உண்மைய சொல்லப்போறேன்...கவிதை

|

கடவுளில்லை என்பதனை
கருத்தாய் கொண்டிட்ட
திட மனது பெரியாரின்
திவ்ய வழி தொடரும்நீர்

நடந்திட்ட விஷயங்களை
நாநிலத்தில் உள்ளோர்க்கு
புடம் போட்டு காட்டிட்டு
புரட்டிடுவீர் புரட்டுகளை!

பரபரப்பை காசாக்கும்
புத்திநிறை நிருபரவர்
நெறிமுறைகள் மீறாமல்
நல்வாழ்க்கை நடத்திவரும்

சார்பவரை வினவுசெய்ய
சிரிப்போடு வினா புதைத்து
பெருமை பொங்கும் முகத்துடனே
புரட்சி பொங்கும் கருத்துரைத்தார்.

உண்மையில் நடந்ததென்ன
ஊரார்க்கு தெரியாது
உண்மைவழி செல்லும்நான்
உரைத்திவேன் உணர்ந்திடுவீர்.

பணம் வாங்கி படம்போட்டு
பரப்பினேன் அவன் புகழை
மனம் பிறழ்ந்த மாந்தரவர்
மதி கெட்டு உரைப்பதனை

எண்ணும்போது சிரிப்போடு
ஏதேதோ வருகிறது
உண்மை சொல்வேன் விளங்கிட்டு
உறவுக்கும் இதை சொல்லிடுவீர்.

உண்மையில் நானிழந்தேன்
இருபத்து ஐந்ததனை
குணம் கெட்டோர் சொல்வதுபோல்
குண்டுமணி லாபமில்லை.

மொழியாக்கம் செய்ததெல்லாம்
மன நிறைவு பெறுவதற்கும்
வழிநடத்தி தமிழினத்தை
வாழ்க்கைத்தரம் உயர்த்திட்டு

இனமானம் காத்திடத்தான்
ஈனப்பயல் கெடுத்திட்டான்
இனிநானும் பொறுத்திடேன்
ஏற்கனேவே என்னினிய

கண்ணிய நண்பரவர்
கருத்தினை தேடி பெற்று
எண்ணத்தில் உள்ளத்தெல்லாம்
எடுத்து பிழிந்திட்டு

சுத்தமான சரக்குகளை
சுவைத்து பருகியபின்
நித்தமும் ஆனந்தத்தில்
நினைவில் கொணர்ந்து

சத்தமின்றி செய்திட்ட
சதியெல்லாம் வெளிக்கொணர்ந்து
சத்தியமாய் சொல்லிடுவேன்
சங்கடத்தை போக்கிடுவேன்...

16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

//சத்தமின்றி செய்திட்ட
சதியெல்லாம் வெளிக்கொணர்ந்து
சத்தியமாய் சொல்லிடுவேன்
சங்கடத்தை போக்கிடுவேன்... //

அழகான, ஆழமான கவிதை...

Unknown said...

நடக்கட்டும் நடக்கட்டும்...

பாலா said...

நல்லவேளை.. போன்லயே இது ‘யாரு’-ன்னு சொன்னீங்க.

இல்லைன்னா... மண்டையை பிச்சிகிட்டு இருப்பேன். :) :)

அந்த ஜூ.வி நிருபர்.. நாண்டுகிட்டு சாகலாம்!! :) :)

Anonymous said...

:)

settaikkaran said...

பொய்மூட்டை விற்பனை செய்பவர்களின் தோலுரிக்கிற கவிதை

ஈரோடு கதிர் said...

அதுசரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆழமான கவிதை

Ashok D said...

உண்மையை சொல்ல போகிறேன்..

பிரபா ’உண்மை சொல்லறது’ என்பது தான் லோகத்தல பெரிய டூப்பே... ;)

பாடல் தாளகதியோடு அமைந்துள்ளது

vasu balaji said...

இது எந்த ஆஸ்ரமத்துல ப்ரேயர் சாங் பிரவு:))

Paleo God said...

ஓம் சாந்தி..!

ரோஸ்விக் said...

பாட்டானந்தா... உம்ம கோவத்தை...
காட்டானந்தா... :-))

க ரா said...

ரொம்ப நல்லா இருக்கு.

கலகலப்ரியா said...

அட அட.. அருமைண்ணா... பின்னிப் படல் எடுங்க...

புலவன் புலிகேசி said...

எனக்குப் புரிஞ்சிருச்சி....

பிரபாகர் said...

பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி... கேபிள் அண்ணாவுடன் பிசியாக இருப்பதால் தனித் தனியே நன்றி சொல்ல இயலவில்லை...

karthik said...

பெஸ்ட் கவிதை

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB