ஏப்ரல் ஃபூல் ஆயிட்டேன்...

|

காதலிக்கிறதுதான் வாழ்க்கைக்கே ஆதாரமான ஒன்னுன்னு எல்லாரும் திரும்பத் திரும்ப சொல்லவும் எனக்குள்ள கொஞ்சம் வேகம் கிளம்பிடுச்சி.

நானா?, பேரு எதுக்குங்க, நடந்த கூத்த மட்டும் பாருங்க. என்ன பண்றது! இது வரைக்கும் அந்த மாதிரி எண்ணமே இல்லாம இருந்துட்டேன். ரெண்டு மூனு தடவ நமக்கு சந்தர்ப்பம் வந்தும் வீணாக்கிட்டேன். கூடவே இருக்கிற முரட்டு சுபாவம் வேற...

மொதல்ல என் மாமாப் பொண்ணு. பல விதமா எங்கிட்ட பூடகமா பேசி, வெளிப்படுத்துச்சி. சொந்தத்துல பண்றது பாவம்னு படிச்சதால (பிடிக்கலங்கற உண்மைய சொல்ல முடியுமா?) 'என்னோட கசின் நீ, தங்கச்சி மாதிரி அதால ஒத்து வராது' ன்னு சொல்லிட்டேன். அது ஒரு மாக்கான்னு நினைச்சிருக்கும்,  நான் அப்போ கவலைப்படல.

அடுத்ததா பண்ணன்டாவது படிக்கிறப்போ ஒரு பொண்ணு என்னையே பாத்துகிட்டிருக்கும். பசங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். இன்டர்வல் சமயத்துல பசங்க புள்ளைங்க எல்லாம் வெளிய போனப்போ 'உங்ககிட்ட தனியா பேசனும்' னு சொல்லி, ஸ்கூல் விட்டதுக்கு அப்புறம் கிளாஸ்லயே இருக்க சொல்லுச்சி. கடைசி பெல் அடிச்சதும் வெளிய போயிட்டு திரும்பவும் கிளாசுக்கு வந்தேன். என்ன மாதிரியே அந்த பொண்ணும் வந்துச்சி.

’என்னன்னு சொல்லுங்க எனக்கு ஒரே பயமா இருக்கு’ ன்னேன்.

’எனக்கும்தான். என்ன தப்பா நினைக்கக்கூடாது’ன்னு சொல்லுச்சி.

’தப்பா சொல்லலைன்னா தப்பா நினைக்கமாட்டேன்’ னு தத்துவார்த்தமா சொன்னேன்.

கேக்கும்போதே கொஞ்சம் மிரண்டுடுச்சி போல. ’சரி ஒண்ணுமில்ல சும்மாத்தான்’ னு சொல்லவும், ’என்னை என்ன கேணைன்னு நினைக்கிறியா?, ஒழுங்கா சொல்லு’ ன்னு மிரட்டுறாப்ல கேக்கவும்,

’உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இருந்து இல்ல, உங்க பிரண்டு ரவிகிட்ட இந்த லெட்டர கொடுத்துடுங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு கடுதாசிய கொடுத்துட்டு போயிடுச்சி.

பிரிச்சி பார்த்தேன் அன்புள்ள உங்களுக்குன்னு யாருக்கு வேணும்னாலும் பிட் ஆகற மாதிரி இருந்துச்சி. ரவி கேக்காம காதல் கிடைச்ச சந்தோஷத்துல தினம் பரோட்டா, சினிமான்னு எல்லா செலவையும் பாத்துகிட்டான் அவங்களுக்குள்ள பிரச்சினை வர்ற வரைக்கும்.

இப்போ படிச்சி முடிச்சி ஒரு நல்ல வேலையில இதுக்கேன். எல்லா பிரன்ட்சும் லவ் பண்ணாத என்னை இன்னும் ஒரு மாசத்துல யாரையச்சும் லவ் பண்ணலன்னா கூட்டத்துலேயே சேத்துக்க மாட்டோம்னு கண்டிப்பா சொல்லவும், அதான் இந்த கதையோட மொத வரி.

தினமும் ஒரு பொண்ண வேலைக்கு போறப்போ வழியில இருக்கிற ஒரு பஸ் ஸ்டாப்ல பார்ப்பேன், குனிஞ்ச தலை நிமிராம இருக்கும். பஸ்சுல அது ஏறும்போது மட்டும் தலைய நிமித்தி படியப் பார்த்து ஏறும். சரி இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், முயற்சி பண்ணலாம்னு நம்மோட விருப்பம், விவரங்களை எழுதி பாக்கெட்டுல வெச்சிகிட்டு பஸ்சில அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன். எப்படின்னுல்லாம் கேக்காதீங்க, கம்பனி சீக்ரட்.

அடுத்த நாள் அந்த பொண்ணு என்ன பார்த்து சிரிச்சிச்சு. தைரியமா பக்கத்துல வந்து, 'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி.

34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

ஆஹா...
நாங்க மார்ச் 31 ஃபூல் ஆயிட்டமே..

பிரபா... உங்க பையன் கமெண்ட் சூப்பரப்பு

Prathap Kumar S. said...

//அது ஒரு மாக்கான்னு நினைச்சிருக்கும், .//

அதென்ன நினைச்சிருக்கும்...!!??? கன்பார்ம்டு.... ஆனா இதெல்லாம் வீரனுக்கு சாதாரணமான விசயம்ணே...

பல்பு வாங்கறதுல பெரிய கில்லாடியா இருப்பீங்க போல... அதுக்கு இம்புட்டு பல்பா வாங்குவீங்க...!!:))

Prathap Kumar S. said...

ஏம்ணே உங்க பையனுக்கே உங்கமேல நம்பிக்கை இல்லபோல... இப்படி டேமேஜ் பண்றாரு...உங்களை...:))

Unknown said...

இதைத்தான் தவளை தன் வாயால் கெடும்னு பெரியவங்க சொல்லுவாங்க.. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

மங்குனி அமைச்சர் said...

சார் கொஞ்சம் உல்டாவா யோசிங்க

vasu balaji said...

ஹ ஹ. நாமதான் சீரியல் செட்டாச்சே. இல்ல பிரபா:))

Punnakku Moottai said...

என்ன பிரபா இது, எப்ப பாத்தாலும் மாமா பொண்ணு மாமா பொண்ணுன்னு எழுதிகிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு கல்யாணம் ஆகி கொழந்தை குட்டி இருக்க போகுது. அவங்க புருஷன் இத படிச்சிட்டு அவங்க வாழ்க்கைக்கே வேட்டு வச்சிட போறான்.

ஏதோ ஒரு பொண்ணுன்னு போடுங்க.

நம்ப எழுத்து யாருக்காகவது நல்லது செய்யுதோ இல்லையோ, கெடுதல் செய்யாமலாவது இருக்கலாம் இல்லையா?

ஏதோ எனக்கு தோனுச்சி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

பண்புடன் வாழநினைத்து இதுவரை முடியாமல் போன,
பாலா.

Chitra said...

ha,ha,ha,ha..... very funny!

Anonymous said...

//'நேத்து என்ன சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி.//

hahahahahahah

Punnakku Moottai said...

Visit this link and blog on this

http://www.tamilkurinji.com/world_news_detail.php?id=9203

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. மாமன் அருவாளோடு இருக்கிறமாறி போட்டோ எடுத்துட்டு, சிங்கை விசாக்கு அப்ளை பண்றதா, நீயூஸ் வந்துச்சு..

எதுக்கும் அந்த மருவ எடுத்து மூஞ்சியில வெச்சுகிடுங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Punnakku Moottai said...
Visit this link and blog on this
http://www.tamilkurinji.com/world_news_detail.php?id=9203
//

அண்ணே.. நானும் கொடி தூக்கிட்டு, அந்த பெண்ணுக்கு வாதாட கிளம்பிட்டேன்..
திடீர்னு அர்ஜெண்ட் வேலை வந்திடுச்சு..
( போட்டோவை நான் கண்டிப்பாக பார்க்கவில்லை, என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்)

ரோஸ்விக் said...

//இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், முயற்சி பண்ணலாம்னு நம்மோட விருப்பம், விவரங்களை எழுதி பாக்கெட்டுல வெச்சிகிட்டு பச்சில அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன்//

அப்படி என்ன முக்கியமான நாளு... எனக்குத் தெரிஞ்சு ஏப்ரல் -1 வெகு சிலருக்குத் தான் முக்கியமான நாளு... மற்ற எல்லாருக்கும் எச்சரிக்கையா இருக்க வேண்டிய நாளு....

இருந்து இருந்தும் உங்க ஹீரோ அந்த நாளைய போயி தேர்ந்தெடுப்பாரு... ரொம்ப அப்புராணி ஹீரோ-வா இருக்காரு அண்ணா... ;-)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

லவ் ஸ்டோரி சூப்பர் .காமெடியா எழுதீடீங்க ..

prince said...

//’தப்பா சொல்லலைன்னா தப்பா நினைக்கமாட்டேன்’ னு தத்துவார்த்தமா சொன்னேன்.// இந்த அநியாயத்த கேட்க இங்க யாருமே இல்லையா

பித்தனின் வாக்கு said...

ஆகா சிங்கம் வேட்டைக்கு கிளம்பிடுச்சு போல. மாக்கான்ன்னு சொன்னது உங்களை இல்லை பாஸ். லவ் பண்ணத் தெரியாத எல்லாரையும்தான். நல்லா 1000 வாட்ஸ் பல்புதான் வாங்கியிருக்கீங்க.

கலகலப்ரியா said...

அண்ணா இப்பூடி இடுகை போட்டு நம்மள ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு நினைச்சா ஏமாந்துடுவோமாக்கூ... போங்கண்ணா ஏப்ரல் ஃபூல்...

Sathish said...

நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்

http://moo-vie.blogspot.com - Movies in all Languages

http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website

http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)

http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websites

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்...டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்..என்ன மேட்டர்னு சொல்லுங்க..ஐயாம் வெரி பிசி....சென்டிமென்ட்ல ரொம்ப டச் பண்ரமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
sathishsangkavi.blogspot.com said...

நண்பா....

நீங்களும் எங்கள பூல் ஆக்கிட்டிங்க போல் இருக்கு...

புலவன் புலிகேசி said...

//’உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இருந்து இல்ல, உங்க பிரண்டு ரவிகிட்ட இந்த லெட்டர கொடுத்துடுங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு கடுதாசிய கொடுத்துட்டு போயிடுச்சி.//

ரொம்ப வெவரமான பொண்ணுதான்...ஏப்ரல் ஃபூல்

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

google.com said...

'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி

ok anna

Roja

google.com said...

'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி

ok anna

Roja

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
ஆஹா...
நாங்க மார்ச் 31 ஃபூல் ஆயிட்டமே..

பிரபா... உங்க பையன் கமெண்ட் சூப்பரப்பு
//
நன்றி கதிர்...

//
நாஞ்சில் பிரதாப் said...
//அது ஒரு மாக்கான்னு நினைச்சிருக்கும், .//

அதென்ன நினைச்சிருக்கும்...!!??? கன்பார்ம்டு.... ஆனா இதெல்லாம் வீரனுக்கு சாதாரணமான விசயம்ணே...

பல்பு வாங்கறதுல பெரிய கில்லாடியா இருப்பீங்க போல... அதுக்கு இம்புட்டு பல்பா வாங்குவீங்க...!!:))
//
இது நூறு சதக் கதைங்க தம்பி!

//
நாஞ்சில் பிரதாப் said...
ஏம்ணே உங்க பையனுக்கே உங்கமேல நம்பிக்கை இல்லபோல... இப்படி டேமேஜ் பண்றாரு...உங்களை...:))
//
அவரு அப்படித்தான், ஒவ்வொரு இடுகைக்கும் ஏதாச்சும் சொல்லுவாரு...

//
முகிலன் said...
இதைத்தான் தவளை தன் வாயால் கெடும்னு பெரியவங்க சொல்லுவாங்க.. :)
//
கதைங்க தினேஷ்...

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-))))
//
நன்றிங்கய்யா!

//
மங்குனி அமைச்சர் said...
சார் கொஞ்சம் உல்டாவா யோசிங்க
//
நன்றி மங்குனி!

//
வானம்பாடிகள் said...
ஹ ஹ. நாமதான் சீரியல் செட்டாச்சே. இல்ல பிரபா:))
//
ஹி, ஹி... நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
Punnakku Moottai said...
என்ன பிரபா இது, எப்ப பாத்தாலும் மாமா பொண்ணு மாமா பொண்ணுன்னு எழுதிகிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு கல்யாணம் ஆகி கொழந்தை குட்டி இருக்க போகுது. அவங்க புருஷன் இத படிச்சிட்டு அவங்க வாழ்க்கைக்கே வேட்டு வச்சிட போறான்.

ஏதோ ஒரு பொண்ணுன்னு போடுங்க.

நம்ப எழுத்து யாருக்காகவது நல்லது செய்யுதோ இல்லையோ, கெடுதல் செய்யாமலாவது இருக்கலாம் இல்லையா?

ஏதோ எனக்கு தோனுச்சி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

பண்புடன் வாழநினைத்து இதுவரை முடியாமல் போன,
பாலா.
//
பாலா, இது முழுக்க கற்பனைச் சிறுகதை!

//
Chitra said...
ha,ha,ha,ha..... very funny!
//
நன்றிங்க சித்ரா!

//
Sachanaa said...
//'நேத்து என்ன சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி.//

hahahahahahah
//
ரொம்ப நன்றிங்க!

பிரபாகர் said...

//
Punnakku Moottai said...
Visit this link and blog on this

http://www.tamilkurinji.com/world_news_detail.php?id=9203
//
பார்த்தோம், பயங்கரமாயில்ல இருக்கு!

//
பட்டாபட்டி.. said...
அண்ணே.. மாமன் அருவாளோடு இருக்கிறமாறி போட்டோ எடுத்துட்டு, சிங்கை விசாக்கு அப்ளை பண்றதா, நீயூஸ் வந்துச்சு..

எதுக்கும் அந்த மருவ எடுத்து மூஞ்சியில வெச்சுகிடுங்க..
//
ஹா...ஹா...இது கதை... பிரச்சினை இல்லை. வந்தாலும் தம்பி பட்டா, வெளியூரு பாத்துக்க மாட்டீங்களான்னேன்?

//
பட்டாபட்டி.. said...
@Punnakku Moottai said...
Visit this link and blog on this
http://www.tamilkurinji.com/world_news_detail.php?id=9203
//

அண்ணே.. நானும் கொடி தூக்கிட்டு, அந்த பெண்ணுக்கு வாதாட கிளம்பிட்டேன்..
திடீர்னு அர்ஜெண்ட் வேலை வந்திடுச்சு..
( போட்டோவை நான் கண்டிப்பாக பார்க்கவில்லை, என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்)
//
பாலா, நல்லா ரசனையோடத்தான் இருக்காரு!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
//இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், முயற்சி பண்ணலாம்னு நம்மோட விருப்பம், விவரங்களை எழுதி பாக்கெட்டுல வெச்சிகிட்டு பச்சில அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன்//

அப்படி என்ன முக்கியமான நாளு... எனக்குத் தெரிஞ்சு ஏப்ரல் -1 வெகு சிலருக்குத் தான் முக்கியமான நாளு... மற்ற எல்லாருக்கும் எச்சரிக்கையா இருக்க வேண்டிய நாளு....

இருந்து இருந்தும் உங்க ஹீரோ அந்த நாளைய போயி தேர்ந்தெடுப்பாரு... ரொம்ப அப்புராணி ஹீரோ-வா இருக்காரு அண்ணா... ;-)
//
இத கதைன்னு உண்மையை புரிஞ்ச ஒரே ஆளு என் தம்பி ரோஸ்விக் தான்!

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
லவ் ஸ்டோரி சூப்பர் .காமெடியா எழுதீடீங்க ..
//
நன்றி ஜெய்...

//
princerajan C.T said...
//’தப்பா சொல்லலைன்னா தப்பா நினைக்கமாட்டேன்’ னு தத்துவார்த்தமா சொன்னேன்.// இந்த அநியாயத்த கேட்க இங்க யாருமே இல்லையா
//
அதான் நீங்க இருக்கீங்களே!

பிரபாகர் said...

//
பித்தனின் வாக்கு said...
ஆகா சிங்கம் வேட்டைக்கு கிளம்பிடுச்சு போல. மாக்கான்ன்னு சொன்னது உங்களை இல்லை பாஸ். லவ் பண்ணத் தெரியாத எல்லாரையும்தான். நல்லா 1000 வாட்ஸ் பல்புதான் வாங்கியிருக்கீங்க.
//
நன்றி சுதாகர்!

//
கலகலப்ரியா said...
அண்ணா இப்பூடி இடுகை போட்டு நம்மள ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு நினைச்சா ஏமாந்துடுவோமாக்கூ... போங்கண்ணா ஏப்ரல் ஃபூல்...
//
நன்றி சகோதரி, இதெல்லாம் அரசியல்ல சகஜம்...

//
. said...
நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்

http://moo-vie.blogspot.com - Movies in all Languages

http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website

http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)

http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websites
//
கண்டிப்பா பாக்கறேங்க!

பிரபாகர் said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ம்ம்ம்...டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்..என்ன மேட்டர்னு சொல்லுங்க..ஐயாம் வெரி பிசி....சென்டிமென்ட்ல ரொம்ப டச் பண்ரமா...
//
முதல் வருகைக்கு நன்றிங்க பன்னி!ரொம்ப மகிழ்ச்சி!

//
Sangkavi said...
நண்பா....

நீங்களும் எங்கள பூல் ஆக்கிட்டிங்க போல் இருக்கு...
//
கதைங்க நண்பா!

//
புலவன் புலிகேசி said...
//’உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இருந்து இல்ல, உங்க பிரண்டு ரவிகிட்ட இந்த லெட்டர கொடுத்துடுங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு கடுதாசிய கொடுத்துட்டு போயிடுச்சி.//

ரொம்ப வெவரமான பொண்ணுதான்...ஏப்ரல் ஃபூல்
//
நன்றி புலிகேசி!

பிரபாகர் said...

//
thalaivan said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

April 2, 2010 6:02 PM
//
செய்யுறேனுங்க!

//
google.com said...
'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி

ok anna

Roja

//
முதல் வருகைக்கு நன்றிங்க!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB