பேருந்தில் காதல் - முறிந்த நட்புக்கள்...

|

அன்பு நண்பர் சங்கவி  பேருந்தில் காதல்.. பற்றி இடுகை எழுத சொல்ல இதோ களத்தில இறங்கிட்டோமில்ல!

டே ஸ்காலரா இருந்த சமயத்தில (ஹாஸ்டல், தனி வீடுன்னு எல்லா விதமாயும் படிச்சமுங்க) ஒரு வருஷம் பஸ்ஸில போயி படிச்சப்போ நடந்ததுதான் இந்த இடுகையில...

தினமும் சரியா எட்டு மணிக்கு வர தீரன் சின்னமலை பஸ்ஸுதான் நம்ம ரெகுலர் பஸ். அதுல கிளம்பினா ஒன்பது பத்துக்கெல்லாம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டுல டான்னு விட்டிடுவாங்க! அந்த பஸ்ஸுல முக்கால் வாசி காலேஜ், பாலிடெக்னிக் பசங்க பொண்ணுங்க தான் இருப்போம்.

அதுல பல கூத்துங்க நடக்கும், நிறைய காதலும் இருக்கும். கண்டக்டர் பேரு நேரு, ரொம்ப ஜாலியான மனுஷன். பசங்களோட பசங்களா ரொம்ப ஜோவியலா இருப்பாரு.

நாங்க மூனு பேர் என் கிளாஸ்ல இருந்து பஸ்ஸில போவோம், சுரேஷ் ஆத்தூர்ல இருந்து, நம்ம ஊர் அடுத்த வீரகனூர்ல இருந்து செந்தில்.

நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல. அப்போதான் பாலிடெக்னிக் ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு. வழியிலயே அரசலூர் கைகாட்டியில இறங்கிக்கும். ரொம்ப அழகா, குனிஞ்ச தலை நிமிராம இருக்கும்.

நம்மாளுங்க ரெண்டு பேரும் அந்த பொண்ண பாக்க ஆரம்பிச்சானுங்க. அது பஸ்ஸில ஏறும்போது பயங்கர கூட்டமா இருக்கும். நின்னுகிட்டுத்தான் பெரும்பாலும் வரும். உக்காந்துகிட்டு வந்தாலும் எழுந்து அக்கறையா சீட்ட விட்டு கொடுத்துட்டு முன்னாடி போய் அந்த பொண்ண பாக்குற மாதிரி நின்னுக்குவானுங்க.

அந்த பொண்ணு வந்ததும் ரெண்டு பேர் முகத்துலயும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். சீப்ப எடுத்தி சீவிகிட்டு கர்சீப்ல இருந்து பவுடர்லாம் அடிச்சிகிட்டு அந்த பொண்ணு பார்வையில படற மாதிரி இருப்பானுங்க.

துணைக்கு நானும் கூட இருப்பேன். ஜாலியா பேசி சிரிச்சிகிட்டு போவோம். அப்பப்போ சிரிச்சி ஓரக்கண்ணால பொத்தாம் பொதுவா எங்க மூனு பேரயுமே பார்க்கும்.

யார பாக்குதுன்னு வந்த சண்டையில அவனுங்களுக்குள்ள ஃபிரண்ட்ஷிப்பே ஸ்பாயில் ஆகற மாதிரி ஆயிடுச்சி. கடைசியில நாட்டாமை ரேஞ்சில நாம தலையிட்டு, ’அந்த பொண்ணையே கேட்டிடுவோம், ஒங்க ரெண்டு பேர்ல யார சொல்லுதோ அவனுக்கு இன்னொருத்தன் விட்டுக்கொடுத்துடனும், தங்கச்சியா ஏத்துகிட்டு’ ன்னு சொல்ல, டீலிங் பிடிச்சதால ஒத்துகிட்டானுங்க.

அதுகூட படிக்கிற ஒருத்தன் ராஜான்னு பேரு, நம்ம கேங்ல பிட்டாயிட்டான். அண்ணே அண்ணேன்னு ரொம்ப பாசமா இருப்பான். அந்த பொண்ணும் அவனும் ஒன்னாத்தான் இறங்கி போவாங்க. எங்ககூட அவன் க்ளோசா இருக்கிறத பாத்துட்டு அந்த பொண்ணும் அவன்கிட்ட ரொம்ப நல்லா பேசுதுன்னு சொல்லுவான்.

வழக்கம்போல ரெண்டு வாரம் போச்சு, அந்த பொண்ண தனியே பாக்குற சந்தர்ப்பம் கிடைச்சது. செவ்வாக்கிழமன்னிக்கு ராஜா மூலமா வெள்ளிக் கிழமை காலையில பிராக்டிகல முடிச்சிட்டு மதியம் பெரம்பலூருக்கு இதயத்தை திருடாதே படத்துக்கு கிளாஸ்மேட்டுங்களோட வர்றதா தகவல் வந்துச்சி.

அடுத்தநாள் நாலு டிக்கெட் வாங்கி வெக்க சொல்லி இருபது ரூபா பணமும் மறுத்தாலும் கண்டிப்பா கொடுத்தே ஆகனும்னு சொன்னதா ராஜா சொல்லி கையில கொடுத்தான். கொடுத்துட்டதா சொல்லிடுன்னு அவன செலவுக்கு வெச்சிக்க சொல்லிட்டோம்.

தியேட்டர்ல கண்டிப்பா ஃபுல் ஆகாதுங்கறது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் சரி நம்மள பாக்கறதுக்கு அதுவும் பிரியப்படுதுன்னு முடிவு பண்ணிட்டோம்.

ரெண்டு பேரும் பயங்கர எதிர்பார்ப்போட இருந்தானுங்க. அந்த சமயமும் வந்துச்சி. அதுங்க ஃபிரண்ட்ஸ் நாலு பேர், நாங்க மூனு பேர் சந்திச்சிகிட்டோம். தியேட்டர்ல படம் போயிகிட்டிருந்தது.

இடைவேளை. ’எப்பா,  ஏதோ அண்ணன் கிட்ட பேசனும்னு சொன்னியே நாங்க வெளியே போறோம் பேசிக்குங்க’ன்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சிங்க. நம்மாளுங்களும் கேட்டு முடிவு சொல்லுன்னு சைகையில சொல்லிட்டு வெளிய போயிட்டானுங்க.

மெதுவா பேச ஆரம்பிச்சேன்.  ’ரொம்ப புழுக்கமா இருக்குல்ல’.

’ஆமாம், எங்க வீட்டுல பிரச்சினை இல்ல, சரி உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?’ ன்னு பட்டுனு கேட்டுச்சி.

பகீர்னு ’என்னது’ ன்னு கேக்க,

‘ஆமாங்க, உங்கள ரொம்ப புடிச்சிருக்கு, பயங்கரமா பேசறீங்க, கலகலப்பா இருக்குறீங்க’ன்னுச்சி.

வெலவெலத்துப்போயி, ‘அய்யோ இல்லங்க, நான் ஏற்கனவே மாமா பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன், என் ஃபிரண்ட்சுங்கதா உங்களை லவ் பண்றாங்க, நானும் அவங்கள்ல ஒருத்தனத்தான் லவ் பண்றீங்கன்னு நினைச்சி கேக்க வந்தேன்’ ன்னு சொல்ல,

கேவி கேவி அழ ஆரம்பிச்சிடுச்சி, ‘என்ன அவ்வளவு சீப்பா நினைச்சிட்டீங்களா’ ன்னு.

அப்புறம் என்ன, ரெண்டு பிரண்ட்ஷிப் அன்னியோட காலி. அந்த பொண்ணும் அந்த பஸ்ஸில வர்றதுல்ல. ஹாஸ்டல் போயிட்டேன்.

இதை தொடர அழைப்பது நால்வரை.

1. இளவல் பாலாசி.
2. மங்குனி அமைச்சர்.
3. வெளியூர்க்காரன்.
4. சகா கார்க்கி

மக்கா, கலக்குங்க உங்க பேருந்தில் காதலை!

44 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

ரை ரைட்:)

Anonymous said...

பாஸ்,
ரொம்ப நல்லா இருக்கு....

//கேவி கேவி அழ ஆரம்பிச்சிடுச்சி. ‘என்ன அவ்வளவு சீப்பா நினைச்சிட்டீங்களா’ன்னு. //

பாத்து பாஸ், உங்க நண்பர்கள் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்க ...

இராகவன் நைஜிரியா said...

டபுள் ரைட்டே........

இராகவன் நைஜிரியா said...

// டே ஸ்காலரா இருந்த சமயத்தில //

ஆணாக இருந்தால் டே ஸ்காலார்...

அதுவே பெண்ணாக இருந்தால்?

அளவில்லா சந்தேகத்துடன்

இராகவன் நைஜிரியா said...

// தினமும் சரியா எட்டு மணிக்கு வர தீரன் சின்னமலை பஸ்ஸுதான் நம்ம ரெகுலர் பஸ். //

ஓ சரியான நேரத்துக்கு வரும் என்பதால் ரெகுலர் பஸ்... இல்லாட்டி இர்ரெகுலர் பஸ் என்பீங்களோ?

மறுபடியும் அளவில்லா சந்தேகத்துடன்

இராகவன் நைஜிரியா said...

// நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால //

எனக்கு தெரிஞ்சு எல்லாம் மனுஷங்களுக்கும் ஒரு தலைதாங்க

Unknown said...

பிரபாகரண்ணா இப்பிடி அந்தப் பொண்ணுக்கு பல்பு குடுத்துட்டீங்களே????

பெண் பாவம் பொல்லாதது

Unknown said...

இராகவன் சார்.. கடி தாங்கலை... :))

கண்ணகி said...

உங்க நேர்மை.. எனக்குப் புடிச்சுருக்கு...

மங்குனி அமைச்சர் said...

//நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல.//

நான் அப்பவே கன்பாம் பண்ணிட்டேன் அந்த ரெண்டு பசங்களுக்கும் ஆப்பு தான்னு, அது சரி , "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு" நம்மளையும் கோத்து விட்டிக நல்லாருங்க

settaikkaran said...

போலாம்...ரைட்டு!! :-))))

Menaga Sathia said...

very interesting...

sathishsangkavi.blogspot.com said...

அழைப்பை ஏற்று அழகாக உங்கள் அனுபவத்தை எழுதிதற்கு நன்றி நண்பா...

பாவம் அந்த பொண்ணு.... ஆமா உங்க பழைய நண்பர்கள் இப்ப பேசறாங்களா?

Anonymous said...

ஆத்தூர்காரன்.
அண்ணா இதே போல என் நண்பர்களுக்கிடயேயும் நடந்திருக்கு.சில வருட மன வருத்தத்திற்கு பின் மீண்டும் நண்பர்கள் ஒன்ராகிவிட்டனர்

Prathap Kumar S. said...

அண்ணே... எல்லாம் ஓகே...கடைசில மாமாபொண்ணுக்கிட்டயாவது மேட்டரை போட்டு உடைச்சீங்களா இல்லயா-???
எங்க.... உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை...அதுக்கெல்லாம் கட்ஸ் வேணும்ணே...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சரி லொள்ளுங்க பிரபாகர்.. அந்த வயசுல சக்க லந்தா சுத்தீட்டு இருந்தீங்க போல..??

நல்லா இருந்தது!!

Veliyoorkaran said...

என்ன அண்ணேன் என்னைய போய் உஷார் பண்ற தொடர் பதிவுக்கு கூப்ட்டுடீங்க..எனக்கு பிகருங்கள பத்தி அவளவ எழுத வராதுன்னேன்..வேண்ணா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்,அமெரிக்க பொருளாதார சீர்கேடு, உகாண்டா ராணுவ புரட்சி இந்த மாதிரி ஈசியான சப்ஜெக்டா குடுங்கன்னேன்ன்..பத்து நிமிசத்துல எழுதி பார்சல் பண்ணி அனுப்பறேன்..!! :)

Chitra said...

இது நிஜ கதையா இல்ல, அந்த சினிமாவில வந்த காட்சியா? ஹி,ஹி,ஹி..... நல்லா இருக்குங்க.

கலகலப்ரியா said...

avvvv... nallaarukkunnaa katha...

புலவன் புலிகேசி said...

அநியாயமா அந்தப் பொண்ணை ஏமாத்திட்டீனங்களே தல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

Anonymous said...

kadhai nalla irukunga.

சத்ரியன் said...

பிரபாகர்,

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ர்ர்ரைட்டு....!. அதுத்த ஸ்ட்டாப்புல நிப்பாட்டுங்க.

Anonymous said...

அந்தப்பொண்ணுக்கு ஒருதலை ராகமா :)

க.பாலாசி said...

அடடா.... அழகா சொல்லியிருக்கீங்க... நமக்கும் இந்தமாதிரி அனுபவமெல்லாம் இருக்கு.... என்னையும் அழைத்தமைக்கு நன்றி அண்ணா....

மாதேவி said...

கதை நல்லா இருக்கு.

பனித்துளி சங்கர் said...

ஆஹா கலக்கல் நண்பரே . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !

பனித்துளி சங்கர் said...

//நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல.//

என்ன மாமா பொண்ணு பக்கத்தில இருக்காங்களோ ?

ரோஸ்விக் said...

அண்ணே! மாமா பொண்ணு தான் காரணமா??

இல்ல

நம்ம பிகரு நமக்கு...
அட்டு பிகரு அடுத்தவனுக்கு -ங்கிற லாஜிக்கல எஸ்கேப்பு ஆகிடீங்களா?

பாவம்ணே அந்த புள்ள... :-(

Menaga Sathia said...

pls see this link
http://sashiga.blogspot.com/2010/03/10.html

மங்குனி அமைச்சர் said...

சார் மேட்டர் ரெடி , வந்து கருத்து சொல்லுங்கோ

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
ரை ரைட்:)
//
நன்றிங்கய்யா!

//
Karuppu said...
பாஸ்,
ரொம்ப நல்லா இருக்கு....

//கேவி கேவி அழ ஆரம்பிச்சிடுச்சி. ‘என்ன அவ்வளவு சீப்பா நினைச்சிட்டீங்களா’ன்னு. //

பாத்து பாஸ், உங்க நண்பர்கள் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப போறாங்க ...
//
அதெல்லாம் பழைய கதை... நடந்து இருவது வருஷமாச்சு....

//
இராகவன் நைஜிரியா said...
டபுள் ரைட்டே........
//
நன்றிங்கண்ணே

பிரபாகர் said...

/
இராகவன் நைஜிரியா said...
// தினமும் சரியா எட்டு மணிக்கு வர தீரன் சின்னமலை பஸ்ஸுதான் நம்ம ரெகுலர் பஸ். //

ஓ சரியான நேரத்துக்கு வரும் என்பதால் ரெகுலர் பஸ்... இல்லாட்டி இர்ரெகுலர் பஸ் என்பீங்களோ?

மறுபடியும் அளவில்லா சந்தேகத்துடன்
//
அண்ணே.... முடியல....

//
இராகவன் நைஜிரியா said...
// நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால //

எனக்கு தெரிஞ்சு எல்லாம் மனுஷங்களுக்கும் ஒரு தலைதாங்க
//
ஆஹா, சரி ஃபுலோவில இருக்கீரு போலிருக்கு.....

பிரபாகர் said...

//
முகிலன் said...
இராகவன் சார்.. கடி தாங்கலை... :))
//
???

//
கண்ணகி said...
உங்க நேர்மை.. எனக்குப் புடிச்சுருக்கு...
//
நன்றிங்க சகோதரி...

//
மங்குனி அமைச்சர் said...
//நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல.//

நான் அப்பவே கன்பாம் பண்ணிட்டேன் அந்த ரெண்டு பசங்களுக்கும் ஆப்பு தான்னு, அது சரி , "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு" நம்மளையும் கோத்து விட்டிக நல்லாருங்க
//
கலக்குங்க மங்குனி!

பிரபாகர் said...

//
இராகவன் நைஜிரியா said...// டே ஸ்காலரா இருந்த சமயத்தில //

ஆணாக இருந்தால் டே ஸ்காலார்...

அதுவே பெண்ணாக இருந்தால்?

அளவில்லா சந்தேகத்துடன்
//
கொஞ்சம் கொழப்பமாதாயிருக்கு..

/
//
முகிலன் said...
பிரபாகரண்ணா இப்பிடி அந்தப் பொண்ணுக்கு பல்பு குடுத்துட்டீங்களே????

பெண் பாவம் பொல்லாதது
//
கடைசியில பல்பு வாங்கினது நாமதான்....

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
very interesting...
//
நன்றி சகோதரி...

//
Sangkavi said...
அழைப்பை ஏற்று அழகாக உங்கள் அனுபவத்தை எழுதிதற்கு நன்றி நண்பா...

பாவம் அந்த பொண்ணு.... ஆமா உங்க பழைய நண்பர்கள் இப்ப பேசறாங்களா?
//
அன்றே கடைசி....

//
Anonymous said...
ஆத்தூர்காரன்.
அண்ணா இதே போல என் நண்பர்களுக்கிடயேயும் நடந்திருக்கு.சில வருட மன வருத்தத்திற்கு பின் மீண்டும் நண்பர்கள் ஒன்ராகிவிட்டனர்
//
நன்றி ஜித்...

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
போலாம்...ரைட்டு!! :-))))
//
நன்றி நண்பா!

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே... எல்லாம் ஓகே...கடைசில மாமாபொண்ணுக்கிட்டயாவது மேட்டரை போட்டு உடைச்சீங்களா இல்லயா-???
எங்க.... உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை...அதுக்கெல்லாம் கட்ஸ் வேணும்ணே...
//
நாமதான் பல்பு வாங்கினோம்...

//
ச.செந்தில்வேலன் said...
சரி லொள்ளுங்க பிரபாகர்.. அந்த வயசுல சக்க லந்தா சுத்தீட்டு இருந்தீங்க போல..??

நல்லா இருந்தது!!
//
நன்றி செந்தில்...

பிரபாகர் said...

//
Veliyoorkaran said...
என்ன அண்ணேன் என்னைய போய் உஷார் பண்ற தொடர் பதிவுக்கு கூப்ட்டுடீங்க..எனக்கு பிகருங்கள பத்தி அவளவ எழுத வராதுன்னேன்..வேண்ணா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்,அமெரிக்க பொருளாதார சீர்கேடு, உகாண்டா ராணுவ புரட்சி இந்த மாதிரி ஈசியான சப்ஜெக்டா குடுங்கன்னேன்ன்..பத்து நிமிசத்துல எழுதி பார்சல் பண்ணி அனுப்பறேன்..!! :)
//
கலக்குங்க தம்பி.... விதவிதமா எழுதித்தான் அசத்துறீங்களே!

//
Chitra said...
இது நிஜ கதையா இல்ல, அந்த சினிமாவில வந்த காட்சியா? ஹி,ஹி,ஹி..... நல்லா இருக்குங்க.
//
அக்மார்க் உண்மைங்க...

//
கலகலப்ரியா said...
avvvv... nallaarukkunnaa katha...
//
கதையல்ல நிஜம்...

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
அநியாயமா அந்தப் பொண்ணை ஏமாத்திட்டீனங்களே தல...
//
உண்மைய சொன்னேன்...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா இருக்கு
//
நன்றிங்கய்யா!

//
Sachanaa said...
kadhai nalla irukunga.
//
நடந்த உண்மைங்க....

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
பிரபாகர்,

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ர்ர்ரைட்டு....!. அதுத்த ஸ்ட்டாப்புல நிப்பாட்டுங்க.
//
நன்றிங்க நண்பா!

//
சின்ன அம்மிணி said...
அந்தப்பொண்ணுக்கு ஒருதலை ராகமா :)
//
ஆமாங்க அம்மிணி..

//
க.பாலாசி said...
அடடா.... அழகா சொல்லியிருக்கீங்க... நமக்கும் இந்தமாதிரி அனுபவமெல்லாம் இருக்கு.... என்னையும் அழைத்தமைக்கு நன்றி அண்ணா....
//
சீக்கிரம் எழுதுங்க இளவல்...

பிரபாகர் said...

//
மாதேவி said...
கதை நல்லா இருக்கு.
//
கதை இல்லைங்க உண்மை...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஆஹா கலக்கல் நண்பரே . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !
//
நன்றி சங்கர்...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//நாம ஏற்கனவே மாமா பொண்ண ஒருதலையா பாத்துட்டிருந்ததால எந்த பொண்ணுங்க மேலயும் ஆர்வமில்ல.//

என்ன மாமா பொண்ணு பக்கத்தில இருக்காங்களோ ?
//
இல்லைங்க, அது ஒரு பெரிய கதை..

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
அண்ணே! மாமா பொண்ணு தான் காரணமா??

இல்ல

நம்ம பிகரு நமக்கு...
அட்டு பிகரு அடுத்தவனுக்கு -ங்கிற லாஜிக்கல எஸ்கேப்பு ஆகிடீங்களா?

பாவம்ணே அந்த புள்ள... :-(
//
என்ன பண்றது, விதிய மத்த முடியுமா?

//
Mrs.Menagasathia said...
pls see this link
http://sashiga.blogspot.com/2010/03/10.html
//
கண்டிப்பா சகோதரி... எழுதறேன்...

//
மங்குனி அமைச்சர் said...
சார் மேட்டர் ரெடி , வந்து கருத்து சொல்லுங்கோ
//
எல்லாம் ஆச்சு....

shanuk2305 said...

nice expriance .But in perambalur theaters very worst.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அழகான பொண்ணாம், ஆனா.. நம்பிட்டோம்.எல்லாருமே இப்புடி தாங்க கதை சொல்றாங்க. அத விடுங்க! மாமன் மகளின் கரம் பிடித்தீர்களா அத சொல்லுங்க!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB