க வாழ்க்கைல எத்தனை பாம்பு விளையாடி இருந்திருக்கு :)
//பாம்பு கடிக்கவும் இல்ல, விஷத்த முறிக்கவும் இல்ல. காரணம்? உங்களுக்கு நல்லா தெரியுமே!//
ஏனுங்க, நான் பதிவுக்குப் புதுசுங்க. கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க. நீங்க நல்லா எழுதுறீங்க. அப்புறம் "அவுங்களுக்கு"க் கல்யாணம் ஆயிருச்சா? :))
எங்கிட்டயும் நிறைய பாம்ம்புக் கதை அனுபவம் இருக்கு...
@பிரபாகர்
ஒன்னு போட, குச்சி முறிஞ்சி ஸ்கேல் சைசுக்கு ஆயிடுச்சி. பாம்பு நல்லா படமெடுத்து ஆட ஆரம்பிச்சிடுச்சி.
//
பயமேயில்லாம அடிச்சிருக்கீங்க.
அதுக்குத்தாம் பெரியவக சொல்லுவாக, ‘இளக்கன்று பயமறியாது’னு..
கலக்குங்க..
’கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..’, இது பட்டாபட்டி சொல்வது..
நண்பரே...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
@Sangkavi said...
நண்பரே...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
//
நல்ல வேளை தலைவா..
நானும் கூட ஏன்னையதான் அழைக்கிறீங்கனு நினச்சுகீடு பேண்ட் போட்டுகிட்டு இங்க ப்ளாக் வந்தேன்..
அப்புறம் பார்த்தா, நீங்க கூப்பிட்டது, நம்ம பிரபாகர் அண்ணாச்சிய
அப்பாடி.. நான் தப்பிச்சேன்..
//வானம்பாடிகள் said...
ஓஓஒ. நீங்கதான் ஸ்னேஏஏஏஏஏஏஏஏஏஏக் பிரபாகரோ:)). நல்லாருக்கு அலப்பறை//
;)கலக்கல்
நல்லா கெளப்பறீங்க பீதியை.....
எனக்கும் நிறைய பாம்பு அடிச்ச/அடிக்குறத பார்த்த அனுபவம் இருக்கு. படிக்குறப்போ(பாம்புங்குற வார்த்தைய) திகிலா இருக்கு.
குழந்தை மிஸ்டர் பீன் பார்த்துகிட்டிருக்குது.நான் ஸ்னேக் பிரபாகர் பார்த்துகிட்டிருக்கேன்.சிரிப்பு வர
குழந்தை வொய் யுர் லாபிஃங்?நான் மீண்டும் உரக்கச் சிரிக்க குழந்தை மீண்டும் வொய் யுர் லாபிஃங்க்:)
சார் பாம்பை பத்தி நிறைய தவறான கருத்துக்கள் உலாவிக்கிட்டு இருக்கு , சரி ஒரு கேள்வி... பாம்பு முட்டை போடுமா இல்லா குட்டி போடுமா ?
பதில் சொல்லுங்க . (முடிந்தால் ப்ளீஸ் என்னோட ப்ளாக்கு வந்து )
//
வானம்பாடிகள் said...
ஓஓஒ. நீங்கதான் ஸ்னேஏஏஏஏஏஏஏஏஏஏக் பிரபாகரோ:)). நல்லாருக்கு அலப்பறை
//
நன்றிங்கய்யா!
//
ச.செந்தில்வேலன் said...
சூப்பர் கமெண்ட் பாலாண்ணே :) அந்த பாட்டி நிலைமை தான் :(
//
கண்ணு முன்னாலயே ஆள் காலியானது இன்னும் நினைச்சா மனசு கனக்குது!
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
பாம்ப அடிச்சா பால் ஊத்தி புதைக்கணு வெள்ளிகிழமை அடிக்ககூடாது இதெல்ல ஊர்ல இன்னும் ஓடிட்டுதான் இருக்கு சார் ...
//
ஆமாம் ஜெய்... நன்றி...
//
Karuppu said...
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ....
பிரபாகரைக் கண்டால் பாம்பே நடுங்கும்....
எப்பூடி !!!
நல்லவன்
சிங்கை கருப்பு
//
நன்றி கருப்பு தம்பி...
//
தராசு said...
நல்லா சொன்னாங்கைய்யா பாம்புக் கதை......
//
நன்றிங்கண்ணா!
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-))))
//
நன்றிங்கய்யா!
//
கோவி.கண்ணன் said...
:)
இங்கிட்டு சிங்கப்பூரில் லேகியம் விக்கிறவங்க ரப்பர் பாம்புகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மலேசியாவில் உயிர் பாம்புகளை வைத்திருப்பார்கள்.
சிங்கையில் விலங்குகளை பொது இடத்தில் வைத்திருக்க தடை இருக்கிறது. :)
//
நன்றிங்கண்ணா!
//
shortfilmindia.com said...
பிரபா சொன்னதை மிஸ் பண்ணிட்டீங்களே..:(
கேபிள் சங்கர்
//
சாரிங்கண்ணா! அடுத்தமுறை கண்டிப்பாய் மிஸ் பண்ணாமல்...
//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பாலா சார் கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு..:)))
---
ஆனா நான் பாம்ப (நல்ல பாம்போ கெட்ட பாம்போ) அடிக்க மாட்டேங்க.:)))
//
கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான்...
//
ரோஸ்விக் said...
பாம்படி சித்தர்-னு ஒரு போர்டு வச்சு புதுத் தொழில் தொடங்கிறலாம்...
//
நல்ல ஐடியாவா இருக்கே!
//
சேட்டைக்காரன் said...
பாம்பைக் கண்டா ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பயப்படுறாரு...! (எனக்கும் ரொம்ப பயங்க). பதிவிலே பாம்புன்னு பார்த்ததுமே பயந்து கணினியை விட்டு எட்டி உட்கார்ந்துகிட்டேன்.
//
நன்றி நண்பா....
//
முகிலன் said...
/புத்துக்கு பாம்பு ஊத்துனாப்ல. //
பால்??
ஆமா கடைசியில எதுக்கு பாம்பு உங்களைக் கடிக்கலை?
//
சஸ்பென்ஸ்....
//
கலகலப்ரியா said...
ஹிஹி...
||ஒரு வாரம் புத்துக்கு பாம்பு ஊத்துனாப்ல.||
பாம்பா பாலா... இல்ல பாலா சாரை இல்ல... இல்ல சாரைன்னு நான் பாம்பை சொல்லலை.... அட ச்சை... இதாம்பா இந்த டமிலோட ப்ராப்ஸ்... ஸ்னேக்கா மில்க்காண்ணா..?
//
சாரி.... திருத்திட்டேன்....
//
சின்ன அம்மிணி said...
உங்க வாழ்க்கைல எத்தனை பாம்பு விளையாடி இருந்திருக்கு :)
//
ஆமாங்க... எல்லாம் பாசிடிவ்...
//
அக்கினிச் சித்தன் said...
//பாம்பு கடிக்கவும் இல்ல, விஷத்த முறிக்கவும் இல்ல. காரணம்? உங்களுக்கு நல்லா தெரியுமே!//
ஏனுங்க, நான் பதிவுக்குப் புதுசுங்க. கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க. நீங்க நல்லா எழுதுறீங்க. அப்புறம் "அவுங்களுக்கு"க் கல்யாணம் ஆயிருச்சா? :))
//
யோசிங்க நண்பா, மெயில்ல அனுப்பறேன், மெயில் பண்ணுங்க prabhagar@gmail.com
//
புலவன் புலிகேசி said...
எங்கிட்டயும் நிறைய பாம்ம்புக் கதை அனுபவம் இருக்கு...
//
எழுதுங்க புலிகேசி!
//
பட்டாபட்டி.. said...
@பிரபாகர்
ஒன்னு போட, குச்சி முறிஞ்சி ஸ்கேல் சைசுக்கு ஆயிடுச்சி. பாம்பு நல்லா படமெடுத்து ஆட ஆரம்பிச்சிடுச்சி.
//
பயமேயில்லாம அடிச்சிருக்கீங்க.
அதுக்குத்தாம் பெரியவக சொல்லுவாக, ‘இளக்கன்று பயமறியாது’னு..
கலக்குங்க..
’கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..’, இது பட்டாபட்டி சொல்வது..
//
நன்றி நண்பா!
//
Sangkavi said...
நண்பரே...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
//
கண்டிப்பா!
//
பட்டாபட்டி.. said...
@Sangkavi said...
நண்பரே...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
//
நல்ல வேளை தலைவா..
நானும் கூட ஏன்னையதான் அழைக்கிறீங்கனு நினச்சுகீடு பேண்ட் போட்டுகிட்டு இங்க ப்ளாக் வந்தேன்..
அப்புறம் பார்த்தா, நீங்க கூப்பிட்டது, நம்ம பிரபாகர் அண்ணாச்சிய
அப்பாடி.. நான் தப்பிச்சேன்..
//
விடமாட்டோமில்ல, அடுத்ததில கோத்துவிடுவோம்ல!
//
நர்சிம் said...
//வானம்பாடிகள் said...
ஓஓஒ. நீங்கதான் ஸ்னேஏஏஏஏஏஏஏஏஏஏக் பிரபாகரோ:)). நல்லாருக்கு அலப்பறை//
;)கலக்கல்
//
நன்றி தல...

துபாய் ராஜா said...
நல்லா கெளப்பறீங்க பீதியை.....
//
நன்றி ராஜா!
//
ஜீவன்பென்னி said...
எனக்கும் நிறைய பாம்பு அடிச்ச/அடிக்குறத பார்த்த அனுபவம் இருக்கு. படிக்குறப்போ(பாம்புங்குற வார்த்தைய) திகிலா இருக்கு.
//
ரொம்ப நன்றிங்க!
//
ராஜ நடராஜன் said...
குழந்தை மிஸ்டர் பீன் பார்த்துகிட்டிருக்குது.நான் ஸ்னேக் பிரபாகர் பார்த்துகிட்டிருக்கேன்.சிரிப்பு வர
குழந்தை வொய் யுர் லாபிஃங்?நான் மீண்டும் உரக்கச் சிரிக்க குழந்தை மீண்டும் வொய் யுர் லாபிஃங்க்:)
//
உங்க பின்னூட்டத்த ரொம்ப ரசிச்சேன்... நன்றிங்க!
//
மங்குனி அமைச்சர் said...
சார் பாம்பை பத்தி நிறைய தவறான கருத்துக்கள் உலாவிக்கிட்டு இருக்கு , சரி ஒரு கேள்வி... பாம்பு முட்டை போடுமா இல்லா குட்டி போடுமா ?
பதில் சொல்லுங்க . (முடிந்தால் ப்ளீஸ் என்னோட ப்ளாக்கு வந்து )
//
விளக்கியாச்சு, நன்றி மங்குனி...
நல்லா இருக்கு, பிரபாகர். நீட்டுன கையில் மை வெச்சுத் தாயத்து கட்டிக் காசு பார்க்காம உட்டானே. சொல்லியுள்ள விதம் அருமை. நன்றி.
Post a Comment