பக்கத்து வீட்டுல தெரிஞ்ச அக்கா முழுகாம இருந்தாங்க. மொத ரெண்டும் பொண்ணு.
அப்போ நான் 'கண்டிப்பா உங்களுக்கு மூனாவது பையன் தான்'னு அடிச்சு சொன்னேன்.
எப்பவும் நாம சொல்லறத ரொம்ப நம்பற அம்மா, 'செல்வி, கண்டிப்பா உனக்கு பையந்தான் பொறக்கும், பிரபு சொன்னா அப்படியே பலிக்கும்' னு பிட்ட போடவும் சொன்ன மாதிரியே நட்ந்துச்சி.
அதுக்கப்புறம் கொஞ்சம் யோசிச்சி, அவங்க தலைமுறை ரெண்டையும் அலசி பாத்து ஏதோ சொல்ல எல்லாமே பலிச்சிகிட்டு இருந்துச்சி.(பெருசா ஒன்னுமில்ல, ஒத்தயா ரெட்டையா தான். கொஞ்சம் யோசிக்கிற மாதிரி காமிக்கனுமில்ல)
சொந்த பந்தத்துல ஓரளவுக்கு பாப்புலர் ஆயிட்டேன்.
ரெண்டாந்தாரமா வாக்கப்பட்ட அத்தை மகளுக்கு காண்டுல ரெண்டு தடவையும் பையன்னு சொன்னேன்.(மொத தாரத்துக்கு நாலு பசங்க), சரியாவே இருந்தது.
ஆனா ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன், எப்போ தப்பா போகுதோ அப்பவே சொல்றதில்லன்னு.
சொந்தக்கார மாமா பொண்ணு எனக்கு நல்ல ஃபிரண்டு. ஒரே வயசு. நாலு வயசிலேயே ரெண்டு பேரும் ஒன்னா கட்டி புடிச்சு நிக்கிற ஃபோட்டோ ரெண்டு பேரோட வீட்டுலயும் இருக்கும்.
அது ரொம்ப ஜாலி டைப். கொஞ்சம் கூட வெக்கப்படாம பேசும். சில நேரங்கள்ல நான் தான் நெளிய வேண்டியிருக்கும்.
நான் வீட்டுல இருக்கிறேன்னா உடனே வந்துடும் பாட்டி இல்லாம இருந்தா.
பாட்டி, ஆளு இருந்தானா வந்துடறா பாருன்ன்னு முனகிட்டு கூலா 'இங்க என்ன வேல, போடி உங்க வீட்டுக்கு' ன்னு முடுக்கி விட்டுடும்.
அது வேல பாத்துகிட்டிருந்த ஸ்கூலோட வாத்தியார லவ் பண்ணி, ஸ்கூல் ஓனர் ஆயிடுச்சி.
முழுகாம இருக்கும்போது 'பிரபு எல்லாருக்கும் சொல்றியே, எனக்கு என்ன குழந்தன்னு சொல்லு பாக்கலாம்' னு கேட்டுச்சி.
பளிச்சுன்னு 'பொண்ணு' ன்னு சொன்னேன், அது தான் அவங்க வீட்டுல முதல் பொண்ணுங்கற தைரியத்துல.
'நீ பொறாமையில சொல்றே, எனக்கு கண்டிப்பா பையந்தான்' னுட்டு போயிடுச்சு.
அப்புறம் காலேஜ் போயிட்டு எக்ஸாம் முடிச்சு லீவ்ல வந்தப்போ ஆயா 'நீ சொன்ன மாதிரியே பொண் குழந்த பொறந்துருக்கு, ஆஸ்பத்திரியில போயி பாத்துட்டு வா' ன்னாங்க.
ஹார்லிக்ஸ், பழமெல்லாம் வாங்கிட்டு பாக்க போனேன்.
பெட்டுல உட்காந்து இருந்துச்சி. கொஞ்சம் தள்ளி அத்தை அவஙக சம்மந்தி சொந்தக்காரங்களோட நான் வந்தத கவனிக்காம சுவரசியமா பேசிட்டிருந்துச்சி.
மாமா பொண்ணு என்ன பாத்துட்டு 'வா பிரபு' ன்னு சொல்லிட்டு, டக்குனு முகத்த கோவமா வெச்சிகிட்டு
'எனக்கு பொண்ணு பொறக்கறதுக்கு நீதான் காரணம்' னு சொல்லிச்சி.
பகீர்னு ஆயிடுச்சி. 'நான் எப்படி' ன்னேன்.
'ஆமா பொண்ணு பொறக்கும்னு நீதானே உறுதியா சொன்னே' ன்னுச்சு.
'நல்ல வேளை பக்கத்துல யாரும் கேக்கலை, சொல்லும்போது தெளிவா சொல்லு' ன்னேன்.
அத்த என்ன பாத்துட்டு அவங்களை இருக்க சொல்லிட்டு,
'வா பிரபு, நல்லருக்கியா' ன்னுச்சி.
கையில வாங்கிட்டு வந்தத கொடுத்துட்டு, குழந்தய துக்கி கையில வெச்சுகிட்டேன்.
'அம்மா பிரபுதான் பொண்ணு பிறக்க காரணம்' னு திரும்பவும் சொல்ல,
'லூசு மாதிரி பேசாத புள்ள' ன்னு அத்த அதட்டுச்சி.
சரி, ஜோசியம் சொல்ற மேட்டர் என்ன ஆச்சுங்கறீங்களா?
கஸின் சிஸ்டர் ஒண்ணு 'அண்ணா எனக்கு என்ன குழந்த சொல்லுங்க பாக்கலாம்' னு கேக்க,
'பையந்தான்' னு சொன்னேன், ரொம்ப யோசிச்சு.
'சிக்கிகிட்டீங்களா, ஸ்கேன் பண்ணி பாத்துடோம் பொண்ணு' ன்னு சொல்லவும், அன்னியோட நிப்பாட்டிட்டேன்.
16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
The flow is very good. you have the spontaneous flow of words. Good. Keep it up.
//Sampathkumar said...
The flow is very good. you have the spontaneous flow of words. Good. Keep it up.//
எல்லாம் உங்களின் அன்பும் ஆதரவினாலும்தான்.
பிரபாகர்.
Nice write-up!
"கஸின் சிஸ்டர்" is incorrect.
Hope you would correct it!
//"கஸின் சிஸ்டர்" is incorrect.//
ஜோ, 'கேட்ச் பிடி' ங்கற மாதிரி கிராமத்துல பேச்சு வாக்கில இது என்னோட சிஸ்டர், கஸின் சிஸ்டர்னு சொல்வோம்.
அப்படியே எழுத்திட்டேன். மாத்தனும்னா மாத்திடறேன்.
பிரபாகர்.
நகைச்சுவையுடன் கூடிய அனுபப்பகிர்வு உங்களுக்கு நன்றாகவே வருகிறது..
கீ இட் அப்!!
சூப்பர் சார்.. லேட்டா வந்ததுக்கு சாரி, வேலை சற்று அதிகம்
//நகைச்சுவையுடன் கூடிய அனுபப்பகிர்வு உங்களுக்கு நன்றாகவே வருகிறது..
கீ இட் அப்!//
நன்றி கலையரசன். எல்லாம் உங்களை போன்ற நம்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் உக்கமும்தான்...
பிரபாகர்.
//சூப்பர் சார்.. லேட்டா வந்ததுக்கு சாரி, வேலை சற்று அதிகம்//
நாகா லேட்டா வந்தாலும், வந்து நம்மள படிச்சு கருத்து சொல்லுவதே, பெரிய விஷயம்... நன்றி நாகா...
பிரபாகர்.
கொஞ்ச காலத்துக்கு ஸ்கேன்னரா இருந்து இருக்கீங்க. நல்ல சூப்பரா எழுதி இருக்கீங்க.
//கொஞ்ச காலத்துக்கு ஸ்கேன்னரா இருந்து இருக்கீங்க. நல்ல சூப்பரா எழுதி இருக்கீங்க.//
நன்றி மணி....
நிறைய நீங்களும் எழுதுங்க...
பிரபாகர்.
உங்களுக்கு அளித்திருக்கிறேன் சுவாரஸ்ய பதிவு விருது!
//உங்களுக்கு அளித்திருக்கிறேன் சுவாரஸ்ய பதிவு விருது!//
நன்றி ஜோ,
நன்றாக எழுத வேண்டும் எனும் பொறுப்பினை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்களின் மேலான அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...
பிரபாகர்.
ஆங்கிலத்தில் மாமா, சித்தப்பா இரண்டுமே அங்கிள் தான், அதனால் கசின் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது, கசின் சிஸ்டர் என்பது இந்தியர்களின் கண்டுபிடிப்பு.
அது சரி, இது போல எத்தனை குழந்தைகளுக்கு நீங்கள் காரணம்?
//அதனால் கசின் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது, கசின் சிஸ்டர் என்பது இந்தியர்களின் கண்டுபிடிப்பு.
அது சரி, இது போல எத்தனை குழந்தைகளுக்கு நீங்கள் காரணம்?//
தலைவா,
எதோ தெரியாம எழுத்திட்டேன். சத்தியமா கசின் சிஸ்டர்னு சொல்லவே மட்டேன்.
ஆளை மாட்ட விட்டுடுவீங்க போல இருக்கு.
32 தடவ வரைக்கும் சரியா சொல்லிட்டிருந்தேன்... அதுக்கப்புறம், எனக்கு நான் கெஸ் பண்ணி எல்லாத்துகிட்டயும் சொல்லியிருந்த மாதிரி பையன்னு டாக்டர் தான் சொன்னாங்க...
பிரபாகர்.
அருமை பிரபாகர்.... சலசலக்கும் நீரோடை போன்ற நடை
//அருமை பிரபாகர்.... சலசலக்கும் நீரோடை போன்ற நடை//
நன்றி கதிர்.
எல்லாம் உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவால் தான்.
பிரபாக
Post a Comment