கல்லூரி நினைவுகள் - செல்வராஜ்...

|

வாழ்வில் எத்தருணத்திலாவது நாம் ஒரு பொய்யை சொல்லியிருப்போம். அது எந்த ஒரு பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லையெனில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், அது பல குழப்பங்களை விளைவித்தால்..., படியுங்களேன் இந்த அனுபவப் பகிர்வை...

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனியே ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து என் உறவுக்கார ஆயாவினை சமைத்துப்போடச் சொல்லி படித்துக்கொண்டிருந்தோம்.

நிறைய நட்புக்களோடு பழக வாய்ப்பு கிடைத்தாலும் என்னுடன் வீட்டில் தங்கியிருந்த எனது சூப்பர் சீனியர் செல்வராஜ் அவர்களை மறக்க முடியாது. நான் பி.எஸ்.ஸி இரண்டாமாண்டு படிக்கும்போது அவர் எம்.எஸ்.சி முதல் ஆண்டு.

அவரைப் போன்ற ஒரு கேரக்டரை இன்னும் சந்திக்கவில்லை, சந்திக்கப் போவதுமில்லை. அவரின் கையெழுத்துப் போல் மிக மோசமான ஒன்றை இதுவரை பார்த்ததில்லை, கோழி கிறுக்குவதுகூட கொஞ்சம் புடியும்படி இருக்கும். எழுத்தைப்பார்த்து, 'எப்படிண்ணா இது திருத்தறவங்களுக்கு புரியுமா' என கேட்டதற்கு, ’எனக்கே புரியாது, அவனுக்கு எங்க புரியப்போகுது, குழப்பத்துலயே மார்க் போட்டு பாஸ் பண்ண வெச்சிடுவான்' என சொல்வார், அதே போல் எல்லா செமெஸ்டரிலும் சராசரியான மார்க்கோடு பாஸாகி விடுவார்.

'சாப்பிடும்போது ஒருநாள், சாம்பார், ரசம், எல்லாம் வயித்துக்குத்தானே போகுது' என இரண்டையும் கலந்து சாப்பிட ஆரம்பிக்க, உடன் நாங்கள், ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், உப்பு என சொல்ல 'ம்... அதுவும் சரிதான்' என எல்லாவற்றையும் ஒன்றாய் கலந்துகட்டி அடித்தார்.

பிச்சைக்காரனை பார்த்தால் 'கால் கை இருக்கில்ல உழைச்சி சாப்பிடு' என் சொல்லி ஒன்றும் போட மாட்டர். சில நேரங்களில் உண்மையில் முடியாத சிலருக்கு பத்து ரூபாயை சாதாரணமாக தூக்கிக் கொடுப்பார். அவரது செயல்கள் ஒவ்வொன்றும் புரியாத புதிராக இருக்கும். எல்லோரும் படிக்கும்போது கதை புத்தகம் படிப்பார், நன்றாக தூங்குவார்.

திடீரென ரூமில் இருக்கும் எல்லோருக்கும் அவர் செலவில் டிபன் வாங்கி வருவார். ஒருமுறை கடனாக பத்து ரூபாய் கேட்டதற்கு, அதெல்லாம் முடியாது ஐம்பது ரூபாய்தான் தருவேன் என தருவார், சில சமயங்களில் சட்டென 'இருக்கு தரமுடியாது போ' எனவும் சொல்லுவார்.

ஒருமுறை வெளியே போகலாம் வா என அழைத்து சென்றார். வழியில் அவரது நண்பர்கள் வர பேச ஆரம்பித்தார். பேச்சு ரொம்ப நேரம் நீளுமென எண்ணியபோது, 'சரி வெட்டியா ஏன் பேசனும் என சொல்லி' சட்டென முறித்துக்கொண்டு என்னை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் 'லூசுப்பயலுவ, அவனுங்ககிட்ட பேசி ஏன் நேரத்தை வீணாக்கனும்' என சொன்னார்.

அப்போது தேர்வு சமயம், அவர் ஸ்டடி ஹாலிடேசில் அவரது ஊரான வேதாரண்யம் சென்றுவிட்டார். காலை நேரம், கடுமையான மழை, புயல், வெள்ளம். எல்லோரும் தேர்வுக்காக படித்திக்கொண்டிருந்தோம். தங்கியிருந்த வீட்டின் மற்றொரு போர்ஷனில் இருந்த எனது பெயரையே கொண்ட சிறுவன் பிரபு, 'செல்வராஜ் அண்ணாவ எங்கண்ணா காணோம்' எனக் கேட்க, கவனிக்காததுபோல் இருந்தேன்.

திரும்பத் திரும்பக் கேட்க, கடுப்பில் அவர் வரமாட்டர் என சொன்னேன். திரும்பவும் அவன் ஏன் என கேட்க, அவரு போயிட்டாரு' என சொல்லி படிப்பில் ஆழ்ந்தேன்.

தேர்வினை முடித்து வெளியே வர எனக்காக ஆபீஸ் அட்டன்டர் காத்திருந்தார். 'பிரபா, உனக்காக கீழே செல்வராஜ் ஃபிரண்ட் குணா காத்திருக்கிறாரு' என சொன்னார்.

அவசரமாக கீழே இறங்கி செல்ல, காரின் அருகில் குணா நன்கைந்து நண்பர்களோடு, கலங்கிய கண்களோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும், 'பிரபா, செல்வராஜுக்கு என்ன ஆச்சு?' என கேட்க, 'அவருக்கு என்ன ஆச்சு?' என திருப்பிக்கேட்டேன்.

'அவரு போயிட்டதா பக்கத்து வீட்டு பிரபுகிட்ட சொன்னீங்களாம், அவங்க பதறிப்போய் எங்கிட்ட சொல்ல, நாங்கல்லம் மாலை வாங்கிகிட்டு கிளம்பிட்டிருக்கோம், எதுக்கும் உங்ககிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தோம்' என சொல்ல,

'அய்யாய்யோ, அவன் சும்மா தொந்தரவு பண்ணிகிட்டிருந்தான், அதான் அவரு போயிட்டாரு இனிமே வரமாட்டார்னு சொன்னேன்' என் சொல்ல,

அவர் கொலை வெறியோடு, என்னை பார்த்து அடிக்க வந்த மற்றவர்களையும் தடுத்து, 'செல்வராஜ் ரூம் மெட்டுங்கறதாலயும், அவனுக்கு ஒண்ணும் ஆகலங்கறதுக்காகவும் உன்னை விட்டுட்டு போறேன்' என சொல்லி என்னை ஒரு நாயெனப் பார்த்து செல்ல எனக்கு போன உயிர் திரும்ப வந்தது.

ஊரிலிருந்து வந்த பிறகு இதை கேட்டு செல்வராஜ் விழுந்து விழுந்து சிரித்தார். 'இன்னும் கொஞ்ச நாள் வரலைன்னா கரியமே முடிஞ்சதுன்னு சொல்லியிருப்ப போலிருக்கு' என்றார். திரும்பவும் எனக்கும் குணாவுக்கும் இடையே சுமூகமாய் உறவு ஏற்படவும் செய்தார்.

படித்து முடித்த ஓரிரு வருடத்துக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு பதினைந்து பைசா போஸ்ட் கார்ட் வந்தது, அவரின் அதே புரியாத கிறுக்கல்களோடு. அதில் 'உடனே பம்பாய் கிளம்பி வா, வேலை நான் வாங்கித் தருகிறேன்' என முகவரியோடு இருக்க நம்பிக்கையில்லாததால் செல்லவில்லை.

எங்களுக்கு சமைத்து போட்ட ஆயாவினை பின்னொருநாள் எங்கள் ஊருக்கு வந்து பார்த்து, ஒரு சேலை,  நிறைய பணம் எல்லாம் கொடுத்து பார்த்துவிட்டு சென்றதாக என்னை பார்க்கும் போது ஆயா சொன்னார்கள்.

இன்று நன்கு செட்டில் ஆகி குடும்பத்தோடு அமெரிக்காவில் இருக்கிறார். எனது நண்பனின் நண்பனின் சகோதரியைத்தான் திருமணம் செய்திருக்கிறார். கண்டிப்பாய் அவரோடு பேசவேண்டும், நினைவுகளைக் கிளறவேண்டும்.

23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பரான பழைய நினைவுகள்..

Prathap Kumar S. said...

பலவகையான மனிதர்கள் நம்மை கடந்துப்போகிறார்கள்...நினைவில் இருப்பவர்கள் சிலர் மட்டுமே.. அதில் செல்வராஜ்ம் ஒருவர்.... நல்ல மலரும் நினைவுகள்...

Chitra said...

உங்கள் நண்பருடன் நீங்கள், விரைவில் சந்தித்து பேச வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

vasu balaji said...

இனிய நினைவுகள் இணைக்கட்டும் நட்பை.:)

sathishsangkavi.blogspot.com said...

நண்பா....

அழகான நினைவுகள்....

ஒவ்வொருவர் வாழ்விலும் இது போல் நிறைய செல்வராஜ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

உங்கள் செல்வராஜை சந்திக்க எனது வாழ்த்துக்கள் நண்பா....

க.பாலாசி said...

நல்லா சொன்னீங்களே ஒரு வார்த்த... அதையும் உங்க நண்பருங்க நம்பியிருக்காங்களே... செல நேரத்துல நாம வாய்தவறி சொல்றதுகூட சங்கடமாயிடும்...

நல்ல அனுபவமுங்கண்ணா....

அன்புடன் அருணா said...

நல்லா பகிர்ந்திருக்கீங்க!கண்டிப்பா நண்பரோடு பேசுங்க!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://thalaivan.com/

Hello

You can put our logo and voting button on your blogspot and get more visitors

http://thalaivan.com/

Paleo God said...

அந்த கையெழுத்து மேட்டர் சொன்னதும் என் நண்பரின் நினைவு வந்துவிட்டது. அவருடையதும் கிறுக்கலாகத்தானிருக்கும். ஒருமுறை அவரின் பெயரெழுதி கையெழுத்துப் போடச்சொன்னபோது “ஏங்க ரெண்டு முறை கையெழுத்து போடறீங்க” என்று கேட்ட நபரிடம் நண்பர் முறைக்க, நான் சிரித்தேன்..:)

GEETHA ACHAL said...

பழய இனிய நினைவுகள்...கண்டிப்பக சீக்கீரத்தில் அவருடன் பேசுவீங்க...வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

இன்ட்ரஸ்டிங் கேரக்டர்களை விட்டுவிடக் கூடாது. விரைவில் அவரை தொடர்பு கொண்டு மகிழுங்கள்.

இது போன்றவர்கள் தான் வாழ்வை நினைவு படுத்துபவர்கள்.

அவர் நல்லாயிருக்கனும்.

settaikkaran said...

சற்றே புதிரான குணாதிசயத்தைக் கொண்டிருந்தாலும் கூட, மிகவும் சுவாரசியமானவராகத் தெரிகிறார் சீனியர் செல்வராஜ். இது போல சிலரை நானும் சந்தித்ததுண்டு; மனிதரில் இத்தனை நிறங்களா? என்று வியந்ததுமுண்டு. உங்களது பதிவு மீண்டும் அந்தக் கேள்வியை எழுப்பியது. "அவர் போயிட்டாரு," என்று சொன்னதன் விளைவாக நடந்தேறியது விபரீதமா, விளையாட்டா? சிரிப்பு வந்ததென்னமோ உண்மை தான். அருமையான பதிவு!

ஈரோடு கதிர் said...

அருமை..

அண்ணே...
ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை . நினைவுகள் மீண்டும் புதிப்பிக்கப்பட்ட விதம் அருமை .
வாழ்த்துக்கள் !

மங்குனி அமைச்சர் said...

உடாதிக தல, ஆள புடிங்க

சாந்தி மாரியப்பன் said...

அழகான நினைவுகள். இப்படி ஒரு சுவாரஸ்யமான மனிதரை சீக்கிரமே சந்திக்க வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
சூப்பரான பழைய நினைவுகள்..
//
நன்றி நண்பா!

//
நாஞ்சில் பிரதாப் said...
பலவகையான மனிதர்கள் நம்மை கடந்துப்போகிறார்கள்...நினைவில் இருப்பவர்கள் சிலர் மட்டுமே.. அதில் செல்வராஜ்ம் ஒருவர்.... நல்ல மலரும் நினைவுகள்...
//
நன்றி தம்பி! வித்தியாச மனிதர்கள்தாம் நம்முள் என்றும் நிலைத்து இருக்கிறார்கள்.

//
Chitra said...
உங்கள் நண்பருடன் நீங்கள், விரைவில் சந்தித்து பேச வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
//
நன்றிங்க சித்ரா...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
இனிய நினைவுகள் இணைக்கட்டும் நட்பை.:)
//
நன்றிங்கய்யா!

//
Sangkavi said...
நண்பா....

அழகான நினைவுகள்....

ஒவ்வொருவர் வாழ்விலும் இது போல் நிறைய செல்வராஜ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

உங்கள் செல்வராஜை சந்திக்க எனது வாழ்த்துக்கள் நண்பா....
//
நன்றி நண்பா!

//
க.பாலாசி said...
நல்லா சொன்னீங்களே ஒரு வார்த்த... அதையும் உங்க நண்பருங்க நம்பியிருக்காங்களே... செல நேரத்துல நாம வாய்தவறி சொல்றதுகூட சங்கடமாயிடும்...

நல்ல அனுபவமுங்கண்ணா....
//
நன்றி இளவல்!

பிரபாகர் said...

//
அன்புடன் அருணா said...
நல்லா பகிர்ந்திருக்கீங்க!கண்டிப்பா நண்பரோடு பேசுங்க!
//
ரொம்ப நன்றிங்க!

//
thalaivan said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://thalaivan.com/

Hello

You can put our logo and voting button on your blogspot and get more visitors

http://thalaivan.com/
//
செய்துவிடுவோம்...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அந்த கையெழுத்து மேட்டர் சொன்னதும் என் நண்பரின் நினைவு வந்துவிட்டது. அவருடையதும் கிறுக்கலாகத்தானிருக்கும். ஒருமுறை அவரின் பெயரெழுதி கையெழுத்துப் போடச்சொன்னபோது “ஏங்க ரெண்டு முறை கையெழுத்து போடறீங்க” என்று கேட்ட நபரிடம் நண்பர் முறைக்க, நான் சிரித்தேன்..:)
//
ஆஹா! நன்றிங்க!

பிரபாகர் said...

//
Geetha Achal said...
பழய இனிய நினைவுகள்...கண்டிப்பக சீக்கீரத்தில் அவருடன் பேசுவீங்க...வாழ்த்துகள்
//
நன்றிங்க சகோதரி!

//
ரோஸ்விக் said...
இன்ட்ரஸ்டிங் கேரக்டர்களை விட்டுவிடக் கூடாது. விரைவில் அவரை தொடர்பு கொண்டு மகிழுங்கள்.

இது போன்றவர்கள் தான் வாழ்வை நினைவு படுத்துபவர்கள்.

அவர் நல்லாயிருக்கனும்.
//
கண்டிப்பா! நன்றி சகோதரி!

//
சேட்டைக்காரன் said...
சற்றே புதிரான குணாதிசயத்தைக் கொண்டிருந்தாலும் கூட, மிகவும் சுவாரசியமானவராகத் தெரிகிறார் சீனியர் செல்வராஜ். இது போல சிலரை நானும் சந்தித்ததுண்டு; மனிதரில் இத்தனை நிறங்களா? என்று வியந்ததுமுண்டு. உங்களது பதிவு மீண்டும் அந்தக் கேள்வியை எழுப்பியது. "அவர் போயிட்டாரு," என்று சொன்னதன் விளைவாக நடந்தேறியது விபரீதமா, விளையாட்டா? சிரிப்பு வந்ததென்னமோ உண்மை தான். அருமையான பதிவு!
//
நன்றி என் சேட்டை நண்பா!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
அருமை..

அண்ணே...
ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே
//
இல்லையில்லை புதிதுதான், உங்களிடம் தொலைபேசியில் இது பற்றி பேசியிருக்கிறேன்...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் அருமை . நினைவுகள் மீண்டும் புதிப்பிக்கப்பட்ட விதம் அருமை .
வாழ்த்துக்கள் !
//
நன்றி சங்கர்!

//
மங்குனி அமைச்சர் said...
உடாதிக தல, ஆள புடிங்க
//
புடிச்சிடுவோம், நன்றி மங்குனி!

//
அமைதிச்சாரல் said...
அழகான நினைவுகள். இப்படி ஒரு சுவாரஸ்யமான மனிதரை சீக்கிரமே சந்திக்க வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றிங்க!

துபாய் ராஜா said...

சாதாரணமா சொல்ற வார்த்தைகள்
சதா ரணம் உண்டாக்கி விடும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

துபாய் ராஜா said...

சாதாரணமா சொல்ற வார்த்தைகள்
சதா ரணம் உண்டாக்கி விடும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB