வாஷ்போர்ட்...

|

முதல் ரயில் பயணத்தில் WL என்பதை விண்டோ லெஃப்ட் என பல்பு வாங்கியது பசுமையாய் நினைவில் இருந்ததால் விமானத்தில் செல்வதற்கு முன் அது பற்றி சிறிதாய் ஒரு ஆராய்ச்சியே செய்து பத்திரமாய் போய் சேர்ந்தாலும், சென்றபின் பாஸ்போர்ட்டில் பிரச்சினை என்றால்? ஆ... நினக்கவே கொஞ்சமல்ல நிறைய மிரட்சியாய்த்தான் இருக்கிறது...

விசா வாங்கி வைத்திருந்தும் அமெரிக்கா செல்வதற்கு கொஞ்சம் தாமதமாக, சிறிது காலம் டெல்லி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்லேடன் (செப்டம்பர் 11) புண்ணியத்தால் போகவே முடியாமல் கனவாகிப் போக, மாமா இருக்கும் துபாய்க்காவது போய் பார்த்துவிடலாம் என மாமாவை ஆலோசித்து சம்மதம் தர வெற்றிகரமாக கிளம்பினேன்.

முதல் விமானப்பயணம், எதிர்பார்த்ததைவிட சப்பென்றும், நெடுநேரம் உட்கார்ந்தே செல்லுவதற்கு அலுப்பாயியுமிருந்தது. ராஸ் அல் கைமா வில் மாமா இருந்தார். திருச்சியிலிருந்து செல்லும் நேரடி விமானம். மாமா, சகோதரி, மாமாவின் வாரிசுகள் என எல்லாம் வரவேற்க விமான நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.

புது இடம், புது சூழல், ம்... பிரபா, கலக்குற.... என யாரோ பொறாமையில் கண்வைத்து  விட்டார்கள் என எண்ணுகிறேன், வந்தது ஒரு மாபெரும் பிரச்சினை.

மாமா மிகவும் கண்டிப்பானவர், இன்றும் அவரைப் பார்த்து பயப்படாதவர்கள் எங்கள் குடும்பத்தில் இல்லை. சிறு வயது முதலே கர்ணன் படம் பார்த்து கதறிய காலம் முதல் அவரின் மேல அலாதியான அன்பும், மரியாதையும் உண்டு. தோளுக்கு உயர்ந்தால் தோழன் என்பதற்கேற்றார்போல் அவரும் ஒரு நல்ல நண்பனாய் மாறி என்னை அசத்தியவர். என் மனைவு கூட மாவிடம் பேசுகிறேன் எனத் தெரிந்தால் அருகே வரமாட்டாள். ’லவர்ஸ் பேசும்போது நான் ஏன் தொந்தரவு செய்யவேண்டும்’ என நக்கலடித்து செல்வாள்.

வேலை விஷயமாக மாமா அவரது தெரிந்தவர்கள் மூலமாக முயற்சி செய்ய, நானும் ஒவ்வொரு இடமாய் அலைந்துகொண்டிருந்தேன். துபாயில் மாமாவின் நண்பர் டாக்ஸி டிரைவர் ஒருவருடன் தங்கி

'பிரபு, இது வெளி நாடு, மிகவும் கவனமாக இருக்க்கவேண்டும், எப்போதும் உனது பாஸ்போர்ட்டையும் விசாவையும் பாக்கெட்டிலேயே வைத்திரு' என பலமுறை அறிவுறுத்திய வண்ணம் இருந்தார். மாமா எப்போதெல்லாம் இதுபோல் வலியுறுத்தி சொல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தவறாது தவறு செய்வதையே வழக்கமாய் கொண்டிருந்த நான், அங்கும் தவறவில்லை.

’அண்ணா, வாஷிங் மெஷின் ஃப்ரீயா இருக்கு துணிங்கள அதுல போட்டுடுங்க’ என சகோதரி சொல்ல, எல்லாவற்றையும் இட்டு, சோப் ஆயில் சேர்த்து துவைக்க ஆணையிட்ட அரை மணி நேரம் கழித்து வெளியே கடைக்குச் செல்லும் போதுதான் கவனித்தேன், போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.

அய்யய்யோ அதில் தானே பாஸ்போர்ட், விசா எல்லாம் இருக்கிறது என நிறுத்தி அவசர அவசரமாய் தேட, இருந்தது...நன்றாக ஊறிப்போய். நல்லவேலை அதை ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரினுள் வைத்திருந்ததால் முழுதும் வீணாகாமல் பாதி உயிரோடு இருந்தது.

மாமாவின் மகன் அருணும் நானும் ரகசியமாய் அதை சரிப்படுத்தும் வேலையில் இறங்கினோம். அப்போதுதான் தெரிந்தது, அருண் பெரிய ஐடியா மணியென.

முதலில் மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணலாமென ஐடியா தர உள்ளே வைத்து வேலையினை ஆரம்பித்தோம். புகை வரவே சட்டென நிறுத்திப் பார்க்க, நல்லவேளை கொஞ்சம் தான் கருக ஆரம்பித்திருந்தது, உள்ளேயெல்லாம் இன்னும் ஈரம்.

சரி அடுத்த கட்டமாக, மாடியில் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கலாம் என எடுத்துச் சென்று விரித்து வைத்து ஒவ்வொரு பக்கமாய் நான்கு மணி நேரம் போராடி காயவைத்தோம்.

என்னதான் செய்தாலும் உள்ளே இருந்த கிளம்பிய விவரங்கள், சில முத்திரைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. முதல் பக்கத்தில் எனது புகைப்படம் மற்றும் விவரங்கள், கடைசி இரு பக்கங்களும் நல்ல நிலையில் இருந்தன. என்ன விஷயம் அருணும் நீங்களும் அடிக்கடி மாடிக்கு சென்று வருகிறீர்கள் என சகோதரி கேட்டதற்கு நைசாக விஷயத்தை சொல்லி, மாமாவிடம் சொல்லவேண்டாம் என உறுதிமொழியை வாங்கிக்கொண்டோம்.

அடிக்கடி மேலே சென்று வந்ததாலோ என்னவோ அங்கிருந்த ஒரு பைப் உடைந்துகொள்ள (கண்டிப்பாய் நான் இல்லை, இதையேத்தான் அருணும்), பக்கத்து ப்ளாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு செல்லும் குழாய் அது என்பதால் கத்த ஆரம்பித்தார்.

வேலைவிட்டு வந்த மாமா அவரை சமாதானப்படுத்தி , எங்களை மேலே ஏன் சென்றீர்கள் என வைது, அவர் செலவில் உடைப்பினை சரி செய்து கொடுத்தார். அன்று முதல் என் முகத்தில் என்ன ஆகுமோ என ஒரு பயம் வந்து சேர, மமா ‘பிரபு வேலையில்லை என கவலைப்படுகிறான், அதனால்தான் இவ்வளவு வாட்டம்’ என சகோதரியிடம் சொல்லி எனக்கும் ஆறுதல் சொன்னார்.

அடிக்கடி அருண்வேறு மாமா சீக்ரெட் 25 என வேறு அந்த மேட்டருக்கு பெயர் வைத்து நம்மை ஓட்ட ஆரம்பிக்க, கவனித்த மாமா ‘என்ன சீக்ரெட் 25’ எனக் கேட்க ஒருவழியாய் சமாளித்தேன். வேலை கிடைத்தபாடில்லை. ரம்ஜான் வேறு வந்துவிட்டதால் வேலை வாய்ப்புக்கள் மிகவும் மங்கியிருந்தன.

கர்ப்பத்தையும் உண்மையையும் மறைக்க முடியாதல்லாவா? ஒருநாள் பிரபு பாஸ்போர்ட்ட எடுத்துவா என சொல்ல, எல்லாம் சொல்லி கதறி அழுது தேம்பி அழுதுக்கொண்டுபோய் கொடுத்தேன். அதன் கதியை பார்த்து மாமா கொதிப்பானார். வழக்கமான வசவுகள் ஆனாலும் என் கண்ணீரை விடவும் குறைவாகத்தான்.

உடனடியாக ஊருக்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். டிராவல்ஸில் பாஸ்போர்ட், விசாவின் கதியைப்பார்த்து அதிர்ஷ்டம் இருந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள் என சொல்ல, விசா முடிவதற்கு முன்பாகவே ஷார்ஜாவிலிருந்து டிக்கெட் எடுத்தார். திரும்ப அனுப்பினாலும் இந்தியத் தூதரகத்துக்கு செல்ல, சரி செய்ய நாட்கள் வேண்டுமல்லவா!

கிளம்புவதற்கான நாளும் வந்தது. கடவுளை வேண்டி மாமாவின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு நெற்றியில் திருநீறு எல்லாம் வைத்து ஷார்ஜா ஏர்போட்டிற்கு கிளம்பினோம்.

மாமா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வழியனுப்ப, ஒரு குருட்டு தைரியத்தில் நுழைந்தேன். கவுன்டரில் இருந்த ஒரு பெண் எனது பாஸ்போர்ட்டைப் பார்த்து, என்னை உற்றுப்பார்த்து சற்று தொலைவில் இருந்த இரு போலீஸை சென்று பார்க்க சொல்ல நடுக்கம் அதிகமாகி அவர்களின் அருகில் போய் நின்றேன்.

என்னை பார்த்த அவர்கள், அந்த பெண்மணியை நோக்க அவர் சொல்வதக்கேட்டு எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்து காரணம் கேட்க, ‘வாஷிங் மெஷினில் போட்டுவிட்டேன்’ என சொல்ல, ‘யூ கே நாட் கோ...’ என சொல்லி சற்று தள்ளி நிற்க சொன்னார்கள். என் நெற்றியைப் பார்த்து ஏதோ பேசுவதுபோல் இருக்க, வைத்திருந்த திருநீறை சட்டென அழித்து நல்ல பையனாய் பரிதாபமாய் பவ்யமாய் அவர்களையே பார்த்துக்கொண்டு, எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு இருந்தேன்.

ஒரு அரை மணிநேர மரண அவஸ்தை. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த பெண்ணிடம் ஏதோ இங்கிருந்து சொல்ல, அவர் என்னை அழைத்து பாஸ்போர்ட்டை வாங்கி சீல் வைத்துத்தர பெருமூச்சோடு உள்ளே சென்றேன்.

திருச்சியில் இறங்கும்போது அப்படியே பரவசமாய் உணர்ந்தேன். வெளியே வரும்போது ‘எப்படி சார் உங்களை வெளியே விட்டாங்க, அதிர்ஷ்டசாலி நீங்க, மொதல்ல வேற பாஸ்போர்ட் மாத்துங்க’ என அறிவுறுத்தினார்.

ஆனாலும் எனக்கு துபாய் சென்றுவந்ததில் கிடைத்திட்ட சில நல்ல விஷயங்கள்...

  • முதல் விமானப்பயணம் 
  • பாஸ்போர்ட்டின் முக்கியத்துவம் 
  • அருணுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட அன்பான பிணைப்பு
  • நானும் துபாய் சென்று வந்திருக்கிறேன் என பெருமையாய் சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு
  • பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு, முடிவு இருந்தால்தான் அது பிரச்சினை என அனுபவத்தில் உணர முடிந்தது...

44 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

நல்ல அனுபவப் பாடம்:)

ஈரோடு கதிர் said...

//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//

நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!

ஈரோடு கதிர் said...

//நல்ல பையனாய் பரிதாபமாய் பவ்யமாய் //

அடப்பாவி..
போன்ல பேசும் போது அப்படித்தான்யா இருக்கு..

மவனே...

வெப்கேம்ல பார்க்கும் போதுதானே தெரியும்... எம்ம்ம்மாம் பெரிய வில்லன்னு

இந்தியன் said...

//திருநீரை அழித்து//

அவனுக அப்படித்தான்

Raju said...

பதிவை விட தலைப்பு சூப்பர்!!!

கோவி.கண்ணன் said...

கிளிஞ்சுது போ.....நெனஞ்சது போன்னு சொல்லுங்க. பாஸ்போ(ர்)ட்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் அனுவங்களை . நன்றி நண்பரே பகிர்வுக்கு !

சத்ரியன் said...

//மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணலாமென ஐடியா தர உள்ளே வைத்து வேலையினை ஆரம்பித்தோம்.//

பிரபா,

உன்னை நெனைச்சி தான்யா, “அக்கினி குஞ்சொன்று கண்டேன்”-னு பாரதியார் பாடியிருப்பாரு.

சத்ரியன் said...

//கர்ப்பத்தையும் உண்மையையும் மறைக்க முடியாதல்லாவா?//

தத்துவம் ...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதெல்லாம் நடந்திருக்கா?..

சொல்லவேயில்லை..

சரி.. போனது போகட்டும்.. உங்க Credit card, POSB Card with PIN no, எல்லாம் , எங்கிட்டே கொடுங்க..

ஊருக்கு போகும்போது பத்திரமா திருப்பிக்கொடுக்கிறேன்...

அன்புடன்..
அடுத்தவர் துயரை கண்டு பொங்கி எழும் பட்டாபட்டி...

சத்ரியன் said...

உன் அனுபவக்கதை எக்கச்சக்கச்சக்கமா இருக்கும் போல!

Anonymous said...

//நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!//

ரசிச்சேன் :)

கண்ணகி said...

நல்லாத்தான் மறந்தீங்க போங்க...

ஓவன்ல வேற வச்சு....உங்கள உள்ளெ தள்ளாம் விட்டாங்களே....

எல் கே said...

நல்ல நகைச்சுவை. ஆனால் அருமையான பாடம்

settaikkaran said...

உங்க பாஸ்போர்ட் அனுபவத்தை துவைச்சுக் காயப்போட்டுட்டீங்க போங்க! :-)

க.பாலாசி said...

மறக்கமுடியுமா அந்த விண்டோ லெஃப்ட.... அடடா.. சிரிச்சி...சிரிச்சி வயறு புண்ணானதுதான் மிச்சம்..

//ஈரோடு கதிர் said...
//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//
நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!//

இந்த மனுஷனுக்கு என்னா வில்லத்தனும் பாருங்க...

தெய்வசுகந்தி said...

என்னங்க ஏகப்பட்ட கதைகள் வெச்சுருப்பீங்க போல இருக்கு.!!!!!!!!

செ.சரவணக்குமார் said...

எக்ஸலண்ட் பிரபா. ஒரு நல்ல சிறுகதை வாசித்த உணர்வு.

கிறுக்கல்கள்/Scribbles said...

Good narration. Still I feel the heat experienced that day.

ரோஸ்விக் said...

அதுக்கப்புறம் மாமா துபாய் பக்கம் உங்களை கூப்பிட்டிருக்க மாட்டாரே! :-))

//ஈரோடு கதிர் said...
//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//

நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!

//

வர வர கதிருக்கு மௌனம் மட்டுமல்ல... குசும்பும் கசியிது... :-)))))

VR said...

வாழ்கையில் அனுபவங்களின் படிப்பினைகள் தான் முக்கியம்.

அதை தெளிவாக முன்னிறுத்தி சொல்லியிருக்கிறீர்கள்.

க ரா said...

/Blogger வானம்பாடிகள் said...

நல்ல அனுபவப் பாடம்:)/

ரிப்பிட்டு :)

Radhakrishnan said...

எத்தனை கவனக்குறைவு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

excellent praba

*இயற்கை ராஜி* said...

:))))

Unknown said...

என்ன என்னல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையும் செஞ்சிருப்பீங்க போலருக்கே??

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. இதனால தான் கம்பெனிக பாஸ்போர்ட வாங்கி வச்சிடறாங்களோ??

உங்களுடைய அனுபவங்களில் இன்னொரு நல்ல படிப்பினை.

Muniappan Pakkangal said...

Nice experience Prabhahar.

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி...

துபாயையும் விட்டு வைக்க வில்லையா?

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

Anonymous said...

HI

Tell some interesting experience in Singapore.

Regards
Pradeep

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்ப சிங்கப்பூர் வந்தது போலி பாஸ்போர்ட் ஆ

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நல்ல அனுபவப் பாடம்:)
//
ஆமாங்கய்யா!

//
ஈரோடு கதிர் said...
//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//

நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!
//
அப்படியும் ஒரு வழி இருக்கோ?

//
ஈரோடு கதிர் said...
//நல்ல பையனாய் பரிதாபமாய் பவ்யமாய் //

அடப்பாவி..
போன்ல பேசும் போது அப்படித்தான்யா இருக்கு..

மவனே...

வெப்கேம்ல பார்க்கும் போதுதானே தெரியும்... எம்ம்ம்மாம் பெரிய வில்லன்னு
//
கம்பனி சீக்ரெட்!

பிரபாகர் said...

//
இந்தியன் said...
//திருநீரை அழித்து//

அவனுக அப்படித்தான்
//
ம்... நன்றி நண்பா!

//
♠ ராஜு ♠ said...
பதிவை விட தலைப்பு சூப்பர்!!!
//
அய்யாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

//
கோவி.கண்ணன் said...
கிளிஞ்சுது போ.....நெனஞ்சது போன்னு சொல்லுங்க. பாஸ்போ(ர்)ட்.
//
ம்... ரொம்ப நன்றிங்கண்ணா!

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் அனுவங்களை . நன்றி நண்பரே பகிர்வுக்கு !
//
நன்றி சங்கர்....

//
’மனவிழி’சத்ரியன் said...
//மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணலாமென ஐடியா தர உள்ளே வைத்து வேலையினை ஆரம்பித்தோம்.//

பிரபா,

உன்னை நெனைச்சி தான்யா, “அக்கினி குஞ்சொன்று கண்டேன்”-னு பாரதியார் பாடியிருப்பாரு.

’மனவிழி’சத்ரியன் said...
//கர்ப்பத்தையும் உண்மையையும் மறைக்க முடியாதல்லாவா?//

தத்துவம் ...!
//
என்ன பண்றது.... எல்லாம் தானா வருது!

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
இதெல்லாம் நடந்திருக்கா?..

சொல்லவேயில்லை..

சரி.. போனது போகட்டும்.. உங்க Credit card, POSB Card with PIN no, எல்லாம் , எங்கிட்டே கொடுங்க..

ஊருக்கு போகும்போது பத்திரமா திருப்பிக்கொடுக்கிறேன்...

அன்புடன்..
அடுத்தவர் துயரை கண்டு பொங்கி எழும் பட்டாபட்டி...
//
கண்டிப்பா பட்டா நண்பா!

//
’மனவிழி’சத்ரியன் said...
உன் அனுபவக்கதை எக்கச்சக்கச்சக்கமா இருக்கும் போல!
//
ஆமாம், அனுபவங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை!

//
சின்ன அம்மிணி said...
//நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!//

ரசிச்சேன் :)
//
நன்றிங்க அம்மணி

பிரபாகர் said...

//
கண்ணகி said...
நல்லாத்தான் மறந்தீங்க போங்க...

ஓவன்ல வேற வச்சு....உங்கள உள்ளெ தள்ளாம் விட்டாங்களே....
//
ஆஹா, என்னமா யோசிக்கிறீங்க!

//
LK said...
நல்ல நகைச்சுவை. ஆனால் அருமையான பாடம்
//
ஆமாங்க! ரொம்ப நன்றி உங்க வரவுக்கு!

//
சேட்டைக்காரன் said...
உங்க பாஸ்போர்ட் அனுபவத்தை துவைச்சுக் காயப்போட்டுட்டீங்க போங்க! :-)
//
ஆகா, அழகான விமர்சனம்!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
மறக்கமுடியுமா அந்த விண்டோ லெஃப்ட.... அடடா.. சிரிச்சி...சிரிச்சி வயறு புண்ணானதுதான் மிச்சம்..

//ஈரோடு கதிர் said...
//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//
நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!//

இந்த மனுஷனுக்கு என்னா வில்லத்தனும் பாருங்க...
//
ஆமாம் இளவல், தாங்கல!

//
Deivasuganthi said...
என்னங்க ஏகப்பட்ட கதைகள் வெச்சுருப்பீங்க போல இருக்கு.!!!!!!!!
//
ஆமாங்க! அதான் அப்பப்போ வருது!

//
செ.சரவணக்குமார் said...
எக்ஸலண்ட் பிரபா. ஒரு நல்ல சிறுகதை வாசித்த உணர்வு.
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
கிறுக்கல்கள் said...
Good narration. Still I feel the heat experienced that day.
//
மாமா, சம்மந்தப்பட்ட நீங்கள் சொல்வது தான் இன்னும் மன திருப்தியாயிருக்கிறது!

//
ரோஸ்விக் said...
அதுக்கப்புறம் மாமா துபாய் பக்கம் உங்களை கூப்பிட்டிருக்க மாட்டாரே! :-))
//
கஜகஸ்தான்ல இருக்காரு... போயிட வேண்டியதுதான்!

//ஈரோடு கதிர் said...
//போட்டிருந்த பேண்ட்டையும் வாஷிங் மெஷினில் போட்டிருக்கிறேன் என்று.//

நல்லவேளை நீங்களே வாசிங்மெசினுக்குள்ளே உக்காராம போனீங்களே!!!

//

வர வர கதிருக்கு மௌனம் மட்டுமல்ல... குசும்பும் கசியிது... :-)))))
//
ஆமாமாம்!

பிரபாகர் said...

//
V R said...
வாழ்கையில் அனுபவங்களின் படிப்பினைகள் தான் முக்கியம்.

அதை தெளிவாக முன்னிறுத்தி சொல்லியிருக்கிறீர்கள்.
//
ரொம்ப நன்றிங்க!

//
இராமசாமி கண்ணண் said...
/Blogger வானம்பாடிகள் said...

நல்ல அனுபவப் பாடம்:)/

ரிப்பிட்டு :)
//
நன்றிங்க!

//
V.Radhakrishnan said...
எத்தனை கவனக்குறைவு!
//
ஆம்! நல்ல பாடமாய் அமைந்தது!

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
excellent praba
//
நன்றிங்கய்யா!

//
*இயற்கை ராஜி* said...
:))))
//
நன்றிங்க!

//
முகிலன் said...
என்ன என்னல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையும் செஞ்சிருப்பீங்க போலருக்கே??
//
அதனாலதானே இப்படி எழுதமுடியுது!

பிரபாகர் said...

//
thalaivan said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com
//
கண்டிப்பாங்க!

//
ச.செந்தில்வேலன் said...
ம்ம்.. இதனால தான் கம்பெனிக பாஸ்போர்ட வாங்கி வச்சிடறாங்களோ??

உங்களுடைய அனுபவங்களில் இன்னொரு நல்ல படிப்பினை.
//
நன்றி செந்தில்!

//
Muniappan Pakkangal said...
Nice experience Prabhahar.
//
நன்றி சார்!

பிரபாகர் said...

//
Sangkavi said...
பங்காளி...

துபாயையும் விட்டு வைக்க வில்லையா?
//
எங்கும் கலக்குவோம்ல!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
//
படிச்சாச்சு நண்பா!

//
Anonymous said...
HI

Tell some interesting experience in Singapore.

Regards
Pradeep
//
Sure, I will share.

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்ப சிங்கப்பூர் வந்தது போலி பாஸ்போர்ட் ஆ
//
மாத்திட்டேம்ப்பா!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB