செத்தும் கெடுத்தான் சீதக்காதி...

|

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு ஒரு வள்ளல பத்தி சொல்லுவாங்க. ஆனா இங்க நாம பாக்கப்போறது செத்தும் கெடுத்தான்...

அந்த ஊர்ல 'சீதக்காதி'ங்கற அவரு மேல காண்டு இல்லாதவங்க வாய் பேச முடியாத பச்ச மண்ணை தவிர யாருமில்ல.

அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரும் அவரால பாதிக்கப்பட்டிருந்தாங்க. உதாரணமா, பொது வாழ்வில இருக்கிற ஒவ்வொருத்தர் மேலேயும் ஊழல் புகார்னு சி.எம். லெவெலுக்கு பெட்டிஷன் அனுப்பி கதி கலங்க வெச்சிருக்காரு.

ஸ்கூல் வாத்தியாருங்களுக்கும் அதே கதிதான். வீட்டு தகராறு, வரப்பு வாய்க்கா தகராறு, திருவிழா தகராறு, சின்ன புள்ளங்க தகராறுன்னு அவரு தலையிடாத ஏரியாவே இல்ல.

லோக்கல் போலீஸுங்க, பேங்க் ஸ்டாஃபுங்கன்னு ஒவ்வொருத்தரும் இவரோட லிஸ்ட்ல அடக்கம். (கொஞ்சம் யோசிச்சு பாத்தா நாமலும் பாதிக்கப்பட்டிருப்போமான்னு தோனும்).

கடைசியா யாரும் அவரோட எந்த ஒரு தொடர்பும் வெச்சிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி ஊரை விட்டே ஒதுக்கி வெச்சுட்டாங்க. அதுக்கும் அவர் கலெக்டர் வரைக்கும் பெட்டிஷன் போட்டாருங்கறது தனி கதை.

அப்படிப்பட்ட மகான், எதோ இனம் புரியாத வியாதியால பாதிக்கப்பட்டு சாவற மாதிரி கிடந்தாரு.

கடைசி ஆசையா எல்லோரையும் பாக்கனும்னு சொல்லவும், சரி சாவப்போற ஆள, கடைசியா பாத்துடுவோம்னு போனாங்க.

எல்லாத்துக்கிட்டேயும் கதறி அழுது மன்னிப்பு கேட்டுட்டு கடைசி ஆசையா ஒரு வேண்டுகோள வெச்சாரு.

'உங்களுக்கெல்லாம் செஞ்ச பாவத்துக்கு, செத்தாலும் என் கட்டை வேகாது. என் மேலே எல்லாரும் எவ்வளோ கோபமா இருப்பீங்கன்னு தெரியும். அதனால, உயிர் போனதுக்கு பின்னாடி என்னோட உடம்ப துண்டு துண்டா வெட்டி ஆளுக்கு ஒன்னா சுடுகாட்டுக்கு எதுத்துகிட்டு போயி எரிக்கணும்' னு சொல்லிட்டு செத்துட்டாரு.

யாருக்கும் துளியும் வருத்தமில்ல, இருந்தாலும் திருந்தியாவது செத்தானேன்னு சந்தோஷப்பட்டுட்டாங்க.

தலை, கை, காலுன்னு எல்லாத்தையும் வெட்டி தலைவர் தலை, நாட்டார் தொடை, மெம்பருங்க கை கால்னு ஆளுக்கொன்னா எடுத்துட்டு சுடுகாட்டுக்கு போகும்போது திடீர்னு ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே வந்து எல்லோரையும் கைது பண்ணிடுச்சி.

சாவறதுக்கு முன்னால, 'ஊர்க்காரங்க என்ன கொலை பண்ணி துண்டு துண்டா வெட்டி புதைக்கப்போறாங்க' ன்னு நம்மாளு விவரமா எழுதி தபால் மூலமா கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தாரு.

அவரால பாதிக்கப்பட்ட லோக்கல் இன்ஸ்பெக்டர், 'சார், எங்களுக்கு மட்டும் அனுப்பிச்சிருந்தா விட்டுடலாம்னு பாத்தா, சி.எம்., பி.எம் வரைக்கும் நகல் அனுப்பியிருக்காரு' ன்னாரு. ஊரே ஜெயில்ல.

கொஞ்சம் மாற்றங்களோட மீள் பதிவு...

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ரோஸ்விக் said...

இது மேட்டரு... சூப்பரு.... :-)

மங்குனி அமைச்சர் said...

தமக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவங்களுக்கு ஒரு கண்ணு போகட்டும் நினைக்கிற ஒரு நல்ல மனுசன ஏன் சார் தப்பா சொல்றிங்க, உங்க பார்வைல தப்பு இருக்கு சார், என்னா கிளவரா ஊரையே மாட்டிவிடுருக்காறு அதுக்கு ஒரு சிலை வைக்கணும் சார் , உங்களுக்கு போறாம.

அகல்விளக்கு said...

அவரு நெம்ம நல்லவரு போங்க...

சிநேகிதன் அக்பர் said...

அருமையான கதை.

கலக்கல் பிரபாகர்.

Paleo God said...

புடிங்க ரெண்டு ஓட்டு ஒன்னு உங்களுக்கு இன்னொன்னு அவருக்கு..:)

இன்னா கொலவெறி..:)

vasu balaji said...

எங்க இருந்துப்பா பிரவு புடிக்கிறீங்க இப்புடி ஆளுங்கள:))

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
இது மேட்டரு... சூப்பரு.... :-)
//
நன்றி ரோஸ்விக்...

//
மங்குனி அமைச்சர் said...
தமக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவங்களுக்கு ஒரு கண்ணு போகட்டும் நினைக்கிற ஒரு நல்ல மனுசன ஏன் சார் தப்பா சொல்றிங்க, உங்க பார்வைல தப்பு இருக்கு சார், என்னா கிளவரா ஊரையே மாட்டிவிடுருக்காறு அதுக்கு ஒரு சிலை வைக்கணும் சார் , உங்களுக்கு போறாம.
//
வாங்க அமைச்சரே, வணக்கம்...

//
அகல்விளக்கு said...
அவரு நெம்ம நல்லவரு போங்க...
//
நன்றி ராஜா!

பிரபாகர் said...

//
அக்பர் said...
அருமையான கதை.
கலக்கல் பிரபாகர்.
//
நன்றி என் சினேகிதா...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
புடிங்க ரெண்டு ஓட்டு ஒன்னு உங்களுக்கு இன்னொன்னு அவருக்கு..:)
இன்னா கொலவெறி..:)
//
நன்றி நண்பா!

//
வானம்பாடிகள் said...
எங்க இருந்துப்பா பிரவு புடிக்கிறீங்க இப்புடி ஆளுங்கள:))
//
பெருசுங்க சொல்றதுல இருந்துதான்.... நன்றிங்கய்யா....

Unknown said...

இது பழைய கதைய மாத்தி போட்டு இருக்கிங்க செத்தும் கெடுத்தான் செவ்வூர் செவ்வந்தியப்பன் இந்த கதை சுவாரசியமாக இருக்கும்

veeraraj said...

No 1 example

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB