நாட்டு நடப்பு பாட்டுல!

|

(நாடோடி மன்னனில் வரும்
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி...
எனும் மெட்டில் படிக்கவும் (அ) பாடிப் பார்க்கவும்....)

ஒரிஜினல் பாட்டு இங்கே...

சும்மா கிடந்த மக்களையெல்லாம்
சோம்பலை போக்க சேனலில
சாமிகதைய படமா போட்டு
சலிக்காம திரும்ப திரும்ப
சன் டிவியில பரபரப்பா
காட்டுனாங்களே புள்ள
எல்லாம் தெரிஞ்சிடுச்சி
இப்போ எல்லாம் புரிஞ்சிடுச்சி

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

பாட்டு சேர்த்து படத்த போட்டு
மூஞ்சியையெல்லாம் நல்லா காட்டி
டெம்போவ ஏத்தி, டென்ஷன ஏத்தி
நீலப்படத்த விலைக்கு விற்கும்
நக்கீரன் செய்கின்ற நாறப் பொழைப்பினிலே
பொய்யும் வெளுக்கிற நேரம்
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

பத்திரிகை தொழில் செய்யறவனும்
பாதை மாறிடக்காரணம் என்ன மச்சான்
அவன் பணத்துக்காக பாவ புண்ணியம்
பாக்கததால் வரும் தொல்லையடி
நல்ல விஷயங்கள் நம்மை சேர்ந்திட இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் பேசி பேசி வேலைக்கு ஆகாது
டிவி பாக்காம இருப்போமடி
கேளிக்கையாய் வரும் குமுதம் போன்ற
கேவலங்களை வாங்குதலும் இனி பாவமன்றோ
நல்ல செய்தி விட்டு கெட்டதை தரும்
எல்லாத்தையும் விட்டால் நல்லதடி
பத்திரிக்கை டிவி பாழ்படுத்தினால்
மக்களின் நிலை என்ன மச்சான்
எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு
எண்ணி வருந்தி மாறுவாரடி..

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
மக்களை ஏமாத்தும் கூட்டம்
மானங்கெட்ட இந்த கூட்டம்
வெக்கங்கெட்ட இந்த கூட்டம்
வீணாக்கும் இந்த கூட்டம்
வீணாப் போகுமிந்த கூட்டம்!

                    (சும்மா கிடந்த...)

18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

நான் இதை மதிப்பு மிக்க பதிவாக கருதுகிறேன். ஆஹா. அபாரம்.:))))). சூப்பர். கொன்னுட்டீங்க. அசத்தல். சான்ஸே இல்லை. எங்கயோ போயிட்டீங்க. எப்புடி ப்ரபா இப்படியெல்லாம்.
(ங்கொய்யால. ஒழுங்கு மருவாதியா எனக்கும் இப்படி பின்னூட்டம் போட்டு ஓட்டு குத்தியாவணும். 10 வோட்டு வந்தாதான் பாப்புலருக்கு போவுது. 3 வோட்டுல போய் ஆகணும். அதான். வர்ட்டா:))

ஈரோடு கதிர் said...

அட ராசா...

ஏஞ்சாமி..

உனக்கு திருஷ்டி சுத்தி போடச்சொல்லோனும்

இன்னிக்கு.. சன் டிவியில வீராசாமி படம் போட்டாங்களே அதுக்கும் ஒரு பாட்டு ”வச்சிருக்கேன்.. வச்சிருக்கேன்னு..எழுதீருங்களேன்

settaikkaran said...

பின்னிட்டீங்க தலைவா! சூப்பர்!!!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நான் இதை மதிப்பு மிக்க பதிவாக கருதுகிறேன். ஆஹா. அபாரம்.:))))). சூப்பர். கொன்னுட்டீங்க. அசத்தல். சான்ஸே இல்லை. எங்கயோ போயிட்டீங்க. எப்புடி ப்ரபா இப்படியெல்லாம்.
(ங்கொய்யால. ஒழுங்கு மருவாதியா எனக்கும் இப்படி பின்னூட்டம் போட்டு ஓட்டு குத்தியாவணும். 10 வோட்டு வந்தாதான் பாப்புலருக்கு போவுது. 3 வோட்டுல போய் ஆகணும். அதான். வர்ட்டா:))
//

தென்ன மரத்துல தேள் கடிச்சி பன மரத்துல நெறி கட்டுதுடோய்.....

நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//ஈரோடு கதிர் said...
அட ராசா...

ஏஞ்சாமி..

உனக்கு திருஷ்டி சுத்தி போடச்சொல்லோனும்

இன்னிக்கு.. சன் டிவியில வீராசாமி படம் போட்டாங்களே அதுக்கும் ஒரு பாட்டு ”வச்சிருக்கேன்.. வச்சிருக்கேன்னு..எழுதீருங்களேன்
//

கண்டிப்பா நாட்டாமை விருப்பமே, நம் விருப்பம்... செஞ்சிடுவோம்..

பிரபாகர் said...

//சேட்டைக்காரன் said...
பின்னிட்டீங்க தலைவா! சூப்பர்!!!
//

சேட்டை நண்பா!, நீங்களுமா?

நன்றி...

க.பாலாசி said...

அட உண்மையப்பூரா இப்டி ரீமிக்ஸ்ல சொல்லிட்டீங்களே...

Chitra said...

இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே


.............யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆப்பு மக்களுக்குதான். நாட்டு நடப்பை அருமையா சொல்லிட்டீங்க.

Unknown said...

நல்லா இருக்கு பிரபாகர், நீங்க சினிமாவுக்கு பாட்டு எழுதப் போலாம் போலயே?

Ashok D said...

நல்லாயிருக்கு பிரபா :)

//........யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆப்பு மக்களுக்குதான்// wat chitra said also super :)

Prathap Kumar S. said...

பதிவுலக புஷ்பவனம்குப்புசாமி அண்ணன் பிரபாகர் வாழ்க... பாட்டு சூப்பருங்கணோவ்

பழமைபேசி said...

ஆமாமா! அப்படிப்போடு!! ஆமாமா....

Anonymous said...

நல்ல கவிதைங்க பிரபாகர்

பூங்குழலி said...

இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

கேளிக்கையாய் வரும் குமுதம் போன்ற
கேவலங்களை வாங்குதலும் இனி பாவமன்றோ

பாட்டு சூப்பர்

vidivelli said...

அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
மக்களை ஏமாத்தும் கூட்டம்
மானங்கெட்ட இந்த கூட்டம்
வெக்கங்கெட்ட இந்த கூட்டம்
வீணாக்கும் இந்த கூட்டம்
வீணாப் போகுமிந்த கூட்டம்!

ரொம்ப ரொம்ப சுப்பருங்க......
அருமையோ.........அருமை........
புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........

க ரா said...

சூப்பர் :).

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
அட உண்மையப்பூரா இப்டி ரீமிக்ஸ்ல சொல்லிட்டீங்களே...
//
நன்றி இளவல்...

//
Chitra said...
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே


.............யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆப்பு மக்களுக்குதான். நாட்டு நடப்பை அருமையா சொல்லிட்டீங்க.
//
நன்றிங்க சித்ரா!

//
முகிலன் said...
நல்லா இருக்கு பிரபாகர், நீங்க சினிமாவுக்கு பாட்டு எழுதப் போலாம் போலயே?
//
போயிடுவோம்... யாராவது மாட்டினா!

//
D.R.Ashok said...
நல்லாயிருக்கு பிரபா :)

//........யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆப்பு மக்களுக்குதான்// wat chitra said also super :)
//
நன்றி அஷோக்..

//
நாஞ்சில் பிரதாப் said...
பதிவுலக புஷ்பவனம்குப்புசாமி அண்ணன் பிரபாகர் வாழ்க... பாட்டு சூப்பருங்கணோவ்
//
நன்றி பிரதாப்!

//
பழமைபேசி said...
ஆமாமா! அப்படிப்போடு!! ஆமாமா....
//
நன்றிங்கண்ணே!

//
சின்ன அம்மிணி said...
நல்ல கவிதைங்க பிரபாகர்
//
ரொம்ப நன்றிங்க... உங்க தொடர் ஊக்கம் நிறைய எழுத உற்சாகம் தருது!

//
பூங்குழலி said...
இப்போ ஆட்சி மாறட்டும் கண்ணே,
சரியா ஆப்பு வெப்பாங்க கண்ணே
ஆப்பு வெப்பாங்க கண்ணே

கேளிக்கையாய் வரும் குமுதம் போன்ற
கேவலங்களை வாங்குதலும் இனி பாவமன்றோ

பாட்டு சூப்பர்
//
ரொம்ப நன்றிங்க.

//
vidivelli said...
அட யாருக்கு என்னான என்ன
அவனுக்கு பணம் கிடைக்கிது மச்சான்
பணம் கிடைக்குது மச்சான்
மக்களை ஏமாத்தும் கூட்டம்
மானங்கெட்ட இந்த கூட்டம்
வெக்கங்கெட்ட இந்த கூட்டம்
வீணாக்கும் இந்த கூட்டம்
வீணாப் போகுமிந்த கூட்டம்!

ரொம்ப ரொம்ப சுப்பருங்க......
அருமையோ.........அருமை........
புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........
//
கண்டிப்பா, தொடர ஆரம்பிச்சிட்டேன்...

//
இராமசாமி கண்ணண் said...
சூப்பர் :).
//
ரொம்ப நன்றிங்க...

ரோஸ்விக் said...

பாட்டாலே புத்தி சொன்னான்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB