நண்பர் சரவணக்குமார், மின் தடை...

|

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கும்போது மின் தடை. சிங்கப்பூரிலுமா என வியக்காதீர்கள், ஏன் என பின்னால் பார்க்கலாம்..

நண்பர் சரவணக்குமார், நான் தொடர்ந்து வாசிக்கும் அன்பு நண்பர். சில மாதங்களுக்கு முன் அவர் ஊருக்கு வரும்போது அவரின் இடுகையில் தொடர்பு விவரங்களை தந்திருக்க, அவரை திரும்ப செல்வதற்குள் அழைக்கவேண்டும் என எண்ணியிருந்தேன்.

அவரின் இன்றைய ரயில் பயண அனுபவப் பகிர்வினை படித்தபின், நேற்று சந்தித்த நணபர் மனவிழி சத்ரியன் சொன்ன தகவல்கள் எல்லாம் அவரை அழைக்கத்தோன்ற, முன்னதாக அலுவலக பரபரப்பில் படிக்காமல் விட்டுப்போன ஒரே இடுகையான நண்பா நண்பாவை படித்தபின் அழைத்தேன்.

அழைத்ததன் முக்கிய காரணங்களுல் ஒன்றான தலையில் அடிப்பட்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நண்பரின் உடல் நிலையைப்பற்றி விசாரிக்க, அவர் நன்கு தேறி வருவதாய் சொன்னார். எப்போதும் பிஸியாக இருக்கும் அண்ணன் அப்துல்லா அவர்கள் அடிக்கடி அழைத்து மருத்துவ ஆலோசனைகள் கொடுத்ததை நெகிழ்வுடன் நினைகூர்ந்தார்.

புதிதாய் பேசுவதுபோல் இல்லை, ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் நிறைய பேசினோம். பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த கருத்துக்கள் இருப்பதை எண்ணி மகிழ்ந்து, சினேகிதன் அக்பர், ப.ரா பற்றி அவர் சொல்ல அய்யா, கதிர், சகோதரி, சேட்டைக்காரன் என நான் சொல்ல, படு சுவராஸ்யமாய் எங்கள் உரையாடல் நீண்டது.

அவர் சத்ரியன் செய்த உதவியினை எண்ணி நிறைய பெருமைப்பட்டுக் கொண்டார். அறிமுகமே இல்லாமல் தானே கிடைத்த அந்த உதவி வலையினால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லி, வலையுலகில் எழுதுவதால்தான் எத்தனை நட்புக்கள் என சிலாகித்துக்கொண்டார்.

அழைத்தது வீட்டுத் தொலைபேசி மூலம் காலிங் கார்ட்-ல். திடீரென தொடர்பு துண்டித்ததுப்போக, மின்சாரம் தடைபட்டிருந்தது. வழக்கமான ஒரு வசவினைச் சொல்லி, நேரத்தினைப் பார்க்க, மூன்று முப்பது, எட்டாம் தேதி என்பது தெரிய வர, அப்போதுதான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

ஆம், ஏதோ பராமரிப்புக்கென ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்காது எனவும், ஆயத்தமாய் இருக்கும்படியும் மிகத்தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்கள், தனியான மடல், அறிவிப்பு பலகையில், வீட்டிற்குள்ளும் ஒரு சீட்டு என கடந்த பதினைந்து நாட்களாக. சொன்னது ஒரு மணி நேரம், ஆனால் சரியாய் முப்பத்திரண்டு நிமிடத்தில் இடுகையினை முடிக்கும் முன் மின்சாரம் வந்துவிட்டது. இந்த மின் தடை நான் இங்கு வந்த கடந்த ஆறு வருடங்களில் முதல் நிகழ்வு!

சத்தியமாய் என் மனம் நம் ஊரின் மின் தடையைப்பற்றி எண்ணி புழுங்க ஆரம்பித்தது. எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும், சரியான திட்டமிடல் இல்லாததால் என்ன ஒரு அவஸ்தை எல்லோருக்கும்!

வருடா வருடம் அதுவும் குறிப்பாய் கொளுத்தும் கோடையில் இப்பிரச்சினை வந்தாலும் அதற்கான சரிப்படுத்தலைச் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லும் அரசியல் வாதிகள் என்றுதான் திருந்துவார்கள்? தடையில்லா மின்சாரம் நம் வருங்கால சந்ததியினருக்காவது கிடைக்குமா? பலவாறு எண்ணி, வழக்கம்போல் கனவு காண்போம் என்ற ஒரு முடிவுக்குத்தான் வர முடிந்தது.

ஆனாலும் மற்றொரு விஷயம் சாத்தியமா என வீட்டின் அருகில் இருக்கும் மலையில் பார்த்த ஒரு நிகழ்வோடு சம்மந்தப்படுத்தி தோன்றியது. சிறு குன்று போலிருக்கும் அங்கு, நடந்து செல்ல தனியான பாதை, குழந்தைகள் விளையாட பூங்கா, உடற்பயிற்சி செய்ய தனி இடம் இடம், கழிப்பறை என எல்லாம் இருக்கிறது. வழியெல்லாம் விளக்குகள் அத்தோடு அங்கு ஒரு தகவல் பலகையில் இங்கு உபயோகிக்கப்படும் மின்சாரம் யாவும் சூரிய ஒளியின்மூலம் என அது சம்மந்தமான தகவல்கள்.

நாமும் அவ்வாறு சூரிய ஒளியில் மின்சாரத்தை பயன்படுத்தலாமே? வீட்டிற்கு அவ்வாறு செய்தால் என்ன செலவாகும், சாத்தியமா? கண்டிப்பாய் இந்த முறை ஊருக்கு வரும்போது விசாரிக்கவேண்டும். படிக்கும் நண்பர்கள் இது பற்றி பகிர்ந்தால் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.

சூரிய ஒளியின் மூலம் விளக்குகள் யாவும் பயன்படுத்தும், தினமும் எனது நடை, ஓட்டத்திற்கான அந்த இடம் கூகிள் மேப்பில் கீழே...

26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. நாந்தான் பஸ்ட்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சோலார் சிஸ்டம், விரைவில நடைமுறைக்கு வரும்..
சூரிய சக்தியில், மின்சாரம் தயாரித்து, அதை சேமித்து வைக்க, பல புது தயாரிப்புகள் உருவாகிக்கொண்டுள்ளன..

சூரிய வெளிச்சம் இல்லாவிட்டால், என்ன செய்வது என சந்தேகம் வேண்டாம்..மக்களாகிய நாம், உயிரை கொடுத்து அதற்காக உழைத்துக்கொண்டுள்ளோம்..
( மரத்தை வெட்றத சொன்னேன் பிரபா சார்..)

Chitra said...

வழியெல்லாம் விளக்குகள் அத்தோடு அங்கு ஒரு தகவல் பலகையில் இங்கு உபயோகிக்கப்படும் மின்சாரம் யாவும் சூரிய ஒளியின்மூலம் என அது சம்மந்தமான தகவல்கள்

....... நம்மூரில் சில வசதியானவர்கள் வீட்டில், ஏற்கனவே சூரிய ஒளி பயன் படுத்தி மின்சார (generator) வசதி செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போதைக்கு அதன் விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால், எல்லோரும் பயன் படுத்தும் நிலை வரவில்லை.
http://en.wikipedia.org/wiki/Solar_power_in_India

Anonymous said...

அண்ணா,
கடந்த ஆறு மாத காலத்தில் போன வாரம் எங்க ஏரியாவிளையும் ஒரு மணி நேரம் மின்சாரம் கிடையாதுன்னு சொன்னாங்க...அதுக்கு முன்னாடி ஒவ்வொரு வாரமும் சுவரொட்டி விளம்பரம்... சரியான திட்டமிடல்....
ஒழுங்க படிச்சு நாட்டுக்கு ஏதாவது பண்ணனும்கிற நல்ல எண்ணத்தோட அரசியலுக்கு வந்தா இது மாதிரி இருக்கும்.....இல்லாட்டி நம்ம ஊருல இருக்கிறது மாதிரி தான் இருக்கும்.....
நம்ம ஊர்ருல இருக்கிற முக்கால்வாசி அரசியல்வாதிகள் மெகா பிராடு பசங்க...வேற என்னத்த சொல்ல...
எங்க வீட்டுக்கே மின்சாரம் 2003 ல தான் வந்தது.....அதுக்கு முன்னாடி ஊருல கரண்ட் இருந்தது..ஆனா மண்ணெண்ணெய் விளக்க விட கேவலமா ஏறியும்.....இப்ப சுத்தம்..... ஊருல எல்லாரும் சொல்லுறாங்க...மின்சாரம் எப்ப வரும் எப்படி வரும்ன்னு தெரியாது ....ஆனா வந்த கொஞ்ச நேரத்திலேயே போயிரும்......

Unknown said...

இந்தியா மாதிரி நாட்டுக்கு சோலார் முறை தான் சரியான மாற்றுத் தீர்வு.

சத்ரியன் said...

இங்க வந்து சொல்றத விட,

’கூகுள்’ வரைபடமா காட்டறீங்க. அங்க வந்து ‘கொல்ற’ம்டி.

பிரபா,

அரசாங்கத்த கொற சொல்லிக்கிட்டு இருக்கிறத விட , இந்த மாற்று ஐடியா யோசிக்க வேண்டியதாத் தான் இருக்கு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சூரிய ஒளி மின்சாரத்தை வீட்டிற்குப் பயன்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை பிரபாகர். வீட்டின் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் செயல்படுத்த வேண்டுமென்றால் 20000 ரூபாய் செலவு செய்தால் போதும்.

திட்டமிடுதலில் கோட்டைவிடும் நம் அரசியல்வியாதிகளை நொந்து ஒன்றும் செய்வதற்கில்லை பிரபாகர். நமக்கு நாமே என்ற முறைக்கு வரும் வரை.

http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_11.html

சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!!

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு பிரபா. உங்களோடு அலைபேசியில் பேசியது மிக நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க நன்றி நண்பா.

மணிஜி said...

ஆஜர் தம்ப்ரிரீஈ....

Punnakku Moottai said...

Prabha,

Recently I visited a house near Pondy (in TN State). The entire house is lit by solar energy. The system has a solar panel and battery bank and is backed by (untrusted) TNEB. Usually hosue is on solar power and only when need arises it automatically switched to TNEB. I was surprised to learn that only heavy appliances like fridge,TV and AC are powered by TNEB. If it is a 32" LCD TV it can be fed by Solar power. The house owner was proud to say that he is saving a huge cut in EB bills monthly.

There are many companies in Chennai which offer such Solar power panels. Already we have decided to use solar energy for our newly planned home. I will be investigating the possibilities soon and will let you know the details as soon as I get the awareness.

Punnakku Moottai said...

Prabha,

In Singapore, power generation is done by govt and also by private parties. Though the Govt has contracts with private companies, when sudden additional demand for power arises, immediately Singapore Govt asks the private power companies to offer their online prices. Private companies offers their price for so much units of power. Successful bidder is given the contract. The contract can be for an hour or a day or a month. But all the dealings are open and a done online in minutes. Any default will result in severe fine.

So Singapore Power producers are always ready with surplus power to feed on to the national power grid anytime need arises. So you can't see any power cuts here.

In India it is other way around. Power Purchase Agreement (PPA) is done first, even before the power is being built by private parties. No fines for any defaulters. It is only who bribes more gets the contract.

ரோஸ்விக் said...

அண்ணா, தமிழகத்திலும் சில அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். அரசிடமிருந்தும் போதிய விளம்பரங்கள் இல்லாததால், இந்த சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் மந்த நிலையிலேயே உள்ளன.

டிஷ் ஆண்டனாவுக்கு செய்த விளம்பரங்கள் கூட இத்திட்டத்திற்கு செய்யப்பட மாட்டாது/முடியாது... (எந்த வருவாயும் இல்லையே)

நல்ல பதிவு. எமது இல்லத்திலும் பொறுத்த முயல்கிறோம்.

vasu balaji said...

வீராசாமியகோட விட்றலாம். இந்த மாதிரி வெறுப்பேத்துற பதிவர்கள வெச்சி கரண்ட் இல்லாத ரூம்ல சந்திப்பு நடத்தணும். நல்லா ஏத்துராய்ங்க கடுப்ப. எங்கூர்லயும்தான் 2 மணி நேரம் இருந்த மின் தடைய 3 மணி நேரம்னு ஏத்திட்டாங்க. நாங்களும் அலட்டியாவணும்ல:))

கலகலப்ரியா said...

mm...

துபாய் ராஜா said...

நமது ஊரில் கிராமப்புறங்களில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்டது.ஆனால் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், முக்கியமான அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதிகளில் 24 மணி நேரமும் தட்டுப்பாடில்லாத மின்சாரம் கொடுக்கப்படுகிறது.

மக்கள் கஷ்டம் தெரியாத இவர்களா மாற்றுத்திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.... :((

sathishsangkavi.blogspot.com said...

சரியான திட்டமிடல் இல்லாத காரணமே இன்று மின்தடைக்கு காரணம்....

பங்காளி சரியாச்சொன்னீங்க.....

கவிதன் said...

என்று தீரும் எங்கள் சுதந்திர தாகம் என்று ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது போல் இனி என்று தீரும் இந்த மிந்தடைப்பிரச்சனை என்று ஆகிவிடும் போலிருக்கிறதே!!!

நல்ல பகிர்வு பிரபாகர்!!!

ஈரோடு கதிர் said...

பிரபா... மிக நல்ல பகிர்வு.

சூரிய ஒளி மின்சாரம் பெரும்பான்மையாக பயன்படுத்த சரியான ஊக்குவிப்பும், வழிகாட்டுதலும் இன்னும் நிறைய தேவையாக இருக்கிறது

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
அட.. நாந்தான் பஸ்ட்..

பட்டாபட்டி.. said...
சோலார் சிஸ்டம், விரைவில நடைமுறைக்கு வரும்..
சூரிய சக்தியில், மின்சாரம் தயாரித்து, அதை சேமித்து வைக்க, பல புது தயாரிப்புகள் உருவாகிக்கொண்டுள்ளன..

சூரிய வெளிச்சம் இல்லாவிட்டால், என்ன செய்வது என சந்தேகம் வேண்டாம்..மக்களாகிய நாம், உயிரை கொடுத்து அதற்காக உழைத்துக்கொண்டுள்ளோம்..
( மரத்தை வெட்றத சொன்னேன் பிரபா சார்..)
//
நன்றி பட்டா! அன்பிற்கு அழகான கருத்துக்கு!

//
Chitra said...
வழியெல்லாம் விளக்குகள் அத்தோடு அங்கு ஒரு தகவல் பலகையில் இங்கு உபயோகிக்கப்படும் மின்சாரம் யாவும் சூரிய ஒளியின்மூலம் என அது சம்மந்தமான தகவல்கள்

....... நம்மூரில் சில வசதியானவர்கள் வீட்டில், ஏற்கனவே சூரிய ஒளி பயன் படுத்தி மின்சார (generator) வசதி செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போதைக்கு அதன் விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால், எல்லோரும் பயன் படுத்தும் நிலை வரவில்லை.
http://en.wikipedia.org/wiki/Solar_power_in_India
//
தகவலுக்கு நன்றி சித்ரா!

பிரபாகர் said...

//
நல்லவன் கருப்பு... said...
அண்ணா,
கடந்த ஆறு மாத காலத்தில் போன வாரம் எங்க ஏரியாவிளையும் ஒரு மணி நேரம் மின்சாரம் கிடையாதுன்னு சொன்னாங்க...அதுக்கு முன்னாடி ஒவ்வொரு வாரமும் சுவரொட்டி விளம்பரம்... சரியான திட்டமிடல்....
ஒழுங்க படிச்சு நாட்டுக்கு ஏதாவது பண்ணனும்கிற நல்ல எண்ணத்தோட அரசியலுக்கு வந்தா இது மாதிரி இருக்கும்.....இல்லாட்டி நம்ம ஊருல இருக்கிறது மாதிரி தான் இருக்கும்.....
நம்ம ஊர்ருல இருக்கிற முக்கால்வாசி அரசியல்வாதிகள் மெகா பிராடு பசங்க...வேற என்னத்த சொல்ல...
எங்க வீட்டுக்கே மின்சாரம் 2003 ல தான் வந்தது.....அதுக்கு முன்னாடி ஊருல கரண்ட் இருந்தது..ஆனா மண்ணெண்ணெய் விளக்க விட கேவலமா ஏறியும்.....இப்ப சுத்தம்..... ஊருல எல்லாரும் சொல்லுறாங்க...மின்சாரம் எப்ப வரும் எப்படி வரும்ன்னு தெரியாது ....ஆனா வந்த கொஞ்ச நேரத்திலேயே போயிரும்......
//
நன்றி தம்பி, சீக்கிரம் எழுத வாங்க!

//
முகிலன் said...
இந்தியா மாதிரி நாட்டுக்கு சோலார் முறை தான் சரியான மாற்றுத் தீர்வு.
//
நன்றி தினேஷ்!

//
சத்ரியன் said...
இங்க வந்து சொல்றத விட,

’கூகுள்’ வரைபடமா காட்டறீங்க. அங்க வந்து ‘கொல்ற’ம்டி.

பிரபா,

அரசாங்கத்த கொற சொல்லிக்கிட்டு இருக்கிறத விட , இந்த மாற்று ஐடியா யோசிக்க வேண்டியதாத் தான் இருக்கு.
//
நன்றி சத்ரியன்!

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
சூரிய ஒளி மின்சாரத்தை வீட்டிற்குப் பயன்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை பிரபாகர். வீட்டின் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் செயல்படுத்த வேண்டுமென்றால் 20000 ரூபாய் செலவு செய்தால் போதும்.

திட்டமிடுதலில் கோட்டைவிடும் நம் அரசியல்வியாதிகளை நொந்து ஒன்றும் செய்வதற்கில்லை பிரபாகர். நமக்கு நாமே என்ற முறைக்கு வரும் வரை.

http://senthilinpakkangal.blogspot.com/2009/08/blog-post_11.html

சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!!
//
நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன்! நன்றிங்க செந்தில்!

//
செ.சரவணக்குமார் said...
மிக நல்ல பதிவு பிரபா. உங்களோடு அலைபேசியில் பேசியது மிக நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க நன்றி நண்பா.
//
நன்றி நண்பா! நட்பால் நானும் பெருமை கொள்கிறேன்.

//
மணிஜீ...... said...
ஆஜர் தம்ப்ரிரீஈ....
//
வாங்கண்ணா! சௌக்யமா?

பிரபாகர் said...

//
Punnakku Moottai said...
Prabha,

Recently I visited a house near Pondy (in TN State). The entire house is lit by solar energy. The system has a solar panel and battery bank and is backed by (untrusted) TNEB. Usually hosue is on solar power and only when need arises it automatically switched to TNEB. I was surprised to learn that only heavy appliances like fridge,TV and AC are powered by TNEB. If it is a 32" LCD TV it can be fed by Solar power. The house owner was proud to say that he is saving a huge cut in EB bills monthly.

There are many companies in Chennai which offer such Solar power panels. Already we have decided to use solar energy for our newly planned home. I will be investigating the possibilities soon and will let you know the details as soon as I get the awareness.
//
தகவல்கள் பாலா! நீங்கள் ஒரு விஷயக்களஞ்சியம். உண்மையில் சொல்கிறேன்...

//
Punnakku Moottai said...
Prabha,

In Singapore, power generation is done by govt and also by private parties. Though the Govt has contracts with private companies, when sudden additional demand for power arises, immediately Singapore Govt asks the private power companies to offer their online prices. Private companies offers their price for so much units of power. Successful bidder is given the contract. The contract can be for an hour or a day or a month. But all the dealings are open and a done online in minutes. Any default will result in severe fine.

So Singapore Power producers are always ready with surplus power to feed on to the national power grid anytime need arises. So you can't see any power cuts here.

In India it is other way around. Power Purchase Agreement (PPA) is done first, even before the power is being built by private parties. No fines for any defaulters. It is only who bribes more gets the contract.
//
சிங்கையிலேயே இருந்தாலும் நீங்கள் அழகாய் தெரியாததை சொல்லியிருக்கிறீர்கள்...

//
ரோஸ்விக் said...
அண்ணா, தமிழகத்திலும் சில அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். அரசிடமிருந்தும் போதிய விளம்பரங்கள் இல்லாததால், இந்த சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் மந்த நிலையிலேயே உள்ளன.

டிஷ் ஆண்டனாவுக்கு செய்த விளம்பரங்கள் கூட இத்திட்டத்திற்கு செய்யப்பட மாட்டாது/முடியாது... (எந்த வருவாயும் இல்லையே)

நல்ல பதிவு. எமது இல்லத்திலும் பொறுத்த முயல்கிறோம்.
//
நன்றி ரோஸ்விக்!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
வீராசாமியகோட விட்றலாம். இந்த மாதிரி வெறுப்பேத்துற பதிவர்கள வெச்சி கரண்ட் இல்லாத ரூம்ல சந்திப்பு நடத்தணும். நல்லா ஏத்துராய்ங்க கடுப்ப. எங்கூர்லயும்தான் 2 மணி நேரம் இருந்த மின் தடைய 3 மணி நேரம்னு ஏத்திட்டாங்க. நாங்களும் அலட்டியாவணும்ல:))
//
ஹி..ஹி... ஆதங்கத்துல எழுதறதுதாங்கய்யா!

//
கலகலப்ரியா said...
mm...
//
நன்றி சகோதரி!

//
துபாய் ராஜா said...
நமது ஊரில் கிராமப்புறங்களில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்டது.ஆனால் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், முக்கியமான அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதிகளில் 24 மணி நேரமும் தட்டுப்பாடில்லாத மின்சாரம் கொடுக்கப்படுகிறது.

மக்கள் கஷ்டம் தெரியாத இவர்களா மாற்றுத்திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.... :((
//
அந்த கோபத்தில் எழுதியதுதான்!

பிரபாகர் said...

//
Sangkavi said...
சரியான திட்டமிடல் இல்லாத காரணமே இன்று மின்தடைக்கு காரணம்....

பங்காளி சரியாச்சொன்னீங்க.....
//
நன்றி பங்காளி!

//
கவிதன் said...
சரியான திட்டமிடல் இல்லாத காரணமே இன்று மின்தடைக்கு காரணம்....

என்று தீரும் எங்கள் சுதந்திர தாகம் என்று ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது போல் இனி என்று தீரும் இந்த மிந்தடைப்பிரச்சனை என்று ஆகிவிடும் போலிருக்கிறதே!!!

நல்ல பகிர்வு பிரபாகர்!!!
//
நன்றி கவிதன்! அன்பிற்கு ஆதரவிற்கு!

//
ஈரோடு கதிர் said...
பிரபா... மிக நல்ல பகிர்வு.

சூரிய ஒளி மின்சாரம் பெரும்பான்மையாக பயன்படுத்த சரியான ஊக்குவிப்பும், வழிகாட்டுதலும் இன்னும் நிறைய தேவையாக இருக்கிறது
//
நன்றி கதிர்!

பா.ராஜாராம் said...

நேற்று சரவணனை பார்த்த போது நீங்கள் தொடர்பு கொண்டது குறித்து குறிப்பிட்டார்.

அருமையான கட்டுரை இது ப்ரபா!

பிரபாகர் said...

//பா.ராஜாராம் said...
நேற்று சரவணனை பார்த்த போது நீங்கள் தொடர்பு கொண்டது குறித்து குறிப்பிட்டார்.

அருமையான கட்டுரை இது ப்ரபா!
//

ரொம்ப நன்றிங்கண்ணா! உங்களையெல்லாம் சந்திக்கும் நாளை ஆவலாய் எதிர்ப்பார்த்திருக்குறேன்...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB