பதிவர்கள் பட்டிமன்றம்...நிறைவு...

|

(படிக்காதவங்க முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நாளை படிச்சிட்டு வந்துடுங்களேன்)

எல்லாத்துக்கும் மறுபடியும் இந்த பொன்னாத்தாளோட வணக்கம். எல்லாரையும் தலைப்பு கொடுத்து பேச சொன்னா அவங்க மனசில இருக்கிற உண்மைங்களை அப்படியே கொட்டித் தீத்திருக்கீங்க.

(ரொம்ப சொல்லிட்டோமோ - கதிர்)

மொதல்ல பேசின மணிஜி தன்னை ஒரு ரீமா ரசிகன்னு ரொம்ப அருமையா நிலைநாட்டினாரு. தண்டோராங்கற பேர ஏன் மணிஜீன்னு மாத்துனாரு? ஜீ-க்கு பதிலா ரீமாவப்போட்டு மணிரீமான்னு வெச்சிருக்கலாம்ங்கறது நம்மளோட அபிப்ராயம். இவர மாதிரி இன்னும் நிறைய பேரு இருந்தாத்தான் செல்வராகவன் மாதிரி ஆளுங்க ஓடி ஒளிஞ்சிகிட்டு இருப்பாங்க, நம்மள மாதிரி பொம்பளங்க ரொம்ப பாதுகாப்பா இருக்கலாம்.

(தாய்க்குலத்த அப்படியே நீ கவர்ந்திட்டப்பா - கேபிள்)

அப்புறம் நம்ம தைரியத்த அம்மாவோட ஒப்பிட்டாரு. அதெல்லாம் சும்மா அதுக்கும் மேலங்கறத தெளிவா அவருக்கு சொல்லிக்கறேன்.

அடுத்து அத வாதிட்டு பேசுன எங்கண்ணன், ப்ளாஷ்பேக் சொல்றேன்னு காதலப்பத்தி சும்மா கழட்டியெடுத்தாரு, அப்போ கூட்டத்துல இருந்து ஒரு பெரிய ரம்பத்த காமிச்சத நாங்க எல்லாம் பாத்தோம், அவரு மட்டும் கவனிச்சும் கவனிக்காத மாதிரி காரியத்துல கண்ணாயிருந்தாரு. அவரு வாழ்க்கையில பார்த்த காதலோட சினிமா காதலை எதுக்கு சின்க் பண்ணினாருன்னு அவருக்கும் புரியல, கேட்ட எங்களுக்கும் புரியல.

இருந்தாலும் அவரோட உண்மையான, பாசமான, உருக்கமான.... ச்சை, அவரப்பத்தி பேசும்போதே நானும் அவரமாதிரியே ஆயிட்டேன்.... வாதத்துல நியாயம் இல்லாம இல்ல.

(தோ பார்றா, நல்லா கவுத்து விட்டுட்டு... பாசத்த - வானம்பாடிகள்)

அடுத்து பேசுன யூத் கேபிளு சும்மா சில்லுனு ஆரம்பிச்சி சினிமாவ அவரோட கொத்துபரோட்டாவோட கம்பேர் பண்ணி சொல்லி சும்மா பூந்து விளையாடுனாரு. பசியோட இருந்திடலாம், படம் பார்க்காம இருக்க முடியுமான்னு ஒரு மாபெரும் தத்துவத்த எடுத்து வெச்சி எல்லாரையும் மூர்ச்சையாக வெச்சாரு.

(நல்லாத்தான் கவனிச்சிருக்கு தங்கச்சி - பிரபா)

சினிமாவில இன்னும் சொல்லப்படாத காதல் இருக்குங்ற ஒரு பயங்கரமான ஒரு மிரட்டல் விட்டு நிறைய பேர தூக்கமில்லாம செஞ்சிருக்காரு. அடிக்கிற பெல் ஓசையிலிருந்து எல்லாத்தையும் சினிமா பார்வையில பார்த்து புல்லரிக்க வெச்சி, எதிரணியினருக்கு சவாலா பேசினாரு.

(நம்ம படத்துல சொல்லிடனும் கேபிள் - மணிஜீ)

அடுத்து பேச வந்த சேட்ட நடுவரையே நல்லா கலாய்ச்சி ஆரம்பிச்சி, மொத மேடைன்னும் பாக்காம சும்ம தூள் கிளப்பி, ஸ்ரேயா நடிச்சது மொத்தம் பதிமூனு படம், அத பதிமூனு தபா பார்த்ததா சொன்னாரு. பதினாலாவது படம் வந்தா மொத்தம் இருவத்தேழு தடவ பார்ப்பாருங்கற தகவல பூடகமா சொன்னாரு.

(பிரபாவுக்கு இது கண்டிப்பா புரியாது - வானம்பாடி)

(அய்யா எனக்கு புரிஞ்சது தெரியாம எங்க தெரியப்போவுதுன்னு நினைப்பாரு - பிரபா)

சினிமா பாக்க ஆகுற செலவு, டாஸ்மார்க்ல பீர் விலை, அரசாங்கத்துக்கு எவ்வளவு கட்டிங் போகுதுங்கற தகவல் எல்லாத்தையும் சொல்லி, சினிமாவால அரசுக்கு கொஞ்சமும் லாபமில்ல,சீரழிக்குதுன்னு செலவு பண்ற ஆவேசத்துல ஆணித்தரமா அடிச்சி சொன்னாரு. பீர் குடிச்சா உடம்பு போடும்னுதான் கேள்விப்பட்டிருக்கேன், இவரு ஏன் இப்புடி காத்தா இருக்காரு...

(பீர் மட்டும் தானே சாப்புடறேன், சாப்பாடு சாப்டாதானே உடம்பு ஏறும் - சேட்டை)

அடுத்து பாலா சார், அண்ணா ஸ்னேக் பிரபா பேசுனதுக்கு மண்புழுவ பாம்புன்னு சொன்னத சொல்லி பல்பு கொடுத்ததா சொல்லிட்டு, டாஸ்மார்க் பீர்லருந்து துல்லியமா அரசாங்கத்துக்கு எவ்ளோ போகுது, சினிமாவினால ஒரு நயாப் பைசாக்கூட போறதில்லன்னு சொன்னதுக்கு அரசியலே சினிமான்னு ஒரு மாபெரும் உண்மையை போட்டு உடைச்சி எல்லாரு வாயயும் அடைச்சாரு.

(ஆட்டோ வராம இருந்த சரி - மணிஜீ)

கடைசியா பேசுன நம்ம கதிரு, பத்து வினாடிகளுக்கு அப்புறம் மவுனத்த கடியவிட்டு சும்மா பரோட்டா எபஃக்ட் பத்தி சொல்லி, கண்தானத்த பத்தி
சினிமாவுலயும் சொல்லததால சினிமா சமுதாயத்தோட சீர்கேடுன்னு ஆணித்தரமா சொன்னாரு. நல்ல வேளை இங்க குடிக்க வெச்சிருக்கிற மினரல் வாட்டர்ல ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லங்கறத கவனிக்காம விட்டுட்டாரு.

(அடுத்த இடுகையில போட்டுடுவோம் - கதிர்)

ஆக கடைசியா ரெண்டு தரப்பு வாதத்தையும் வெச்சி பார்க்கும்போது நம்மோட தீர்ப்பு என்னான்னு சொல்ற நேரம் வந்துடுச்சி. சினிமா சீரழிக்குதுன்னு கேவலமா சொன்னவங்க, என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஒரு வருஷத்துக்கு சினிமாவா பாத்துகிட்டிருக்கனும். சினிமா சீர்படுத்துதுன்னு பெருமையா சொன்னவங்க பொத்திகிட்டு சினிமா பக்கமே போவாம அவங்க அவங்க வேலய ஒழுங்கா பாக்கனும். ஒரு வருஷம் கழிச்சி ஏண்டா இப்படி பேசனும்னு நீங்க எல்லாரும் வருந்தி இதே தலைப்புல திரும்பவும் இந்த நாட்டாமை முன்னால பேசனும்.

(கேபிள், நம்ம தொழிலே இதுதானே - மணிஜீ)

இத ஒழுங்கா பாலோ பண்ணாதவங்களோட பதிவுங்கள்ல பின்முன் நவீனத்துவ கமெண்ட்டுகளா தொடர்ந்து போடப்படும். அவங்கள பாராட்டி பின்னூட்டம் போடறவங்களுக்கு சைடு, பக்கவாட்டு நவீனத்துவ பின்னூட்டங்கள்னும் நிறையவே போடப்படும். இதுதான் இந்த 'நெட்’டாமயோட தீர்ப்புங்கோ!

ஒரு வழியா முற்றும்....

(எல்லாத்தயும் படிச்ச உங்களுக்கு என் நன்றி. எழுத ஊக்குவித்த என் ஆசானுக்கு நன்றி...)

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சங்கர் said...

//எழுத ஊக்குவித்த என் ஆசானுக்கு நன்றி...)//

அவர தானே தேடிக்கிட்டிருகோம், :)))

ஈரோடு கதிர் said...

//ஒரு வழியா முற்றும்.... //

வாவ்.....
எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா!!!?

vasu balaji said...

அதான. அட்ரஸ் குடுங்க ப்ரபா:))

ஈரோடு கதிர் said...

//சங்கர் said...
அவர தானே தேடிக்கிட்டிருகோம் :)))//

பாவம்.... அவர விட்ருவோம்!!!!

vasu balaji said...

//சங்கர் said...
அவர தானே தேடிக்கிட்டிருகோம் :)))//

பாவம்.... அவர விட்ருவோம்!!!!

நன்றி நன்றி!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அதான. அட்ரஸ் குடுங்க ப்ரபா:))
//

தம்பி கேட்டதுக்கு அப்புறமும் லின்க் கொடுக்காம இருப்பமா என்ன?

பிரபாகர் said...

//
சங்கர் said...
//எழுத ஊக்குவித்த என் ஆசானுக்கு நன்றி...)//

அவர தானே தேடிக்கிட்டிருகோம், :)))
//
ஆசி வாங்கத் தானே தம்பி?

பிரபாகர் said...

//ஈரோடு கதிர் said...
//ஒரு வழியா முற்றும்.... //

வாவ்.....
எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா!!!?
//
அவ்ளோ மோசவாவா இருக்குது (என்னத்த கண்ணையா ஸ்டைல்ல படிக்கவும்....)

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
//சங்கர் said...
அவர தானே தேடிக்கிட்டிருகோம் :)))//

பாவம்.... அவர விட்ருவோம்!!!!

நன்றி நன்றி!
//
நன்றிங்கய்யா!

vasu balaji said...

நல்லாருக்கு ப்ரபா:))

settaikkaran said...

மொத்தத்துலே சேட்டைக்காரனை பீரானந்தாவாக்கிட்டீங்க! :-(((((

நாலு பேரைச் சிரிக்க வைக்கணுமுன்னா எதுவுமே தப்பில்லே! கலக்கிட்டீங்க போங்க!!!

இராகவன் நைஜிரியா said...

// பின்முன் நவீனத்துவ கமெண்ட்டுகளா தொடர்ந்து போடப்படும்.//

நானும் நிறைய பின்னூட்டம் போடுவேனுங்க..

சில சாம்பிள்கள்
அருமை
சூப்பர்
பிரமாதம்
ஆஹா
ஓஹோ..

இந்த தொடர் இடுகைக்கு மேலே சொன்ன பின்னூட்டங்கள் எல்லாமே பொருந்தும்.

ரோஸ்விக் said...

எல்லாரையும் போட்டு கலாய்ச்சு முடிச்சிட்டிங்களா?? நல்லா இருந்தது. பொன்னாத்தா தீர்ப்பு, கோர்ட் தீர்ப்பு மாதிரி இருந்தது. :-)

sathishsangkavi.blogspot.com said...

என்ன நண்பா....

அதுக்குள்ள முடிச்சுட்டீங்க... ஆனா இப்பதிவுகளை படித்து படித்து சிரித்தேன்.....

அடுத்த சேட்டை எப்ப.....

துபாய் ராஜா said...

கலகல கலக்கல் பிரபா....

கலகலப்ரியா said...

=)).. கலக்கல்ஸ்..

||(பிரபாவுக்கு இது கண்டிப்பா புரியாது - வானம்பாடி)

(அய்யா எனக்கு புரிஞ்சது தெரியாம எங்க தெரியப்போவுதுன்னு நினைப்பாரு - பிரபா)||

டாப்பு அண்ணே... இப்புடிதான் நிறையபேரு நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க... நச்சுன்னு ஒரு பஞ்ச்..

Chitra said...

கலக்கிட்டீங்க.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு ப்ரபா:))
//
நன்றிங்கய்யா...

//
சேட்டைக்காரன் said...
மொத்தத்துலே சேட்டைக்காரனை பீரானந்தாவாக்கிட்டீங்க! :-(((((

நாலு பேரைச் சிரிக்க வைக்கணுமுன்னா எதுவுமே தப்பில்லே! கலக்கிட்டீங்க போங்க!!!
//
நன்றி சேட்டை நண்பா...

//
இராகவன் நைஜிரியா said...
// பின்முன் நவீனத்துவ கமெண்ட்டுகளா தொடர்ந்து போடப்படும்.//

நானும் நிறைய பின்னூட்டம் போடுவேனுங்க..

சில சாம்பிள்கள்
அருமை
சூப்பர்
பிரமாதம்
ஆஹா
ஓஹோ..

இந்த தொடர் இடுகைக்கு மேலே சொன்ன பின்னூட்டங்கள் எல்லாமே பொருந்தும்.
//
ரொம்ப நன்றிங்கண்ணா...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
எல்லாரையும் போட்டு கலாய்ச்சு முடிச்சிட்டிங்களா?? நல்லா இருந்தது. பொன்னாத்தா தீர்ப்பு, கோர்ட் தீர்ப்பு மாதிரி இருந்தது. :-)
//
நன்றி ரோஸ்விக்...

//
Sangkavi said...
என்ன நண்பா....

அதுக்குள்ள முடிச்சுட்டீங்க... ஆனா இப்பதிவுகளை படித்து படித்து சிரித்தேன்.....

அடுத்த சேட்டை எப்ப.....
//
வெகு விரைவில்... அன்புக்கு நன்றி நண்பா...

//
துபாய் ராஜா said...
கலகல கலக்கல் பிரபா....
//
நன்றி ராஜா...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
=)).. கலக்கல்ஸ்..

||(பிரபாவுக்கு இது கண்டிப்பா புரியாது - வானம்பாடி)

(அய்யா எனக்கு புரிஞ்சது தெரியாம எங்க தெரியப்போவுதுன்னு நினைப்பாரு - பிரபா)||

டாப்பு அண்ணே... இப்புடிதான் நிறையபேரு நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க... நச்சுன்னு ஒரு பஞ்ச்..
//
நன்றி சகோதரி...

//
Chitra said...
கலக்கிட்டீங்க.
//
நன்றி சித்ரா...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB