பதிவர்கள் பட்டிமன்றம்...இரண்டாம் நாள்...

|

இதன் முதல் நாள் நிகழ்ச்சியை பார்க்காதவங்க இங்க படிச்சிட்டு தொடருங்களேன்...

(கண்ணாடியை சரி செய்து, தனது புத்தகத்தின் பின் பக்கத்தில் இருக்கும் அதே போஸிற்கு தன்னை ஃபிட் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் கேபிள்)

கலக்கலா, தீர்ப்பு சொல்லப்போகும் பிரியாங்கற நடுவர் பொன்னாத்தா அவர்களே, முன் வரிசையில் கண்ணாடி போட்டுகிட்டு அழகா இருக்கிற ஜீன்ஸ், டாப் போட்டு கும்முனு இருக்கிற அந்த கல்லூரி மாணவி அவர்களே, சினிமா சீரழிக்கிறது என சொல்லிவிட்டு சைலண்ட் பண்ணி சினிமா பாட்டு டேன்ஸ் பார்த்து இடுகையெழுதி, லேட்டஸ்ட்டா உலகப்படத்துக்கு விமர்சனம் எழுதும் எதிரணி தலைவர் கதிர் அவர்களே, சினிமாவப் பத்தி அவ்வளவு ஆர்வமா எப்பவும் பேசும், இன்னிக்கு வழிதெரியாம மாற்று அணியில மாட்டி முழிக்கும் பிரபா அண்ணன் அவர்களே...

(அண்ணே, மேட்டருக்கு வாங்கண்ணே.. வானம்பாடிகள்)

சினிமா சீரழிக்கிதுங்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் சினிமான்னா என்னான்னு தெரியுமா? உலகத்திலயே யாராலையும் புதுசா கதைய வெச்சி படம் எடுக்க முடியாது தெரியுமா?

(அதான் சினிமாவப்பத்தி பேசும்போதெல்லாம் சொல்லிகிட்டிருக்கீங்களே - பிரபாகர்)

அதுல எத்தனை பேர் உழைப்பு இருக்கு தெரியுமா? எத்தனை குடும்பம் பொழைக்குது தெரியுமா? அதனாலதான் முப்பதாயிரத்துல படம் எடுக்கமுடியும்னு ஒரு புது லாஜிக்க அறிமுகப்படுத்தினேன். பசியோட கூட இருந்திடலாம், படம் பாக்காம இருக்க முடியுமா?

(பயங்கரமான கைத்தட்டல்... ங்கொய்யால எதுக்குத்தான் கைதட்டறதுன்னு வெவஸ்த இல்ல? - வானம்பாடிகள்)

(அதான் தெரியுதே, ஒரு படத்தையும் விமர்சிக்காம விடறதில்லையே - ப்ரியா)

சினிமாவில பலவிதமான காதல்னு பிரபாண்ணே சொன்னாரு. அவரு இடுகையில தனி மனுசனா எத்தன விதமான காதல பத்தி சொல்லியிருக்காரு, இது ஒரு பெரிய உலகம், இன்னும் பல காதல்கள் சொல்லப்படவேயில்லை என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா?

(சொன்னதே தாங்கல, இன்னும் சொல்லாதது வேறயா - கதிர்)

அதையெல்லாம் சொல்லத்தான் போகிறேன். சினிமா வியாபாரத்தப் பத்தி யாருக்காச்சும் தெரியுமா? வார வாரம் எழுதறேன், படிச்சிட்டு சொல்லுங்க, சினிமா சீரழிக்குதான்னு... சினிமாங்கறது கொத்து பரொட்டா மாதிரி... எல்லாம் இருக்கனும். இத புரியாம இட்லி, பொங்கல், நூடுல்ஸ் மாதிரி எடுக்கறதாலதான் பல தயாரிப்பாளருங்கள சினிமா சீரழிச்சிகிட்டிருக்கு, சமுதாயத்த இல்லைன்னு சொல்லி முடிக்கலாமுன்னு நினைக்கும்போது ஒரு சின்ன விஷயம் ஞாபகத்துக்கு வருது...

(பொன்னாத்தாள் மணியினை ஒலித்து நேரமாகிவிட்டதை நினைவுப்படுத்த)

இந்த மணியோசையை எங்கெல்லாம் சினிமாவில உபயோகிக்கிறாங்க தெரியுமா? அதப்பத்தியெல்லாம் பேச நேரமில்ல. கடைசியா எதிரணியில இருக்கிற அன்பர்கள் எல்லாம் முதல் போட்டு சினிமா எடுக்க முதலாளியா மாறுங்கன்னு கேட்டுகிட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி முடிச்சிக்கிறேன், வணக்கம்.

(இங்கயே ப்ரொடியூசர புடிச்சிடுவாரு போல இருக்கு - மணிஜீ..)

அருமையா பேசினீங்க கேபிள்... எல்லாரும் பணத்த மட்டும் கொண்டு வந்திருந்தா முப்பதாயிரம் கட்டி மெம்பரா சேர்ந்திருப்பாங்க. கேபிளோட வாதத்த தவிடு பொடி பண்ணறதுக்கு சவுண்டா யாராவது வருவாங்கன்னு பார்த்தா, இதோ காத்து வேகமா அடிச்சா பறந்து போற மாதிரி இருக்கிற நம்ம சேட்டை...,கூட ரெண்டு பேரோட தாங்கலா... வாங்க வாங்க, வந்து கலக்குங்க...

(லேசாய் இருமியபடி முழிக்க..., மலைத்த மாடு மலையேறுமா என எல்லோரும் லேசாய் பார்க்க தனது சேட்டையை ஆரம்பிக்கிறார்)

இந்தப்பட்டி மண்டபத்தில் தீர்ப்பு சொல்ல வீற்றிருக்கும் (பிரபாகரண்ணே, இவங்க பேர் என்ன?ஓ... சரி), ப்ரியாவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது... ப்ரியா என்கிற பொன்னாத்தாள் அவர்களே.. எங்கள் அணித்தலைவர்,  மஞ்சள்நகர மன்னர் கதிர் அவர்களே, நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நான் பேச ஆரம்பிக்கும் முன்னர், எல்லாக் கதவுகளையும் இழுத்துச் சாத்த உத்தரவிட்டு உதவிய பிரபாகர் அவர்களே, சபையோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

(ஆஹா, பிரியாவுக்கே லொல்லா? கலக்கல் - கதிர்)

சினிமா மக்களைச் சீரழிக்கிறது... எப்படி? இன்றைக்கு குடும்பத்தோடு சென்று சினிமா பார்க்க முடிகிறதா? ஒரு டிக்கெட் நூற்றிப்பத்து ரூபாய், ஒரு சோளப்பொறி முப்பது ரூபாய், ஒரு பெப்ஸி இருபத்தைந்து ரூபாய், போகவர பஸ் கட்டணம் குறைந்தபட்சம் பத்து ரூபாய் ஐம்பது பைசாக்கள். ஒண்டிக்கட்டையான நானே வட்டிக்குக் கடன் வாங்கித் தான் ’குட்டி" பார்த்தேன் என்றால் குடும்பஸ்தர்களின் நிலையென்ன?

(குட்டி படத்தையா, இல்ல ஸ்ரேயாவையா - கேபிள்...)

பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படுவதால், அரசாங்கத்துக்கு அயோடக்ஸ் வாங்கியே கட்டுப்படியாகாத நிலை. விலைவாசிகள் விண்ணை முட்டி முட்டி நடுமண்டையில் முளைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பீரின் விலை எழுபது ரூபாய் என்கிறதிலிருந்தே நமது நாட்டின் பொருளாதாரம் என்னை விடவும் பலவீனமாக இருக்கிறது என்பது புலப்படாதா?

(அரசாங்கம், அயோடக்ஸ்... சரியான பாய்ண்ட்ட புடிச்சான்யா தம்பி! - மணிஜி...  தலையை தடவிப்பார்த்துக்கொள்கிறார் - வானம்பாடிகள்)

அண்மையில் மருத்துவப் பரிசோதனைக்காக நான் ஒரு மருத்துவரிடம் போனபோது, எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எனது உடலையும் பொருளாதார சூழ்நிலையும் பார்த்து இரக்கப்பட்டார் அந்த மருத்துவர். ’உனக்கு எக்ஸ்-ரே வேண்டாம். வெயிலில் போய் நில், நான் வெளியே வந்து வெறும் கண்களால் பார்த்து உனக்கு எலும்புகளெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்லி விட்டார். சினிமா என்னையே இப்படி சீரழித்திருக்கும்போது, மற்றவர்களையும் சீரழிக்காதா என்று கேட்கிறேன், நடுவர் அவர்களே!

(ஆளப்பாத்தாலே வெடக்கோழி மாதிரி இருக்குபோதே நினைச்சேன்.... வானம்பாடிகள்)

(பொன்னாத்தாள் மணியினை அழுத்த...லாஸ்ட் மேட்டர் என சைகையால் சொல்லி சேட்டை தொடருகிறார்)

டாஸ்மாக்கில் பீர் விலை குறித்து இங்கு நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது! இது பற்றி எதிர் தரப்பிலிருக்கும் கேபிள் அண்ணா, மணிஜீ கூட பல பதிவுகளில் பதபதைத்திருக்கிறார்கள்... ஒரு பீர் குடித்தால் கூட அதிலிருந்து பதினோரு ரூபாய் இருபத்தைந்து பைசா அரசின் கஜானாவுக்குப் போகிறது. ஆனால், இதுவரை ஸ்ரேயா நடித்த பதிமூன்று படங்களையும் தலா பதிமூன்று முறை பார்த்தும் கூட, அரசு கஜானாவில் ஐம்பது பைசா கூட போய்ச்சேரவேயில்லை. காரணம், சினிமாவுக்கு வரியில்லை என்பதால், பீர் சமூகத்துக்கு ஆற்றும் சேவையைக் கூட சினிமா ஆற்றவில்லை என்பதே டாஸ்மார்க்காலஜிஸ்டுகளின் ஆதங்கமாய் இருக்கிறது.

(கேபிள், மணிஜி ரொம்ப குஷியாகை தட்ட, அரங்கம் முழுதும் ஆர்ப்பாட்டமான கைத்தட்டல்....)

(பொன்னாத்தாள் மீண்டும் மணியடித்து நேரமானதை சுட்டிக்காட்ட...)

எனவே அரசு கஜானாவுக்கு சல்லிக்காசு கூட அளிக்காத சினிமா சமூகத்தைச் சீரழிக்கிறது என்று சொல்லி, நான் பேசி முடியும் வரை மின்விசிறிக்காற்றில் நான் பறந்துவிடாமலிருக்க, பலமாய் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த என் அறைத்தோழர்களாம் ஆருயிர் நண்பர்களுக்கும், கூர்ந்து கவனித்தவர்களுக்கும், குறட்டை விடாமல் அமைதியாய் உறங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்து அமர்கிறேன்.

(கேபிள் திருதிருவென முழிக்கிறார்....  பக்கத்துலே ஏதாவது கடையிருக்கா? வெயில் ரொம்ப அதிகமாயிருக்கு... சேட்டை - பிரபாகரிடம்)

தீர்ப்பு நாளைக்குங்கோ!...


(தொடரும்...)

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிரிப்பு மன்றம் சூப்பர்.. அதிலும் சேட்டைக்காரரோட லாஜிக் சூப்பர் :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நடுவர் பொன்னாத்தா என்கிற பிரியா கலக்கல் ..சார் ..
நீங்களும் டைரக்டர் ஆகா வாழ்த்துக்கள் ...

vasu balaji said...

அப்புடி போடு அருவாள. :)) என்னா லாஜிக்கு என்னா லாஜிக்கு:)). அதெப்புடி நாங்க பேச முன்னாடி நாளைக்கே தீர்ப்பு வரும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம். :))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இரண்டு பகுதியும் இப்போதுதான் சேர்த்து படித்தேன் சூப்பர்
தீர்ப்புக்காக waitting,,..

Paleo God said...

வானம்பாடிகள் said...
அப்புடி போடு அருவாள. :)) என்னா லாஜிக்கு என்னா லாஜிக்கு:)). அதெப்புடி நாங்க பேச முன்னாடி நாளைக்கே தீர்ப்பு வரும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம். :))//

அதானே யார்கிட்ட ?? :))

ஈரோடு கதிர் said...

//குட்டி படத்தையா, இல்ல ஸ்ரேயாவையா - கேபிள்...)//

கேபிள்கூட சிங்கப்பூர்ல இதெல்லாந்தான் கத்துக்கிட்டீங்களா!!!

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் பிரபா...

Unknown said...

போன பதிவை விட இது அமர்க்களம் ப்ரபா..

சேட்டைக்காரன் லாஜிக் நல்லாத்தானிருக்கு

அப்புறம் நாங்க போட வேண்டிய கமெண்டையெல்லாம் இப்பிடி நீலக்கலர்ல நீங்களே போட்டுட்டா எப்புடி?

sathishsangkavi.blogspot.com said...

நண்பா உன் சேட்டை...........

எங்களுக்கெல்லாம் சரியான வேட்டை.............

கலகலப்ரியா said...

கலக்கிப்புட்டீங்கண்ணே கலக்கி.... பட்டிமன்றம் நிறைய பார்க்கறீங்க ம்ம்.. நடக்கட்டு நடக்கட்டு...

துபாய் ராஜா said...

ரைட்டு.. நடக்கட்டும்...

settaikkaran said...

ஆஹா! நான் பேச நினைத்ததெல்லாம் எழுதிட்டீங்களே! எப்படி? ஏதாவது சித்து விளையாட்டு கத்து வச்சிருக்கீங்களோ??

க.பாலாசி said...

அய்யோ...தீர்ப்ப கேட்கறத்துக்கு இப்பவே ஆர்வமா இருக்கே...

அந்த மணியடிக்கிற அம்மா சரியில்ல... ஒருத்தருக்கொருத்தர் டைம் பார்த்து அடிக்கிது.... அநியாயமாயிருக்கு....

ரோஸ்விக் said...

கேபிளும், சேட்டைக்காரனும் அருமையா பேசிட்டு போயிருக்காங்க... வாங்க பாலா அண்ணே, கதிர் அண்ணே... நீங்க என்ன பேசப்போறீங்க... :-)

மங்குனி அமைச்சர் said...

ஹலோ நடுவர் அவர்களே , நம்ம சேட்ட சொன்ன பீர் விசயத்த மனசுல வச்சுகினு தீர்பு சொல்லுங்க , இல்ல?
நாளைக்கு சேட்ட செலவுல நாலு பீறு அடிச்சிட்டு வந்து அப்புறம் மண்டபத்துல சாமி ஆடிடுவேன் , ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிரத............................

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
சிரிப்பு மன்றம் சூப்பர்.. அதிலும் சேட்டைக்காரரோட லாஜிக் சூப்பர் :)
//
நன்றிங்க செந்தில்...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
நடுவர் பொன்னாத்தா என்கிற பிரியா கலக்கல் ..சார் ..
நீங்களும் டைரக்டர் ஆகா வாழ்த்துக்கள் ...
//
நன்றி ஜெய்...

//
வானம்பாடிகள் said...
அப்புடி போடு அருவாள. :)) என்னா லாஜிக்கு என்னா லாஜிக்கு:)). அதெப்புடி நாங்க பேச முன்னாடி நாளைக்கே தீர்ப்பு வரும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம். :))
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
இரண்டு பகுதியும் இப்போதுதான் சேர்த்து படித்தேன் சூப்பர்
தீர்ப்புக்காக waitting,,..
//
நன்றி ஜெய்...

//
March 27, 2010 12:24 AM 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வானம்பாடிகள் said...
அப்புடி போடு அருவாள. :)) என்னா லாஜிக்கு என்னா லாஜிக்கு:)). அதெப்புடி நாங்க பேச முன்னாடி நாளைக்கே தீர்ப்பு வரும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம். :))//

அதானே யார்கிட்ட ?? :))
//
நன்றி ஷங்கர்...

//
ஈரோடு கதிர் said...
//குட்டி படத்தையா, இல்ல ஸ்ரேயாவையா - கேபிள்...)//

கேபிள்கூட சிங்கப்பூர்ல இதெல்லாந்தான் கத்துக்கிட்டீங்களா!!!
//
கண்டு பிடிச்சிட்டீங்கப்பு!

பிரபாகர் said...

//
இராகவன் நைஜிரியா said...
கலக்கல் பிரபா...
//
நன்றிங்கண்ணா...

//
முகிலன் said...
போன பதிவை விட இது அமர்க்களம் ப்ரபா..

சேட்டைக்காரன் லாஜிக் நல்லாத்தானிருக்கு

அப்புறம் நாங்க போட வேண்டிய கமெண்டையெல்லாம் இப்பிடி நீலக்கலர்ல நீங்களே போட்டுட்டா எப்புடி?
//
நன்றி தினேஷ்...

//
Sangkavi said...
நண்பா உன் சேட்டை...........

எங்களுக்கெல்லாம் சரியான வேட்டை.............
//
நன்றி சங்கவி...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
கலக்கிப்புட்டீங்கண்ணே கலக்கி.... பட்டிமன்றம் நிறைய பார்க்கறீங்க ம்ம்.. நடக்கட்டு நடக்கட்டு...
//
நன்றி சகோதரி...

//
துபாய் ராஜா said...
ரைட்டு.. நடக்கட்டும்...
//
நன்றி ராஜா....

//
சேட்டைக்காரன் said...
ஆஹா! நான் பேச நினைத்ததெல்லாம் எழுதிட்டீங்களே! எப்படி? ஏதாவது சித்து விளையாட்டு கத்து வச்சிருக்கீங்களோ??
//
நன்றி நண்பா...

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
அய்யோ...தீர்ப்ப கேட்கறத்துக்கு இப்பவே ஆர்வமா இருக்கே...

அந்த மணியடிக்கிற அம்மா சரியில்ல... ஒருத்தருக்கொருத்தர் டைம் பார்த்து அடிக்கிது.... அநியாயமாயிருக்கு....
//
அதானே...! நன்றி இளவல்...

//
ரோஸ்விக் said...
கேபிளும், சேட்டைக்காரனும் அருமையா பேசிட்டு போயிருக்காங்க... வாங்க பாலா அண்ணே, கதிர் அண்ணே... நீங்க என்ன பேசப்போறீங்க... :-)
//
அடுத்து பாருங்க!

//
மங்குனி அமைச்சர் said...
ஹலோ நடுவர் அவர்களே , நம்ம சேட்ட சொன்ன பீர் விசயத்த மனசுல வச்சுகினு தீர்பு சொல்லுங்க , இல்ல?
நாளைக்கு சேட்ட செலவுல நாலு பீறு அடிச்சிட்டு வந்து அப்புறம் மண்டபத்துல சாமி ஆடிடுவேன் , ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிரத............................
//
kaNtippaa mangkuni...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB