ஐயா நான் ஏஜுக்கு வந்து விட்டதால்...

|

மல்லியகரையில ஒம்போதாவது வரைக்கும் படிச்சேன்னு சொல்லியிருக்கேன். பத்தாவதுல என் சொந்த ஊர் தெடாவூர்லயே மூனாவதுக்கு அப்புறம் படிக்கிற மாதிரி ஆயிடுச்சி.
நடுநிலைப்பள்ளியா இருந்து உயர் நிலைப்பள்ளியா மாறினதால, ஹெட் மாஸ்டர் கருப்பண்ணன் சார், அப்பாகிட்ட நிறையா உறுதிமொழியெல்லாம் கொடுத்து இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.
அப்புறம்தான் தெரிஞ்சது, என்ன ரொம்ப தப்பா நினைச்சு கூட்டிட்டு வந்துட்டாருன்னு, அதாங்க, ரொம்ப பிரில்லியன்ட்னு.
மொத வருஷம் நல்ல ரிசல்ட் வரனும்னு ரொம்ப கேர் எடுத்துட்டாரு.
ஏன்னா மூனு, அஞ்சு கிலோ மீட்டர்ல ரெண்டு ஹையர் செகண்டரி ஸ்கூல் இருந்தால தர மாட்டேன்னுட்டாங்களாம்.
பழைய ஸ்கூல்ல ரொம்ப ஜாலியா இருந்துட்டு இங்க வந்து வசமா சிக்கிட்டேன், பொறியில மாட்டின எலி மாதிரி. அதை பத்தி இன்னொரு பதிவுல சொல்லுறேன்.
இங்க பழக்க வழக்கமே வேற மாதிரி இருந்துச்சி. பசங்க பொண்ணுங்கல்லாம் ரொம்ப சகஜமா பழகுனாங்க.
வாடி, போடி, நாயி, பேயி, பிசாசுன்னு பேசிக்கறத பாத்து ஆச்சர்யமா இருந்துச்சி. காரணம் எல்லாருமே ஒரே ஊரு, சொந்தங்கற உரிமைன்னு தெரிஞ்சது.
வசந்தா கருப்பா இருந்தாலும் அழகா இருக்கும். அதுகிட்ட ரொம்ப யோசிச்சு கொஞ்சம் பயத்தோட 'உம் பேனாவ கொஞ்சம் தாடி' ன்னு கேட்டேன்.
'உடைஞ்சிடும்'னு சொல்ல,
'என்ன பேனாவா' ன்னு அப்பாவியா கேட்டேன்.
'இல்ல, உன் மண்டை. இந்த மாதிரியெல்லாம் கூப்புடற வேலை வேணாம்' னு சொல்ல,
'சரிங்க'ன்னு சொல்ல, 'அப்படியும் வேணாம், வசந்தான்னு பேர சொன்னா போதும்' னு சொல்லுச்சி.
கருப்பண்ணன் சார் தான் கிளாஸ் டீச்சர், ஆனா லீவ் விஷயத்தையெல்லாம் சாரங்கபாணி சார் தான் பாத்துப்பாரு.
அவரு எங்க மேல ரொம்ப அக்கறையா இருப்பாரு. நல்லா படிக்கிற பசங்கன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
பொண்ணுங்கள்ல வசந்தா, எங்கள்ல வேலு, முருகன், நான், அழகுன்னு யாரச்சும் வரலைன்னா வந்த உடனே பாத்துட்டு கேப்பாரு.
வழக்கத்துக்கு மாறா கனகவள்ளி வரலையான்னு நாலஞ்சு நாளா கேட்டுகிட்டு இருந்தாரு.
எங்களுக்கு ஏன் வரலன்னு தெரியும் ஆனா சொல்ல முடியாதே?
வசந்தா, 'சார் லீவ் லெட்டர் கொடுத்திருக்குது'ன்னு சொல்ல,
'அந்த கருமத்துக்குதான் தினமும் கேக்கறேன்'னாரு.
கனகவள்ளி கொஞ்சம் வெக்கத்தோட கிளாசுக்கு வந்துச்சி. தலையை அதிகமா குனிஞ்சிகிட்டே இருந்துச்சி.
சாரங்கபாணி சார் வந்தவுடனே, 'என்ன கனகவள்ளி வந்தாச்சா' ன்னாரு.
உடனே எழுந்து நின்னுச்சி.
அட்டன்டன்ஸ் நோட்டுக்குள்ள இருந்து அது கொடுத்து அனுப்பின லீவ் லெட்டர எடுத்தாரு.
'இப்படித்தான் லீவ் லெட்டர எழுவாங்களா புள்ள' ன்னுட்டு இழுத்து ராகமா படிச்சு காட்டினாரு.
'ஐயா நான் ஏஜுக்கு வந்து விட்டதால், எனக்கு ஒருவாரம் லீவ் தெவை, பத்தாவது படிக்கிற இன்னும் ஸ்பெல்லிங் மிஸ்டேக், கருமம் இப்படியா எழுதறது, மூக்குல ஒழுகுற சளியை இன்னமும் ஒழுங்கா தொடைச்சுக்க தெரியல இதெல்லாம் ஏஜுக்கு வந்துதுச்சாம்' ன்னாரு.
அவசரம புதுசா போட்டுட்டு வந்த தாவணியில துடைக்க, 'சனியன், வெளியே போயி சிந்திட்டு வா, லீவ் லெட்டர மொதல்ல மாத்தி எழுதி கொடு' ன்னாரு.

19 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

mee firste

பிரபாகர் said...

//mee firste//

நன்றி நைனா... உங்கள் வரவு நல்வரவாகுக...

ஈரோடு கதிர் said...

'என்ன பேனாவா' ன்னு அப்பாவியா கேட்டேன்.

அப்பாவியா!!!!???
....ம்ம்ம்ம்ம்....

பிரபாகர் said...

//'என்ன பேனாவா' ன்னு அப்பாவியா கேட்டேன்.

அப்பாவியா!!!!???//

அப்போ அப்பாவிதான் கதிர்...

Suresh Kumar said...

பள்ளி நினைவுகள்சூப்பர்

பிரபாகர் said...

//பள்ளி நினைவுகள்சூப்பர்//

நன்றி சுரேஷ்...

பள்ளி நினைவுகள் என்றுமே நம்மை மீண்டும் இளமையாக்கி, சுறுசுறுப்பாக்கும்...

லெமூரியன்... said...

கடைசில வசந்தா வெச்சி ஒரு ட்விஸ்ட் குடுபீங்கனு எதிர்பார்த்தேன்ப்பா......நல்லாஇருக்கு வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//கடைசில வசந்தா வெச்சி ஒரு ட்விஸ்ட் குடுபீங்கனு எதிர்பார்த்தேன்ப்பா......நல்லாஇருக்கு வாழ்த்துக்கள்//

நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே எழுதினதால வழியில்லாம போயிடுச்சி. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாகா said...

ப்ளாக்கு குட்டி, டெய்லி பாப்புலராயிகினே போறியே கண்ணு, யாராவது கண்ணு பட்டுரப் போகுது செல்லம்..

பிரபாகர் said...

நாகா அங்கிள், நீங்க எனக்கு அட்வைஸ் பண்ணினதுக்கு அப்புறம்தான் எனக்கு எப்படி தமிழ்மணம், தமிலிஷ், திரட்டில பதிக்கனும்னு தெரிஞ்சது. தேங்க்ஸ் அங்கிள்....

தினேஷ் said...

/ 36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்// இத எழுதும்பொட்து 15 வயசு பாலகனா மாறி இருப்பீங்களே .. வசந்தா இப்பொ எப்படி ?

பிரபாகர் said...

சூரியன் கரெக்டா சொன்னிங்க....

கொஞ்ச நேரம் வேலையை மறந்து நினைச்சிகிட்டிருந்தேன்..

வரவிற்கு நன்றி ....

பிரபாகர் said...

பேனாவை வசம் தான்னு கேட்டதோட சரி. யார் வசமோ போயி பையன் +1 படிக்கிறான்.

பிரபாகர் said...

// யார் வசமோ//
தப்பா நினைச்சிக்காதீங்க. வேறோருத்தர்னு சொல்ல வந்தேன்.

நாகராஜன் said...

கலக்கறீங்க பிரபாகர். பள்ளி நினைவுகளை எழுத ஆரம்பிச்சா முடிக்கவே முடியாதுன்னு நினைக்கறேன்... எழுதிட்டே இருங்க.

பிரபாகர் said...

//கலக்கறீங்க பிரபாகர். பள்ளி நினைவுகளை எழுத ஆரம்பிச்சா முடிக்கவே முடியாதுன்னு நினைக்கறேன்... எழுதிட்டே இருங்க.//

ராசுக்குட்டி,
உண்மைதான், பள்ளி நினைவ்களோடு மட்டுமல்லாமல் சந்தித்த நிறைய பசுமையான நிகழ்வுகளை நிறைய பேசிகொண்டேயிருக்கலாம். தொடர்ந்த உங்களின் அன்பான ஆதரவிற்கு நன்றிகள்...

Cable சங்கர் said...

நல்ல நினைவலைகள் பிரபாகர்.

பிரபாகர் said...

//Cable Sankar said...
நல்ல நினைவலைகள் பிரபாகர்.//
சங்கர், உங்களிடமிருந்து வாழ்த்துகளை பெறுவதில் பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன்.

நாடோடி இலக்கியன் said...

நண்பா,
8ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை பொண்ணுங்க ஒவ்வொருத்தரா பாவாடை சட்டையோடு லீவில் போயிட்டு மீண்டும் தாவணியில் வரும் தருணம் அட அட கவிதை தருணம்ங்க அது.அப்படியே என் பள்ளி நாட்களின் ஞாபகத்தை கிளறிவிட்டுடுச்சு.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB