எல்லோருக்கும் உள்ளுக்குள் இருக்கும் இயல்பான ஒரு வி்ஷயம் ஒரு நிகழ்வினை முன்னின்று நடத்துவது. அதற்கான தருணம் தானாகவும் வரும் அல்லது ஏற்படுத்திக் கொள்ளுமாறு அமையும். நமக்கும் அது சம்மந்தமாய் நிகழ அது இடுகையாக இங்கே.
இளங்கலை முடித்து முதுகலை படிப்பினையும் படித்த அதே கல்லூரியில் சேர்ந்த புதிது. கணனி சம்மந்தப்பட்ட படிப்பாதலால் படித்த பாடங்களே திரும்பவும் படிக்கவேண்டிய சூழல்.
தெரிந்த அதே பாடம் தானே என மிகவும் அசிரத்தையோடு படிப்பில் கவனமின்றி இருந்த அந்த தருணத்தில் ஆத்தூர் சென்றிருந்த போது ஒரு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தகவல் நம்மை வெகுவாய்க் கவர்ந்தது.
'படையாச்சியூரில் மாபெரும் கைப்பந்துப்போட்டி... முதல் பரிசு இரண்டாயிரம்’ என இன்னும் பிற தகவல்களுடன். முதலில் பெரும் ஆச்சர்யம் இப்படி ஒரு ஊர் அருகில் இருக்கிறதாவென, அடுத்து அந்த போட்டியில் கலந்துகொள்ளும் அணியின் விவரங்கள்.
சிறு கிராமம், பேருந்து வசதிகூட இல்லை, ஆனால் பாக்கு மரங்கள் நிறைய இருக்க அது சம்மந்தமான வேலைகளையே பெரும்பாலோனோர் செய்ய ஒரு செழிப்பான கிராமம். நாங்களும் கலந்துகொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் நம் ஊரிலும் போட்டியினை நடத்தவேண்டும் என ஒரு முடிவினை செய்ய ஒரு தூண்டுகோலாய் இருந்தது.
சரியென எல்லோரும் இது பற்றி கூடிப்பேச முடிவு செய்தோம். இறுதியில் ‘பாரதி கைப்பந்துக்குழு’ என பெயருடன் ஒரு அமைப்பினை உருவாக்கி நம்மை ஒரு மனதாக தலைவராக்க, போட்டிக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தோம்.
நன்கொடைச் சீட்டுக்களை அடித்து பணத்தினை வசூல் செய்து சிறப்பாக செய்வது என முடிவு செய்தோம். பரிசுகளை மூவாயிரம், இரண்டாயிரம், ஆயிரம் என நிர்ணயித்தோம்.
உள்ளூரில் நூற்பாலை வைத்திருப்பவர் முதல் பரிசு, உரக்கடை வைத்திருப்பவர் இரண்டாம் பரிசு, மருந்துக்கடை வைத்திருப்பவர் மூன்றாம் பரிசு என தருவதற்கு சம்மதிக்க, ‘பாரதி கைப்பந்துக்குழுவின் முதலாமாண்டு மாபெரும் போட்டி’ என அழகாய் சுவரொட்டிகள் தயார் செய்து, பேருந்துகளில் ஒட்டி போட்டிக்கான வேலைகளை ஆரம்பித்தோம்.
நம்முடன் பயிலும் மாணவர்கள் தலைக்கு இருபது ஐம்பது என தர, நல்ல ஒரு தொகை சேர்ந்தது. ஊருக்குள்ளும் நல்ல வசூல். உடற்பயிற்சி ஆசிரியர் பந்துகள், வலை என கொடுத்து எல்லா உதவிகளையும் செய்ய, நாங்களும் ஆற்றில் மணல் அடித்துக்கொண்டுவந்து கொட்டி பள்ளி மைதானத்தில் இருந்ததை சரிசெய்தும் புதிதாய் ஒன்று எனவும் இரண்டு மைதானங்களை உருவாக்கினோம்.
பக்கத்து ஊரிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் நமக்கு அறிமுகமான உடற்பயிற்சி ஆசிரியர்களையும் நடுவர்களாக பணிபுரிய அழைக்க அவர்களும் சந்தோசமாய் வர ஒப்புக்கொண்டார்கள். தேர்வு முடிந்து பள்ளிக்கான விடுமுறை நாளாக இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் செய்வதற்கு ஏதுவாய் இருந்தது.
நடுவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஓய்வெடுக்க கீற்றுகளால் மேயப்பட்ட ஒரு சிறு இடத்தினை தயார்ப்படுத்தி உட்கார்வதற்கு பென்ச், சேர்களை போட்டு வைத்தோம்.
பள்ளியிலேயே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய, இரு நாட்கள் அம்மாவிடம் சொல்லி சாப்பாடு சமைக்கவும், தாக சாந்திக்காக விளையாடும் சமயத்தில் எலுமிச்சை சாறு தருவதற்கும் ஏற்பாடு செய்தோம்.
மாமா இலவசமாய் ஒலி பெருக்கி மைக் என வழங்க போட்டிக்காக எல்லாம் தயார்ப் படுத்தினோம். வருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த அணிகள் பதினாறு. ஆனால் வந்ததுவோ எதிர்ப்பாராமல் முப்பது.
அணிகள் மட்டுமல்ல, அழையா விருந்தாளிகளாய் மழை, எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...
மிச்சர்கடை
4 weeks ago
30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
வாழ்க!
me 1st..ஹா..ஹா..
இருங்க படிச்சுட்டு வாரேன்
அட.. வடை போச்சே..
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த இடுகைக்காக வெயிட்டிங்!!
//எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...//
எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே? தொடருங்கள், காத்திருக்கிறோம்.
ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு. பினிசிங் என்ன ஆச்சு தல....
உள்ளேன் ஐயா!
மிச்சமும் படிச்சுட்டு நீங்க தலைவரான்னு ஒத்துக்கறோம்:). நல்லா இருக்கு நடை.
Present prabaa
தலைவரே வணக்கம்!
அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க.
நடையில் நல்ல முன்னேற்றம்.
////எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...////
ஆஹா இன்னும் இருக்கா !
தொடருங்கள் .,
எதிர்பார்புடன் காத்திருக்கிறேன் .
//மாமா இலவசமாய் ஒலி பெருக்கி மைக் என வழங்க போட்டிக்காக எல்லாம் தயார்ப் படுத்தினோம். வருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த அணிகள் பதினாறு. ஆனால் வந்ததுவோ எதிர்ப்பாராமல் முப்பது.//
பரவாயில்லையே!பொதுவா எதிர்பார்த்ததுக்கும் குறைவாத்தான் வருவாங்க.
ஒரு சின்ன சந்தேகம்.தலைவர்ன்னு படிச்ச உடனே தல யார்ன்னு பார்க்காமலேயே வந்துட்டேன்.நீங்க....நீங்க....அந்த ஸ்னேக் பிரபாகர்தானே:)
//ஒரு அமைப்பினை உருவாக்கி நம்மை ஒரு மனதாக தலைவராக்க,//
தலைவா!!!! வணக்கம்
கலக்குங்க ...
அந்த மழை மட்டும் வராதிருந்தால்...
சொல்லிய விதம் அருமை பிரபாகர்...
நல்லாருக்குண்ணா.. அது எப்பூடிச் சமாளிச்சீங்கன்னு பார்ப்போம் அடுத்த இடுகைல...
// தாத்தா அடிச்சப்போ டாடி இப்படித்தான்// கண்ணூ, அது டாடி இல்லடா, அப்பா. சொல்லு அ...ப்...பா. இல்லாட்டி உன்னோட பையன் உன்னோட அப்பாவைத் தாத்தான்னு சொல்லாம grandpaன்னு சொல்லுவான். அப்புறம் //தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட// உங்க அப்பா ரொம்ம்ம்ம்ம்பக் கஷ்டப்படுவாருப்பா.... :))))
எதிலையுமே சங்கடங்கள்,எதிர்ப்புகள்,சவால்கள் இல்லை என்றால் சுவாரஸ்யம் இருக்காது நண்பரே.எதிர்ப்புக்களைக் கடந்து காமிக்கும் போதுதான் வெற்றி இனிக்கும். எழுதுங்க. அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்.
பிரபா,
பதிவு மிக நன்று. நினைவலைகள் மிக தொலைவு செல்கிறது உங்களுக்கு. வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே சம்பவங்களை நனைவில் நிறுத்திவைக்க இயலும்.
நீங்களும் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து இருக்கிறீர்கள். மேலும் இன்னும் ரசித்து வாழ வாழ்த்துக்கள்.
//நம்மை ஒரு மனதாக தலைவராக்க//
நம்மை 'நாமே' ஒரு மனதாக தலைவராக்கி .......
மேலும் ஒரு சிறு திருத்தம். //படையாச்சியூரில் மாபெரும் கைப்பந்துப்போட்டி//
'படையாச்சியூர்' அல்ல 'படையாட்சியூர்' என்று இருக்கவேண்டும். 'ஆச்சி' க்கும் 'ஆட்சி' க்கும் நிறைய வித்தியாசமுண்டு தலைவரே.
//நாங்களும் கலந்துகொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் //
என்னா ஒரு பெறுமை.....! இதெல்லாம் ஓவரா தெரியலியா பிரபாகர்.
//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்க!
//
நன்றிங்கண்ணே!
//
பட்டாபட்டி.. said...
me 1st..ஹா..ஹா..
இருங்க படிச்சுட்டு வாரேன்
பட்டாபட்டி.. said...
அட.. வடை போச்சே..
//
நன்றிங்க தம்பி, தொடர் ஆதரவுக்கு, அன்பிற்கு.
//
ச.செந்தில்வேலன் said...
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த இடுகைக்காக வெயிட்டிங்!!
//
நன்றி செந்தில்! எல்லாம் உங்களின் அன்பினால்தான்!
//
சேட்டைக்காரன் said...
//எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...//
எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே? தொடருங்கள், காத்திருக்கிறோம்.
//
நன்றி சேட்டை நண்பா!
//
துபாய் ராஜா said...
ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு. பினிசிங் என்ன ஆச்சு தல....
//
நன்றி ராஜா, வழக்கம்போல் சுபம்!
//
APRIL 4, 2010 1:45 PM
நிஜமா நல்லவன் said...
உள்ளேன் ஐயா!
நிஜமா நல்லவன் said...
+1
//
நன்றி பாரதி! அன்பிற்கு, ஆதரவிற்கு!
//
வானம்பாடிகள் said...
மிச்சமும் படிச்சுட்டு நீங்க தலைவரான்னு ஒத்துக்கறோம்:). நல்லா இருக்கு நடை.
//
நன்றிங்கய்யா!
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Present prabaa
//
நன்றிங்கய்யா!
//
பழமைபேசி said...
தலைவரே வணக்கம்!
//
என்றும் உங்கள் தம்பி, தொண்டன் தானுங்கண்ணே!
//
நாடோடி இலக்கியன் said...
அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க.
நடையில் நல்ல முன்னேற்றம்.
//
நன்றி பாரி. உங்களின் அறிவுறுத்தல் முக்கிய காரணம்...
//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////எங்கள் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிலரால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அடுத்த இடுகையில்...////
ஆஹா இன்னும் இருக்கா !
தொடருங்கள் .,
எதிர்பார்புடன் காத்திருக்கிறேன் .
//
நன்றி சங்கர்...
//
ராஜ நடராஜன் said...
//மாமா இலவசமாய் ஒலி பெருக்கி மைக் என வழங்க போட்டிக்காக எல்லாம் தயார்ப் படுத்தினோம். வருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த அணிகள் பதினாறு. ஆனால் வந்ததுவோ எதிர்ப்பாராமல் முப்பது.//
பரவாயில்லையே!பொதுவா எதிர்பார்த்ததுக்கும் குறைவாத்தான் வருவாங்க.
ஒரு சின்ன சந்தேகம்.தலைவர்ன்னு படிச்ச உடனே தல யார்ன்னு பார்க்காமலேயே வந்துட்டேன்.நீங்க....நீங்க....அந்த ஸ்னேக் பிரபாகர்தானே:)
//
ரொம்ப நன்றிங்க! அதே!
//
ஈரோடு கதிர் said...
//ஒரு அமைப்பினை உருவாக்கி நம்மை ஒரு மனதாக தலைவராக்க,//
தலைவா!!!! வணக்கம்
//
நன்றிங்க நாட்டாமை!
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
கலக்குங்க ...
//
நன்றி ஜெய்!
//
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
அந்த மழை மட்டும் வராதிருந்தால்...
//
வருகைக்கு நன்றிங்க...
//
வெறுமை said...
சொல்லிய விதம் அருமை பிரபாகர்...
//
ரொம்ப நன்றிங்க!
//
கலகலப்ரியா said...
நல்லாருக்குண்ணா.. அது எப்பூடிச் சமாளிச்சீங்கன்னு பார்ப்போம் அடுத்த இடுகைல...
//
நன்றி சகோதரி!
//
அக்கினிச் சித்தன் said...
// தாத்தா அடிச்சப்போ டாடி இப்படித்தான்// கண்ணூ, அது டாடி இல்லடா, அப்பா. சொல்லு அ...ப்...பா. இல்லாட்டி உன்னோட பையன் உன்னோட அப்பாவைத் தாத்தான்னு சொல்லாம grandpaன்னு சொல்லுவான். அப்புறம் //தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட// உங்க அப்பா ரொம்ம்ம்ம்ம்பக் கஷ்டப்படுவாருப்பா.... :))))
//
ரொம்ப நன்றிங்க!
//
பித்தனின் வாக்கு said...
எதிலையுமே சங்கடங்கள்,எதிர்ப்புகள்,சவால்கள் இல்லை என்றால் சுவாரஸ்யம் இருக்காது நண்பரே.எதிர்ப்புக்களைக் கடந்து காமிக்கும் போதுதான் வெற்றி இனிக்கும். எழுதுங்க. அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்.
//
நன்றிங்க சுதாகர்...
//
Punnakku Moottai said...
பிரபா,
பதிவு மிக நன்று. நினைவலைகள் மிக தொலைவு செல்கிறது உங்களுக்கு. வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே சம்பவங்களை நனைவில் நிறுத்திவைக்க இயலும்.
நீங்களும் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து இருக்கிறீர்கள். மேலும் இன்னும் ரசித்து வாழ வாழ்த்துக்கள்.
//நம்மை ஒரு மனதாக தலைவராக்க//
நம்மை 'நாமே' ஒரு மனதாக தலைவராக்கி .......
மேலும் ஒரு சிறு திருத்தம். //படையாச்சியூரில் மாபெரும் கைப்பந்துப்போட்டி//
'படையாச்சியூர்' அல்ல 'படையாட்சியூர்' என்று இருக்கவேண்டும். 'ஆச்சி' க்கும் 'ஆட்சி' க்கும் நிறைய வித்தியாசமுண்டு தலைவரே.
//
நன்றி பாலா! நம்ம பக்கத்துல படையாச்சின்னுதான் சொல்லுவாங்க!
//
சத்ரியன் said...
//நாங்களும் கலந்துகொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் //
என்னா ஒரு பெறுமை.....! இதெல்லாம் ஓவரா தெரியலியா பிரபாகர்.
//
உண்மைங்க! சொல்றதில என்ன வெட்கம்?
Post a Comment