எங்கேயோ படிச்சது - 4 (திருடனும் அவன் மகனும்)

|

அந்த ஊர்ல அவன் பயங்கரமான திருடன். இதுநாள் வரைக்கும் அவன் திருடித்தான் வாழ்க்கையை நடத்திகிட்டிருக்கான், ஆனா ஒருத்தருக்கும் எள்ளளவும் தெரியாது, தொழில்ல அவ்வளோ சுத்தம்.


அவனுக்கேத்த பொண்டாட்டி, அழகான ஒரு பையன். சந்தோஷமாத்தான் இருந்தான் திருட்டு தொழில செஞ்சாலும்.

வன்முறையில இறங்கமாட்டான், வசதி கம்மியானவங்க வீட்டில கை வெக்க மாட்டான். எடுக்கிற பணத்துல வீட்டு செலவுக்கு வெச்சிகிட்டு, கொஞ்சம் கோயில் உண்டியல்ல போட்டுட்டு மத்தத உதவின்ற பேர்ல கொடுத்துடுவான்.

அவனுக்கு ரொம்ப நாளாவே ஒரு குறை, தான் மகன் அவனை மாதிரி இல்லையேன்னு.

அவன் ஆத்திச்சூடி, திருக்குறள், நல்வழின்னு பள்ளிக்கூடத்துல சொல்லி தர்றத படிச்சுட்டு அப்பாகிட்டயே அத பத்தியே பேச ஆரம்பிச்சுட்டான்.

ஒருநாள் குறள்ல இருந்து களவாமையை பத்தி அவ்வளோ ஆர்வமா அப்பாகிட்ட சொன்னான்னா பாத்துக்கோங்களேன்.

அவன் படிக்கலைங்கறதனால மகன் படிச்சு சொல்றத எல்லாம் பெருமிதமா கேப்பான்.

ஆனாலும் களவாமையை பத்தி பேசுனது கொஞ்சம் நெஞ்ச குத்தற மாதிரி இருக்கவும் கொஞ்சம் வருத்தப்பட்டான்.

கடைசியா ஒரு முடிவுக்கு வந்து பையைன கூட்டிட்டு ஊருக்கு ஒதுக்குப் புறமா இருக்குற ஒரு வேப்ப மரத்துக்கு கூட்டிட்டு போனான்.

'மகனே நான் ஒனக்கு தொழில் ரகசியத்த சொல்லித்தர்றேன்' னு சொல்லி அவனை முதுகில சுமந்துகிட்டு கிடு கிடுன்னு மரத்து மேல ஏறினான்.

உச்சில ஒரு கூடு, அதுல ஒரு காக்கா உட்காந்து முட்டைகளை அடை காத்துகிட்டு இருந்துச்சி.

அந்த காக்காவுக்கே தெரியாம அஞ்சு முட்டைங்களை எடுத்து கையில வெச்சி இறுக மூடிட்டு விடுவிடுன்னு கீழ வந்தான்.

பையன கீழ இறக்கிவிட்டுட்டு, 'மகனே காக்க கூடு கட்டியிருந்த அந்த மரத்துல ஏறவே முடியாது. ஏற விடாம துரத்தும். ஆனா உன்ன முதுகில வெச்சிகிட்டு அதுக்கே தெரியா மரத்துல ஏறி, அடை காத்துகிட்டே இருக்கும்போதே அஞ்சு முட்டையை அள்ளிகிட்டு வந்திருக்கேன் பாருன்னு கையை திறந்து காட்டினவன் ஆடிப்போயிட்டான்.

ஏன்னா மூனு தான் இருந்துச்சி. ரெண்டை காணோம். திகைச்சி போயி நிக்க, பையன் இந்தப்பான்னு அவன் கையை திறந்து காமிக்க அங்க ரெண்டும் இருந்துச்சி.

இதுதான் நாம எப்பவோ படிச்சது. முடிவு நமக்கு உடன்படாததால, வேற மாதிரியா யோசிச்சதுல இதோ கீழ நம்ம சொந்த முடிவு. எது நல்லாருக்குன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.

அப்பாவ இருக்க சொல்லிட்டு அந்த மூனு முட்டையையும் வாங்கிகிட்டு பையன் அவன விட படு வேகமா மேல ஏறி அந்த காக்காவுக்கே தெரியாம திரும்ப கூட்டுலயே வெச்சுட்டு வந்தான்.

திருடன் அவனை கட்டி தழுவி, இவனை நல்லா படிக்க வெச்சு ஒரு அரசாங்க வேலையில சேக்கனும்னு முடிவு செஞ்சான்...

4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கோவி.கண்ணன் said...

//அப்பாவ இருக்க சொல்லிட்டு அந்த மூனு முட்டையையும் வாங்கிகிட்டு பையன் அவன விட படு வேகமா மேல ஏறி அந்த காக்காவுக்கே தெரியாம திரும்ப கூட்டுலயே வெச்சுட்டு வந்தான்.

திருடன் அவனை கட்டி தழுவி, இவனை நல்லா படிக்க வெச்சு ஒரு அரசாங்க வேலையில சேக்கனும்னு முடிவு செஞ்சான்...//

உங்கள் முடிவும் சிறப்பாகவும், நேயத்துடனும் இருக்கு.

****

நாளைக்கு மாலை 4:30 - 7:00 பூன்லே ஜூராங்க் சென்ட்ரல் பூங்காவில் நடக்கும் பதிவர் சந்திப்புக்கு வந்துவிடுங்க.

பிரபாகர் said...

//உங்கள் முடிவும் சிறப்பாகவும், நேயத்துடனும் இருக்கு.//

நன்றி கண்ணன்.... கண்டிப்பாய் வருகிறேன், உங்களையெல்லாம் சந்திக்க மிக ஆவலாய் இருக்கிறேன்..

பிரபாகர்...

நையாண்டி நைனா said...

good story.

பிரபாகர் said...

//நையாண்டி நைனா said...
good story.//

வரவிற்கு நன்றி...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB