சிங்கை பதிவர் சந்திப்பு விவரங்கள்...

|

கேபிள் அண்ணா சிங்கை வருகிறார் என்றவுடனேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது, இரு விஷயங்களால். ஒன்று சென்னையில் என்னை தங்கமாய் கவனித்தது இன்னும் மனதில் இனித்துக்கொண்டிருப்பதால் அதைவிட மேலாய் அல்லது அந்த அளவிற்காவது கவனிக்கவேண்டும் என்பது. இரண்டாவது சிங்கையின் எல்லா பதிவர்களையும் சந்திக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்பது.

வரும் நாளன்று எனக்கு வேலை. முடித்து நேரே வரவேற்க வந்துவிடுகிறேன் என சொல்லி வரும் நேரத்த சொல்லச் சொல்ல, வருவது பற்றிய சரியான தகவல்கள் துக்ளக் மகேஷ், தம்பி ரோஸ்விக், விஜய், வெற்றிக்கதிரவன் என எல்லோரின் மூலமாயும் வரிசையாய் வர அன்பை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டு விமான விலையத்துக்கு விரைந்தேன். வருகை பற்றி அன்பின் அண்ணன் கோவியார் அழகாய் பதித்திருக்கிறார்.

நேரே தேக்கா சென்று சகுந்தலாவில் அவருக்கு கொத்துபரோட்டா(கேபிளுக்கேவா?) தோசை என விருந்தோம்பி விட்டிற்கு சென்றோம். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அண்ணாவின் ஆக்சிடென்ட் குறும்படத்தை பார்த்து பிரமித்து அது பற்றி சிலாகித்து பேசி அதனைப்பற்றி விவாதித்தோம்.

அடுத்த நாள் ஓய்விக்குப்பின் எழுந்து அண்ணாவுடன் கிளம்பி அவரது இரு வாசகர்கள் ஜெய் மற்றும் பாலாவை சந்திக்க தேக்கா கிளம்பினோம். அஞ்சப்பரில் சந்திப்பு. அங்குதான் எனக்கு ஒரு அருமையான தோழர் புண்ணாக்கு மூட்டை எனும் பெயரில் பின்னூட்டமிடும் பாலா கிடைத்தார், இறுதியில் சொந்தமாயும் ஆகிவிட்டார். வேலைக்கு நேரமாக விடைபெற்று கிளம்பினேன்.

அடுத்த நாள், சிங்கையும் பதிவர்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான தினம். உணவு வேளைக்கு வரச்சொல்லி அழைப்பு வர கிளம்பி சங்கர் அண்ணாவும் நானும் தேக்கா சென்றோம். வழியில் சாலைகளின் நேர்த்தி, போக்குவரத்தின் ஒழுங்கு, விதி முறைகள், தூய்மை என பார்க்கும் ஒவ்வொன்றிலும் வியந்து நம்மூரில் இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

சரியான நேரத்திற்கு சென்றடைந்தோம். எல்லோரும் அஞ்சப்பர் சென்று திருப்தியாய் அளவளாவி மதிய உணவு. பாரதி, நட்புடன் ஜமால், ஜோசப் மாமா மகன் என புதியவர்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு பின் சுவாமி ஒம்காரும் சேர்ந்துகொள்ள எல்லோரும் பதிவர் சந்திப்பு நடக்கும் எஸ்பிளனேட் அதுக்கே உள்ள பாலம் நோக்கி பேருந்தில் விரைந்தோம். இப்போதான் தாத்தா சென்னையில் இதுபோன்ற பஸ்ஸை விட்டிருக்கிறார் என கமெண்ட் அடித்தார்.

எல்லோரும் ஒருவழியாய் சந்திப்பு நடக்கும் இடத்தை அடைந்தோம். பாலா, சரவணன், அப்பாவி முரு, பித்தனின் வாக்கு சுதாகர், அறிவிலி ராஜேஷ், ஜோ,  மகேந்திரன், ஜெகதீசன்,  முகவை ராம் என எல்லோரும் வந்து சேர்ந்து கொள்ள கலகலப்பாய் கூட்டம் ஆரம்பித்தது. அன்புடன் அறிவிலி ராஜேஷ் கொண்டு வந்த மிளகாய் பஜ்ஜியும் சுண்டலும் காரசாரமாய் விவாதத்தை துவக்க ஏதுவாய் இருந்தது.

முதலில் எங்களிடம் மாட்டியவர் கேபிள் அண்ணா. கேள்விக்கணைகளால் துளைத்தோம். கேட்பதில்தான் நாம் எப்போதும் வல்லவர்களாயிற்றே? அழகான கேள்விகள், அற்புதமான பதில்கள். தான் எடுக்கப்போகும் படத்தின் கதாநாயகி சினேகா என்ற ஒரு தகவலை சொல்லி பிற பேச்சுவார்த்தைகள், தயாரிப்பு திட்டங்கள் தயாராகி வருவதாய் சொன்னார். சுஜாதா ஒரு அருமையான எழுத்தாளர் என சொல்லி அவரைப்பற்றி சில விவரங்களை பகிர்ந்துகொண்டார்.

வெற்றிப்படங்களுக்கான இலக்கணங்கள் பற்றியும், நாங்கள் இருவரும் டி.வி யில் ரசித்துப்பார்த்த விக்ரம் படத்தைப்பற்றியும் அதில் மாடியில் துரத்தும் காட்சியினை அழகாய் படம் பிடித்ததையும், அந்த படம் ரிலீஸ் ஆன புதிதில் தொடர்ச்சியாய் காலைக்காட்சியாய் இருபதுநாள் பார்த்ததையும் நினைவு கூர்ந்தார்.

அடிக்கடி சிங்கையில் வெக்கையும் குறைந்த ஆடையுடுத்தும் யுவதிகளால் வெக்கமும் அதிகமாய் இருப்பதாய் தகவல் தந்தார். மொத்தத்தில் சினிமா பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவுற விளக்கம் அளித்தார்.

வெளியே தூறிக்கொண்டிருந்த மழை நின்றிருக்க அருகே இருந்த இந்திய தேசிய ராணுவத்தின் நினைவுச்சின்னம் அருகே எல்லோரும் மீண்டும் குழுமினோம். ஓம்கார் சுவாமியிடம் எங்களின் கேள்விகணைகளை வீச ஆரம்பித்தோம். நித்யானந்தரில் இருந்து ஆரம்பித்து, என் காவியுடை உடுத்துகிறீர்கள்(வெள்ளை வீடியோ, போட்டோவில் கிளார் அடிக்கும்) பேய் பிடித்தல், சாமியாடுதல் (கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்) பற்றிய அழகான விளக்கங்களை அளித்தார்.

இதற்கான ஒலிப்பதிவை எனது ஐ போனில் இருந்து இறக்கி இடுகையினில் அடுத்து தருகிறேன். மொத்தத்தில் நமது சாமி எல்லோர் மனதையும் கவரும், ஜாலியான, எளிதாய் அணுகக்கூடிய, விஷயம் நிறைந்தவர் என்பது தெரிந்தது. நித்யானந்தர்களை போல பலர் இருக்கும் இந்த தருணத்தில் ஓம்கார் போன்ற சிலரும் இருப்பது மனதிற்கு நிறைவாய் இருந்தது.

பாதிக்கு மேல் பிரிந்து செல்ல, மீதமிருந்த நாங்கள் இரவு உணவும் முஸ்தபா எதிரில் இருக்கும் அஞ்சப்பருக்கு சென்றோம். பாலா அப்போதுதான் அவரது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். என்னமாய் ஒரு ஜாலியான நபர்? விஷய மூட்டைகள் நிறைய வைத்திருக்கிறார், அவ்வப்போது அவிழ்த்து விடும்போதும் வெடிச்சிரிப்பு தான்.

உதாரணமாய் அவரது தாத்தாவின் பெயர் நரி படையாச்சியாம். பெயர்க்காரணம், விளைந்த மல்லாட்டையினை (மணிலா கோட்டை (அ) வேர்க்கடலை) காட்டின் களத்தில் காவல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். படுத்திருந்த அவருக்குப் பக்கத்தில் யாரோ பதுங்கி வர கொஞ்சம் தூக்கத்தில் இருந்தாலும் கம்பினால் பட்டென ஒரே போடாய் போட்டு போர்வையில் சுருட்டி தூக்கிகொண்டு ஊருக்குள் போய் எல்லோர் முன்னாலும் திருடனை பிடித்துவிட்டதாய் சொல்லி போர்வையோடு வீச, உள்ளே இருந்து ஓடியது ஒரு பெரிய நரி. அதிலிருந்துதான் அவரின் பெயர் நரிப்படையாச்சியாம். இன்னும் அவர் சொன்ன பல வெடிச்சிரிப்புக்களை பல இடுகைகளாய் எழுதலாம், எழுதுகிறேன்.

கேபிள் அண்ணா முகவை ராம், ஜெகதீஷோடு ராம் வீட்டிற்கு செல்ல, நான் பாலாவோடு கிளம்பினேன். அலுவலகம் அளித்திருக்கும் அவரது ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கும் பேறு பெற்றேன்.

மொத்தத்தில் மிகவும் இனிமையான மறக்க முடியாத நாளாக அமைந்தது. அதிகப்படியான விஷயங்களை எழுதாதற்குக் காரணம், மற்றவர்களும் பகிர வேண்டும், கேபிள் அண்ணாவும் எழுதவேண்டும் என்பதால்தான்.

33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

VISA said...

Thanks for sharing. Waiting for Cable!!!

கோவி.கண்ணன் said...

தம்பி சிறப்பாக இருக்கு பதிவர் சந்திப்பு இடுகை.

Paleo God said...

அருமை பிரபாகர்..:)

நானும் பலாபட்டறை சார்பா ஒரு வேர்ல்ட் டூர் அடிக்கலாம்னு இருக்கேன்..:)

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி

Menaga Sathia said...

அருமை!!

க.பாலாசி said...

இனிமையான தருணங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

Ashok D said...

:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை.. நிறைய நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி பிரபாகர்.

Prathap Kumar S. said...

அருமை பகிர்ந்தமைக்கு நன்றி...

settaikkaran said...

அடுத்த சந்திப்பு நடக்குறதுக்குக் கொஞ்சம் முன்னாடி சொன்னீங்கன்னா, நான் வித்-அவுட்டிலேயாவது சிங்கப்பூருக்கு வந்திருவேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

அன்பு பிரபாகர்,

சுவைக்க சுவைக்க எழுதி இருக்கிறீர்கள்.
சிங்கை வலைபதிவர்களின் அன்பில் திக்கு முக்காடிப்போனேன்.

அன்பே சிவம் :)

மீண்டும் சந்திப்போம்.

இராகவன் நைஜிரியா said...

அருமையான பகிர்வு.

க ரா said...

பகிர்விற்கு நன்றி.

கலகலப்ரியா said...

tx for sharing na..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

பித்தனின் வாக்கு said...

நல்ல இடுகை பிரபாகர். புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.

புலவன் புலிகேசி said...

சினேகாவா....ம்ம்ம்ம்ம்

ரோஸ்விக் said...

//சிங்கையில் வெக்கையும் குறைந்த ஆடையுடுத்தும் யுவதிகளால் வெக்கமும் அதிகமாய் இருப்பதாய் தகவல் தந்தார்//

வெக்கையே பாதி அதுனால தாங்க... :-))

வெக்கையா இருக்கதால தான்... அவங்க அப்படி இருக்காங்கன்னும் சொல்லலாம்.

நல்ல பகிர்வு. :-)

ஈரோடு கதிர் said...

கேபிள் மிக இனிமையான நபர்...

சென்னையில் ஒரு முறை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமே

நல்ல பகிர்வு பிரபா

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு. மனதை தொட்டது . வாழ்த்துக்கள்.

Ganesan said...

கேபிள் அங்கிளை பத்திரமாக அனுப்புங்கப்பா.

எம்.எம்.அப்துல்லா said...

நான் வந்தப்ப பார்க்காம அல்வா குடுத்துட்டீங்க :)

ஜெட்லி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே....

பிரபாகர் said...

//
VISA said...
Thanks for sharing. Waiting for Cable!!!
//
நன்றிங்க...

//
கோவி.கண்ணன் said...
தம்பி சிறப்பாக இருக்கு பதிவர் சந்திப்பு இடுகை.
//
நன்றிங்கண்ணா...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Thanks for sharing
//
நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமை பிரபாகர்..:)
நானும் பலாபட்டறை சார்பா ஒரு வேர்ல்ட் டூர் அடிக்கலாம்னு இருக்கேன்..:)
//
கண்டிப்பா, அவசியம் வாங்க!

//
வானம்பாடிகள் said...
பகிர்வுக்கு நன்றி
//
நன்றிங்கய்யா...
//
Mrs.Menagasathia said...
அருமை!!
//
நன்றி சகோதரி...

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
இனிமையான தருணங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
//
நன்றி இளவல்...

//
D.R.Ashok said...
:)
//
நன்றி அசோக்....

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை.. நிறைய நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி பிரபாகர்.
//
நன்றி நண்பா...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
அருமை பகிர்ந்தமைக்கு நன்றி...
//
நன்றி தம்பி...

//
சேட்டைக்காரன் said...
அடுத்த சந்திப்பு நடக்குறதுக்குக் கொஞ்சம் முன்னாடி சொன்னீங்கன்னா, நான் வித்-அவுட்டிலேயாவது சிங்கப்பூருக்கு வந்திருவேன்.
//
டிக்கெட் போட்டுத்தர்றேன் சாமி, வந்தா போதும்...

//
ஸ்வாமி ஓம்கார் said...
அன்பு பிரபாகர்,
சுவைக்க சுவைக்க எழுதி இருக்கிறீர்கள்.
சிங்கை வலைபதிவர்களின் அன்பில் திக்கு முக்காடிப்போனேன்.

அன்பே சிவம் :)

மீண்டும் சந்திப்போம்.

//
உங்களின் முதல் பின்னூட்டம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது... நன்றிங்க சாமி...

பிரபாகர் said...

//
இராகவன் நைஜிரியா said...
அருமையான பகிர்வு.
//
நன்றிங்க்கண்ணே...

//
இராமசாமி கண்ணண் said...
பகிர்விற்கு நன்றி.

//
ரொம்ப நன்றிங்க...
//
கலகலப்ரியா said...
tx for sharing na..
//
நன்றி சகோதரி....

பிரபாகர் said...

//
முகிலன் said...
பகிர்வுக்கு நன்றி
//
நன்றி முகிலன்....

//
பித்தனின் வாக்கு said...
நல்ல இடுகை பிரபாகர். புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.
//
நன்றிங்க.

//
புலவன் புலிகேசி said...
சினேகாவா....ம்ம்ம்ம்ம்
//
நேர்ல இன்னும் விவரம் சொல்லுவார் அண்ணன்...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
//சிங்கையில் வெக்கையும் குறைந்த ஆடையுடுத்தும் யுவதிகளால் வெக்கமும் அதிகமாய் இருப்பதாய் தகவல் தந்தார்//
வெக்கையே பாதி அதுனால தாங்க... :-))

வெக்கையா இருக்கதால தான்... அவங்க அப்படி இருக்காங்கன்னும் சொல்லலாம்.

நல்ல பகிர்வு. :-)

//
ம்... அப்புறம்....?

//
ஈரோடு கதிர் said...
கேபிள் மிக இனிமையான நபர்...
சென்னையில் ஒரு முறை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமே

நல்ல பகிர்வு பிரபா
//
நன்றி கதிர்....

//
Madurai Saravanan said...
நல்ல பகிர்வு. மனதை தொட்டது . வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க, முதல் பின்னூட்டத்திற்கு.

பிரபாகர் said...

//
காவேரி கணேஷ் said...
கேபிள் அங்கிளை பத்திரமாக அனுப்புங்கப்பா.
//
கண்டிப்பாங்க... நன்றி முதல் பின்னூட்டத்துக்கு...

//
எம்.எம்.அப்துல்லா said...
நான் வந்தப்ப பார்க்காம அல்வா குடுத்துட்டீங்க :)
//
சாரிங்க்கண்ணே... அடுத்த உங்களின் வருகைக்காக ஆவலாய்...

//
ஜெட்லி said...
பகிர்வுக்கு நன்றி அண்ணே....
//
நன்றி ஜெட்லி...

நட்புடன் ஜமால் said...

சுருக்கமா தெளிவா இருக்கு இடுக்கை.

:)

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB