எங்கேயோ படிச்சது - 5 (ஜோவியல் ராஜாவும் தோட்டக்காரனும்)

|



முதல்லேயே சொல்லிடறேன், இந்த தலைப்புல வர்ற கதைங்களை கண்டிப்பா நீங்க எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கும், ஏன்னா படிச்சி புதைஞ்சிருக்கறத தோண்டித் தான் எழுதறேன்.
அறிமுகம் ஜோவியல் ராஜா...
ராஜா சம்மந்தமான நிறைய கதைகளை படிச்சிருக்கேன், ஆனா அதுல ராஜாவா இல்லாம ரொம்ப எதார்த்தமா நடந்துகிட்டவங்களை பத்துன விஷயங்களை பகிர்ந்துக்க போறேன். அந்த கதைங்கள்ல வரப்போற ராஜாவ செல்லமா நாம ஜோவியல் ராஜான்னு வெச்சுக்கலாம்.
அவரு ரொம்பவும் கிராக்கி பண்ணிக்காம எல்லாத்துகிட்டேயும் சகஜமா பழகினாரு. ரொம்ப அறிவு ஜாஸ்தி, மதியூகமான ஒரு மந்திரி வேற கூடவே இருந்தாரு.
மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சி கொடுத்து சந்தோஷமா வெச்சிருந்தாரு.
அறிமுகம் போதும், இதோ ஜோவியல் ராஜா பராக், பராக்...
ஒருநாள் மந்திரி இயற்கை உந்துதலால பிரிஞ்சி போனப்போ, நம்ம ஜோவியல் ராஜா தோட்டத்த சுத்தி பாக்கலாம்னு போனாரு.
தோட்டக்கார பெரியவர பாத்து, 'பெரியவரே எப்படியிருக்கீங்க, வாழ்க்கை நல்லா போகுதா' ன்னாரு..
'உங்க ஆட்சியில எந்த குறையுமில்ல ராசா, ஆனா' ன்னு இழுத்தாரு.
'ம், தயங்காம சொல்லுங்க...' ன்னு அவரை கேக்கவும்,
'இல்லைங்க ராஜா, காலையில ஆறு மணிக்கே வந்துடறேன், தோட்டத்துக்கெல்லாம் தண்ணி பாய்ச்சிட்டு, ஒழுங்கா பராமக்கிறேன். களை எடுக்கறது, எரு வெக்கறதுன்னு சாயாங்காலம் ஏழு வரைக்கும் ஓய்வில்லாம இருக்கேன்' ன்னு இழுத்தாரு.
ஜோவியல் ராஜாவுக்கு புரிஞ்சிடுச்சி. 'ஆகா வந்துடாருய்யா விஷயத்துக்கு' ன்னு நினைச்சிட்டு, 'ம், மேல கேளுங்க'ன்னாரு.
'ஆனா மந்திரி, காலையில ஒம்போது மணிக்கு வர்றாரு, உங்க கூடவே இருக்காரு, சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறாரு, சாயங்காலம் ஆறு மணிக்கு டாண்னு போயிடறாரு. அவருக்கு மாசம் நூறுன்னா எனக்கு ஒன்னுதான் தர்றீங்க, இது எந்த விதத்துல நியாயம்' னு கேட்டாரு.
ஜோ.ரா(சுருக்கமா இதுவும் நல்லா இருக்கில்ல) பதில் சொல்லாம, முப்பதடி தூரத்துல இருந்த சாலைய பாத்துட்டு,
'மாட்டு வண்டிங்க நின்னுட்டிருக்கு போலிருக்கு, என்ன விஷயம்னு பாத்துட்டு வாங்க'ன்னாரு.
என்னடா சம்மந்தமில்லாம வெலை வெக்கிறாருன்னு நினைச்சாலும், ராஜாவாச்சேன்னு ஓடிபோய் கேட்டுட்டு வந்து, 'நிறுத்தி இளைப்பாறிகிட்டு இருகாங்களாம்' னு சொல்லவும்,
'வண்டியில என்ன போகுதுன்னு கேட்டுட்டு வாங்க' ன்னு சொல்லவும் திரும்பவும் கேட்டுட்டு வந்து 'நெல்லு மூட்டைங்க' ன்னாரு.
இதே மாதிரி பத்து கேள்விங்கள கேட்டு அனுப்ப தளர்ந்து போயி ஏதோ சொல்ல வாயெடுக்க மந்திரி வர்றத பாத்து மூடிட்டாரு.
'மன்னிக்கனும் ராஜா, ராத்திரி வேண்டாம்னு சொல்லியும் மனைவியோட அன்ப மீற முடியாம கொஞ்சம் அதிகம் சாப்பிட்டுட்டேன், வயித்துல சிறு உபாதை' ன்னு தாமதத்துக்கு விளக்கம் சொல்ல,
'சரி இருக்கட்டும், அதோ என்ன அங்க வண்டிங்க நிக்குது' ன்னாரு.
இதோ வர்றேன்னு சொல்லிட்டு போயி விசாரிச்சுட்டு பொறுமையா வந்தாரு.
பெரியவரு 'வாங்கற சம்பளத்துக்கு எங்கிட்ட இருக்கிற சுறுசுறுப்பு கூட இல்ல' ன்னு நினைச்சிகிட்டாரு.
மந்திரி சொன்னரு, 'மன்னா, தேவக்குடின்ற ஊர்ல இருந்து பகத்துல பூவாக்குடிக்கு போறதுக்காக வந்திருக்கு. மொத்தம் பத்து வண்டிங்க எல்லாம் நெல்லு மூட்டை. வாங்கின கடன சுப்பையாங்கறவரு ரங்கதுரைங்கறவருக்கு திருப்பி தர்றாரு'.
ஒரு வண்டி வழியிலயே அச்சு முறிஞ்சு நின்னு சரி பண்ணிட்டிருக்காங்க. ராத்திரி பத்து மணிக்கு போய் சேர்ந்திடுமாம். இளைப்பாறிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க. திருட்டு பயமே இல்லன்னாலும் துணைக்கு ரெண்டு வீரர்களை அனுப்பி வெச்சிருக்கேன்'ன்னு சொன்னாரு.
பெரியவரு ஒன்னுமே பேசல. தெளிவாயிட்டு 'நீங்க இங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் மன்னா, வந்தனம் மந்திரி' ன்னாரு.
அப்புறமா நம்ம ஜோ.ரா அவரோட சம்பளத்த அதிகப்படுத்துனது மில்லாம, அதுக்கப்புறம் வந்த திருவிழா சமயத்துல வழக்கத்த விடவும் நல்லா கவனிச்சாரு.

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

நல்லா இருக்காரே.... இந்த ராசா...
ஆம்மா இந்த "ராசா சாப்ட்வேர் சொலுசன்ஸ்" எங்கே இருக்கு?
இங்கே எங்க கம்பனிலே குறை சொன்னா பீசை புடிங்கிறாங்க.

நாகா said...

அப்போ சிறுவர்மரில் படிச்சது, இப்போ உங்க ஸ்டைல்ல எழுதிருக்கீங்க..

பிரபாகர் said...

//நல்லா இருக்காரே.... இந்த ராசா...
ஆம்மா இந்த "ராசா சாப்ட்வேர் சொலுசன்ஸ்" எங்கே இருக்கு?
இங்கே எங்க கம்பனிலே குறை சொன்னா பீசை புடிங்கிறாங்க.//

நன்றி நையண்டி நைனா...

ஜோவியல் ராஜா,
C/O, பிரபாகர்,
வாழ்க்கை வாழ்வதற்கே....

பிரபாகர்...

பிரபாகர் said...

//அப்போ சிறுவர்மரில் படிச்சது, இப்போ உங்க ஸ்டைல்ல எழுதிருக்கீங்க..//

நன்றி நாகா....

எங்கேயோ படிச்சதுன்னு தலைப்பு அதற்காகத்தான்...

சிறுவர் மலருக்கு முன்னதாக ஆறாம் வகுப்பு படிக்கும்போது, குழந்தைகளுக்கான கதைகள் என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்...(1984), பெரிய எழுத்து, நல்ல தமிழில் இருந்தது...

Joe said...

இயற்பியல், வேதியியல் மாதிரி என் பேர்ல ஒரு பாடம் வந்திருச்சா? ஓஹோ, நீங்க சொன்னது அந்த Jovial-ஆ?

Sorry for the disturbance! ;-)

பிரபாகர் said...

ஆமாம் ஜோ,

உங்க பேர பாத்ததுக்கப்புறம் தான் நமக்கு அந்த ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சு...

வருகைக்கு நன்றி..
பிரபாகர்...

butterfly Surya said...

எத்தனை நாளாச்சு இந்த ராஜா கதையெல்லாம் கேட்டு.?? அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா காலத்துக்கே போயிட்டேன்..

நடை அருமை..

நிறைய எழுதுங்கள்.

butterfly Surya said...

தமிழ்மணம், தமிலிஷ் ஒட்டும் போட்டாச்சு.

சற்று முன் கிடைத்த தகவல் படி இந்த பதிவு கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.

பிரபாகர் said...

நன்றி சூர்யா...

இது போன்ற பதிவுகளை மாதத்திற்கு நான்கு எழுத முயற்சிக்கிறேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

//தமிழ்மணம், தமிலிஷ் ஒட்டும் போட்டாச்சு.

சற்று முன் கிடைத்த தகவல் படி இந்த பதிவு கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.//

தேர்தல் முடிவுபோல் உங்களின் தகவலுக்கு நன்றி சூர்யா...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB