மன்னரும் அமைச்சரும்...

|

மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது?

மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை?

மன்னர் : ஆஹா! கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்ததே ...

மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தோம்.ஒரே கூச்சலும் ஆர்ப்பட்டமாயிருந்தது. அடுத்து நீங்கள் சந்தோஷமாயிருக்கும்போது தடுப்பது நியாயமாகுமா?

மன்னர் : என் மனதை புரிந்த மந்திரி... அப்போது கில்லி விளையாட்டையல்லவா உற்சாகமாய் ரசித்துக்கொண்டிருந்தேன்... கில்லியை தூக்கிப்போட அதை குச்சியால் அடிக்க, அதைப்பிடித்து அடித்தவரை ஆட்டமிழக்கச் செய்ய... ஆஹா, என்னமாய் குயுக்திகளை கையாளுகிறார்கள்! இந்த தந்திரங்கள் எல்லாம் ராஜ தந்திரங்களுக்கும் மேலாக இருக்கிறது அமைச்சரே... ம்... தொடருங்கள்...

மந்திரி : எல்லையில் உரிய அனுமதிச்சீட்டுடன் வைத்தியத்துக்காக பக்கத்து நாட்டிலிருந்து வந்த பாட்டியை அனுமதி அளிப்பது சம்மந்தமாய் உங்களிடம் கேட்டு, உங்களின் ஆணைக்கேற்ப உள்ளே நுழையவிடாமல் துரத்திவிட்டோம் அல்லவா, அதற்காக ஒரு சில புல்லுருவிகள் பிதற்றலாய் புலம்புகிறார்கள்.

மன்னர் : ஆ... அப்படியா? அதற்கு என்ன காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள்?

மந்திரி : 'அந்த வயதான பெண்மணிக்கு ஆதரவில்லையாம், கணவர் இறந்து விட்டாராம். பல்லக்கில் தூக்கி வந்தார்களாம், பத்து நாட்கள் பயணத்தில். களைத்து வந்தவர்களை கருணையின்றி விரட்டியடித்து விட்டோமாம்.

மன்னர் : நல்ல காரியத்தைத்தானே செய்திருக்கிறோம், இல்லையென்றால் பெரும் ஆபத்தையல்லவா சந்தித்திக்க வேண்டியிருக்கும்? மகாராணியின் மன்னிப்பில்லா கோபத்துக்கு அல்லவா ஆளாகியிருப்போம்?. அந்த மூதாட்டி யார், நமது நாட்டில் மக்களுக்கு மாபாதகங்களை செய்து, நமக்கு பெரிதும் உதவியாய் இருந்த அந்த புண்ணியமூர்த்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சதிகாரனின் சொந்தமல்லவா! அதுவும் இல்லாமல் இங்கு வந்தால் அதை வைத்து இங்கே எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்? எதிரணியினரை ஒன்று சேரவிடுதல் என்றும் நமக்கு ஆபத்து அமைச்சரே!

சரி, அவரை உள்ளே விடக்கூடாது என்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச் சுவடியில் நமக்கு முன்னே ஆண்டவர்கள் குறிப்பு எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் என அறிக்கைவிட்டேனே! நான் சொல்வதையெல்லாம் சொக்குப்பொடி போட்டார்போல் கேட்கும் மக்கள் கூட்டம் நம்பவில்லையா என்ன?

மந்திரி : இது ஒரு சிலரின் பிதற்றல்கள்தாம் மன்னா!  மேலும் அவர் நம் ரத்தம்தானே என சொல்லுகிறார்களே,  அதற்கென்ன சொல்வது?

மன்னர் : அறிவற்றவர்கள்... ரத்த பந்தம் என்றால் என்ன என்பதை விளக்கி சொல்லவேண்டும், புரியாத அந்த மூடர்களுக்கு. உதாரணமாக உமது ரத்த பந்தம் என்றால் நீர், உமது பெற்றோர், நேரடி, மறைமுக மனைவிகள், உமது குழந்தைகள், பேரப்பிள்ளைகள் தாம்... இனம் வேறு, ரத்தபந்தம் வேறு. உடனடியாக கவர்ச்சிப்புயல் கன்னிகாவின் நடன நிகழ்ச்சியினை எற்பாடு செய்து அவர்களை மகிழ்வித்து இதுபோன்ற எண்ணத்தை மாற்றுவதற்கு வழி செய்யுங்கள்...

மன்னர் : ஆமாம் அறிவித்த இலவசத் திட்டங்கள் மக்களை திருப்திப் படுத்தவில்லையா என்ன? அவ்வப்போது புரட்சி, போராட்டம் என தேவையில்லாமல் பேசிக்கொண்டு, புதிதாய் சிந்திக்க வேறு ஆரம்பித்திருக்கிறார்களாமே?, இதெல்லாம் நல்லதற்கில்லை அமைச்சரே?

மந்திரி : ஆம் மன்னா! அதற்குத்தான் சூரியனைக்கானா திட்டம் என ஒரு புதிய திட்டம் வைத்திருக்கிறோம், உங்களின் ஒப்புதல் கிடைத்தால் உடன் அமுல் படுத்துவோம்.

மன்னர் : என்ன சூரியனை மறைத்து வைக்கப்போகிறோமா என்ன?

மந்திரி : இல்லை மன்னா, பிரகாசமாய் எரிய வைக்கப்போகிறோம். ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு, உடை, என எல்ல தேவைகளையும் பூர்த்தி செய்து, வீட்டை விட்டே வரத் தேவையில்லாதவாறு செய்துவிடுவோம்.

மன்னர் : இதெல்லாம் சாத்தியமா? உணவு உற்பத்திக்கு வழி எப்படி?

மந்திரி : அதைப்பற்றி நமக்கென்ன கவலை? களஞ்சியத்தில் ஓராண்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருக்கின்றன. அதை வைத்து செய்வோம். பக்கத்து நாட்டு மன்னன் அடுத்த வருடம் நம் நாட்டை கைப்பற்றும்போது பக்குவமாய் நாம் தொலைவில் உள்ள அந்த தீவினை இருக்கும் அளவற்ற செல்வங்களைக் கொண்டு வாங்கி அங்கே உமது அரசாட்சியை தொடங்கிவிடலாம்...

மன்னர் : ஆஹா அருமை, உடனே செய்யுங்கள். அப்படியே மறக்காமல் காமக்களியாட்டங்களில் கரைபுரண்டோடி, புரையோடிப்போயிருக்கும் நமது மூத்த அமைச்சர் தாண்டவராயனின் மகனுக்கு ராஜவைத்தியத்தை பக்கத்து தேசத்திலிருக்கும் பிரபல வைத்தியரிடம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாய் செய்யுங்கள்... எனக்கு இப்போ அயல் தேசத்தை சேர்ந்தவராயிருப்பினும் நம்மயெல்லாம் ஆளும் மாட்சிமை பொருந்திய மகாராணியிடம் ஒரு சந்திப்பு இருக்கிறது, பிறகு சந்திக்கலாம்!

22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. பிரபாகரா இது?

settaikkaran said...

மன்னர்களும், மந்திரிகளும் காய்நகர்த்தும் இந்த மகோன்னதமான ஜனநாயகம் தழைப்பதாக! பதிவு அருமை!

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி.....

நகைச்சுவையில் பின்றீங்களோ......

எப்படி இப்படி எல்லாம்...... சூப்பர்............

சத்ரியன் said...

பிரபா,

ஆஹா....!

ஈரோடு கதிர் said...

பிரபா....

இத இதத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்....

Chitra said...

:-))

vasu balaji said...

எங்க போய் முட்டிக்கிறது. எப்புடியோ போங்கப்பு.

ஜிஎஸ்ஆர் said...

பாரட்ட வார்த்தையில்லை நண்பா


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Unknown said...

வாரிசு பிரச்னையை வம்புக்கு இழுகிரிங்க

பனித்துளி சங்கர் said...

இவர்களை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை .
என்ன செய்வது இன்னும் சிறிது காலம் இந்த நரிகளுடன் சேர்ந்து நாமும் இந்த மண்ணில் வாழ வேண்டுமே அதை நினைத்து பார்த்து ஒவ்வொரு நாட்களையும் நகர்த்த வேண்டியிருக்கிறது .


ஏலே மக்கா மீண்டும் வருவேன் வரி வசூல் செய்ய ஆமா !

துபாய் ராஜா said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்... :((

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
ஆகா.. பிரபாகரா இது?
//
ஆம் நண்பா!

//
சேட்டைக்காரன் said...
மன்னர்களும், மந்திரிகளும் காய்நகர்த்தும் இந்த மகோன்னதமான ஜனநாயகம் தழைப்பதாக! பதிவு அருமை!
//
நன்றி என் அருமை நண்பா!

//
Sangkavi said...
பங்காளி.....

நகைச்சுவையில் பின்றீங்களோ......

எப்படி இப்படி எல்லாம்...... சூப்பர்............
//
நன்றி பங்காளி!

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
பிரபா,

ஆஹா....!
//
மிக்க நன்றி நண்பா...

//
ஈரோடு கதிர் said...
பிரபா....

இத இதத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்....
//
நன்றி கதிர்!

//
Chitra said...
:-))
//

நன்றிங்க சித்ரா!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
எங்க போய் முட்டிக்கிறது. எப்புடியோ போங்கப்பு.
//
சாரிங்கய்யா!

//
ஜிஎஸ்ஆர் said...
பாரட்ட வார்த்தையில்லை நண்பா

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்
//
ரொம்ப நன்றிங்க

//
A.சிவசங்கர் said...
வாரிசு பிரச்னையை வம்புக்கு இழுகிரிங்க
//
அப்படியா?

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இவர்களை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை .
என்ன செய்வது இன்னும் சிறிது காலம் இந்த நரிகளுடன் சேர்ந்து நாமும் இந்த மண்ணில் வாழ வேண்டுமே அதை நினைத்து பார்த்து ஒவ்வொரு நாட்களையும் நகர்த்த வேண்டியிருக்கிறது .


ஏலே மக்கா மீண்டும் வருவேன் வரி வசூல் செய்ய ஆமா !
//
வாங்க நண்பா! வணக்கம்.

//
துபாய் ராஜா said...
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்... :((
//
ஆம் ராஜா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம்... இப்படித் தான் பேசியிருப்பாங்களோ..

கொடுமைங்க எல்லாம்..

Unknown said...

ம்ம்ம்ம்ம்

நிலாமதி said...

ஆகா..பின்னிடீங்க. அட நீங்களா இது.....பாராடுக்கள்.

ரோஸ்விக் said...

மன்னராட்சி ... மன்னரா ச்சீ...

அ.சந்தர் சிங். said...

arumai.pinneettinga.super.

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
ம்ம்ம்... இப்படித் தான் பேசியிருப்பாங்களோ..

கொடுமைங்க எல்லாம்..
//
இது மாதிரியெல்லாம் எழுதறதில உடன்பாடு இல்லைங்க, இருந்தாலும் ரொம்ப கோபமாயிடுச்சி!

//
முகிலன் said...
ம்ம்ம்ம்ம்
//
நன்றி தினேஷ்...

//
நிலாமதி said...
ஆகா..பின்னிடீங்க. அட நீங்களா இது.....பாராடுக்கள்.
//
நன்றி என் அன்பு சகோதரி!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
மன்னராட்சி ... மன்னரா ச்சீ...
//

சூப்பர் புன்னூ... பின்னூட்டம்.

//
cs said...
arumai.pinneettinga.super.
//
ரொம்ப நன்றிங்க!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB