ஹலோ..வணக்கம் பிரதர் நல்லாருக்கீங்களா?

|

ஒரு சமயத்துல நாம நல்லா பேசறோம், பயங்கரமா பேச்சு திறமை இருக்கு, வாயிலயே ஜெயிச்சிடலாம்னு நெனச்சிகிட்டிருந்தேன், அந்த புண்ணியவான பாக்கற வரைக்கும்.

ஈரோடு வரைக்கும் போயிட்டு திரும்ப ஆத்தூர் வர்றப்போ திருச்செங்கோட்டுல பஸ் கொஞ்ச நேரம் நின்னது.

முழுசும் படிச்சி இங்கிலீஷ் நாலேட்ஜ வளத்துக்கனும்னு தினமும் வாங்கி ஸ்போர்ட்ஸ் காலத்த அதுவும் கிரிக்கெட்ட மட்டும் படிக்கிற ஹிந்து பேப்பர்ல மூனாவது தடவையா சச்சின் சென்சுரியை பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.

'வணக்கம் பிரதர், நல்லாருக்கீங்களா?' குரல் கேட்டு திரும்ப, சிரிச்ச முகத்தோட ஒரு இளைஞர்.

'நீங்க'ன்னு இழுத்தேன், எங்கேயும் பாத்த மாதிரி இல்ல.

'நான் உங்க தம்பியோட ஃபிரண்டு'

'ஓ, திவாவோட ஃபிரண்டா?'

'ஆமா, திவா நல்லாருக்காரா?'

'நல்லாருக்கான், பைண்டிங் வேலையெல்லாம் விட்டுட்டு இப்போ தறியை பாத்துகிட்டு இருக்கான். ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?'

'பைண்டிங் விஷயமா பிரஸுக்கு வரும் போது பழக்கம், நீங்க பாக்கறதுக்கு அவரு மாதிரியே இருக்கீங்க'

'ஆமா நிறைய பேர் அப்படித்தான் சொல்லுவாங்க. அவன் கொஞ்சம் என்னவிட கலரா இருப்பான்'

'இருந்தாலும் நீங்கதான் பர்சனாலிடியா இருக்கீங்க' ன்னாரு.

இதுலேயே உஷாராயிருக்க வேனாமா? ஜிவ்வுனு ஏற, பேச்சு தொடர்ந்துச்சி.

அப்போல்லாம் செல் ஃபோன் கிடையாது.

'திவாகர பாக்கனும் போல இருக்கு, ஆமா அவருக்கு கல்யாணம் எல்லாம் எப்போ பண்றீங்க பிரதர்' ங்கவும் லேசா சந்தேகம் வந்துச்சி.

'கல்யாணம் பண்ணி குழந்தயே இருக்கு உங்களுக்கு தெரியாதா?' ன்னு கேட்டேன்.

'சொல்லவே இல்லைங்க பிரதர். என்ன சுத்தமா மறந்துட்டாரு. நம்பர் கொடுங்க கண்டிப்பா அவருகிட்ட பேசனும்'.

'அதே நம்பர் தான், பழசு உங்ககிட்ட இருக்கில்ல?' ன்னு கேட்க,

'இருக்கு பிரதர், ஒரு சின்ன ஹெல்ப், பஸ்ஸு கிளம்ப போகுது. சரக்கு எடுக்க வந்தேன், கொஞ்சம் காசு பத்தல. ஒரு தேர்ட்டி ருபீஸ் கொடுத்தீங்கன்னா, திவாகர்கிட்ட கொடுத்துடுவேன், ப்ளீஸ்...'

அப்போதான் பேர கேட்டேன்.

'சுரேஷ், ஆத்தூர்னு சொல்லுங்க கண்டிப்பா அவருக்கு தெரியும்' னு சொல்லிட்டு கொடுத்த முப்பது ரூபாய வாங்கிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு.

கொஞ்சம் நடந்ததையெல்லாம் யோசிச்சு பாத்தப்போ எல்லா தகவலையும் நான் தான் மடத்தனமா சொல்லியிருக்கிறேன்னு தெரிஞ்சது.

மனசே கேக்கலை. வந்து தம்பிகிட்ட சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிச்சான். 'உன்னையே ஒருத்தன் சாதாரணமா ஏமாத்தியிருக்கான்னா, அவன் பெரிய ஆளுதான்' னு சொன்னான்.

அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு பஸ்ஸில பெரம்பலூர்ல, 'ஹலோ வணக்கம் பிரதர், நல்லாருக்கீங்களா?' ன்னு ஒரு குரல்.

சிரிப்போட ஒரு இளைஞன்.

'நல்லால்ல' ன்னு சொல்லிட்டு திரும்பவும் ஸ்போர்ட்ஸ் காலத்துல மூழ்கிட்டேன்.

சாயங்காலம் என் தம்பி, 'அண்ணா என் ஃபிரண்டு ரவி உன்னை பாத்து பேசினானாம், சரியா கூட பேசாம மூஞ்சை திருப்பிகிட்டியாம்' னு சொல்ல

அவனை எரிக்கிற மாதிரி பாக்க, அவன் லேசா சிரிக்க, ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

சூப்பரா இருக்கு நண்பா....

பிரபாகர் said...

//நையாண்டி நைனா said...
சூப்பரா இருக்கு நண்பா....//

நன்றி நண்பரே,

உங்க புதிரை இன்னும் யோசிச்சிகிட்டு தான் இருக்கேன், பதிலோட பின்னூட்டம் போடலாம்னு.... ஆனா முடியல...

யாசவி said...

:-)

பிரபாகர் said...

வரவிற்கும் கருத்துக்கும் வந்தனம் யாசவி...

பாலகுமார் said...

வணக்கம் பிரபாகர், நல்லாருக்கீங்களா? :)

பிரபாகர் said...

நீங்க, திவாவோட ஃபிரண்டா?

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா,

வரவிற்கு நன்றி பாலகுமார்...

பிரபாகர்.

நிகழ்காலத்தில்... said...

'ஹலோ வணக்கம் பிரதர், நல்லாருக்கீங்கள?'


:)))

நிகழ்காலத்தில்... said...

'நான் உங்க தம்பியோட ஃபிரண்டு'

பிரபாகர் said...

//நிகழ்காலத்தில்... said...
'நான் உங்க தம்பியோட ஃபிரண்டு'//

வாங்க நண்பா வாங்க...

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க?

அடிக்கடி வாங்க, உங்களின் கருத்தை எழுதுங்க....

cheena (சீனா) said...

நல்லாவே இருக்கு - இனிமே நீங்களும் தம்பியும் சேந்தே போங்க எங்கே போணாலும் - சரியா

பிரபாகர் said...

//நல்லாவே இருக்கு - இனிமே நீங்களும் தம்பியும் சேந்தே போங்க எங்கே போணாலும் - சரியா//
வாங்க நண்பா....

வரவிற்கு ஆயிர்ம் நன்றிகள்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு...

நாகராஜன் said...

ஆ... ஆ... ஆ... சூப்பருங்கோவ்... நல்லா தான் ஏமாத்தியிருக்கார் அந்த பிரதர்.

பிரபாகர் said...

வணக்கம் ராசுக்குட்டி. நீங்கள் ஒவ்வொருமுறையும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவது என்னை மேலும் நன்றாக எழுத தூண்டுகிறது.

நாகராஜன் said...

ஆ... இது என்ன... உடனே பதில் எழுதிட்டீங்களே... உண்மையிலுமே நல்லா சுவராசியமா எழுதறீங்க பிரபாகர். இப்படியே தொடர்ந்து எழுதிட்டு இருங்க. நல்லா இருக்கு. கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் உங்க பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடுவேன்.

இன்னும் உங்களுடைய பழைய பதிவுகள் கொஞ்சம் படிக்க வேண்டியது பாக்கி இருக்குதுங்க. எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு சொல்லறேன்.

பிரபாகர் said...

//ஆ... இது என்ன... உடனே பதில் எழுதிட்டீங்களே... //

பதில் மரியாதை உடனே செய்யறது தான் நம்ம வழக்கம். நன்றி ராசுகுட்டி...

நாகா said...

இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா பிரதர்? என்னோட அக்கவுண்ட் நம்பர் அனுப்பறேன் ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்புங்களேன்..

சுரேஷ், ஆத்தூர்...

பிரபாகர் said...

//இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா பிரதர்? என்னோட அக்கவுண்ட் நம்பர் அனுப்பறேன் ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்புங்களேன்..

சுரேஷ், ஆத்தூர்.//

முப்பதோட போச்சுன்னு நினைச்சேன்.... இன்னும் விடாது கருப்பு போலிருக்கு....

நன்றி நாகா...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

sambasivamoorthy said...

பிரபாகர்!!
நீங்க எதையும் பிளான் பண்ணி செயுரிங்கே. ரொம்ப அப்பாவியா வேறா இருக்கிங்க

பிரபாகர் said...

வணக்கம் மூர்த்தி....

என்ன பண்றது, எல்லா நேரமும் விவரமா இருக்க முடியறதில்லையே...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB