பக்கத்து வீட்டுல இருக்கிற என்னோட அத்தை, புருஷன் கூட சேந்து வாழாததனால எப்பவும் மன விரக்தியோட இருப்பாங்க.
அப்போதான் அவங்களுக்கு சாமி வர ஆரம்பிச்சுது.
வந்தா அவங்க பயங்கரமா முடிய விரிச்சி போட்டுட்டு ஆடுவாங்களாம், எல்லாத்தயும் பேரை சொல்லி மிரட்டுவாங்களாம், எல்லாரும் நடுங்கிகிட்டு இருப்பாங்களாம். பாத்தவங்க சொன்னது.
அவங்களோட கடைசி தம்பி என் மேல பாசமா இருப்பான், அன்புன்னு பேரு.
'அன்பு, நான் சாமியாடறத பாக்கனும், வந்தா உடனே சொல்லியனுப்பு, இல்லன்னா நீயே வந்து கூட்டிட்டு போ' ன்னேன்.
'அதெல்லாம் சும்மாண்ணே, பாக்கனும் அவ்வளோ தானே, வர்ற வெள்ளிக்கிழம கண்டிப்பா வரும்' னான்.
நான் 'எப்படி அவ்வளொ கரெக்டா சொல்றே' ன்னேன்.
'சரியா நீங்க வெள்ளி சயங்காலம் எட்டு மணிக்கு வந்துடுங்க நேர்ல பாக்கலாம்' னான்.
ரெண்டு நாள் கழிச்சி காலேஜ் விட்டு எட்டு பத்து வாக்குல வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.
வழக்கத்தவிட ஒரு மணி நேரம் லேட், டிபார்ட்மென்ட் ஃபங்ஷன் பத்தி பேசிட்டிருந்ததில நேரமாயிடுச்சி.
அன்பு என்ன ரெண்டு மூனு தடவ பாத்துட்டு போனதா சொன்னாங்க.
அப்போதான் ஞாபகம் வந்துச்சி வெள்ளிக்கிழமைன்னு.
வேகமா டிரஸ்ஸ கூட மாத்தாம ஓடினேன்.
நல்ல கூட்டம், அத்தை சாமி வந்து ஆடிகிட்டு இருந்துச்சி, பாதி முடிஞ்சுடுச்சி போலிருக்கு.
ஒருத்தர் எழுந்திரிச்சி பவ்வியமா, 'சாமி எனக்கு குழந்தையே இல்ல, என்ன பரிகாரம்'னு கேக்க,
'ஒழுங்கா ஒன் பொண்டாட்டிகிட்ட படுடா' னு நச்சுனு சாமி சொல்லுச்சி.
'இன்னொருத்தர் காட்டுல வெள்ளாமையே இல்ல' ன்னாரு.
'ஒனக்கு மட்டுமா ஊருக்கே இல்ல, ஆத்தா என்ன கோவப்படுயிருக்கீங்களே? எப்படிடா விளையும்' னுச்சி. கேட்டவரு வயசு அறுவதுக்கு மேல இருக்கும்.
'அத்த' ன்னு ஏதோ கேக்க ஆரம்பிச்சேன்.
'டேய் சாமின்னு சொல்லுடா' ன்னுச்சி, எப்பவும் கண்ணுன்னு மரியாதையா கூப்புடுற அத்தை இல்லயில்ல சாமி...
'சாமி பரிட்சை எழுதியிருக்கேன், ரிசல்ட் எப்படியிருக்கும்' னேன்.
'எல்லாத்துலயும் தொன்னூறுக்கு மேல வாங்குவே, ஆல் பாஸ்' னு சொன்னது.
சான்ஸே இல்ல, நான் கேட்டது எழுதுன அஞ்சில மூனாவது பாஸ் பண்ணுவேனான்னு தான்.
ஒரு வயசான அம்மா 'சாமி, எங்க வீட்டுல ஒரு சொம்பு காணாப்போயிடுச்சி எடுத்தது யாருன்னு சொல்லு' ங்கவும்,
'இந்த வீட்டுல ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையே காணும், மூடிட்டு ஒக்காரு' ன்னுச்சி.
'சாமி மழையே இல்லையே' ன்னு ஒரு இளவட்டம் கேக்க,
'இன்னும் அரை மணி நேரத்துல மழை ஊத்தப்போவுது' னுச்சி.
அன்பு சட்டுனு, 'கேட்டது போதும் சாமி இப்போ மலையேறப்போகுது' ன்னான்.
டக்குனு ஆட்டத்த நிறுத்திட்டு, திரு நீர எடுத்துச்சி.
வீட்டுக்கு வேளியேதான் எல்லாரும் இருந்தோம், அண்ணந்து பாத்தேன், வானம் பளிச்சுன்னு இருந்துச்சி, பவுர்ணமி நிலா வெளிச்சம்.
அன்பு நைசா எங்கிட்ட வந்தான். 'அண்ணா இப்போ பாரேன், மொதல்ல எங்க வீட்டு ஆளுங்களுக்கு நீறு கொடுக்கும், மத்தவங்களுக்கு அப்புறம்தான்' னான்.
அதே மாதிரி நடந்துச்சி. தேடி தேடி அவங்க வீட்டு ஆளுங்களுக்கே மொதல்ல கொடுத்துச்சி.
மத்தவங்களுக்கு அப்புறமா கொடுத்துட்டு, கற்பூரத்தை முழுங்கி மலை ஏறிடுச்சி.
'எப்படி தம்பி அசத்துற, எல்லாத்தையும் கரெக்டா சொல்றே' ன்னேன்.
'ரொம்ப சிம்பிள், நீங்க சொன்ன துல இருந்து தினமும் அக்கா காதுல விழற மாதிரி அக்காவுக்கு வெள்ளிக்கிழம சாமி வரும்னு சொல்லிட்டு இருந்தேன்' னான்.
இருபது நிமிஷம் பேசிட்டு இருந்துட்டு வேளிய வந்தா வானம் இருட்டி இருந்துச்சி.
சட சடன்னு மழை பேஞ்சி பக்கத்து வீடுன்னாலும் போறதுக்குள்ள தெப்பலா நனைஞ்சிட்டேன்.
11 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
brother i never belive in god.. but...The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive.. like this incident
brother i never belive in god.. but...The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive.. like this incident
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
ஆப்பு அண்ணே, வருகைக்கு நன்றி...
பிரபாகர்...
இன்னும் நெறயப்பேரு எங்கூருல சாமியாடிட்டுத்தான் இருக்காங்க. ஆப்பண்ணன் சாமியாடறதப் பாத்தா, நம்ம எல்லாம் பிரபலமாயிருவோம்னு நெனக்கறேன் :)
கரெக்ட் நாகா,
அண்ணே ரொம்ப ஸ்பீடாதான் இருக்காரு...
தப்புன்னா அண்ணன் சொல்றத கேட்டு திருத்திக்க வேண்டியதுதான்...
பிரபாகர்...
பிரபாகர் கலக்கல். சாமியை பழிச்சா சாமி கண்ணை குத்திடும். சொல்லிட்டேன்.
நம்ம கதையில கடைசியில மழை எப்படி பெய்தது? எல்லாம் சாமி அருள்... கடைசி வரியால சாமி என்னை மன்னிச்சுடும்...
நன்றி மணி...
Funny & Interesting...
:)). நல்லா இருக்குங்க பிரபாகர். மழை எப்படி?
சுவாரஸியமா இருக்கு. ஆனா, இது புனைவா இல்லை நிகழ்வா?!
Post a Comment