எனது பள்ளி நினைவுகள்...

|


என்னொட ரெண்டு நண்பர்களுக்குள்ள அறிமுகப்படுத்தி வைக்கும் போது கண்டிப்பா மூனு பேருமே லேசா சிரிச்சுக்குவோம்.


காரணம், 'ஆமா எப்படி தெரியும்னு கேக்கும் போது, ரெண்டுபேரும் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ், நாலு அஞ்சு இல்லன்னா ஆறிலிருந்து ஒம்போது வரை ஒன்னா படிச்சோம்' னு சொல்லுவேன்.

ரெண்டு பேருக்கு மேல சந்திக்கும்போது ஒன்னு கண்டிப்பா என்னோட ஸ்கூல் ஃபிரண்டா இருக்கும்.

எண்பத்திரெண்டு வாக்குல நடந்தத இப்போ நினைச்சாலும் ரொம்ப பசுமையா மனச அப்படியே லேசாக்குது...

ஆத்தூர் தாலுக்கா மல்லியகரையில இருக்கிற அரசினர் மேல்நிலைப்பள்ளி தான் நான் படிச்ச ஸ்கூல்.

தாத்தா வீட்டுல இருந்துதான் படிச்சேன். ஈச்சம்பட்டியிலருந்து சரியா ஒரு மைல். தினமும் நடந்து தான் போவேன்.

துணிக்கடை மஞ்சள் பை, சாப்பாடு தூக்கு போவுனி (அப்படிதான் சொல்லுவங்க, தூக்கு வாளின்னு வெச்சுக்கோங்களேன். சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது நிறைய ரோட்டொரத்துல புளிய மரத்துல அடிச்சு ஃபுல்லா எடுத்துட்டு போவோம்).

ஒரு முழு ஏரிக்குள்ள இருந்த பள்ளிகூடம் தமிழ் நட்டுலேயே அதுதான்னு நினைக்குறேன்.

ஊருக்குள்ள போறதுக்கு ஏரிக்கரை மேலதான் பாதை இருக்கும்.

கொஞ்சம் மழை பேஞ்சாலும் தண்ணி வந்து தேங்கி நின்னுடும்.

சுமாரா மழை பேஞ்சாலும் கண்டிப்பா லீவ்தான். கொஞ்சம் கருக்கலா இருந்தாலே சீக்கிரமா ஸ்கூல் விட்டிருவாங்க.

கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க.

தினமும் குடிச்சிட்டு வந்து கிளாசுக்கே வராம, எப்போதாவது வந்து ஒரே நாள்ல புரியுதோ இல்லையோ பாதி சேப்டர அடுத்த பீரியடையும் சேத்து வாங்கி முடிக்கும் குடிகார குழந்தவேலு சார்

அன்பு நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கிணங்க, இதோ எனது பள்ளி நினைவுகள்...(ஒரு தடவை அடுத்த பீரியட் என்னன்னு மாலினி டீச்சர் கேக்க, 'மேத்ஸ், குடிகார குழந்தைவேலு சாருது' ன்னு சொல்லி தண்டபாணி நல்லா வாங்கி கட்டிகிட்டான்)

பீரியடு ஆரம்பிக்கறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலேயே கிளம்பி மெதுவா அசைஞ்சு அசைஞ்சு சரியா வரும் அங்கமுத்து சார்.

தமிழ்ல மட்டுமே பேசி ஆங்கில வார்த்தைய அண்டவிடாம செஞ்ச கேனத்தமிழய்யா( கொஞ்சம் மனநிலை சரியில்லைன்னு பேசிக்குவாங்க, அவரு பேரு என்னான்னு எங்க யாருக்கும் தெரியாது).

தினமும் சிலப்பதிகரத்தை திறந்து வெச்சு முதல் பாராவை மட்டும் நடத்திகிட்டிருந்தாரு. பத்து நாள் போச்சு.


வழக்கம்போல் ஒருநாள் பொறுக்கமுடியாம நம்ம தண்டபாணி 'ஐயா இதை நீங்கள் பன்னிரண்டாவது முறையாக நடத்துகிறீர்கள்' என நக்கலாக சொல்ல,

'எங்கே இந்த வரிக்கு பொருள் சொல்லு பாக்கலாம்' னு இடையில ஒரு வரியை கேட்க, அவன் திரு திரு என முழிக்க, முண்டெழவே, தண்டெழெவெ என சொல்லி பொடனையில நல்ல கும்மினாரு.

இங்கிலீசுக்கு மாலினி டீச்சர், அழகா இருப்பாங்க. தினமும் ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க. அவங்க கட்டின புடவையை மறுபடியும் பாத்ததா யாரும் சொன்னதில்லை. ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

கிராமர் நடத்தும்போது, 'ஹி ஓபென்ஸ் தெ டிராயர் அன்ட் புட் தெ ரிவால்வர்'னு பிரசன்ட் டென்சுக்கு உதாரணம் சொல்ல, சிரிச்ச நானும் ஜோசப்பும் நல்ல மாட்டிகிட்டோம்.

ஜோசப் ஓவிய வத்தியார் பையன். நோயல் இம்மானுவேல் கிருஸ்துமஸ் மணி அவர் பேரு.


ஏன் சிரிச்சிங்கன்னு கேட்டதுக்கும் சிரிச்சிகிட்டேதான் இருந்தோம்.


அடி பின்னி எதுத்துட்டு பீரியட் முடிஞ்சதும் போயிட்டாங்க. 'இரு இரு உங்க அப்பாகிட்ட சொல்றேன்' னுட்டு வேற போனாங்க.

பசங்க 'என்னடா நடந்து' ன்னு கேட்க, இன்னும் நல்லா சிரிச்சோம்.

காதல்ங்றதே அப்போ ஒரு பெரிய கெட்ட வார்த்தை. யாரவது காதல்ன்னு சொன்னாலே, வாத்தியார்கிட்ட சொல்லி அடி வாங்கி வெச்சுடுவோம். ரெண்டு பேருக்கும் 'இது' ன்னுதான் சொல்லுவோம்.


இன்னிக்கி பசங்க பேசறத நினைச்சாவே தலையை சுத்துது.

ஓவிய வாத்தியார் கிட்ட தான் எங்க அம்மாவும் படிச்சாங்களாம். என்ன பேராண்டின்னு தான் எல்லார் முன்னாடியும் கூப்பிடுவாரு.

பசங்களுக்கு நோட்டு புத்தகமெல்லாம் அவருதான் கொடுத்துகிட்டிருப்பாரு. ஓவிய நோட்ட வாங்கற வரைக்கும் கிளாஸ் கிளாஸா போயி மிரட்டுவாரு. வாங்கலைன்னா, பென்சில கை விரலுக்குள்ள விட்டு திருகுவாரு. வலியால கதிறிகிட்டே வாங்கிடுவாங்க.

ஒருதடவ நானும் எழுந்து நிக்க, 'நீயுமாடா பேரண்டி' ன்னுட்டு செல்லமா கை விரல்ல பென்சில் வெச்சு வலிக்காம மெதுவா முறுக்க, சிரிச்சிகிட்டே இருந்தத பாத்து பசங்கள்லாம் ஆச்சர்யப்பட்டாங்க.

இன்னும் சில விஷயங்களை பகிர்ந்துகிட்டு அடுத்த பதிவில முடிக்கிறேன்26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

butterfly Surya said...

அருமையான நினைவுகள்.

எனக்கும் கொசுவத்திய சுத்த வச்சிடிங்க பிராபாகர்.

தொடரவும்..

பிரபாகர் said...

//எனக்கும் கொசுவத்திய சுத்த வச்சிடிங்க பிராபாகர். //

நன்றி சூர்யா...

உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கிறது.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

ஆஹா... நாகா கேட்ட மாதிரியே....பிரபாகர் பதிவ போட்டு பட்டைய கிளப்பிட்டாரே....
ம்ம்ம் நாமா என்ன எழுதுறது.... எத நினச்சாலும்... எக்ஸாம்ல விடை தெரியாம முழிச்ச மாதிரியே... இப்பவும் முழிக்கறனே...

சரி நாகா மேல பாரத்தப்போட்டு ஒரு நல்ல நாள்ல நாமளும் ஆரம்பிச்சுடுவோம்...

ஆனா பிரபாகர், நீங்களும் சரி நாகாவும் சரி கூட படிச்ச புள்ளைவ பத்தி ஒன்னுமே சொல்லல

பிரபாகர் said...

நன்றி கதிர்...

அடுத்த பதிவுல தொடர்றது கண்டிப்பா கூட படிச்ச பொண்ணுங்களை பத்தி சொல்லவும்தான்...

பிரபாகர்.

Kumar.B said...

கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. - correct words. that was the respect what the teaches commanded

நையாண்டி நைனா said...

super nanbaa.

பிரபாகர் said...

//கடவுள் மாதிரி நினச்சுகிட்டிருந்த வாத்தியாருங்க. - correct words. that was the respect what the teaches commanded//

நண்பா...
ஒரு தனி பதிவாகவே ஒரு ஆசிரியரை பற்றி எழுத இருக்கிறேன்... 'நின்னு போச்சு ரயிலு வண்டின்னு...'

பிரபாகர்.

பிரபாகர் said...

நையாண்டி நைனா...

வரவிற்கும் விமர்சனத்திற்கும் நன்றி...

பிரபாகர்.

நாகா said...

//இங்கிலீஷ் மாலினி டீச்சர், அழகா இருப்பாங்க. தினமும் ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க. அவங்க கட்டின புடவையை மறுபடியும் பாத்ததா யாரும் சொன்னதில்லை. //

ஹூம் எங்க்ளுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்ல. ஒண்னு ரெண்டு பேரு தான், ஆனா அவங்களும் வயசானவங்க

பிரபாகர் said...

நன்றி நாகா...

மாலினி டீச்சர் எங்கிட்ட கம்ப்யூட்டர் படிச்சாங்க, அது பத்தி தனியா எழுதறேன்...

பிரபாகர்...

நாகா said...

//காதல்ங்றதே அப்போ ஒரு பெரிய கெட்ட வார்த்தை. யாரவது காதல்ன்னு சொன்னாலே, வாத்தியார்கிட்ட சொல்லி அடி வாங்கி வெச்சுடுவோம். ரெண்டு பேருக்கு இதுன்னுதான் சொல்லுவோம்.//

ஹா..ஹா..ஹா. எங்கே தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்டைகள்?

பிரபாகர் said...

//ஹா..ஹா..ஹா. எங்கே தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுப் பட்டைகள்?//

இணைக்க முயற்சித்தேன். முடியல. மீண்டும் முயற்சிக்கிறேன்...

SUMAZLA/சுமஜ்லா said...

யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//யூத்ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்//

தகவலுக்கும் உங்களின் வருகைக்கும் நன்றி...
பிரபாகர்...

Anonymous said...

A

"உழவன்" "Uzhavan" said...

ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

//ரசிக்கக்கூடிய நல்ல அனுபவப் பதிவு. யூத்துக்கு வாழ்த்துக்கள்!//

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்....

பிரபாகர்.

நாகராஜன் said...

நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். அப்படியே எனக்கும் கொசு வர்த்தியை சுத்த வைச்சுட்டீங்க. இன்னைக்கு தான் உங்க பதிவு பத்தி தெரிஞ்சுது... உங்க பழைய பதிவுகள் கொஞ்சம் படிச்சேன். நல்லா நகைச்சுவையோட எழுதியிருக்கீங்க. மத்த பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படிக்கணும்...

பிரபாகர் said...

ராசுக்குட்டி,

வருகைக்கு வந்தனம்...

பிரபாகர்.

சங்கர் தியாகராஜன் said...

தம்பி "Interesting Blog" விருதில் உன்னை இனைத்துள்ளேன். நிறைய எழுது.

பிரபாகர் said...

அன்புக்கு நன்றி அண்ணா...

நன்றாக எழுதி உங்களின் நிலைப்பாட்டை மெய்யாக்குவேன்.

தம்பி...

SenthilNathan Koothan said...

excellent man. thanks to remember our school days.

SenthilNathan Koothan said...

நண்பா, நமது பள்ளி நினைவுகளை நினைவு கூர்ந்தததுற்கு நன்றி. தண்டபாணி, ஜோசப், மாலினி டீச்சர் இதை படித்தால் மிகவும் பெருமை படுவார்கள்

பிரபாகர் said...

நண்பா,

பள்ளி நினைவுகள் இரண்டையும் அப்படியே படிச்சுடு...

பிரபாகர்.

sambasivamoorthy said...

Hi Prabhagar,
Really Nice caption - sutatha? illa athuva varutha?

I appreciate your efforts now Malliyakarai became talk of the town. From that high school I too learned a lot. I have passed bit paper to the examination halls, read out the answer loudly to get attentions of the girls with my friends even twice police was chasing us. those flash backs came into my mind on reading this. Pataiyan n chanda taught me a lot too. I hope you understand!

You have good writing ability. I admire it keep going on it we will follow you.....

Cheers.

பிரபாகர் said...

நன்றி மூர்த்தி...

சுட்டதுதான், என் மனசுல இருந்து....


பட்டயன், சந்தா, திருப்பதி, செந்தில் நாதன், பெஸ்கி, போன்டா,அரசநத்தம் இந்திரா,.. இன்னும் நிறைய நினைவில் இருக்கு... விரைவில் பதிக்கிறேன்...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB