மீன் பிடிக்கப் போறோம்...

|

எண்பதுகளின் தொடக்கம், நல்ல மனம் படைத்த வெள்ளந்தியான மனிதர்கள் அதிகமாக, சுகாதாரமான காற்று மட்டுமே இருக்கும் அழகிய கிராமம்.

மொத்தத்தில் அறுபது வீடுகள், அதில் ஓரிரண்டு ஓட்டு வீடுகள் பெரும்பாலும் திண்ணையுடன். ஊரின் மத்தியில் ஒரு அழகிய முருகன் கோவில், சுற்றிலும் கற்களாலான சுற்றுச்சுவருடன். குடிநீருக்காக கோவிலுக்கு முன் ஒரு போரிங் பைப்பு, ஊரில் மொத்தம் மூன்று இடங்களில்.

'கிருஷ்ணா, பத்திரம் கண்ணு, ஆத்துல ஜாக்கிரத, ஆழமான இடத்துக்கு போவக்கூடாது. டவுன்ல இருக்கிற புள்ள நீ அதிக பழக்கம் இருக்காது' பட்டினத்தில் இருந்து வந்திருக்கும் தனது அண்ணன் மகனை அன்புடன் சொல்லி அனுப்பும் அத்தை ஆனந்தி.

'டேய், கந்தன் மவனே, என் மருமகனுக்கு மீன் புடிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டு சீக்கிரமா கூட்டிக்கிட்டு வந்துடு... ஒரு மணி நேரம்தான் ஒனக்கு டைம், இல்லன்னா பிச்சிப்புடுவேன்...' மாமா ரங்கசாமி.

'சும்மா ஓவரா பேசாத மாமா, கங்கான்னு பேரு இருக்குல்ல, அதென்ன கந்தன் மவனேன்னுகிட்டு? அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்'

ஆனந்தமாய் புதிதாய் வந்திருக்கும் அந்த பட்டினத்து சிறுவன் கிருஷ்ணா, கங்கா, சுப்பு மற்றும் வைத்தி ஆற்றை நோக்கி கிளம்பினார்கள். கற்களை எடுத்து வழியில் தென்பட்ட நாய்களைத் துரத்தியும், அடிபடாதவாறு மெதுவாய் கோழிகளை விரட்டியும் சென்று ஆற்றை அடைந்தார்கள்.

ஒரு பெரிய அரசமரம், அதில் கன்று போட்ட மாடுகளின் செத்தையை கட்டி தொங்கவிட்டிருக்க (பால் மரத்தில் கட்டினால் நன்றாக பால் கறக்கும் என நம்பிக்கை), மரத்தில் பலரின் தலைமுடிகளோடு அறையப்பட்ட ஆணிகள், முடியினை இழந்து மனநோய் சிகிச்சை பெற்றதை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.

எல்லோரும் சட்டை, டிராயர்களை அவிழ்த்துவிட்டு அம்மணமாய் ஆற்றில் மீன் பிடிக்க இறங்க,

'என்னது ஜட்டி போட மாட்டீங்களா?' என வெக்கப்பட்டு கிருஷ்ணன் கேட்க,

'டிராயரையே போஸ்ட் பாக்ஸோடத்தான் போடுவோம்' என சுப்பு சிரித்தான்.

குதூகலமான அரை மணி நேரம், கெளுத்தி, கெண்டை, குறவை மீன்கள் என ஒரு சிறிய டப்பா நிரம்பும் அளவிற்கு கிடைக்க, அடுத்த கட்டத்துக்கு தயாரானார்கள்.

கெளுத்தி மீன்களை லாவகமாக முள்ளொடித்து, சாம்பல் கலந்து கற்களில் தேய்த்து நன்றாக அலசி, கரையை விட்டு கொஞ்சம் உள்ளே சென்று அருகிலிருந்த புளியந்தோப்பில் விறகுகளை மூட்டி மீன்களைச் சுட ஆரம்பித்தார்கள்.

'ஏய் அந்த ரத்தக்கண்ணன் வந்தா திட்டுவாண்டி, இது அவனோட இடம்' சுப்பு சொல்ல,

'ஆமாண்டா அந்த ஆளு அவன் காட்டுக்குள்ள நடந்தாவே கத்துவான்' கங்கா சொன்னான்.

'அதெல்லாம் பாத்துக்கலாம், மீனை மொதல்ல சுடுங்க' வைத்தி சொல்லிவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு கொள்ளியை எடுத்துச் சென்று அருகில் ஒரு சிறு மரத்தில் இருந்த கம்பளி பூச்சிகளை நெருப்பால் சுட்டு, சுருண்டு விழுவதைப் பார்த்து குதூகலித்துக்கொண்டிருந்தான்.

கொஞ்சம் உயரத்தில் கொத்தாய் இருந்த புழுக்களை நோக்கி நெருப்பைக்காட்ட, அவை சட சடவென அவனது தலை மற்றும் சட்டையில் விழ, பதட்டத்தில் கையிலிருந்த சுள்ளியை தூக்கி எறிந்து கத்த, எல்லோரும் ஓடி வந்தார்கள்.

அவன் ஒன்றுமில்லை என சொல்லி தட்டிவிட, கொஞ்சம் தாமதமாய்த்தான் கவனித்தார்கள், அருகிலிருந்த வைக்கோல் போர் நன்றாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததை.

அதை அணைக்க மண்ணை அள்ளிப்போட்டு முயற்சிக்க, அதற்குள் காற்றில் கொழுந்து விட்டெறிய, புகை நெருப்பைப் பார்த்து அருகிலிருந்த நிறைய பேர் ஓடி வந்து எல்லோருமாய் சேர்ந்து பாதிக்கு மேல் வைக்கோலை பிடுங்கியும்,  கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றியும் ஒரு வழியாய் அணைத்தார்கள்.

காட்டுக்காரர் லட்சுமணன் கத்திக்கொண்டு அருகிலிருந்த குச்சியினை எடுத்துக்கொண்டு நால்வரையும் அடிக்க வர கிருஷ்ணன்,

'அவங்கள அடிக்காதீங்க, நாந்தான் கம்பளி பூச்சிய சுடும்போது தவறி அங்க போட்டுட்டேன்' என முன்னால் வந்தான்.

இது யார் புதுசா இருக்கானே என, அவனை அடிக்காமல், 'யாருடா நீ, யாரு மவன்' என கேட்க,

'அவன் ரங்கசாமி மாமா வீட்டுக்கு வந்திருக்கான், கொள்ளிய போட்டது நான் தான்' வைத்தி.

'இல்லையில்லை நான்தான்' என கிருஷ்ணன் உறுதியாய் சொல்ல, கடைசியாய் விஷயம் ரங்கசாமி மாமாவுக்கு போனது.

அவர் ஒன்றும் பேசாமல் உள்ளே போனார். 'தெரியாம செஞ்சுட்டாங்க, இந்தா, அதுக்கு ஆன காச வாங்கிட்டு போ' என சொல்லி இருமடங்கு பணத்தினை தர அந்த லட்சுமணன் சந்தோஷமாய் வங்கிக்கொண்டு போனார்.

'கிருஷ்ணா, நீ தான் நெருப்பு பத்தறதுக்கு காரணமா?', மாமா மெதுவாய் கேட்டார்.

'ஆமாம் மாமா' கிருஷ்ணன் சொல்ல, 'உன் கண்ணு பொய் சொல்லுதே, உண்மைய சொல்லு, யாரு செஞ்சது?'

'நான் பண்ணல, இருந்தாலும் எனக்காகத்தானே வந்தாங்க,  நான் வெளியூர்க்காரன், இன்னும் ஒரு வாரத்துல போயிடுவேன், அப்புறம் எப்போ வரப்போறேனோ?, ஆனா அவங்கல்லாம் இங்கேயே இருப்பாங்கல்ல, ரொம்ப நாளைக்கு பாக்குறப்போ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க, அதான்' என அனுபவஸ்தன் போல பேச,

மாமா கிருஷ்ணனை கட்டிக் கொண்டு, உச்சி மோர்ந்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Unknown said...

கதை நல்லா இருக்கு பிரபா..

ஆனாலும் ஃபுல் ஸ்டாப் வக்காம எழுதுன மாதிரியே ஒரு ஃபீலிங்..:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@முகிலன் said...
கதை நல்லா இருக்கு பிரபா..
ஆனாலும் ஃபுல் ஸ்டாப் வக்காம எழுதுன மாதிரியே ஒரு ஃபீலிங்..:))
//

ஏண்ணே..ஒரு வேளை , ‘புல்’லாய் இருக்குமோ?..

settaikkaran said...

சிறியதென்றாலும் சுவாரசியமாகச் சொல்லப்பட்ட கதை. பாராட்டுக்கள்.

சத்ரியன் said...

பிரபா,

அட! நல்லா கதை உடறியே!
நல்லா கீது பா.

ஆனாலும்,

//ஆற்றில் இருந்து கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றியும் ஒரு வழியாய் அணைத்தார்கள்.//
இதை,

”கைக்கு கிடைத்த பாத்திரங்களில், ஆற்றிலிருந்து தண்ணீரைக்....” இப்படி இருந்திருந்தா இன்னும் நல்லா
இருந்திருக்குமோன்னு ஒரு பீலிங்கி.

Raju said...

நல்லாருக்குண்ணே..!
உண்மைச் சம்பவமோ..!
:-)

Chitra said...

நல்ல கதை. அருமை.

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசனையுடன் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

துபாய் ராஜா said...

கோடை விடுமுறைக்கேற்ற குழந்தை பருவ குதூகலக்கதை.அருமை.

vasu balaji said...

இந்தக் கிருஷ்ணன் யாருபா?

பார்த்தீங்கன்னா நல்ல வெயில்ல முட்டிகாலு போட உடுங்க. பயபுள்ளைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதவே வரமாட்டீங்குது.
/மொர்ந்து/

அகராதி ஃபுல்லா தேடிட்டேன். இதுக்கு அர்த்தமே தெரியல

ஹேமா said...

நல்லதொரு அனுபவம்.
சுவாரஸ்யமாய் வாசித்து முடித்தேன் பிரபா.

சத்ரியன் said...

//பயபுள்ளைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் //

பாலா சார்,

இதென்ன புச்சா கீது?

நாடோடி இலக்கியன் said...

நடையில் பதிவுக்கு பதிவு முன்னேற்றம் பிரபா.

இப்பத்தான் ரூட்டை பிடிச்சிருக்கீங்க.

பனித்துளி சங்கர் said...

/////மீன் பிடிக்கப் போறோம்....////////

அண்ணே அண்ணே கொஞ்சம் பொறுங்க நானும் வாறேன் .

மீண்டும் வருவேன் .

ரோஸ்விக் said...

//இந்தக் கிருஷ்ணன் யாருபா?

பார்த்தீங்கன்னா நல்ல வெயில்ல முட்டிகாலு போட உடுங்க///

"ரிப்பீட்டு" சொல்லிப்பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... :-))

///மொர்ந்து///

இதுவும் தப்பு... அது "முகர்ந்து" :-) அண்ணே1 இப்போ அகராதில தேடுங்க அர்த்தம் கிடைக்கும் :-))))

விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் said...

எனது வலைதளத்தை வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறவும்.

http://vijayarmstrongcinematographer.blogspot.com

பிரபாகர் said...

//
முகிலன் said...
கதை நல்லா இருக்கு பிரபா..
ஆனாலும் ஃபுல் ஸ்டாப் வக்காம எழுதுன மாதிரியே ஒரு ஃபீலிங்..:))

//
அடுத்ததா இடுகையில மாத்திடுவோம்...

//
பட்டாபட்டி.. said...
@முகிலன் said...
கதை நல்லா இருக்கு பிரபா..
ஆனாலும் ஃபுல் ஸ்டாப் வக்காம எழுதுன மாதிரியே ஒரு ஃபீலிங்..:))
//
ஏண்ணே..ஒரு வேளை , ‘புல்’லாய் இருக்குமோ?..

//
ரொம்ப நல்லவம்பா! கோக் சாப்புட்டே கொதிக்கிற ஆளு நாம!

//
சேட்டைக்காரன் said...
சிறியதென்றாலும் சுவாரசியமாகச் சொல்லப்பட்ட கதை. பாராட்டுக்கள்.
//
நன்றி சேட்டை நண்பா. இது சம்மந்தமாய் நாம் உரையாடியது எழுத்து உறுதுணையாய் இருந்தது...

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
பிரபா,
அட! நல்லா கதை உடறியே!
நல்லா கீது பா.

ஆனாலும்,

//ஆற்றில் இருந்து கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றியும் ஒரு வழியாய் அணைத்தார்கள்.//
இதை,

”கைக்கு கிடைத்த பாத்திரங்களில், ஆற்றிலிருந்து தண்ணீரைக்....” இப்படி இருந்திருந்தா இன்னும் நல்லா
இருந்திருக்குமோன்னு ஒரு பீலிங்கி.

//
மாத்திட்டோம் நண்பா! சொன்னத கேப்போம்ல!

//
♠ ராஜு ♠ said...
நல்லாருக்குண்ணே..!
உண்மைச் சம்பவமோ..!
:-)
//
ஆம் ராஜு... ரொம்ப நன்றி...

//
Chitra said...
நல்ல கதை. அருமை.
//
நன்றிங்க சித்ரா...

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் ரசனையுடன் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
//
நன்றி சங்கர்.... தொடர்ந்த ஆதரவு, அன்பிற்கு....

//
துபாய் ராஜா said...
கோடை விடுமுறைக்கேற்ற குழந்தை பருவ குதூகலக்கதை.அருமை.
//
நன்றி ராஜா!

//
வானம்பாடிகள் said...
இந்தக் கிருஷ்ணன் யாருபா?
பார்த்தீங்கன்னா நல்ல வெயில்ல முட்டிகாலு போட உடுங்க. பயபுள்ளைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதவே வரமாட்டீங்குது.
/மொர்ந்து/

அகராதி ஃபுல்லா தேடிட்டேன். இதுக்கு அர்த்தமே தெரியல

//
மாத்திட்டேங்கய்யா!

பிரபாகர் said...

//
ஹேமா said...
நல்லதொரு அனுபவம்.
சுவாரஸ்யமாய் வாசித்து முடித்தேன் பிரபா.
//
நன்றி சகோதரி!

//
சத்ரியன் said...
//பயபுள்ளைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் //
பாலா சார்,

இதென்ன புச்சா கீது?

//
வாத்தியார் மாணவனை அப்படித்தான் செய்வாரு...

//
நாடோடி இலக்கியன் said...
நடையில் பதிவுக்கு பதிவு முன்னேற்றம் பிரபா.
இப்பத்தான் ரூட்டை பிடிச்சிருக்கீங்க.

//
நன்றி பாரி. எல்லாம் உங்கள் அறிவுறுத்தலும் காரணம்.

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////மீன் பிடிக்கப் போறோம்....////////
அண்ணே அண்ணே கொஞ்சம் பொறுங்க நானும் வாறேன் .

மீண்டும் வருவேன் .

//
காத்திருக்கேன்....

//
ரோஸ்விக் said...
//இந்தக் கிருஷ்ணன் யாருபா?
பார்த்தீங்கன்னா நல்ல வெயில்ல முட்டிகாலு போட உடுங்க///

"ரிப்பீட்டு" சொல்லிப்பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... :-))

///மொர்ந்து///

இதுவும் தப்பு... அது "முகர்ந்து" :-) அண்ணே1 இப்போ அகராதில தேடுங்க அர்த்தம் கிடைக்கும் :-))))

//
அதெல்லாம் கம்பனி சீக்ரெட்!

//
விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் said...
எனது வலைதளத்தை வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறவும்.
http://vijayarmstrongcinematographer.blogspot.com

//
படிச்சிட்டேங்க, ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துக்கள்..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB