தாத்தாவுக்கு கடிதம்...

|

என் அன்பான தாத்தாவுக்கு...

மடல் எழுதும் காலம் மடிந்து போய் கிடக்கும் இந்த மெயில் காலத்தில், மடலாய் உங்கள் பேரனின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.

ரத்தாஷி வருஷம், தை மாசம் பதினாலாம் தேதி பிறந்தேன் என கணீரென சொல்லுவீர்கள். எண்பத்தேழு வருடங்களை கடந்து வந்திருக்கிறீர்கள்... உங்களுக்கும் எனக்கும் தான் எப்பேர்ப்பட்ட பந்தம், ஒட்டுதல்... கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கிச் சென்று நினைத்துப்பார்க்கிறேன்.

எட்டாவது வயதில் உங்களுடன் ஐக்கியமாகி, இன்றும் இயைந்து இருக்கிறேன் எள்ளளவும் குறையாத அலாதியான அன்புடனும், அபிரிதமான பாசத்துடனும்.

சிறு வயதில் அப்பா தவிர்த்து இருவேறுபட்ட நபர்களின் கண்காணிப்பில் வளர்ந்தேன். மிகக்கண்டிப்பாய் நீங்கள், மிக மிக கண்டிப்பாய், அதே சமயம் அதீத பாசத்துடன் மாமா. மாமாவோடு இருந்தது ஒரு வருட காலம் மட்டுமே, படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரையில். முழுதாய் ஆறு வருடங்கள் உங்களோடு இருந்து குருகுலத்தில் பயின்றது எல்லாம் அந்த இறைவனின் செயல், ஓ... உங்களுக்கு கடவுள் என்றாலே பிடிக்காதல்லவா?

வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவர் மாமா என்றால் அதனை வளர்த்து விட்டவர் நீங்கள். அந்த காலக்கட்டத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்ததையும், பாட சாலைக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு படிக்க சென்றதையும், படித்து முடித்தபின் வேலைக்கு சேரச் சொல்லி கட்டாயப்படுத்தியதையும், வீட்டில் அனுப்ப மறுத்துவிட உங்களுக்கும் ஆர்வமில்லாததால் மலைப்பகுதியில் தலைமறைவாய் இருந்ததையும் சுவைபட சொல்லியது இன்றும் நினைவில் இருக்கிறது.

உங்களின் இளம் பிராயத்தை என்னமாய் உற்சாகத் துள்ளலோடு பகிர்ந்துகொள்வீர்கள்! உங்கள் நண்பர் புதூர் அழகப்பனுடன் ராஜாஜி முன்னிலையில் 'காந்தித் தாத்தா, காந்தித் தாத்தா சுயராச்சியம் எங்களுக்கு வாங்கித் தா, தா...' என மேடையில் பாடியதை சொன்னதோடு அல்லாமல் எனக்கும் சொல்லித்தந்தீர்கள்.

நீங்கள் கற்ற அனைத்து பாடல்களையும் எனக்கு சொல்லித்தந்து மனனம் செய்ய வைத்தீர்கள். 'அயோத்தி என்றொரு ராச்சியமாம், அதனை தசரதர் ஆண்டனராம்' என்ற சிறுவர்களுக்கான ராமாயணப் பாட்டினையும், 'கும்பல் கும்பலாய் பெரும் கூட்டம் கூட்டமாய்...', 'உற்றவரே என்னை பெற்றவரே', 'என்ன செய்வேன் மைத்துனா இந்தவிதிக்கேது செய்வேன் மைத்துனா' என ராவணன் புலம்புவதையும், 'ஒரு நாள் சிறு நரி ஒன்று' எனும் ஏமாந்த நரிக்கதையினையும், மற்றும் பல கொலை சிந்துக்களையும் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றும் வரிகள் மறக்காமல் நினைவில் இருக்கின்றன என்பதற்கு காரணம் நீங்கள் சொல்லித்தந்த விதம். யாரேனும் வீட்டுக்கு விருந்தினராய் வந்தால் அவரின் முன் எல்லாவற்றையும் பாடச் சொல்லி, மேடைப் பயத்தை பயந்தோடச் செய்தீர்; பேசுவதற்கும் தயார்படுத்தினீர்;

எப்படி நிறுத்தி, வெட்டி படிப்பது என்பதை தினமும் ஒரு பாடத்தினை படிக்கச் சொல்லி தமிழைப் பிழையின்றி படிக்க கற்றுத் தந்தீர், (இன்று என் வலையுக வாழ்வியல் ஆசானிடம் பிழைக்காக கொட்டுப்படுகிறேன் என்பது தனிக் கதை). படிக்கும் போது ஒரு வார்த்தையினை திரும்பப் படித்தாலும் ’நங்’ என கொட்டுவீர்களே, நினைத்தால் இப்போதும் வலிப்பதுபோல் இருக்கிறது.

நீங்கள் கடவுள் மறுப்புக்கொள்கையை இன்று வரை பின்பற்றி வந்தாலும் யாரையும் வற்புறுத்தியது கிடையாது. வீட்டில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு தரும் திருநீறினை எடுத்து, உங்களையே கவனிக்கும் என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து, கீழே போட்டுவிடுவீர்கள். இருந்தாலும் மிக முக்கிய தருணங்களில் வைக்கப்படும் நீரினையோ சந்தனத்தையோ மரியாதையாக அந்த சடங்கு முடியும் வரை வைத்திருப்பீர்கள். மாட்டுப் பொங்கலின் போது மட்டும் எல்லா வேலைகளையும் முன்னின்று செய்வீர்கள், படைப்பது உட்பட.

பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்ட நீங்கள் என் அம்மாவினை, உங்களின் முதல் மகளை திருமணம் முடிந்த பின்னும் படித்து முடித்த பின் தான் புகுந்தகத்துக்கு அனுப்பி வைத்ததை இன்றும் ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவர் நினைவு கூறாத நாளில்லை.

சிலகாலம் கறுப்புச் சட்டை அணிந்து கூட்டங்களில் கலந்து கொண்டீர்கள். உங்களைப்பார்க்க வந்தபோது அதனை என்னிடம் போட்டு காண்பித்து எப்படி இருக்கிறது என கேட்டபோது 'சூப்பர்' என்றவுடன் உங்கள் முகத்தில்தான் எத்தனை சிரிப்பு? 'என்னை புரிந்துகொண்டவன் உலகத்திலேயே நீ ஒருத்தன்தான்' என சொல்லி என்னையும் அந்த சட்டையினை அணியச் சொல்லி அழகு பார்த்தீர்களே!.

'கல்லெல்லாம் சாமியா, மண்ணெல்லாம் பூமியா....ஆடு வெட்ட சொல்லுதா, கோழி வெட்ட சொல்லுதா நட்டு வெச்ச கல்லு சாமி' எனும் பாடலை சொல்லித்தந்து சிறு வயதில் நட்டுவைத்து விளையாட்டாய் கும்பிட்ட ஒன்றுதான் இன்று இருக்கும் பிரபலமான ஒரு கோவில் என மூடப்பழக்கங்களைஎல்லாம் சொல்லி என்னையும் கடவுள்  இல்லை எனும் அளவிற்கு ஆரம்பத்தில் மாற்றினீர்களே!

எழுபது வயது வரை உங்களின் தலை முடி கருப்பாகத்தான் இருந்தது. இப்போதும் சில கருப்பு முடிகளோடுதான் இருக்கிறீர், கொஞ்சம் கூட இன்றும்  வழுக்கை கிடையாது. இன்றும் எல்லா பற்களும் இருக்கிறது, கடித்து உண்ண முடியவில்லை எனச் சொல்லுகிறீர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என எனக்கு சொல்லியதோடு மட்டுமல்ல, பின்பற்றியவர் ஆயிற்றே.

கல்கண்டு புத்தகத்தை ஒரு அனா விற்ற காலத்திலிருந்தே தொடர்ந்து வாங்கி வாசித்து வருவதோடு அல்லாமல் இன்றும் வார இதழ்கள், செய்தித்தாள் என இன்னும் வாசித்துத்தானே வருகிறீர்கள்! மூன்று வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள் ஒட்டினீர்களே! வயோதிகம், முடியவில்லை, ஆனாலும் மீண்டும் ஓட்டுவேன் என சென்ற முறை ஊருக்கு வந்தபோது சொன்னீர்களே!

வரவுக்கு மேலே செலவு செய்யாதே, சிக்கனமாயிரு என இதுவரை கடைபிடிக்காத ஒன்றை வலியுறுத்தி, கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என உதாரணத்தோடு சொன்னீர்கள், இன்னமும் பேசும்போதெல்லாம் சொல்கிறீர்கள்.

வருடா வருடம் உங்களுக்கு ஒரு கவிதையினை பிறந்த நாளில் போது எழுதித்தருவேன். இந்த வருடம் உங்களுக்காக இந்த இடுகை. ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும். இந்த இடுகையினை முழுதும் படித்துக்காட்ட வேண்டும். சொல்லித்தந்த பாடல்களையெல்லாம் உங்களுக்குச் சொல்லி நீங்கள் அடையும் பூரிப்பை கண்ணால் காணவேண்டும்!

தாத்தா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்து, ஆசிர்வதித்து நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்...

ஆசி கோரும்,
பேரன்.

38 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சத்ரியன் said...

//வரவுக்கு மேலே செலவு செய்யாதே, சிக்கனமாயிரு என இதுவரை கடைபிடிக்காத ஒன்றை வலியுறுத்தி,//

நானுந்தான் சொல்(லுவே)றேன். கடைப்பிடிக்கறப்ப தானே தெரியுது அது எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டம்-னு.

சத்ரியன் said...

//தாத்தா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்து, ஆசிர்வதித்து நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்...//

டச்சிங்.. டச்சிங்...!

ஈரோடு கதிர் said...

தாத்தா...

இந்த பயபுள்ளைய...

* பத்து நிமிசத்துல பட்டுனு இடுகை எழுதக்கூடாது..

* வாரத்துக்கு மூனுக்கு மேலே எழுதக்கூடாது...

* ரொம்ப பஸ் ஓட்டக்கூடாது..

இப்படியும் கொஞ்சம் சொல்லி வளர்த்திருக்கக்கூடாதா?

சத்ரியன் said...

//ஜூனில் ஊருக்கு வரும்போது//

போயிட்டு குழந்தைகளையும், அந்த வயதில் மூத்த குழந்தையையும் கண்டு பேசி, மகிழ்ந்து,மகிழ்வித்து ... வாருங்கள்.

ஈரோடு கதிர் said...

//நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்//

வாழ்க உங்கள் தாத்தா!

ஈரோடு கதிர் said...

//ஜூனில் ஊருக்கு வரும்போது//

வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்

vasu balaji said...

ஹ்ம்ம்ம். இன்னும் முடியோட, நல்லி கடிச்சிதின்னு, சைக்கிளோட்ற மனுசன் தாத்தா. பாதி மண்டை மினுமினுக்க, 4 பல்ல காணாம போக்கி, 4 அடி நடந்தா இளைக்கறவரு மார்க்கண்டேயரு. எங்க போய் சொல்றதுங்க உங்க பேரன் பிரதாபம். ஜூன்ல வந்தா ஓவர் சீன் ஒடம்புக்காவாது பேராண்டின்னு சொல்லிக் குடுங்க.

கலகலப்ரியா said...

அண்ணா தாத்தாவுக்கு மடல் எழுத ஆரம்பிச்சதுக்கு ஒரு சபாஷ்... மீதி படிக்கறேன்..

சத்ரியன் said...

//வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்.//

அப்ப சைடு டிஷ் யாரு வெச்சிட்டிருப்பீங்க.?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும்//

வாங்க..வரவேற்க காத்திருக்கிறோம்

செ.சரவணக்குமார் said...

தாத்தாவுக்கு நீங்கள் எழுதிய மடல் வெகு அழகு.

//நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்//

மிகப் பிடித்திருக்கிறது உங்கள் தாத்தாவை.

கலகலப்ரியா said...

//மூன்று வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள் ஒட்டினீர்களே!//

ம்ம்... தாத்தாக்களால மட்டும் எப்டி இதெல்லாம் முடியுது...

அருமையா எழுதி இருக்கீங்கண்ணா..

settaikkaran said...

இரண்டு நாள் வெயிலில் சுற்றினால் தலைவலிக்குது, உடம்பு வலிக்குதுன்னு புலம்புகிற சனம் கூடிப்போன காலத்துலே இப்படியும் தாத்தாக்கள் இருக்கிறார்கள் என்று வாசிப்பது கூட ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையுமாய் இருக்கு! :-))

சுத்திப்போட சொல்லவும் முடியாதே, சுயமரியாதைத் தாத்தாவுக்கு....!

அன்புடன் அருணா said...

மனதைத் தொட்டது பதிவு.பூங்கொத்து.

ராஜ நடராஜன் said...

தாத்தாவுக்கு ஒரு வணக்கம்.

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி தாத்தாவைப்பற்றிய கலக்கல் பதிவு....

ரோஸ்விக் said...

தாத்தாவுக்கும், அவரது சுயமரியாதை மற்றும் பெண்கள் உரிமைக் கருத்துக்களுக்கும் வணக்கங்கள்.

தாத்தா நல்ல ஆயுளுடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமும்.

ரோஸ்விக் said...

ரசித்த பின்னூட்டங்கள்....

//ஈரோடு கதிர் said...
தாத்தா...

இந்த பயபுள்ளைய...

* பத்து நிமிசத்துல பட்டுனு இடுகை எழுதக்கூடாது..

* வாரத்துக்கு மூனுக்கு மேலே எழுதக்கூடாது...

* ரொம்ப பஸ் ஓட்டக்கூடாது..

இப்படியும் கொஞ்சம் சொல்லி வளர்த்திருக்கக்கூடாதா?
//

//’மனவிழி’சத்ரியன் said...
//வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்.//

அப்ப சைடு டிஷ் யாரு வெச்சிட்டிருப்பீங்க.?
//

:-)))))))))))))))))))))

Paleo God said...

நெகிழ்வான மடல்.!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான மடல் பிரபாகர்.

என் தாத்தா நினைவு வந்துவிட்டது எனக்கு.

அழகான பின்னூட்டங்கள் ;)

Chitra said...

very touching....... precious birthday gift... :-)

Unknown said...

நல்ல நினைவுகள்

தாராபுரத்தான் said...

தமிழுக்கே மரியாதை.....

பனித்துளி சங்கர் said...

//////வருடா வருடம் உங்களுக்கு ஒரு கவிதையினை பிறந்த நாளில் போது எழுதித்தருவேன். இந்த வருடம் உங்களுக்காக இந்த இடுகை. ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும்.////////

ஏலே பார்த்துல அந்த தாத்தா இன்னும் சில காலம் இருக்கணும் . நீயிர் கவிதை சொல்கிறேன் . கதை சொல்கிறேன் என்று சோலிய முடிச்சுப்புடாதல ஆமா சொல்லிட்டேன் .

மீண்டும் வருவேன்

கிறுக்கல்கள்/Scribbles said...

பிரபுக்கு எனது வாழ்த்துக்கள். எனது தந்தையைப் பற்றி கருத்துக்களும் நலம் வாழ வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி

மாதேவி said...

இனிய பதிவு.தாத்தாக்கு வாழ்த்துக்கள்.

சீதாம்மா said...

தாத்தாவை நினைக்கும் பேரன்
பேராண்டி , தாத்தா இன்னும் நிறைய நாட்கள் இருப்பார்.
கதை கேட்கணுமா
சீதாம்மா

பிரபாகர் said...

/
’மனவிழி’சத்ரியன் said...
//வரவுக்கு மேலே செலவு செய்யாதே, சிக்கனமாயிரு என இதுவரை கடைபிடிக்காத ஒன்றை வலியுறுத்தி,//

நானுந்தான் சொல்(லுவே)றேன். கடைப்பிடிக்கறப்ப தானே தெரியுது அது எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டம்-னு.
//
ஆமாம் நண்பா!

//
’மனவிழி’சத்ரியன் said...
//தாத்தா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்து, ஆசிர்வதித்து நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்...//

டச்சிங்.. டச்சிங்...!
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
தாத்தா...

இந்த பயபுள்ளைய...

* பத்து நிமிசத்துல பட்டுனு இடுகை எழுதக்கூடாது..

* வாரத்துக்கு மூனுக்கு மேலே எழுதக்கூடாது...

* ரொம்ப பஸ் ஓட்டக்கூடாது..

இப்படியும் கொஞ்சம் சொல்லி வளர்த்திருக்கக்கூடாதா?
//
அப்போதெல்லாம் கம்ப்யூட்டரே இல்லையில்ல!

//
’மனவிழி’சத்ரியன் said...
//ஜூனில் ஊருக்கு வரும்போது//

போயிட்டு குழந்தைகளையும், அந்த வயதில் மூத்த குழந்தையையும் கண்டு பேசி, மகிழ்ந்து,மகிழ்வித்து ... வாருங்கள்.
//
ஆம் நண்பா! கண்டிப்பாய்...

//
ஈரோடு கதிர் said...
//நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்//

வாழ்க உங்கள் தாத்தா!
//
நன்றி கதிர்...!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//ஜூனில் ஊருக்கு வரும்போது//

வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்
//
நிறைய பேர் இருக்காங்க கதிர்!

//
வானம்பாடிகள் said...
ஹ்ம்ம்ம். இன்னும் முடியோட, நல்லி கடிச்சிதின்னு, சைக்கிளோட்ற மனுசன் தாத்தா. பாதி மண்டை மினுமினுக்க, 4 பல்ல காணாம போக்கி, 4 அடி நடந்தா இளைக்கறவரு மார்க்கண்டேயரு. எங்க போய் சொல்றதுங்க உங்க பேரன் பிரதாபம். ஜூன்ல வந்தா ஓவர் சீன் ஒடம்புக்காவாது பேராண்டின்னு சொல்லிக் குடுங்க.
//
நேரில் பாருங்க அய்யா!

//
கலகலப்ரியா said...
அண்ணா தாத்தாவுக்கு மடல் எழுத ஆரம்பிச்சதுக்கு ஒரு சபாஷ்... மீதி படிக்கறேன்..
//
வாருங்கள் சகோதரி!

பிரபாகர் said...

//
’மனவிழி’சத்ரியன் said...
//வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்.//

அப்ப சைடு டிஷ் யாரு வெச்சிட்டிருப்பீங்க.?
//
வேற யாரு நம்ம நாட்டாமை கதிருதான்!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
//ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும்//

வாங்க..வரவேற்க காத்திருக்கிறோம்
//
கண்டிப்பாங்கய்யா! உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்!

//
செ.சரவணக்குமார் said...
தாத்தாவுக்கு நீங்கள் எழுதிய மடல் வெகு அழகு.

//நலமுடன் இருக்க நீங்கள் வேண்டாத, நம்பாத நான் நம்பும் இறைவனை பிரார்த்திக்கிறேன்//

மிகப் பிடித்திருக்கிறது உங்கள் தாத்தாவை.
//
நன்றி சரவணக்குமார்!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//மூன்று வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள் ஒட்டினீர்களே!//

ம்ம்... தாத்தாக்களால மட்டும் எப்டி இதெல்லாம் முடியுது...

அருமையா எழுதி இருக்கீங்கண்ணா..
//
நன்றி அன்பு சகோதரி!

//
சேட்டைக்காரன் said...
இரண்டு நாள் வெயிலில் சுற்றினால் தலைவலிக்குது, உடம்பு வலிக்குதுன்னு புலம்புகிற சனம் கூடிப்போன காலத்துலே இப்படியும் தாத்தாக்கள் இருக்கிறார்கள் என்று வாசிப்பது கூட ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையுமாய் இருக்கு! :-))

சுத்திப்போட சொல்லவும் முடியாதே, சுயமரியாதைத் தாத்தாவுக்கு....!
//
கண்டிப்பாய் நண்பா!

//
அன்புடன் அருணா said...
மனதைத் தொட்டது பதிவு.பூங்கொத்து.
//
ரொம்ப சந்தோஷம், நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
ராஜ நடராஜன் said...
தாத்தாவுக்கு ஒரு வணக்கம்.
//
ரொம்ப நன்றிங்க!

April 27, 2010 8:45 PM

//
Sangkavi said...
பங்காளி தாத்தாவைப்பற்றிய கலக்கல் பதிவு....
//
நன்றி பங்காளி!

//
ரோஸ்விக் said...
தாத்தாவுக்கும், அவரது சுயமரியாதை மற்றும் பெண்கள் உரிமைக் கருத்துக்களுக்கும் வணக்கங்கள்.

தாத்தா நல்ல ஆயுளுடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமும்.
//
ஆம் ரோஸ்விக், என் வாழ்வின் ஆசான்!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
ரசித்த பின்னூட்டங்கள்....

//ஈரோடு கதிர் said...
தாத்தா...

இந்த பயபுள்ளைய...

* பத்து நிமிசத்துல பட்டுனு இடுகை எழுதக்கூடாது..

* வாரத்துக்கு மூனுக்கு மேலே எழுதக்கூடாது...

* ரொம்ப பஸ் ஓட்டக்கூடாது..

இப்படியும் கொஞ்சம் சொல்லி வளர்த்திருக்கக்கூடாதா?
//

//’மனவிழி’சத்ரியன் said...
//வா....டி.. வா...

ஆசான் ஆப்போடு இருக்கச் சொல்றேன்.//

அப்ப சைடு டிஷ் யாரு வெச்சிட்டிருப்பீங்க.?
//

:-)))))))))))))))))))))
//
ம்.... நன்றி தம்பி!

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நெகிழ்வான மடல்.!
//
நன்றி சேம் பிளட்!

//
ச.செந்தில்வேலன் said...
அழகான மடல் பிரபாகர்.

என் தாத்தா நினைவு வந்துவிட்டது எனக்கு.

அழகான பின்னூட்டங்கள் ;)
//
நன்றி செந்தில்!

//
Chitra said...
very touching....... precious birthday gift... :-)
//
நன்றிங்க சித்ரா!

பிரபாகர் said...

//
Prabhu said...
நல்ல நினைவுகள்
//
நன்றி பிரபு!

//
தாராபுரத்தான் said...
தமிழுக்கே மரியாதை.....
//
நன்றிங்கய்யா!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////வருடா வருடம் உங்களுக்கு ஒரு கவிதையினை பிறந்த நாளில் போது எழுதித்தருவேன். இந்த வருடம் உங்களுக்காக இந்த இடுகை. ஜூனில் ஊருக்கு வரும்போது ஒரு முழு நாளை உங்களோடு கழிக்க வேண்டும்.////////

ஏலே பார்த்துல அந்த தாத்தா இன்னும் சில காலம் இருக்கணும் . நீயிர் கவிதை சொல்கிறேன் . கதை சொல்கிறேன் என்று சோலிய முடிச்சுப்புடாதல ஆமா சொல்லிட்டேன் .

மீண்டும் வருவேன்
//
நன்றி சங்கர்!

பிரபாகர் said...

//
கிறுக்கல்கள் said...
பிரபுக்கு எனது வாழ்த்துக்கள். எனது தந்தையைப் பற்றி கருத்துக்களும் நலம் வாழ வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி
//
நன்றி மாமா!

//
மாதேவி said...
இனிய பதிவு.தாத்தாக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி சகோதரி!

//
சீதாம்மா said...
தாத்தாவை நினைக்கும் பேரன்
பேராண்டி , தாத்தா இன்னும் நிறைய நாட்கள் இருப்பார்.
கதை கேட்கணுமா
சீதாம்மா
//
மிக்க நன்றிங்கம்மா!

செல்விஷங்கர் said...
This comment has been removed by the author.
 
©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB