செல் ஃபோன்

|

செல் ஃபோன் வந்த புதுசு. டவுன்ல மட்டும்தான் டவர் கிடைக்கும். கிராமத்துல கிடைக்காது.

மணி என்ன பாக்க வந்தப்போ ஒரு புது தகவல சொன்னான், என்னால நம்ப முடியல.

அவனோட சித்தி பையன் வந்திருக்கானாம், செல் ஃபோன்லாம் வெச்சிருக்கானாம்,ஓனர் அடிக்கடி ஃபோன் பண்ணி என்ன பன்றேன்னு கேக்கராறாம்.

எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. நம்ம ஊர்ல சுட்டு போட்டாலும் சிக்னல் வராதே, எப்படி அவன் பேசறான்னு.

மணிகிட்ட சந்தேகத்தை சொன்னேன். 'போன வாரம் கூட துபாயிலிருந்து மாமா வந்தப்போ, நாமதானே செக் பண்ணினோம், ஸ்கூலுக்கு அந்தாண்ட போனாதானே சிக்னல் கிடைச்சது' ன்னேன்.

'இல்ல பிரபு, கண்ணால பாத்தேன், வீட்டுக்குள்ள இருக்கும்போதே கால் வந்துச்சி, பேசினான்'னான்.

'சரி சரி, நேர்ல பாத்துடுவோம்னு சொல்லிட்டு ஒரு மணிநேரம் கழிச்சி மணி வீட்டுக்கு போனேன்.

சித்தி பையன் செல்வமணி செல் ஃபோனை வெச்சு நல்லா படம் காட்டிட்டு இருந்தான்.

பாத்தவுடனே சிரிச்சான். எப்படின்னா இருக்கீங்கன்னான்.

அத்தோட விட்டிருக்கலாம், 'எம்.சி.ஏ படிச்சிருக்கீங்க..., உங்ககிட்ட செல் இல்லயா' ன்னான்.

தலையாட்டிட்டு 'எங்க உன் போன கொஞ்சம் கொடு பாத்துட்டு தர்றேன்'னு கேட்டதுக்கு,

'ரெண்டு நிமிஷம், ஓனர் போன் பன்ற நேரம், பேசிட்டு தர்ரேன்'னான்.

அதே மாதிரி ரிங் அடிச்சது, நாங்கல்லாம் வேடிக்கை பாக்கறோமான்னு பாத்துட்டு, பேசிட்டு கொடுத்தான்.

சிக்னல் ஒரு பாயின்ட் கூட இல்ல, எப்படிடான்னு யோசிச்சேன்.

டக்குனு எனக்கு புரிஞ்சிடுச்சி. இன்கமிங் கால் லிஸ்ட்ல ஏதும் வந்த மாதிரியே நம்பர் இல்ல.

'திரும்ப எப்போ உனக்கு கால் வரும், ஒரு மணி நேரம் கழிச்சா'ன்னேன்.

அவனுக்கும் புரிஞ்சிடுச்சி. அண்ணா ஒரு டவுட் கேக்கனும்னு தனியா கூட்டிட்டு வந்து,

'மாட்டி உட்டுடாத, அலாரம் செட் பண்ணி அடிக்கும்போதுதான் பேசிட்டு இருந்தேன்'னான்.

'இந்த விளம்பரமெல்லாம் நமக்கு தேவையா'ன்னு கவுண்டமணி பாணியில நினைச்சேன்.

இப்பவும் அவனை பாத்தா 'தம்பி, நல்லாயிருக்கியா? இப்போ என்னா போன் வெச்சிருக்க' ம்பேன். வெட்கப்பட்டு சிரிப்பான்.

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நாகா said...

ஹாஹாஹா.. நீங்கள் ஏன் தமிழ்மணம், தமிழிஷ்ல் உங்கள் பதிவை இணைப்பதில்லை?

பிரபாகர் said...

//தமிழிஷ்ல் உங்கள் பதிவை இணைப்பதில்லை?//
நன்றி நாகா,

கண்டிப்பாய் உடனே செய்கிறேன்...

பிரபாகர்...

ச ம ர ன் said...

nalla irukku

பிரபாகர் said...

வரவிற்கு நன்றி ச ம ர ன்

பிரபாகர்...

தியாகராஜன் said...

உங்க நண்பர் "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"ன்னு சொல்லலியா?

பிரபாகர் said...

வரவிற்கு நன்றி தியாகு...

இப்போன்னா சாதாரணமா சொல்லியிருப்பாங்க... வயசில சின்ன பையன், மரியாதை கொடுக்கற மாதிரி நடிப்பான். அதனால இல்லை...

பிரபாகர்...

தமிழ். சரவணன் said...

இதே போல் பிரபலமான ஒரு நடிகை செல் வந்த புதிதில் ஒரு ஐந்து நட்சத்திர ஒட்டலில் உள்ள உணவரையில் பலர் பாக்கும் படி செல்போனி காதில் வைத்து கதைத்துக்கொண்டிருக்கும்(??) பொழுது அந்த நேரம் பார்த்து காதில் வைத்துள்ள செல் டெலிபோன் மனிபோல் சிரிக்க அரம்பித்துவிட்டது..அசடு வலிந்து அசிங்க்பபட்டு போனாராம்... பின்னர் தான் தெரிந்ததாம் பார்டி கால் வரமாலே செல்லில் பேசிகொண்டிருந்தது

பிரபாகர் said...

சரவணன்,

இந்த தகவலையே நீங்கள் ஒரு பதிவாக்கியிருக்கலாம்...

பகிர்தலில் தான் நிறைய விஷயங்கள் நமக்கு கிடைக்கும். நன்றி...

பிரபாகர்.

Joe said...

//
//தமிழிஷ்ல் உங்கள் பதிவை இணைப்பதில்லை?//
நன்றி நாகா,

கண்டிப்பாய் உடனே செய்கிறேன்...//

Still not done! too bad! ;-)

oh btw, interesting incident!

பிரபாகர் said...

ஜோ,

ஒவ்வொன்றாக இணைத்து வருகிறேன்...

பிரபாகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB