நாங்களும் தலைவர் தாண்டி...- முடிவு...

|

இதன் முதல் பாகத்தை படிக்கவில்லையெனில் படித்து படியுங்களேன்...

வந்த முதல் பிரச்சினை எங்கள் அணித்தேர்வு. நான்கு விதமான அணிகள் தயாரித்து நாற்பது கருத்துக்கள் வர ஆரம்பிக்க நிறையவே குழம்பினோம். ஒரு சிலரை திருப்திப்படுத்தவே அணியில் சேர்க்கவேண்டியிருந்தது. நாம் சுமாராக விளையாடுவோம் என்றாலும் எந்த ஒரு அணியிலும் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. மனம் விட்டு கேட்டதற்கு, ’உனக்கு தலைவர் பதவியும் வேணும், டீம்லயும் விளையாடனுமா’ என அழகாய் ஒரு கேள்வி.

சரியென நொந்து எப்படியும் சரிசெய்யவேண்டுமென இரு அணிகளை முழு பலத்துடன், ஒப்புக்கு என தயார் செய்தோம். நடத்தும் ஊரைச்சேர்ந்த அணி நேரடியாக காலிறுதிக்குள் செல்லுமாறு அட்டவணை இருக்கவேண்டும் என எல்லோரும் சொல்ல, ஒத்துக்கொள்ளாமல் நிறைய போராடியும் இயலவில்லை, அதுதான் வழக்கமாம்.

குலுக்கல் முறையில் எந்தெந்த அணிகள் விளையாட வேண்டும் என போட்டி அட்டவணையை தயாரித்தோம், அதிலும் குழப்பம். குலுக்கலின் போது ஆரம்பத்திலேயே இரு மிக நல்ல அணிகளும் முதல் சுற்றில் மோதிக்கொள்ளுமாறு அமைய எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம்.

சரி மீண்டும் குலுக்கலாம் என எல்லோரும் சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சம்மந்தப்பட்ட அந்த இரு அணியினருமே மாற்றும்படி கேட்க அசைந்து கொடுப்பதாயில்லை. அச்சமயம் ஒரு அணியை சேர்ந்த ஒருவர் நம்மைப்பார்த்து மிக மோசமான வார்த்தையோடு திட்ட, அவ்வளவுதான், நம்மவர்கள் அவரை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பிக்க ஒரே ரணகளமானது.

நாமும் தடுக்கிறோமென அடிகளை வாங்கி அவரை காத்து ஒரு வழியாய் எல்லோரையும் சமாதானப் படுத்த, விளையாட்டு ஆரம்பமானது. விளையாட்டில் ஆர்வமாயிருந்த தமிழய்யா அழகிய தமிழில் வர்ணனை செய்ய, அருமையான அந்த இரு அணிகளையே முதலில் விளையாடச்செய்ய, நல்ல ஆரம்பம் பாதி முடிந்தாற்போல் என சொல்வதற்கு உதாரணமாய் அமைந்தது, மகிழ்ச்சி ஆரவாரத்துடன்.

நம்மை திட்டிப்பேசிய அந்த நபரின் அணி தோற்றுவிட, அவரை அழைத்து ஆட்டம் முடியும் வரை உடனிருந்து உதவுங்கள் என சொல்ல ஆர்வமாய் எங்களோடு இணைந்து உற்சாகமாய் சேர்ந்துகொண்டார். முதல் நாள் மிக அருமையாக இருந்தது.

நம்மோடு ஒட்டியிருந்த உறவுக்கார மாப்பிள்ளைகள் இருவரை மாமாவின் கடைக்கு அழைத்து சென்று கேட்கும்போது தர சொல்லிவிட, யாரேனும் நம்மூர் பெரிய மனிதர்கள் வந்தால் கண்காட்டினால், உடனே டொரினோ, லவ் ஓ என ஒரு நிமிடத்தில் வர மாமா தர சொன்னார் என சொல்லி அவர்களுக்கு பலத்த உபசரிப்பு!

அவர்களின் அயராத உழைப்பையும் ஆர்வத்தையும் பார்த்து அவர்களையும் அடிக்கடி குளிர்பானம், பரோட்டா என சாப்பிட சொன்னோம். அதன் பின் எல்லோரும் குளிர்பானங்களாகவே குடித்துக்கொண்டிருக்க, ஆட்ட மும்மரத்தில் கவனிக்கவில்லை. அடிக்கடி நிறைய சிறுவர்களை அவர்கள் இருவரும் அழைத்து வந்து எங்க மாமாதான் தலைவர் என அறிமுகப்படுத்தும் படலம் வேறு.

அணி பிரச்சினையை அடுத்து எதிர்ப்பாராமல் வந்த புயல் மழை. மைதானம் முழுவதும் சகதி, வெள்ளக்காடு. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகளை தங்கவைத்து கவனிக்கவேண்டிய கட்டாயம். பள்ளி, நண்பர்கள் வீடு என எல்லாம் தங்கவைத்து உணவு உபசரித்து ஒரு வழியாய் சமாளித்தோம்.

ஆற்றிலிருந்து டிராக்டரில் மண் அடித்துக்கொட்டி மழை நின்றவுடன் மைதானத்தை சமன் செய்து ஒருவழியாய் எல்லா ஆட்டங்களையும் பலத்த ஆதரவுடன் சிறு சிறு சலசலப்புக்களையும் சாதாரணமாக்கி, வெற்றிகரமாய் நடத்தி அரையிறுதிக்கு வந்தாயிற்று.

எங்கள் ஊர் பலம் வாய்ந்த அணி இரண்டாவது சுற்றிலேயே வெளியேற, ஒப்புக்கு இருந்த அணி காலிறுதியில் வென்று அரையிறுதியில். பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.

இடையிடையே சரக்கினால் இரட்டையான நபர்களால் ஏற்பட்ட இடையூறுகள், நம் கண்ணசைவில் களத்தைவிட்டு கண நேரத்தில் அகற்றப்பட, எதிர்ப்புக்களும் எதிர்ப்பார்ப்புக்களோடு ஆதரவாய் மாற ஆரம்பித்தன.

முதல் நாளுக்கு வரும் கூட்டம் அதிகமாக ஒரே திருவிழாபோல் ஆனது. ஊரைச்சுற்றி விற்றுவரும் பழ, திண்பண்ட வண்டிகள் என எல்லாம் வந்து சேர்ந்தன. தயங்கி வராமல் இருந்த பெண்கள் கூட்டம் வர ஆரம்பிக்க இன்னும் கூட்டம் அதிகமானது என சொல்லவா வேண்டும்?

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்புவிழாவுக்கான கடைசி நாள். நடுவர்களாக பணியாற்றிய எல்லோருக்கும் ஒரு கடிகார நினைவுப்பரிசு, எங்கள் குழுவினர் எல்லோருக்கும் ஒரு அழகிய பேனா பரிசு, முதல் பரிசுக்கோப்பை என எல்லாம் வாங்கி வைத்திருந்து தயாராயிருந்தோம்.

எல்லாம் முடிந்து வெற்றிபெற்றது படையாச்சியூர் அணி. எங்கள் அணிக்கு நான்காவது ஆறுதல் பரிசு தருகிறேன் என ஒருவர் முன்வர கிடைத்தது, ஐநூற்று ஒன்று. நிழலுக்காக அமைத்த அந்த கீற்று பந்தலை விழாமேடையாய் மாற்றி பரிசுகளை வழங்கியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, அவர்கள் கையாலேயே பரிசுகளையும் பணத்தினையும் வழங்கி அசத்தினோம். முடிந்த பின் பாட்டிற்கு சேர்ந்து ஆட்டம் போட்டு சந்தோஷித்தோம்.

எல்லா செலவுகளும் போக கையில் தொள்ளாயிரம் மிஞ்ச, அதை பிரித்து ஏலம் விட்டு அடுத்த வருடத்திற்குள் பெருக்கலாம் என முடிவு செய்ய, நூற்றுக்கு இருபத்திரெண்டு ரூபாய் வட்டிக்கெல்லாம் தள்ளி எடுக்க, திரும்ப கட்டுவார்களா என்ன? எடுத்ததோடு சரி.

நல்லபடியாய் நடத்தியதற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் அதற்கு நாம் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம். மாமாவின் கடையில் நமது மாப்பிள்ளைகள் எல்லோருக்கும் வெகு தாராளமாய் வாங்கிக்கொடுத்த குளிர்பானங்கள் மற்றும் சாப்பாடுக்காக ஐநூற்று முப்பது சொச்சம்.

அடுத்து வந்த தேர்வில் செய்முறைத்தேர்வுகளைத் தவிர்த்து ஐந்தில் ஒன்றில் மட்டும் தேறியிருந்த மதிப்பெண் அட்டையினைப் பார்த்து என்றும் தோழனாய் இருந்த என் அப்பா மிகக் கோபப்பட்டு என்ன இது எனக்கேட்க, ’இதெல்லாம் சகஜமப்பா, அடுத்த செமஸ்டரில் பாஸ் செய்துவிடுவேன்’ என சொன்னதற்கு, பொளேரென கன்னத்தில் ஒரு அறை.

அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

சமீபத்தில் புதிதாக ஒரு ப்ரொஜெக்டில் என்னை இணைத்து அந்த டீமை லீட் செய்யச் சொல்ல, அன்றிலிருந்து இன்று வரை நான் வேலையில் தொண்டனாகவே(டெவலப்பர்) இருந்த நான் திரும்பவும்... எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Punnakku Moottai said...

முதலில் மீண்டும் என் ஆட்சேபனை,

'படையாச்சியூர்' அல்ல 'படையாட்சியூர்' என்று இருக்கவேண்டும். 'ஆச்சி' க்கும் 'ஆட்சி' க்கும் நிறைய வித்தியாசமுண்டு.

Only a good follower can become a good leader. This is the prime requirement in leadership. Adolf Hitler and Joseph Stalin were great followers before they became great leaders.

இன்று ஊரை ஏமாற்றும் கருணாநிதியும் ஒரு வகையில் Follower தான்.

//திரும்ப கட்டுவார்களா என்ன? எடுத்ததோடு சரி.// குட் lessen (கவுண்டமணி ஸ்டைலில் சொல்லி பாருங்கள்).

//வெகு தாராளமாய் வாங்கிக்கொடுத்த குளிர்பானங்கள் // உற்சாக பானமெல்லாம் இல்லையா?

//ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து,// என்ன படம் தல. பிட்டு படமா?

அரியர் இல்லாதவன் அரைமனிதன்.

நல்ல பதிவு. இன்டரஸ்டிங்கா (கொஞ்சம் சுலோவா) போகுது. போகட்டும் பார்த்துக்கலாம்.

vasu balaji said...

மத்த பின்னூட்டமெல்லாம் டூப்பு! உங்க பையன் பின்னூட்டம் டாப்பு:)). பாராட்டப்படவேண்டிய நடை மாற்றம். நல்லாயிருந்தது பிரபா:). கீப் இட் அப்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதெல்லாம் சகஜமப்பா :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

//

:))

Chitra said...

அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

....... very nice! :-)

settaikkaran said...

சொன்னாலும் சொல்லாட்டாலும் தலைன்னு நிரூபிச்சிட்டீங்க! சுறுசுறு! விறுவிறு!! சபாஷ்!!!!

கலகலப்ரியா said...

அண்ணா அநியாயத்திற்கு அமௌண்ட் எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு... சொச்சம் வேற.... கீப் இட் அப்... )))

நிஜமா நல்லவன் said...

+1 :)

அழகு நிலவன் (Azahgu Nilavan) said...

அண்ணா, அருமையான பதிவு, தலன்னாலே கொஞ்சம் தல வலி தான், சிங்கப்பூர் கோடாலி தைலம் வாங்கி வச்சுக்கங்க.... வாழ்த்துக்கள்...

Paleo God said...

எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. //

Congrats..:))))

பனித்துளி சங்கர் said...

ஏவளவோ பண்ணிட்டோம் இதையும் ஒரு கை பார்த்திருவோம் . கவலைப் படாதீங்க . நேர்த்தியான எழுத்து நடை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

Unknown said...

நடை நல்லாருக்கு பிரபா..

டீம் லீட் ஆகியாச்சி. அப்போ இனிமே அடிக்கடி ஆன்லைன்ல பாக்கலாம்.

jay said...

all the best sir...

துபாய் ராஜா said...

'தலை'வருக்கு வாழ்த்துக்கள். :))

ஜோசப் பால்ராஜ் said...

டீம் லீட் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
தொண்டண் அவனது உழைப்புக்கு மட்டுமே பொறுப்பு. ஆனா தலைவன் என்பவன் ஒட்டுமொத்த குழுவின் உழைப்பிற்கும் பொறுப்பு. இனி பொறுப்பு அதிகம். வாழ்த்துக்கள்.

Punnakku Moottai said...

What Prabha, have you slept well last night? I haven't seen your next post yet?

சத்ரியன் said...

// நாங்கலும் தலைவர் தாண்டி...//

ஆமாமா.. அதான் படிச்சமே...

பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.... என்று.

இதுக்கப்புறம் நம்பித்தானே ஆகனும்.

ரோஸ்விக் said...

தலைவர் வாழ்க....

அப்பா தானே நம்மளும் தலைவர் ஆகமுடியும் ;-)

ரோஸ்விக் said...

தாண்டி - "ன்" வரனுங்க... சும்மா படிக்கும்போது வாங்குன முட்டை எல்லாம் சேர்த்து இங்க கொண்டுவந்து போடுறது .... :-)))))))

"பாரேன், இவரு ஏதாவது பதில் வச்சிருப்பாரு...."

பிரபாகர் said...

//
Punnakku Moottai said...
முதலில் மீண்டும் என் ஆட்சேபனை,

'படையாச்சியூர்' அல்ல 'படையாட்சியூர்' என்று இருக்கவேண்டும். 'ஆச்சி' க்கும் 'ஆட்சி' க்கும் நிறைய வித்தியாசமுண்டு.

Only a good follower can become a good leader. This is the prime requirement in leadership. Adolf Hitler and Joseph Stalin were great followers before they became great leaders.

இன்று ஊரை ஏமாற்றும் கருணாநிதியும் ஒரு வகையில் Follower தான்.

//திரும்ப கட்டுவார்களா என்ன? எடுத்ததோடு சரி.// குட் lessen (கவுண்டமணி ஸ்டைலில் சொல்லி பாருங்கள்).

//வெகு தாராளமாய் வாங்கிக்கொடுத்த குளிர்பானங்கள் // உற்சாக பானமெல்லாம் இல்லையா?

//ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து,// என்ன படம் தல. பிட்டு படமா?

அரியர் இல்லாதவன் அரைமனிதன்.

நல்ல பதிவு. இன்டரஸ்டிங்கா (கொஞ்சம் சுலோவா) போகுது. போகட்டும் பார்த்துக்கலாம்.
//
உண்மைகள் கொஞ்சம் ஸ்லோவாத்தான் தலைவா இருக்கும். படையாட்சியூர் என ஊர் பேர மாத்தி பிரச்சினையாயிடப்போகுது!

//
வானம்பாடிகள் said...
மத்த பின்னூட்டமெல்லாம் டூப்பு! உங்க பையன் பின்னூட்டம் டாப்பு:)). பாராட்டப்படவேண்டிய நடை மாற்றம். நல்லாயிருந்தது பிரபா:). கீப் இட் அப்.
//
நன்றிங்கய்யா, எல்லாம் உங்க ஆசிர்வாதம்!

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
இதெல்லாம் சகஜமப்பா :)
//
ரொம்ப நன்றிங்கய்யா!

//
ச.செந்தில்வேலன் said...
//அலோவ்... நாங்களும் தலைவர் தாண்டி..

//

:))
//
நன்றி செந்தில்!

//
Chitra said...
அதன் பிறகு என்னை ஊருக்கு வெளியே சினிமா தியேட்டருக்கு தோளில் கைபோட்டு ஆதரவாய் அழைத்து சென்று பரோட்டா வாங்கித்தந்து, ’உன்னை அடிச்சிருக்கக்கூடாது கண்ணு’ என சொல்ல, ’இல்லப்பா நான் ஒழுங்கா படிச்சிருக்கனும்’ என சொல்ல, அவர் கலங்க, அவர் சிரிப்பதற்காக நான் சிரிக்க... உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து எங்களை நெகிழ்த்திய அந்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில்.

....... very nice! :-)
//
ஆமாங்க! இடுகையை எழுதிட்டு அப்பாகிட்ட படிச்சி கண்பிச்சேன். டேய் பையா! இன்னும் ஞாபகம் வெச்சிருக்கியான்னாரு

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
சொன்னாலும் சொல்லாட்டாலும் தலைன்னு நிரூபிச்சிட்டீங்க! சுறுசுறு! விறுவிறு!! சபாஷ்!!!!
//
நன்றி சேட்டை நண்பா!

//
கலகலப்ரியா said...
அண்ணா அநியாயத்திற்கு அமௌண்ட் எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு... சொச்சம் வேற.... கீப் இட் அப்... )))
//
நன்றி சகோதரி! அண்ணனுக்கு மெமரி பவர் ஜாஸ்தி, படிப்ப தவிர!

//
நிஜமா நல்லவன் said...
+1 :)
//
நன்றிங்க பாரதி!

பிரபாகர் said...

//
அழகு நிலவன் said...
அண்ணா, அருமையான பதிவு, தலன்னாலே கொஞ்சம் தல வலி தான், சிங்கப்பூர் கோடாலி தைலம் வாங்கி வச்சுக்கங்க.... வாழ்த்துக்கள்...
//
நன்றிங்க அழகு நிலவன்!

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
எனது மேனேஜர் சொல்லும் போது மெலிதாய் சிரித்தேன். ‘சந்தோஷம்தானே’ எனக் கேட்க நிறைய என சொன்னேன், ஒருகை பார்த்துவிடலாம் இதில் வரும் இன்னல்களை என எண்ணியவாறு. //

Congrats..:))))
//
நன்றிங்க ஷங்கர்!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஏவளவோ பண்ணிட்டோம் இதையும் ஒரு கை பார்த்திருவோம் . கவலைப் படாதீங்க . நேர்த்தியான எழுத்து நடை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
//
நன்றி சங்கர்!

பிரபாகர் said...

//
முகிலன் said...
நடை நல்லாருக்கு பிரபா..

டீம் லீட் ஆகியாச்சி. அப்போ இனிமே அடிக்கடி ஆன்லைன்ல பாக்கலாம்.
//
கண்டிப்பா! நன்றி தினேஷ்!

//
jay said...
all the best sir...
//
நன்றி Jay

//
துபாய் ராஜா said...
'தலை'வருக்கு வாழ்த்துக்கள். :))
//
நன்றி ராஜா!

பிரபாகர் said...

//
ஜோசப் பால்ராஜ் said...
டீம் லீட் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
தொண்டண் அவனது உழைப்புக்கு மட்டுமே பொறுப்பு. ஆனா தலைவன் என்பவன் ஒட்டுமொத்த குழுவின் உழைப்பிற்கும் பொறுப்பு. இனி பொறுப்பு அதிகம். வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க சி.இ.ஓ....

//
Punnakku Moottai said...
What Prabha, have you slept well last night? I haven't seen your next post yet?
//
அன்பிற்கு நன்றி பாலா!

//
சத்ரியன் said...
// நாங்கலும் தலைவர் தாண்டி...//

ஆமாமா.. அதான் படிச்சமே...

பலம் வாய்ந்த அணியோடு மோதுவதால் நமக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க, கவுரவத்தோல்விக்கு பெரிதும் உதவினோம்.... என்று.

இதுக்கப்புறம் நம்பித்தானே ஆகனும்.

//
நன்றி சத்ரியன்!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
தலைவர் வாழ்க....

அப்பா தானே நம்மளும் தலைவர் ஆகமுடியும் ;-)
//
நன்றி தம்பி!

//
ரோஸ்விக் said...
தாண்டி - "ன்" வரனுங்க... சும்மா படிக்கும்போது வாங்குன முட்டை எல்லாம் சேர்த்து இங்க கொண்டுவந்து போடுறது .... :-)))))))

"பாரேன், இவரு ஏதாவது பதில் வச்சிருப்பாரு...."
//
தலைவரா தாண்டி வந்திருக்கேன்னு அர்த்தம்! ஹி, ஹி... சமாளிப்போம்ல!

Unknown said...

இது எனக்கேட்க, ’இதெல்லாம் சகஜமப்பா, அடுத்த செமஸ்டரில் பாஸ் செய்துவிடுவேன்’ என சொன்னதற்கு, பொளேரென கன்னத்தில் ஒரு அறை.//
இந்த வரியை படிக்கும்போது என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் நிறைந்தது. ரொம்பதான் இன்வால்வ் ஆயிட்டேனோ ?

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB