நான் ஆறாவது படிக்கும்போது நடந்தது இது. அம்மாவோட மாமா ஒருத்தர் குடும்ப கட்டுப்பாட்டு அதிகாரியா இருந்தாரு.
பேருக்குத்தான் அந்த வேலை, வரிசையா எட்டு குழந்தைங்க. (அது அப்போ, கடைசியில பன்னண்டுல தான் நிறுத்தினாரு)
வீட்டுக்கு வந்திருந்தப்போ அம்மா அவருகிட்ட
'ஏன் மாமா இப்படி இருக்கீங்க? படிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா? இத்தனை குழந்தைங்க தேவையா' ன்னாங்க.
'இல்லப்பா, குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்க சொல்றேன், ஆனா கேட்கவே மாட்டுக்கிறா. மீறி பண்ணுனா நாண்டுகிட்டு செத்துடுவேன்னு பயமுறுத்துறா' ன்னுட்டு,
'சரி கடவுள் விட்ட வழின்னு அவ போக்குலயே விட்டுட்டேன்' ன்னாரு.
'சரி மாமா அவதான் கேக்க மாட்டுக்கிறா, நீங்களாவது பண்ணிக்கக் கூடாதா?' ன்னு கேட்டாங்க.
அவரு எதோ சொல்லப்போக, ரெண்டு நாளைக்கு முன்னால அம்மா சித்திகிட்ட பேசிட்டு இருந்தாங்க, யாருக்கோ ஆப்ரேசன் செஞ்சும் குழந்த உண்டாயிடுச்சின்னு.
அத மனசுல வெச்சிகிட்டு முந்திரி கொட்டை மாதிரி சொன்னேன்,
'அதுக்கப்புறமும் குழந்த பிறந்தா பிரச்சனை ஆயிடுமில்ல' ன்னு.
அம்மா என்ன ஏன் சப்புன்னு முதுகில வெச்சாங்கன்னு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சது.
மிச்சர்கடை
4 weeks ago
8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
hoo...haa...haaa....
//hoo...haa...haaa....//
நையாண்டி நைனா, உங்கள் ரசிப்புக்கு நன்றி...
பிரபாகர்...
superrrrrrrr
வரவிற்கு நன்றி பாஸ்கி...
பிரபாகர்...
//
அம்மாவோட மாமா ஒருத்தர் குடும்ப கட்டுப்பாட்டு அதிகாரியா இருந்தாரு.
பேருக்குத்தான் அந்த வேலை, வரிசையா எட்டு குழந்தைங்க. (அது அப்போ, கடைசியில பன்னண்டுல தான் நிறுத்தினாரு)
//
வெளங்கிடும்யா!
வரவிற்கு நன்றி ஜோ...
பிரபாகர்...
கலக்கு... கலக்கு...
//Shankar said...
கலக்கு... கலக்கு.../
வரவிற்கு நன்றி அண்ணா...
பிரபாகர்.
Post a Comment