பதிவர்கள் பட்டிமன்றம்..முதல் நாள்...

|

(நடுவர் பொன்னாத்தாள் மெலிதாய் சிரித்தபடி தனது உரையை ஆரம்பிக்கிறார்)

’எல்லாத்துக்கும் இந்த பொன்னாத்தாளோட வணக்கம். இன்னிக்கு நாம இங்க பேசப்போறது இந்த சமுதாயத்துக்கு ஒரு எழவுக்கும் ஒதவாத ஒரு முக்கியமான ஒரு விஷயம். சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறதுன்னு பேசறதுக்கு ஒரு அணியும், சீர்படுத்துகிறதுன்னு பேசறதுக்கு இன்னொரு அணியும் வந்திருக்காங்க.

(ஆரம்பத்துலயே உண்மைய சொல்லப்படாதும்மா - வானம்பாடிகள்)

சீர்படுத்துதுங்கற தலைப்பில பேச என் பீச்சாங்கை பக்கமா தலைவரா தலையில கைய வெச்சிகிட்டு ஃபேனோட போராடிகிட்டிருக்கிற நம்ம நைனா வானம்பாடிகள், எல்லாத்தையும் க்ளோசா மானிட்டர் பண்ணிகிட்டிருக்கிற டமாரம் அதாங்க நம்ம தண்டோராங்கற மணிஜி, கடைசியா சிங்கை சென்று உள்ளங்கள கவர்ந்து மெரட்டி, மெரண்டு போயி வந்திருக்கிற கனெக்சன் பார்ட்டி, அதாங்க கேபிளு.

(சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்த மணிஜி டக்கென நடுவரை நோக்குகிறார்)

சீரழிக்கிறதுங்கற அணிக்காரங்க என் சோத்தாங்கை பக்கமா கும்பலா உக்காந்திருக்காங்க. தலைவரா, மௌனமா வார்த்தைங்கள கசியவிட தயாரா நம்ம கதிரு, பக்கத்துல மார்க்கண்டேயன்னு மார்த்தட்டிகிட்டிருக்கிற ஸ்நேக் பிரபான்னு அறியப்படற எங்கண்ணன், மெதுவா பம்மிகிட்டு சேட்ட பண்ணலாம்னு காத்துகிட்டிருக்கிற நம்ம தம்பி சேட்டைக்காரன்.

(மணிஜீயைப் பார்த்து)

சீர்படுத்துதுங்கற தலைப்புல பேசறதுக்கு மொதல்ல நம்ம மணீஜிய... கூப்புடறேன். வாங்க, வந்து டமாரமடிச்சி கலக்குங்க...’

(மைக்கை லாவகமாய் பிடித்து கம்பீரமாய்...)

’புரட்சித்தலைவியை போன்ற தைரியம் கொண்ட பொன்னாத்தா அவர்களே, சினிமா சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறது என்பது ஆயிரத்தில் ஒருவனுக்கல்ல ஆயிரம்பேருக்கும் தெரியும். சினிமாவை எனிமாவாகப் பார்க்கும் எதிரணியினர் ரீமா சென்னை வைத்து கலக்கலாய் படம் எடுத்து இன்றளவும் என்னை கண்டு இரண்டு பெல்ட் போட்டு பயந்து அலையும் செல்வாவின் ஆயிரத்தில் ஒருவனைப் பார்க்கட்டும், தங்களின் முடிவினை மாற்றிக் கொள்வார்கள்.

(இன்னும் ரீமாவ மறக்கல போலிருக்கு - கேபிள்)

கலைஞரைத்தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அழகிரி சொன்னதிலிருந்தே தெரியவில்லை, சினிமா சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறதென்று? இதோ எதிரணியில் இருக்கும் பிரபா, அண்ணா சினிமா கதை சொல்லுங்கள் என அடிக்கடி கெஞ்சி நச்சரிக்கும்போதே தெரியவில்லை சமுதாயத்தை சீர்ப்படுத்துகிறதென்று? ரீமாவை வைத்து இன்னும் நிறைய படங்களை எடுக்கவேண்டும், சமுதாயம் சீர்படும் என சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்... வணக்கம்...’

(என்னடா இன்னும் அரசியல் வரலையேன்னு பார்த்தேன் - வானம்பாடிகள்)

’ஆஹா, ரீமாதாசன் ரீங்காரமிட்டு ரவுத்திரம் பழகி, சினிமாதான் சமுதாயத்த சீர்திருத்துதுன்னு கலக்கலா சொல்லிட்டு போயிருக்காரு. கலங்கி போயிருக்கிற, பேஸ்தடிச்சிருக்கிற என் அண்ணன் என்ன சொல்லப்போகுதோ, ம்... பாக்கலாம். வாங்கண்ணா, வந்து எதாச்சும் உங்க அனுபவத்த கலந்து சொல்லுங்க’

(மெதுவாய் வந்து வானம்பாடிகள் பக்கம் பார்த்து தயங்கி பிரபாகர்)

’இந்த மாபெரும் அவையிலே நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் என் அன்பிற்கு அன்பான, பாசத்திற்கு பாசமான’

(அன்பு, பாசம் ரெண்டும் ஒன்னுதாண்டி...வானம்பாடிகள்)

’தங்கத்தின் தங்கம், மாதர் குல விளக்கு...’

(பொன்னாத்தாள் மெல்ல பல்லை கடித்து யாருக்கும் தெரியாதவாறு மெதுவாய் 'அய்யோ ஐஸ், போதும் மேட்டருக்கு வாங்க’ என சொல்ல)

’இருக்கும் இந்த இடத்தில் இருக்கும் ககலகலப்பு சினிமாவில் இருக்கிறதா? இல்லையே? அதனால்தான் சொல்கிறேன், சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது என்று. எனக்கு சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பெண்ணை காதலிக்கும்போது உயிருக்கு போராடும் இன்னுமொரு பெண்ணை தொட்டு தூக்கி காப்பாற்றாத தமிழ் மண்ணைச் சேர்ந்த இங்கு இப்போது வரும் படங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?

(இங்கயும் கொசுவர்த்தியா - வானம்பாடிகள், இன்னும் மூனு பேரு பேர சொல்லாம விட்டுடாப்ல - கதிர்)

பாத்தவுடன் காதல், பார்க்காமல் காதல், பஸ்ஸில் காதல், ரயிலில் காதல், ஒரே நேரத்தில் பல காதல் என சமுதாய சீரழிவே நடக்கவில்லையா?. இதைத்தான் நான் ரமேஷ் காதலிக்கும்போதும், மணி காதலிக்கும்போதும் சொன்னேன், கேட்கவில்லையே? இன்னும் பல உதாரணங்களை என் சிறு வயது நினைவுகளிலிருந்து எடுத்து சொல்ல..’

(மணியினை பொன்னாத்தாள் பலமாக அடிக்க)

நினைக்கும்போது என் அன்புக்கும் அன்பான... தங்கத்தின் தங்கமான...

(வெளிய வாடி உன்னை உண்டு இல்லைன்னு பண்றேன்னு கேபிள் சிக்னல் செய்ய, பயந்தவாறு) 

தங்கை மணியடித்து எனது உரையை முடித்துக்கொள்ள சொல்வதால், காதலை கொச்சைப்படுத்தும் இந்த சினிமா சமுதாயத்தை சீரழிக்கிறது என்பதை வலியுறுத்தி சொல்லி விடை பெறுகிறேன், வணக்கம்’.

’ஸ்... அப்பா.... மழை பேஞ்சி ஓஞ்ச மாதிரி எங்கண்ணன் ஒரு தாக்கு தாக்கிட்டதா நினைச்சிட்டு சொல்லிட்டு போயிருக்காப்ல. இவருக்கு என்ன நிதர்சனத்த சொல்லி இந்த இடத்த ஹாட் ஸ்பாட்டாக்குறாரு நம்ம கேபிள்னு பாப்போம்...

வாங்க கேபிள்ஜி...  நிறையா பொம்பளைங்க கேட்டுகிட்டிருக்கிறோம் அப்படிங்கறத மனசுல வெச்சிகிட்டு உங்க கருத்துக்கள  விட்டு விளாசுங்க...’

(அடுத்த பாகத்துல பாக்கலாம்...)

25 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

அடப்பாவி மக்கா. இப்புடி வேற ஆரம்பிச்சாச்சா:)) நடத்துங்க. மணிஜி சூப்பரு.

கலகலப்ரியா said...

ஆகா.... கெளம்பீட்டாய்ங்கையா கெளம்பீட்டாய்ங்க... இதுவும் தொடருதா... தொடரட்டும் அப்பு... நான் எஸ்கேப்பு...

இராகவன் நைஜிரியா said...

அப்படி போடு அருவாள...

prince said...

//’புரட்சித்தலைவியை போன்ற தைரியம் கொண்ட பொன்னாத்தா அவர்களே,// படத்தை பார்த்து நானே சொல்லனும்னு இருந்தேன் நீங்க முந்திக்கிட்டீங்க

புலவன் புலிகேசி said...

ரீமாவை ஆதரித்து பேசிய மணிஜி வாழ்க...

Unknown said...

பலா பட்டறை ஷங்கர் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிறேன்.. இது தொடர்பதிவு அல்ல அல்ல அல்ல

sathishsangkavi.blogspot.com said...

நண்பா ..... சூப்பர்ர்ர்ர்ர்.....

இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன்.............

Paleo God said...

முகிலன் said...
பலா பட்டறை ஷங்கர் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிறேன்.. இது தொடர்பதிவு அல்ல அல்ல அல்ல//

மிக்க நன்றி முகிலன்..:))

settaikkaran said...

ஆஹா! இதையும் ஆரம்பிச்சிட்டீங்களா....? கலக்கல்! புதுசு புதுசா யோசிக்கறீங்க...! நடத்துங்க...!!

Punnakku Moottai said...

//வாங்க கேபிள்ஜி... நிறையா பொம்பளைங்க கேட்டுகிட்டிருக்கிறோம் அப்படிங்கறத மனசுல வெச்சிகிட்டு உங்க கருத்துக்கள விட்டு விளாசுங்க...’//

பார்த்தா அப்படி தெரியலியே.

//பேஸ்தடிச்சிருக்கிற என் அண்ணன் //

அப்பிடின்னா என்னா?

(ஆ)ரம்பம் நல்லாத்தான் இருக்கு. பாப்போம் எப்பிடி போகுதுன்னு.

ஈரோடு கதிர் said...

பொன்னாத்தா...

டபுள் ஆக்ட்டா...

ம்ம்... கலக்குங்க

க.பாலாசி said...

ஆகா... இந்த பக்கமும்....கும்மளா... ரைட்டு நடத்துங்க அண்ணா.... கலக்கல்.....

Prathap Kumar S. said...

அண்ணே நீங்களுமா----? இது எங்கப்போய் முடியப்போகுதோ-- நடத்துங்க நடத்துங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆகா... இதுவும் கலக்கலா இருக்கே!! போகப் போக ஸ்டோரி டிஸ்கஸன்ல கூப்பிட்டாலும் சந்தேகப்படுவதற்கில்லை!!

Unknown said...

நடத்துங்க..

ரோஸ்விக் said...

எல்லோரையும் நல்லா கலாய்ச்சிருக்குறீங்க... (உங்களையும் சேர்த்து தான்... தன் நிலையும் புரிச்சிருக்கே ;-)) இன்னும் சில முக்கிய தலைகள் உருட்டப்பட இருக்கு.... உருட்டுங்க உருட்டுங்க...

பொன்னாத்தா... தீர்ப்பை கவிதை மாதிரி சொன்னாலும் பரவாயில்ல... ஆனால், புரியிற மாதிரி சொல்லுங்க... :-))

இல்லையினா இங்க உங்க அண்ணனை கடத்திக்கொண்டு போயி வச்சு அதுக்கு அர்த்தம் கேக்கவேண்டியிருக்கும்... :-))

கேபிளார், ஒரு கதைக்கு ரெண்டு முடிவு மாதிரி... ஆம்பளைக்கு ஒரு பேச்சு பகுதியும், பொம்பளைப் புள்ளைகளுக்கு ஒரு பேச்சுப் பகுதியும் இருக்கட்டும்... ;-) ரசிகர்களை ஏமாத்திர கூடாதில்லையா...

ரசிக்கும் படியாத்தான் இருக்கு....

துபாய் ராஜா said...

அய்யாவை தொடர்ந்து நீங்களுமா... அருமை பிரபா...

mani said...

ஆயிரத்தில் ஒருவனுக்கல்ல ஆயிரம்பேருக்கும் தெரியும்.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அடப்பாவி மக்கா. இப்புடி வேற ஆரம்பிச்சாச்சா:)) நடத்துங்க. மணிஜி சூப்பரு.
//
நன்றிங்கய்யா!

//
கலகலப்ரியா said...
ஆகா.... கெளம்பீட்டாய்ங்கையா கெளம்பீட்டாய்ங்க... இதுவும் தொடருதா... தொடரட்டும் அப்பு... நான் எஸ்கேப்பு...
//
விட்டுடுவோமான்னே? நன்றி சகோதரி!

//
இராகவன் நைஜிரியா said...
அப்படி போடு அருவாள...
//
நன்றிங்கண்ணா.....

பிரபாகர் said...

//
princerajan C.T said...
’புரட்சித்தலைவியை போன்ற தைரியம் கொண்ட பொன்னாத்தா அவர்களே,// படத்தை பார்த்து நானே சொல்லனும்னு இருந்தேன் நீங்க முந்திக்கிட்டீங்க
//
நன்றிங்க பிரின்ஸ்....

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-))))
//
நன்றிங்கய்யா....

//
புலிகேசி said...
ரீமாவை ஆதரித்து பேசிய மணிஜி வாழ்க...
//
நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

//
Chitra said...
:-)
//
நன்றி சித்ரா...

//
முகிலன் said...
பலா பட்டறை ஷங்கர் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிறேன்.. இது தொடர்பதிவு அல்ல அல்ல அல்ல
//
ஹி...ஹி.... ஒருத்தரே தொடர்ந்து எழுதறாது...

//
Sangkavi said...
நண்பா ..... சூப்பர்ர்ர்ர்ர்.....

இத இத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன்.............
//
நன்றி நண்பா, உங்க அன்பிற்கும், ஊக்கத்திற்கும்...

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
முகிலன் said...
பலா பட்டறை ஷங்கர் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிறேன்.. இது தொடர்பதிவு அல்ல அல்ல அல்ல//

மிக்க நன்றி முகிலன்..:))
//
நன்றி சேம் பிளட்...

//
சேட்டைக்காரன் said...
ஆஹா! இதையும் ஆரம்பிச்சிட்டீங்களா....? கலக்கல்! புதுசு புதுசா யோசிக்கறீங்க...! நடத்துங்க...!!
//
நன்றி நண்பா!

//
Punnakku Moottai said...
//வாங்க கேபிள்ஜி... நிறையா பொம்பளைங்க கேட்டுகிட்டிருக்கிறோம் அப்படிங்கறத மனசுல வெச்சிகிட்டு உங்க கருத்துக்கள விட்டு விளாசுங்க...’//

பார்த்தா அப்படி தெரியலியே.

//பேஸ்தடிச்சிருக்கிற என் அண்ணன் //

அப்பிடின்னா என்னா?

(ஆ)ரம்பம் நல்லாத்தான் இருக்கு. பாப்போம் எப்பிடி போகுதுன்னு.
//
(ஆ)ரம்பம்னு அழகா சொல்லிட்டீங்க... நன்றி பாலா...

பிரபாகர் said...

//
suresh said...
very nice.
//
நன்றி சுரேஷ்....

//
ஈரோடு கதிர் said...
பொன்னாத்தா...

டபுள் ஆக்ட்டா...

ம்ம்... கலக்குங்க
//
நன்றி கதிர்...

//
க.பாலாசி said...
ஆகா... இந்த பக்கமும்....கும்மளா... ரைட்டு நடத்துங்க அண்ணா.... கலக்கல்.....
//
நன்றி இளவல்...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே நீங்களுமா----? இது எங்கப்போய் முடியப்போகுதோ-- நடத்துங்க நடத்துங்க
//
நன்றி பிரதாப்...

//
ச.செந்தில்வேலன் said...
ஆகா... இதுவும் கலக்கலா இருக்கே!! போகப் போக ஸ்டோரி டிஸ்கஸன்ல கூப்பிட்டாலும் சந்தேகப்படுவதற்கில்லை!!
//
ரொம்ப நன்றிங்க...

//
திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
நடத்துங்க..
//
நன்றிங்க நண்பா...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
எல்லோரையும் நல்லா கலாய்ச்சிருக்குறீங்க... (உங்களையும் சேர்த்து தான்... தன் நிலையும் புரிச்சிருக்கே ;-)) இன்னும் சில முக்கிய தலைகள் உருட்டப்பட இருக்கு.... உருட்டுங்க உருட்டுங்க...

பொன்னாத்தா... தீர்ப்பை கவிதை மாதிரி சொன்னாலும் பரவாயில்ல... ஆனால், புரியிற மாதிரி சொல்லுங்க... :-))

இல்லையினா இங்க உங்க அண்ணனை கடத்திக்கொண்டு போயி வச்சு அதுக்கு அர்த்தம் கேக்கவேண்டியிருக்கும்... :-))

கேபிளார், ஒரு கதைக்கு ரெண்டு முடிவு மாதிரி... ஆம்பளைக்கு ஒரு பேச்சு பகுதியும், பொம்பளைப் புள்ளைகளுக்கு ஒரு பேச்சுப் பகுதியும் இருக்கட்டும்... ;-) ரசிகர்களை ஏமாத்திர கூடாதில்லையா...

ரசிக்கும் படியாத்தான் இருக்கு....
//
நன்றி ரோஸ்விக்...

//
துபாய் ராஜா said...
அய்யாவை தொடர்ந்து நீங்களுமா... அருமை பிரபா...
//
மிக்க நன்றி ராஜா...

//
mani said...
ஆயிரத்தில் ஒருவனுக்கல்ல ஆயிரம்பேருக்கும் தெரியும்.
//
ரொம்ப நன்றிங்க...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB