ஒரு பிளாக் செலுத்தும் நன்றி...

|

மூன்று மாசக் குழந்த என்ன எல்லாரும் அன்பா அரவணைச்சு கவனிக்கிறத பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு. இதே மாதிரி என்ன கடைசி வரைக்கும் பாத்துக்கனுமே?
குழந்தைங்கன்னா அன்பாத்தானே பாத்துக்குவாங்கன்னு மனசு சமாதானம் சொன்னாலும், நாட்டி பண்ணாம இருக்கனுமில்ல? கண்டிப்பா இருப்பேன்.
நான் இங்க பேச வந்ததே சில பேருக்கு தேங்க்ஸ் சொல்லத்தான், ப்ளீஸ்... நான் சொல்லட்டுமா?
மொதல்ல என்ன உருவாக்கி, நிறைய வேலை இருந்தாலும் அப்பப்போ எழுதி என்ன பிஸியா வெச்சிருக்க என்ன படைச்சவருக்கு தேங்க்ஸ்.
அவரோட பின்னூட்டத்த பாத்துட்டு, லக்கி அங்கிள் தான் மொதல்ல எழுத சொன்னாராம். அதனால லக்கி அங்கிளுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
அடுத்து, பட்டர்ஃபிளை அங்கிள், உங்களுக்கு தெரியுமா, அவரு ரொம்ப ஜாலியான அங்கிள்! என்ன படிச்சிட்டு நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டாம இருக்க மாட்டாரு. என்னா மட்டுமில்ல புதுசா வர்ற யாருக்கும் நல்ல ஹோப் கொடுப்பாரு. அவருக்கும் தேங்க்ஸ்.
அய்யோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, ஒரு தடவ 'எனது பள்ளி நினைவுகள்' யூத்ஃபுல் விகடன்ல குட் பிளாக்குல வந்துச்சி. எவ்வளோ சந்தோஷமா இருந்துச்சி தெரியுமா?
அப்புறம், மணி அங்கிள். லக்கி அங்கிள் எழுதற கமென்ட்ச பாத்துட்டு தான் அவரை இவருக்கு ரொம்ப புடிக்கும். இவர எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு, புதுசா பாக்கிற மாதிரியே இல்லன்னு சொல்லுவாரு. அவரு பிளாக்ல என்ன கவுரவப்படுத்துனாரு. அவரு ஏன் அதிகமா எழுதலன்னு புலம்பிகிட்டே இருப்பாரு.
அடுத்ததா அவருக்கு ரொம்ப புடிச்ச நாகா அங்கிள். ரொம்பவும் பாசிடிவா இருப்பாரு தெரியுமா? அவர ரொம்ப ஊக்குவிச்சி எழுதுவாரு. என்னை கண்டிப்பா தினமும் ஒருதடவயாச்சும் எவ்வளோ பிசியா இருந்தாலும் பாத்துடுவாரு. அவருக்கு என்னோட முத்தத்தோட தேங்க்ஸ்.
அப்புறமா நம்மாளு, எழுதற விஷயத்துல ஒரு இன்ஸ்பிரேசனா நினச்சிகிட்டிருக்கிற பிளாக்ல 'பட்டைய கிளப்பு' ற சங்கர் அங்கிளுக்கு தேங்க்ஸ். உங்களை பாக்கனும் போல இருக்குன்னு சொல்லிட்டிருக்காரு.
ம்...அடுத்ததா அவரோட முக்கியமான ஃபிரண்டு, வேலு அங்கிள பத்தி சொல்லலன்னா கோவிச்சுவாரு. என்ன வாரத்துக்கு ஒரு தடவை படிச்சு சந்தோஷப்படறாரு. ஆனா அவருக்கு வெளிப்படுத்த தெரியாது. ஆன அவரு எத எழுதி காமிச்சாலும் படிக்கலன்னாலும் சூப்பர்னு சொல்லுவாராம்.
இதுக்கெல்லாம் மேல, என் தாத்தா, அதான் என்ன படைச்சவரோட மாமா, சம்பத் கிராண்ட்பா, அவருக்கு தேங்க்ஸ் பண்ணியே ஆகனும். எல்லாத்துக்கும் அவருதான் காரணம்னு சொல்லிட்டிருப்பாரு. அதனால அவருக்கு ஸ்பெசலா முத்தத்தோட தேங்க்ஸ்.
கடைசியா, என்ன படிக்கிற எல்லா அங்கிள், ஆன்ட்டி, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, தம்பி(அய்யய்யோ தெரியாம சொல்லிட்டேன், நானே பச்ச குழந்த.. ஹி... ஹி...) எல்லருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.
அய்யய்யோ ஒரு முக்கியமான அங்கிள மறந்துட்டேனே, ஜோ அங்கிள், பயங்கரமா கலாய்க்கிறாரு, எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கும் தேங்க்ஸ்.
கதிர் அங்கிள், விவசாயி அங்கிள், வாழவந்தான் அங்கிள்,நையாண்டி நைனா அங்கிள்,(பேரே செம தமாஷா இருக்கில்ல?), பாஸ்கி அங்கிள்,பேரு தெரியாத அங்கிள்... ப்ளீஸ் போதும்...,வாய் வலிக்குது. எல்லாருக்கும் என்னோட தேங்க்ஸ்.
இன்னும் நிறைய பேருக்கு தேங்க்ஸ் சொல்லனும், மறந்திருந்தா சாரி, சின்ன குழந்த, கோவிச்சுக்காதீங்க...பிளீஸ்...
கண்டிப்பா உங்களையெல்லாம் அப்புறமா சந்திக்கிறேன்.
பை, பை, டாட்டா...

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

butterfly Surya said...

கலக்கு பிரபா.. ம்...

Start Music...

Suresh said...

Miga arumaiya eluthuringa :-) Nan unga follower thalai :-)

பிரபாகர் said...

//கலக்கு பிரபா.. ம்... //

நன்றி சூர்யா மாமா... வாழ்த்த எனக்கு சொல்லுங்க. மொதல் ஆளா எழுதியிருக்கீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப பிரிச்சிருக்குன்னு அர்த்தம்.

வாழ்க்கை வாழ்வதற்கே...

நாகா said...

என்னையும் அங்கிளாக்கிட்டீங்களேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!

பிரபாகர் said...

//Miga arumaiya eluthuringa :-) Nan unga follower thalai :-)//
Thanks Sureh Uncle... I am so happy...
Vaazkkai vaazhvatharke...

Suresh Kumar said...

Miga arumaiya eluthuringa :-) Nan unga follower thalai :-) /////////////

Repittuuuuuuuuuuu ......

பிரபாகர் said...

//என்னையும் அங்கிளாக்கிட்டீங்களேஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!//

அய்யோ தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க... மூனு மாச குழந்தைக்கு நீங்க அங்கிள்தானே வேணும்... தேங்க்ஸ் மாமா...

வாழ்க்கை வாழ்வதற்கே...

நாகா said...

நானு உங்க மூணு மாசக் கொளந்தயப் பாத்துத்தான் கேட்டேன்.. எங்கூருல சின்னவங்களயும் வாங்க போங்கன்னுதான் கூப்புடுவோம்.

பிரபாகர் said...

//எங்கூருல சின்னவங்களயும் வாங்க போங்கன்னுதான் கூப்புடுவோம்.//

புரிஞ்சது அங்கிள்... ஆனா எங்க சைட் ல சென்ஸே இல்லாம வாட போடான்னு சின்ன பசங்கள கூப்பிடறாங்க... நீங்க நல்ல அங்கிள்...

ஈரோடு கதிர் said...

கலக்குடா செல்லம்
- கதிர் மாமா

பிரபாகர் said...

ஐ கதிர் மாமா!

ஏன் மாமா இவ்வளோ லேட், ரொம்ப வேலையா?

தேங்க்ஸ் மாமா...

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் பிரபாகர் :-)

மேன்மேலும் அசத்துங்கள்!

பிரபாகர் said...

அய் ஜாலி. லக்கி மாமா வாழ்த்து சொல்லியிருக்காரு... ரொம்பவும் சந்தோஷமா இருக்கு...

நாகராஜன் said...

மூணு மாத குழந்தையே இந்த அளவுக்கு எழுதினா, பெரிசானதுக்கு அப்பறம் என்ன கலக்கு கலக்க போறீங்களோ. கலக்குங்க... வாழ்த்துக்கள் பிரபாகர்.

பிரபாகர் said...

//மூணு மாத குழந்தையே இந்த அளவுக்கு எழுதினா, பெரிசானதுக்கு அப்பறம் என்ன கலக்கு கலக்க போறீங்களோ. கலக்குங்க... வாழ்த்துக்கள் பிரபாகர்.//

ராசுக்குட்டி,
உங்களின் வாழ்த்துக்கு நன்றி. கண்டிப்பாக உங்களுக்கெல்லாம் பிடிக்கும் வரை எனது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து கொள்வேன்...

பிரபாகர் said...

தேங்க்ஸ் சூரியன் அங்கிள்...

மணிகண்டன் said...

கலக்குங்க பிரபாகர்.

பிரபாகர் said...

//கலக்குங்க பிரபாகர்.//
ஐ... மணி மாமாவும் வந்து வாழ்த்து சொல்லிட்டாரு. ப்ளீஸ் நிறைய எழுதுங்க அங்கிள்....

Cable சங்கர் said...

எல்லாரையும் அங்கிளாக்கினதுக்கு வன்மையான கண்டிப்பு.. :)

பிரபாகர் said...

//எல்லாரையும் அங்கிளாக்கினதுக்கு வன்மையான கண்டிப்பு.. :)//
சங்கர், இந்த ப்ளாக்கே ஒரு மூனு மாச குழந்தையா மாறி தேங்க் பண்ற மாதிரி எழுதி அத அப்படியே மெயின்டைன் பண்ணிட்டேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB