காஞ்சக்கடலை...

|

சில நிகழ்வுகள் நம்மை கடைசிவரை பல்லில் மாட்டிய பாக்கென நிரடிக்கொண்டே இருக்கும். அந்த விதத்தில் என்னை மிகவும் பாதித்த ஒன்று இந்த இடுகையில்.

இரண்டு வருடத்திற்கு முன் ஊருக்கு சென்றபோது தம்பி 'அண்ணா வரும்போது ஒரு நல்ல வாட்ச் வாங்கி வா' என்றான். ’யாருக்கு’ என கேட்டதற்கு ’காஞ்சக்கடலைக்கு’ என்றான். சட்டென சிரிப்பாய்தான் வந்தது.

'அதென்ன காஞ்சக்கடலை?' எனக் கேட்டதற்கு அவரின் பட்டப்பெயர் எனவும், அவர் அவனுக்காக செய்த உதவிகளையும் சொல்ல ஆரம்பிக்க, ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வர, சரி ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் என மட்டறுத்து, மறக்காமல் வாங்கிச் சென்று கொடுத்தேன். ஆனால் குறுகிய பயணமாதலால் அவரை சந்திக்க முடியவில்லை.

அடுத்தமுறை ஊருக்கு சென்றவுடன் குழந்தைகள், அப்பா, அம்மா என எல்லோரையும் பார்த்து அளவலாவிய பின் வீட்டிற்குள் என்னையே பார்த்துக்கொண்டு ஒருவர், நான் பார்ப்பேனா என. என் தம்பியினைக் கேட்டபோது அவர்தான் காஞ்சக்கடலை என சொன்னான். அருகில் சென்று கையை கொடுத்தேன்.

'நல்லாருக்கியா கண்ணு, விடியற்காலத்துல இருந்தே உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்' என சொன்னார். 'நல்லாயிருக்கேன், ரொம்ப சந்தோசம், குளிச்சிட்டு வந்து உங்களைப் பார்க்கிறேன்' என சொல்லி அதற்கு ஆயத்தமாக, அவர் சரியென வெளியே சென்றார்.

அத்தை மெதுவாய் என்னிடம் வந்து, 'பிரபு, காஞ்சக்கடல கூப்பிடுறாப்ல' என சொல்ல, வாசலுக்கு சென்றேன். 'ம்... சொல்லுங்கண்ணா' என கேட்க, 'கள்ளு குடிக்க காசு கொடு' எனக் கேட்டார். (டாஸ்மார்க் இருந்தாலும் கிராமங்களில் கள் இருக்கத்தான் செய்கிறது, தரவேண்டிய மாமூலினைத் தந்து).

'அண்ணா, பணம் ஏதும் மாற்றாமல் வந்துட்டேன், குளித்துவிட்டு  வந்து தம்பிகிட்ட வாங்கித் தருகிறேன்' என சொல்லி, சென்று பல் துலக்கி, மறந்துவிட்டுப்போன ஷாம்புவை எடுக்க வருபோது, வீட்டினுள் ஒரே பரபரப்பாக இருந்தது.

காஞ்சக்கடலை தூக்கு போட்டு இறந்துவிட்டாராம்... சரியாய் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது முன்னாள். சட்டென தலையில் கைவைத்து உட்கார்ந்தேன். என்னிடம் காசுகேட்டுவிட்டு நேரே அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். கூரை வீடு, தாழ்வான விட்டத்தில் தனது வேஷ்டியை விட்டத்தில் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு நின்றவாக்கிலே கழுத்தை பட்டென சொடுக்கி இறந்திருக்கிறார். (சென்று இறக்கிய அப்பா சொன்ன தகவல்)

இங்கு ஒரு தகவலை சொல்லியே ஆகவேண்டும், கிராமங்களில் இதுபோல் குடித்து தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகவும் அதிகம். ஏமாற்றங்கள், கோபம், குடும்பப்பிரச்சினை என பல காரணங்கள்.

அப்போது என் தம்பியிடம், 'திவா பணத்தை கொடுத்திருக்கலாமடா, கையில் இருந்தால் கொடுத்திருப்பேன், மனசுக்கு ஒரே உறுத்தலாய் இருக்கு' என சொன்னேன்.

'இல்லன்னா, பணம் திரும்ப வாங்கனும்னாவது உயிரோட இருந்திருக்கலாமே? அவர்  ஒரு வாரமாவே சாகிறதா மிரட்டிகிட்டிருந்தாரு. எல்லாம் விளையாட்டுக்குன்னு நினைச்சிட்டோம்... எனக்கு இந்த வீடு கட்ட அவருதான் எல்லா உதவியும் செஞ்சாரு...' எனச் சொல்லி அவரைப்பற்றி இன்னுமொரு தகவலை சொன்னான்.

உங்களுக்கெல்லாம் தெரியும், கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்குத்தான் சரியான கவனிப்பு இருக்கும். அவர்களுக்குத்தான் காலை மாலை இரு வேளையும் தம்ளர் நிறைய பால் கொடுப்பார்கள், செய்யும் பதார்த்தங்களிலும் அவர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கும். இதனை பல வீடுகளில் கண்கூடாக கண்டிருக்கிறேன், அப்படி வளர்த்த பையன்கள் போட்டு பெற்றவரை உதைப்பதைப் பார்த்தும் துணுக்குற்றிருக்கிறேன்.

அவருக்கு ஒரு மகன், மகள். சரியாய் பத்து வருடங்களுக்கு முன் அவரது மகன் ஏதோ திருடிவிட்டதாய் அந்த தெருவிலுள்ளோர் எல்லோருமாய் சேர்ந்து குற்றம் சாட்ட, நேரே அவனை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். பருத்திக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தினை நான்கு கிளாஸ்களில் உற்றிவைத்து மகனிடம் 'நீ குடித்துவிட்டு சாவு, இல்லை நாங்க மூணு பெரும் குடிச்சிட்டு சாகிறோம்' என சொல்லியிருக்கிறார்.

அந்த பையன் எவ்வளவோ போராடியும், மனைவி, மகள் என எல்லோரும் கதறியும் கேட்காமல்... கடைசியாய் அந்த பையன் எடுத்து குடித்துவிட்டானாம். உயிருக்கு போராடும் அந்த தருணத்தில் அக்கம் பக்கத்தார் காப்பாற்ற முயல, 'திருடன்னு சொல்லி அவனை அவமானப்படுத்துனீங்கல்ல, இப்ப என்னா மயித்துக்கு காப்பாத்த வர்றீங்க? அவனை காப்பாத்தினா நான் உசிரோட இருக்க மாட்டேன்' என ஆணித்தரமாக சொல்லிவிட கடைசியாய் அந்த பையன் துடித்து உயிரிழந்தானாம்.

அவர் இறந்த ஓரிரு நாளில் அவரின் மனைவியை வீட்டிற்கு சென்று பார்த்தேன். தலையில் நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பெரிய பொட்டு, மஞ்சள் தாலி... காரியம் வரை இருக்கும். அந்த அக்காள் என்னை பார்த்தவுடன் கதறி அழுதார்கள். 'உன்னைப் பத்தியும், தம்பி திவாவப் பத்தியும் தான் அதிகமா பேசிக்கிட்டு இருக்கும் கண்ணு, பொசுக்குன்னு இப்படி பண்ணிக்கிச்சி... என்ன பண்றது.... விதி'. பேச முடியாமல் கலங்கி அமர்ந்திருந்தேன்...

மறுபடியும் ஒரு நாள் பார்க்கும்போது அந்த அக்காவிடம் கேட்டேன், 'அக்கா உங்க பையனை மருந்து கொடுத்து சாவடிக்கும்போது, நீங்க கூட காப்பாத்த முயற்சிக்கலையா?' எனக்கேட்டேன்.

'அந்தாளு குணம் எனக்குத் தெரியும். சொன்னா கேக்காது, ரெண்டாவது அவன் பண்ணினது ரொம்ப தப்பு, எனக்கும் அவன் மேல அப்போ வெறுப்பாத்தான் இருந்துச்சி' என சொன்னார்கள்.

33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கார்க்கிபவா said...

:(((

கோவி.கண்ணன் said...

ஹூம்....மானம் மானம் என்று பயந்து செத்து போகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:((

சைவகொத்துப்பரோட்டா said...

இப்படியும் சிலர், படிக்கவே
பரிதாபமாக இருக்கு.

சங்கர் said...

அவரை எனக்கு பிடிக்கல

settaikkaran said...

பரிதாபம்! வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மரணத்தைத் தேடுகிறவர்களில் ஒருவர் போலும் இந்த காஞ்சக்கடலை! பாவம்!!

பனித்துளி சங்கர் said...

நண்பரே இங்கு பலர் பதிவை படிக்காமல் மறுமொழி இட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . உண்மையில் இதை முழுதும் வாசீத்தவர்களால் இப்படி எதுவும் எழுதாமல் சென்றிருக்க முடியாது .

இதை படித்து முடித்த பொழுது ஏதோ ஒரு மிகப்பெரிய சோகத்தை ஏற்படித்திவிட்டது . உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் .

Anonymous said...

இன்னும் இப்படிப்பட்டவங்க நிறையா இருக்காங்க

ராஜ நடராஜன் said...

எனக்கு இந்த இடுகை ஒரு புது அனுபவம்.கூடவே மன அதிர்வும்.

அமுதா கிருஷ்ணா said...

என்ன மனிதன் அவர்..ஜீரணிக்க கஷ்டமாய் இருக்கு..

சீதாலட்சுமி said...

மனிதன் உணர்ச்சி வேகத்தில் ஒரு வினாடியில் எடுக்கும் முடிவு தற்கொலை. கொலையும் அப்படியே.
சில வினாடிகள் தாமதத்திலிருந்தால் இது நடந்திருக்காது. இந்தத
தற்கொலை உணர்வுகள் வருகின்றவர்களுக்கு அடிக்கடி இந்த உணர்வுகள் வரலாம் என்ற கூற்றும் உண்டு. நானும் கிராமங்களில் இதைப் போன்ற துன்பங்களைப் பார்த்திருக்கின்றேன். நெஞ்சைத் தொடும் ஓர் பதிவு
சீதாம்மா

Paleo God said...

கொடுமை!
:(

மங்குனி அமைச்சர் said...

அய்யோ சார் , மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

சிநேகிதன் அக்பர் said...

இருந்தாலும் அந்தாளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. இப்படியா இருப்பார் மனுஷன்.

அதுவும் பெத்த பிள்ளையை விஷம் குடிக்க சொன்னவரு போய் சேர்ந்ததுல பெரிசா ஒருவருத்தமும் இல்லை.

க.பாலாசி said...

//இப்ப என்னா மயித்துக்கு காப்பாத்த வர்றீங்க? அவனை காப்பாத்தினா நான் உசிரோட இருக்க மாட்டேன்' என ஆணித்தரமாக சொல்லிவிட கடைசியாய் அந்த பையன் துடித்து உயிரிழந்தானாம்.//

என்ன கொடுமைங்க... இவ்ளோ கல்நெஞ்சக்காரரா....??

நிலாமதி said...

பாவம் மன நிலை குழப்பம்.உணர்ச்சி வேகம்.பின் விளைவை சிந்திக்காத குணம்.நெஞ்சை தொட்டு செல்கிறது

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இது போல முறுக்கீட்டு இருக்கர ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க.

நாடோடி இலக்கியன் said...

மனிதரில்தான் எத்தனை நிறங்கள்...

Unknown said...

அதிர்ச்சி..

இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள்?

காஞ்சக் கடலை கண்டிப்பாக மனச்சிதைவடைந்தவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

மனச்சிதைவுகள் தான் இந்தக் கொடூரத்திற்குக் காரணங்கள்! சரியே. ஆனால் அறியா வயதில் செய்த ஒரு திருட்டுக்கு தன்னைப் பெற்றவனின் கையாலேயே சாவது எத்தனை கொடுமை! வாளெடுத்தவன் வாளாலேயே சாவான் என்பது மாதிரி, துடிக்க துடிக்க பெற்ற மகனையே கொன்ற ஒருத்தன் இப்படித்தான் சாக வேண்டுமென்பதும் சரியே!

ஹேமா said...

இப்பிடியுமா!
மனசுக்கு ரொம்பக் கஸ்டமாயிருக்கு.

பழமைபேசி said...

காஞ்சகடலை

vasu balaji said...

ம்ம். கொடுமை ப்ரபா

Anonymous said...

padikave manasuku romba kashtama iruku... :(

பிரபாகர் said...

//
கார்க்கி said...
:(((
//
ம்... வருகைக்கு நன்றி சகா!

//
கோவி.கண்ணன் said...
ஹூம்....மானம் மானம் என்று பயந்து செத்து போகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.
//
சரிதாங்கண்ணா!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:((
//
ம்... வருகைக்கு நன்றிங்கய்யா

பிரபாகர் said...

//
சைவகொத்துப்பரோட்டா said...
இப்படியும் சிலர், படிக்கவே
பரிதாபமாக இருக்கு.
//
antha paathippilathaangka ezuthinathu!

//
சங்கர் said...
அவரை எனக்கு பிடிக்கல
//
kataisi paththu wimishaththOta munnaati avar paarththa aaLungkaLla waanum oru aaLilla... aathangkam irukku...

//
சேட்டைக்காரன் said...
பரிதாபம்! வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மரணத்தைத் தேடுகிறவர்களில் ஒருவர் போலும் இந்த காஞ்சக்கடலை! பாவம்!!
//
ஆம் நண்பா, அவரின் குடும்பமும்...

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நண்பரே இங்கு பலர் பதிவை படிக்காமல் மறுமொழி இட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . உண்மையில் இதை முழுதும் வாசீத்தவர்களால் இப்படி எதுவும் எழுதாமல் சென்றிருக்க முடியாது .

இதை படித்து முடித்த பொழுது ஏதோ ஒரு மிகப்பெரிய சோகத்தை ஏற்படித்திவிட்டது . உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் .
//
illai waNpaa! patiththu paathththathai solliththaan senRirukkiRaarlkaL...

//
சின்ன அம்மிணி said...
இன்னும் இப்படிப்பட்டவங்க நிறையா இருக்காங்க
//
aamaangka!

//
ராஜ நடராஜன் said...
எனக்கு இந்த இடுகை ஒரு புது அனுபவம்.கூடவே மன அதிர்வும்.
//
ஆமாங்க, எழுதலாமா என கூட யோசித்தேன்.

பிரபாகர் said...

//
அமுதா கிருஷ்ணா said...
என்ன மனிதன் அவர்..ஜீரணிக்க கஷ்டமாய் இருக்கு..
//
ஆமாங்க, அதான் பல்-பாக்கு என குறிப்பிட்டிருக்கிறேன்.

//சீதாலட்சுமி said...
மனிதன் உணர்ச்சி வேகத்தில் ஒரு வினாடியில் எடுக்கும் முடிவு தற்கொலை. கொலையும் அப்படியே.
சில வினாடிகள் தாமதத்திலிருந்தால் இது நடந்திருக்காது. இந்தத
தற்கொலை உணர்வுகள் வருகின்றவர்களுக்கு அடிக்கடி இந்த உணர்வுகள் வரலாம் என்ற கூற்றும் உண்டு. நானும் கிராமங்களில் இதைப் போன்ற துன்பங்களைப் பார்த்திருக்கின்றேன். நெஞ்சைத் தொடும் ஓர் பதிவு
சீதாம்மா
//
நன்றிங்கம்மா!

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கொடுமை!
:(
//
ஆம் சேம் பிளட்...

பிரபாகர் said...

//
மங்குனி அமைச்சர் said...
அய்யோ சார் , மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு
//
ம்... நன்றி மங்குனி...

//
அக்பர் said...
இருந்தாலும் அந்தாளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. இப்படியா இருப்பார் மனுஷன்.

அதுவும் பெத்த பிள்ளையை விஷம் குடிக்க சொன்னவரு போய் சேர்ந்ததுல பெரிசா ஒருவருத்தமும் இல்லை.
//
ம்... கருத்துக்கு நன்றி சினேகிதா!

//
க.பாலாசி said...
//இப்ப என்னா மயித்துக்கு காப்பாத்த வர்றீங்க? அவனை காப்பாத்தினா நான் உசிரோட இருக்க மாட்டேன்' என ஆணித்தரமாக சொல்லிவிட கடைசியாய் அந்த பையன் துடித்து உயிரிழந்தானாம்.//

என்ன கொடுமைங்க... இவ்ளோ கல்நெஞ்சக்காரரா....??
//
ம்... அவரோட மனநிலை அப்படி...

பிரபாகர் said...

//
நிலாமதி said...
பாவம் மன நிலை குழப்பம்.உணர்ச்சி வேகம்.பின் விளைவை சிந்திக்காத குணம்.நெஞ்சை தொட்டு செல்கிறது
//
ஆம் சகோதரி!

//
ச.செந்தில்வேலன் said...
இது போல முறுக்கீட்டு இருக்கர ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க.
//
ஆமாங்க! இன்னுமொருத்தரப் பத்தி எழுதறேன். கொஞ்சம் காமெடியா இருக்கும்.

//
நாடோடி இலக்கியன் said...
மனிதரில்தான் எத்தனை நிறங்கள்...
//
நன்றி பாரி.

பிரபாகர் said...

//
முகிலன் said...
அதிர்ச்சி..

இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள்?

காஞ்சக் கடலை கண்டிப்பாக மனச்சிதைவடைந்தவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
//
ஆம் தினேஷ், அப்படி ஒரு முடிவிற்குத்தான் வந்தேன் மருத்துவர் மாமாவிடம் பேசியபின்.

//
மனோ சாமிநாதன் said...
மனச்சிதைவுகள் தான் இந்தக் கொடூரத்திற்குக் காரணங்கள்! சரியே. ஆனால் அறியா வயதில் செய்த ஒரு திருட்டுக்கு தன்னைப் பெற்றவனின் கையாலேயே சாவது எத்தனை கொடுமை! வாளெடுத்தவன் வாளாலேயே சாவான் என்பது மாதிரி, துடிக்க துடிக்க பெற்ற மகனையே கொன்ற ஒருத்தன் இப்படித்தான் சாக வேண்டுமென்பதும் சரியே!
//

ம்... நிறைய பாதிப்பில் தான் இதை எழுதினேன்...

பிரபாகர் said...

//
ஹேமா said...
இப்பிடியுமா!
மனசுக்கு ரொம்பக் கஸ்டமாயிருக்கு.
//

ஆம் ஹேமா!

//
பழமைபேசி said...
காஞ்சகடலை
//
பேச்சுவாக்கில அவர கூப்பிடறத வெச்சி எழுதிட்டேங்கண்ணா!

//
வானம்பாடிகள் said...
ம்ம். கொடுமை ப்ரபா
//
ஆமாங்கய்யா!

//
Sachanaa said...
padikave manasuku romba kashtama iruku... :(
//

ஆமாங்க!

ரோஸ்விக் said...

:-(

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB