எங்கேயோ படிச்சது - 6 (ஜோவியல் ராஜாவும் சவரத்தொழிலாளியும்)

|

லீவ்ல வீட்டுக்கு போனேன்னா எல்லோரும் கலகலப்பா சிரிச்சிகிட்டே இருப்பாங்க. ஏதச்சும் பேசி சிரிக்க வெச்சுகிட்டே இருப்பேன்.


ஒரு ஞாயித்து கிழமை காலைல எல்லாரும் ஹால்ல உக்காந்து இருந்தோம்.என்னன்னே தெரியல ரொம்ப சைலன்ட்டா இருந்துச்சி, யாரும் பேசிக்கல.


மவுனத்தை நான் தான் உடைச்சேன். 'ஆமா என்னாச்சு, ஏன் எல்லாரும் அமைதியா இருக்கிறோம்'னு கேக்க,


என் தம்பி 'எல்லாரும் இல்ல, நீ அமைதியா இருக்கிற அதனால எல்லாரும் அமைதியா இருக்கிறோம்'னு நக்கலா சொன்னான்.


அப்போ டக்குனு என் தங்கச்சி, 'அண்ணா நாம ரெண்டு மாசமா சிக்கன் சாப்பிடலல்ல அதான் சோகமா இருக்கோம்'னா


அப்பா கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால ஃபுல் வெஜிடேரியன் தான் ரெண்டு மாசமா.


டக்குனு யாரையும் எதுவும் பேசவிடாம,இப்போ ஒரு கதை சொல்ல போறேன், எல்லோரும் கேளுங்கன்னு வழக்கம்போல ஆரம்பிச்சேன்.


ஜோவியல் ராஜவுக்கு முடியெல்லாம் வெட்டி, சவரம் செஞ்சி முடிச்சவுடனே, 'ஏம்பா நாடு நகரமெல்லாம் எப்படி இருக்கு'ன்னு வழக்கமான கேள்வியை கேட்டாரு.


'உங்க ஆட்சில என்ன குறை இருக்க முடியும் ராஜா, பஞ்சம் பட்டினி ஏதுமில்லாம, செழிப்பா, திருட்டு, கொள்ளைன்னு பயம் இல்லாம, எல்லாரும் சந்தோஷமா, குறைஞ்சது ஒரு எலுமிச்சங்கா அளவிற்காவது தங்கம் வெச்சிகிட்டு இருக்காங்க'ன்னாரு.


அவருக்கு வழக்கத்தவிட அதிகமாவே கொடுத்துட்டு, சந்தோஷமா குளிச்சி, பூஜை, சாப்பாடெல்லாம் முடிச்சிட்டு அரசவைக்கு கிளம்ப, மந்திரி வழக்கம்போல தயாரா காத்திருந்து ஒட்டிகிட்டாரு.


ராஜா ரொம்பவும் குஷியா இருக்கறத பாத்துட்டு, 'என்னது வழக்கத்தவிடவும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க'ன்னு கேக்கவும்,


காத்திருந்தாப்ல,'எனக்கே ரொம்ப பெருமையா இருக்குது. நம்ம ஆட்சிய எல்லோரும் ரொம்ப புகழ்றாங்க'ன்னுட்டு,


'இந்த நாட்டுல ஒவ்வொருத்தர்கிட்டேயும் கொறைஞ்சது எலுமிச்சங்கா அளவிற்காவது தங்கம் இருக்கு'ன்னாரு.


'ஆமா யாரு இந்த அருமையான தகவல சொன்னது'ன்னாரு.


நடந்தத சொல்லவும், 'ராஜா சூரியன் கிழக்கே உதிக்குதுன்னு புதுசா சொல்லனுமா'ன்னுட்டு,


'இத நாம அப்படியே விட்டுட முடியாது, அடுத்த வாரமும் நிலவரத்த கேளுங்க'ன்னு சொல்லிட்டு அவரு வேலைய ஆரம்பிச்சாரு.


உளவாளிங்கள கூப்பிட்டு 'அந்த நாவிதர் வீட்டுல எலுமிச்சங்கா அளவு தங்கம் எங்கேயாவது இருக்கும், அத சுட்டுட்டு வந்துருங்க'ன்னு சொன்னாரு.


நம்மாளுங்களுக்கு சொல்லவா வேணும், காரியத்த கச்சிதமா முடிச்சிட்டாங்க.


அடுத்த முறை முகச்சவரம் பண்ண வந்தப்போ, ஆளு ரொம்ப சோகமா இருந்தாப்ல. மழிக்காத முகம், வாரத தல, முகமெல்லாம் கவலை.


எப்பவும் போல இல்லாம சும்மா கடமைக்கு வேலைய முடிச்சாரு.


மந்திரி சொன்ன மாதிரி 'ஏம்பா நாடெல்லாம் எப்படி'ஆரம்பிச்ச உடனே டக்குனு


'மன்னிக்கனும் மகாராஜா, நாடா இது, எங்க பாத்தாலும் திருடு, வழிப்பறி, பஞ்சம், பட்டினின்னு இருக்கு, நீங்கதான் எதாச்சும் செய்யனும்'னு சொல்லிட்டு கொடுத்தத வாங்கிட்டு கிளம்பிட்டாரு.


மந்திரி பாக்கும் போது, போன வாரம் ஜோரா இருந்த ஜோ.ரா, சோர்ந்து போயி மனசெல்லாம் பாரமா ஒரு மாதிரி இருந்தாரு.


'என்னாச்சு மன்னா, வழக்கத்துக்கு மாறா ரொம்பவும் விசனமா இருக்கீங்க'ன்னு விசாரிக்க,


'போன வாரம் ஆகா ஓகோன்னு புகழ்ந்த ஆளு இன்னிக்கு அப்படியே மாத்தி சொல்லறாரு. அந்த அளவுக்கா நாடு மோசமாயிடுச்சி'ன்னு கேக்க,


சிரிச்சிகிட்டே,'ராஜ போன வாரம் அவருகிட்ட எலுமிச்சங்கா அளவுக்கு தங்கம் இருந்துச்சி, தெம்பா சந்தோஷமா இருந்தாரு. பாக்கறதெல்லம் நல்லதாவே தெரிஞ்சது.


'உங்களுக்கு புரிய வெக்கனுங்கறதுக்காக தூக்கிட்டு வர சொல்லிட்டேன். ஆனா இப்போ இருந்தத இழந்துட்டதால பாக்கறதெல்லாம் தப்பா தெரியுது. வர்ற கருத்தெல்லாம் அவங்களோட மனநிலையை பொறுத்துதான்'ன்னு சொன்னாரு.


முடிச்சிட்டு 'பாப்பா அந்த மாதிரி, உனக்கு சிக்கன் சாப்பிடறதுல ஏக்கம்னா கம்பனிக்கு எங்களையெல்லாம் ஏன் இழுக்கிற'ன்னு சொல்லி முடிச்சதும், எல்லோரும் இதுக்கு இவ்வளோ பெரிய கதை தேவையான்னு மொறைச்ச மாதிரி பாத்துட்டு,சிரிக்க ஆரம்பிச்சி ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டிருந்தோம்.

16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Unknown said...

Nice Story.

பிரபாகர் said...

//சுல்தான் said...
Nice Story.//
நல்வரவு சுல்தான்...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கதை.

பிரபாகர் said...

//அக்பர் said...
நல்ல கதை.//
நன்றி அக்பர்... உங்களின் வரவால் ஏக சந்தோஷம்....

சென்ஷி said...

:)

பிரபாகர் said...

//சென்ஷி said...
:)//
நன்றி, உங்களின் வரவிற்கும், அன்பிற்கும்...

butterfly Surya said...

நல்ல கதையும் ஆழ்ந்த விவரிப்பும்.

நிறைய எழுதவும் பிராபாகர்.

பிரபாகர் said...

நன்றி, சூர்யா...

உங்களின் நட்பும், ஆதரவும் எனக்கு யானை பலத்தை தரக்கூடியவை. அது என்றும் எனது முன்னேற்றத்திற்கு தேவை....

சங்கர் தியாகராஜன் said...

கடைசியா அன்னிக்கு சிக்கன் சாப்பிட்டிங்களா இல்லியா? முடிவு தெரியாம ஒரே டென்சனா இருக்கு

தினேஷ் said...

:) நல்லா இருக்கு

நாகராஜன் said...

முன்னமே கேட்ட கதைன்னாலும், உங்க சந்தர்பத்துக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தியது பாராட்டுக்கு உரியது. ஆமா தங்கச்சிக்கு கோழி கறி கிடைச்சுதா இல்லையா?

பிரபாகர் said...

//கடைசியா அன்னிக்கு சிக்கன் சாப்பிட்டிங்களா இல்லியா? முடிவு தெரியாம ஒரே டென்சனா இருக்கு//

அன்னிக்கு பிரதோஷம். வீட்டுல சாப்பிடல. தங்கச்சியும் நானும் ஹோட்டல்ல நல்லா ஒரு கட்டு கட்டுனோம்

பிரபாகர் said...

//:) நல்லா இருக்கு//
நன்றி ராசுகுட்டி. உஙளின் அன்பான விமர்சனத்துக்கு...

பிரபாகர் said...

//முன்னமே கேட்ட கதைன்னாலும், உங்க சந்தர்பத்துக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தியது பாராட்டுக்கு உரியது. ஆமா தங்கச்சிக்கு கோழி கறி கிடைச்சுதா இல்லையா?//

அதனாலதான் எங்கேயோ படிச்சது...

அன்னிக்கு பிரதோஷம். வீட்டுல சாப்பிடல. தங்கச்சியும் நானும் ஹோட்டல்ல நல்லா ஒரு கட்டு கட்டுனோம்

//:) நல்லா இருக்கு//

நன்றி சூரியன். மாத்தி பதில் போட்டுட்டேன். ஹி ஹி... ராத்திரி 2.45 இப்போ. சும்மா நடுவில எழுந்தப்போ பாத்துட்டு பதில் போடற ஆர்வத்துல தப்பு நடந்துருச்சி.

ஈரோடு கதிர் said...

//போன வாரம் ஜோரா இருந்த ஜோ.ரா,//
ஜோரா இருக்கு

பிரபாகர் said...

நன்றி கதிர்.
உங்க விமர்சனமும் 'ஜோரா' இருக்கு...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB