எண்ணச்சிதறல்கள்... - மார்ச் முதல் வார வெள்ளி...

|

நெருடியது

நடப்பு நிகழ்வுகளை பார்க்கும்போது எத்தனை பேருடைய சுயரூபங்களை தெரிந்து கொள்ள முடிகிறது? அவதாரம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு அயோக்கியன், பழைய விஷயத்தை சம்மந்தப்படுத்தி பேசும் தினமலர், காசுக்கு பகிரங்கமாய் நீலப்படம் என்று கூவி விற்கும் நக்கீரன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் உலகப்புகழ்பெற்றதாய் சொல்லிக்கொள்ளும் எழுத்தாளர், காசுக்காக எதையும் செய்வோம் என பல்டியடித்த குமுதம், எல்லாம் முடிந்த பிறகு தாமதமாய் அறிக்கை விட்ட அன்புத்தலைவர், இந்த அசிங்கங்களின் மேல் அலாதி ஆர்வம் கொண்ட நம் இன மக்கள், இந்த விஷயத்தைப் பற்றி எழுதும் இடுகையாளர்கள்...(என்னையும் சேர்த்துத்தான்)... வேண்டாம், நல்லதையே யோசிப்போம். நமது சந்ததிகளுக்கு முடிந்த வரை இந்த விஷயங்களை தவறாக புரிந்துகொள்ளாதிருக்க அறிவுறுத்த முயலுவோம்.

நிரடியது

இதையெல்லாம் கூச்சமில்லாமல் ஒளிபரப்பியவர்கள், படம்போட்டு பத்திரிகைகளில் காசு பார்ப்பவர்கள் வீட்டிலும் குழந்தைகள், அக்காள், தங்கை என இருப்பார்கள் தானே?

வருடியது

நிறைய இருந்தாலும் இந்த இடுகையில் வேண்டாம், அடுத்த இடுகையில் கண்டிப்பாய்.

பிடித்த இடுகையாளர்:


தம்பலகாமம்.க.வேலாயுதம்

எழுதுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இவரு ஒரு உதாரணம். இவரைப்பற்றிய விவரங்களை படிக்கும் பொது கொஞ்சம் பிரமிப்பாய் இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர், வயது 93 (1917- ல் பிறந்தவர்)... என இன்னும் பல விவரங்களை அவரின் சுயவிவரத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. அதிகம் எழுதுவதில்லை என்றாலும் எழுதியவைகளில் இரண்டு உங்களின் பார்வைக்காக...

நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்

இவரை நிறைய பேர் படித்து, அதன்மூலம் இன்னும் எழுதினால் நமக்கு நிறைய விவரங்கள் கிடைக்கும்.
 
விளையாட்டு
 
வழக்கம்போல் கிரிக்கெட்தான். தூக்கம் வராமல் இருந்தபோது அதிகாலை ஜிம்பாப்வே Vs வெ(வே)ஸ்ட் இண்டிஸ் மேட்ச் பார்த்து (ஆன்லைனில் தான்) செம டென்ஷன் ஆனது. கடைசி இரண்டு ஓவர்கள் சொல்லவே வேண்டாம்... நாற்பத்தெட்டாவது ஓவரில் சந்தர்பால் அவுட் ஆக, இரண்டு ஓவரில் 22 ரன்கள் வேண்டும். ஆறு பந்து பதினைந்து ரன்கள் வேண்டும், மூன்று விக்கெட்டுகள் கையில். முதல் இரண்டு பந்தில் ஆறு, நான்கு என மில்லர் பத்து ரன்கள் எடுத்து அடுத்த பந்தில் ஒரு ரன். அதற்கடுத்த பந்தில் ஸ்மித் அவுட். ஐந்தாவது பந்தில் புதிதாய் வந்த பென் தூக்கி அடிக்க, அருமையான கேட்ச்! அவுட். ஆனால் மட்டையாளர்கள் ஓடாமல் நின்றதால் மூன்று பந்தில் பதினோரு ரன்கள் எடுத்திருந்த மில்லருக்கு பதிலாய் புதிதாய் வந்த ரோச் தடுத்தாடி ஒரு ரன் மட்டும் எடுக்க இரண்டு ரன்னில் ஜிம்பாப்வே வெற்றி. பரபரப்பென்றால் 'கிரிக்கெட்டும்' தான்....

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சங்கர் said...

தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)

சங்கர் said...

இது, மார்ச் முதல் வாரம் தானே ??

பிரபாகர் said...

//சங்கர் said...
தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)
//
நன்றி தம்பி...

சங்கர் said...
இது, மார்ச் முதல் வாரம் தானே ??
//
ஆஹா, முந்தைய பதிவில இருந்து தலைப்ப காப்பி பேஸ்ட் பண்ணியதில தப்பு பண்ணிட்டேனே! திருத்திட்டேன்... நன்றி தம்பி...

vasu balaji said...

/ பிரபாகர் said...

//சங்கர் said...
தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)
//
நன்றி தம்பி... /

சச்சிந்தான் தம்பின்னு நினைச்சேன். சங்கருமா? :))

நல்லாருக்கு

ரோஸ்விக் said...

பதிவர் அறிமுகம் - அருமை அண்ணா... படிக்கிறேன்.

க ரா said...

நல்லாருக்கு.

Prathap Kumar S. said...

உங்களை நெருடியவை எல்லாருக்கும் நெருடியது விசயம். நாடு வௌங்கிரும்

Chitra said...

நல்ல எண்ண சிதறல்கள்.

இராகவன் நைஜிரியா said...

// சங்கர் said...
தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)//

தமிழிஷ், தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுவிட்டேன். :)

Unknown said...

நெருடலுக்கும் நிரடலுக்கும் என்ன வித்தியாசம்?

settaikkaran said...

//நல்லதையே யோசிப்போம். நமது சந்ததிகளுக்கு முடிந்த வரை இந்த விஷயங்களை தவறாக புரிந்துகொள்ளாதிருக்க அறிவுறுத்த முயலுவோம்.//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை...! நடக்க வேண்டும்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவர் அறிமுகம் - அருமை

க.பாலாசி said...

ரொம்ப கிரிக்கெட் பாக்காதிங்க தலைவரே.....

Unknown said...

சூப்பர் ஜிம்பாவ்வே மேட்ச் &உங்க பதிவு

புலவன் புலிகேசி said...

//தம்பலகாமம்.க.வேலாயுதம்
//

93 வயதில் பதிவரா...உண்மையில் ஆச்சர்யம்.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
/ பிரபாகர் said...

//சங்கர் said...
தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)
//
நன்றி தம்பி... /

சச்சிந்தான் தம்பின்னு நினைச்சேன். சங்கருமா? :))

நல்லாருக்கு
//

சங்கர் பதிவுலக தம்பி...

//
ரோஸ்விக் said...
பதிவர் அறிமுகம் - அருமை அண்ணா... படிக்கிறேன்.
//

நன்றி ரோஸ்விக்....

//
இராமசாமி கண்ணண் said...
நல்லாருக்கு.
//
ரொம்ப நன்றிங்க...

//
நாஞ்சில் பிரதாப் said...
உங்களை நெருடியவை எல்லாருக்கும் நெருடியது விசயம். நாடு வௌங்கிரும்
//
அந்த ஆதங்கத்தில் எழுதியதுதான்...

//
Chitra said...
நல்ல எண்ண சிதறல்கள்.
//
நன்றிங்க சித்ரா...

//
இராகவன் நைஜிரியா said...
// சங்கர் said...
தமிலிஷ், தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன் :)//

தமிழிஷ், தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுவிட்டேன். :)
//

வாங்கண்ணா, ரொம்ப நாளா ஆளைக்காணோம்...

//
முகிலன் said...
நெருடலுக்கும் நிரடலுக்கும் என்ன வித்தியாசம்?
//
குழந்தைய தெரியாம அடிச்சிட்டு அதுக்கப்புறமா இருக்கிற ஃபீலிங் நெருடல்...
பல்லுல மாட்ன பாக்கு நிரடல்.

//
சேட்டைக்காரன் said...
//நல்லதையே யோசிப்போம். நமது சந்ததிகளுக்கு முடிந்த வரை இந்த விஷயங்களை தவறாக புரிந்துகொள்ளாதிருக்க அறிவுறுத்த முயலுவோம்.//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை...! நடக்க வேண்டும்!!
//

வாங்க தம்பி.... நன்றி...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிவர் அறிமுகம் - அருமை
//

நன்றிங்கய்யா!

//
க.பாலாசி said...
ரொம்ப கிரிக்கெட் பாக்காதிங்க தலைவரே.....
//

சரிங்க இளவல்... முயற்சி பண்றேன்...

//
A.சிவசங்கர் said...
சூப்பர் ஜிம்பாவ்வே மேட்ச் &உங்க பதிவு
//

நன்றிங்க சிவசங்கர்...

//
புலவன் புலிகேசி said...
//தம்பலகாமம்.க.வேலாயுதம்
//

93 வயதில் பதிவரா...உண்மையில் ஆச்சர்யம்.
//

ஆம் புலிகேசி...

அன்புடன் மலிக்கா said...

நல்ல எண்ணசிதறல்கள் பிரபாகரண்ணா. நெருடியவைகளில் சில மனதை நெருடியது..அறிமுகம் அருமை...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB