எதிர் வீட்டு திண்ணையிலிருக்கும் பாட்டியை எவருக்குமே பிடிக்காது, குறிப்பாய் என் வயது குழந்தைகளுக்கு. காரணம் எப்போதும் திட்டிகொண்டே இருக்கும், சிரித்து பார்த்ததே கிடையாது.
சிறுவர்கள் நாங்களெல்லாம் 'ஆத்தூர் கிழவி' என சப்தமாக சொல்லிவிட்டு அது முனகிக்கொண்டு குச்சியியால் அடிக்க வருவதற்குள் ஓடிவிடுவோம். சொல்வதற்கு நாங்களோ, திட்டுவதற்கு பாட்டியோ தயங்கியது கிடையாது. பாட்டிக்கு ஆத்தூர்தான் சொந்த ஊர் என்பதால் அந்தப்பெயர்..
நீளமான வீடு, வாசலில் பாட்டி இருக்கும் திண்ணை, நுழைந்ததும் ஏற்கனவே வீடாக இருந்து இடிந்து சிதிலமானதால் தாழ்வாரம், அதைத்தாண்டி சென்றால் திரும்பவும் ஒரு திண்ணை, பின்னாளில் கட்டிய அந்த புது வீட்டில் நுழைந்தால் வரவேற்பரை, ஹால், படுக்கையறை என இருக்கும்.
பாட்டியின் வாழ்க்கை அந்தத் திண்ணையிலேயே தான். படுத்தபடியோ, உட்கார்ந்தபடியோ எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். அவர்கள் வீட்டு வாசலிலும் விளையாட அனுமதிக்காது, விளையாடும்போது ஒளிவதற்கும் விடாது.
அந்த வீட்டைச் சேர்ந்த மணி என் உயிர் நண்பன். ஒரு வயது சிறியவன், ஒன்றாகவே விளையாடுவோம். பாட்டி, மணியையோ அவர்கள் வீட்டைச் சார்ந்தவர்களையோ திட்டவே திட்டாது.
மணியை அழைப்பதற்கு திண்ணை வழியாக வீட்டுக்குள் போகும் போதெல்லாம், 'வந்துட்டான் பாரு கடங்காரன், எங்க ஊட்டு புள்ளங்கள கெடுக்கறதுக்கு' என திட்டும். பாட்டிக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம்பொறுத்தம். 'போ கிழவி' என சொல்லி ஓட இன்னும் அதிகமாய் திட்டும்.
மணியோடு திரும்ப வரும்போது மெதுவாய் முனகும், 'ம்...என்னது' என மணி அதட்டினால் 'ஒன்னுமில்லடா சாமி, இந்த வீட்டுல குஞ்சி குளவான்லாம் என்ன மெரட்டுது' என்று சொல்லும்.
அம்மாவிடம் சொன்னதற்கு, 'டேய் பாவம்டா அந்த பாட்டி, ராணி மாதிரி இருந்துச்சி, இப்போ கவனிக்க நாதியில்லாம இங்க வந்து இருக்குது. எல்லாம் விதி' என்று சொன்னார்கள். சின்ன வயது, ஒன்றும் புரியவில்லை.
அன்றொருநாள் பள்ளி விட்டு வந்தவுடன், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தத்தில் யாரோ இறந்துவிட வீட்டில் யாருமே இல்லை. மணியின் வீட்டிற்கு குஷியாய் ஓடினேன், இன்று நிறைய நேரம் விளையாடலாம் என.
வழக்கமாய் 'கடங்காரா' என திட்டும் பாட்டி அன்று 'எலேய் பிரவு' என்றழைக்க ஆச்சர்யமாயும் கொஞ்சம் பயமாயும் இருந்தது, என் பெயர் கூட பாட்டிக்கு தெரியுமா என வியப்பாயிருந்தது. மெதுவாய் தடியால் அடிக்கும் தொலைவிலேயே நின்று 'என்னா பாட்டி' என்றேன், கிழவியை விடுத்து முதன் முதலாய்.
'எல்லா முண்டைங்களும் என்ன கண்டுக்காம பச்ச தண்ணிகூட கொடுக்காம போயிட்டாளுங்க, தூங்கறப்போ சாவிய மட்டும் தலைமாட்டுல வெச்சிட்டு. சாவிய தர்றேன், உள்ள போயி எனக்கு கொஞ்சம் தண்ணியும், சோறு போட்டு ஏதாச்சும் ஊத்தி எடுத்துகிட்டு வர்றியா?' எனக் கேட்க பரிதாபமாக இருந்தது.
'சரி பாட்டி' என சொல்லி உற்சாகமாய் உள்ளே போய் தட்டினை எடுத்து சாதத்தைப் போட்டு, சட்டிகளை அலசி, சாம்பார், ரசம் பொரியல் என எல்லாவற்றையும் சிறு சிறு கிண்ணங்களில் போட்டு திண்ணைக்கு எடுத்து வந்தேன்.
தனக்கென வைத்திருக்கும் தட்டில் சாப்பாட்டைப் போடச்சொல்லி, 'எனக்கு வெறும் ரசத்த மட்டும்தாம் ஊத்துவாளுங்க' என சொல்லி அவசர அவசரமாய் சாப்பிட்டது. சாப்பிடும்வரை அருகிலேயே இருந்து ஒவ்வொன்றாய் பரிமாறினேன். 'கண்ணு, எல்லாத்தையும் கழுவி அவளுவளுக்கு தெரியாம வெச்சிடு' என்று சொல்லியது.
அதன் பிறகு எங்களுக்குள் இருந்த உறவு இன்னும் அந்யோன்னியமானது. பாசமாய் எப்போது பார்த்தாலும் 'பிரவு' என கூப்பிடும். மணி வீட்டில் இல்லை எனும் தகவலைத் தந்து உள்ளே செல்லும் வேலையை தவிர்த்துவிடும். வீட்டில் ஏதாவது செய்தால் அம்மாவிடம் கேட்டு வாங்கிச் சென்று பாட்டிக்கு தருவேன். எனக்காகவும் அதற்கு தரும் பலகாரம், தின்பண்டங்களை வைத்திருந்து தரும்.
'ரொம்ப நேரம் விளையாத, கண்ட பசங்களோட சேராத, நல்லா படி' என அறிவுரைகள் சொல்லும். அதையெல்லாம் விட என் அம்மாவிடம், 'உன் பையன் ரொம்ப பெரிய ஆளா வருவான்' என சொல்ல அம்மா என்னிடம் சொல்லி சிலாகித்து போனார்கள்.
அந்த பாட்டி இறந்த அந்த நாள் இன்றும் நினைவிலிருக்கிறது. உயிர் இப்பவோ அப்பவோ என உசலாடிக்கொண்டிருக்க, 'பிரபு, மணி ரெண்டு பெரும் போயி துளசி தழை பறிச்சிகிட்டு வாங்க' எனச் சொல்ல இருவரும் வேகமாய் ஆற்றோரம் இருக்கும் பிள்ளயார் கோயிலுக்கு ஓடிச் சென்று பறித்து வந்தோம். எல்லோரும் துளசி தண்ணீர் ஊற்ற மெதுவாய் இறங்கியது. கண்கள் திறந்தே இருந்தது, வெறித்த பார்வையுடன்.
'பிரபு, உன் மேலயும் பாசமா இருக்குமே, உன் கையாலையும் ஒரு வாய் ஊத்தேன்' என ஒரு ஆயா சொல்ல சிறு ஸ்பூனில் எடுத்து ஊற்றினேன், பாதிதான் இறங்கியது.
மிச்சர்கடை
4 weeks ago
33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//////எதிர் வீட்டு திண்ணையிலிருக்கும் அந்த பாட்டியை எவருக்குமே பிடிக்காது, குறிப்பாய் என் வயது குழந்தைகளுக்கு. காரணம் எப்போதும் திட்டிகொண்டே இருக்கும், அது சிரித்து பாத்ததே கிடையாது. ///////
என்னங்க இது !
எல்லாப் பட்டியுமே இப்படித்தானா ???? நல்லா சினேகா அக்கா மாதிரி சிரிக்கிற பாட்டிகளே கிடையாதோ ?
எங்க வீட்டிலும் ஒரு பாட்டி இருக்குதுங்க அது ஒரு முறை சிரித்தது பாருங்க அதை பார்த்து பயந்து வெளிநாடு ஓடிவந்தவன் இன்னும் திரும்பிப் போகலைனா பார்த்துக்கங்களே .
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
ஹலோ பாட்டிய பார்க்க இல்லை .,பதிவை படிக்க .
// 'ஒன்னுமில்லடா சாமி, இந்த வீட்டுல குஞ்சி குளவான்லாம் என்ன மெரட்டுது' என்று சொல்லும்.//
பிரபா,
இது முற்றிலும் உண்மை. வயதானவர்களை யாரும் கண்டுக்கொள்வதே இல்லை. அவர்களின் மன உணர்வுகளைக் கூட யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல், தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அவலங்களை நானும் பலமுறை கண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம், என் பாட்டியை இப்படி தனியாக இருக்க விடக் கூடாது என எண்ணிக்கொள்வேன்.
அதே போல், என் பாட்டி இறக்கும் வரை அனைவரும் ஒன்றாகவே, நன்றாகவே இருந்தோம்.
பாவப்பட்ட ஜென்மம் நான் மட்டும் (‘பிழைப்புக்காக’ வெளிநாடு வந்துவிட்டதால்) பாட்டி இறப்பின் போது ஊரில் இல்லாமல் மேலும் பாவங்களைச் சுமக்கும்படி நேர்ந்து விட்டது.
நல்லாருக்குப் பிரவு:))
/பிரபு, உன் மேலயும் பாசமா இருக்குமே, உன் கையாலையும் ஒரு வாய் ஊத்தேன்' என ஒரு ஆயா சொல்ல சிறு ஸ்பூனில் எடுத்து ஊற்றினேன், பாதிதான் இறங்கியது./
ங்கொய்யால. சிங்கை வந்தா தண்ணி குடுங்க ப்ரபான்னு கேட்றமாட்டனே:))
நல்லாருக்கு அண்ணா... ம்ம்... பாட்டிகள் வாழ்க்கை அங்க கஷ்டம்தான் போல..
இன்றும் பாட்டி என்றல் ஒதுக்கி வைக்கும் நபர்கள் தான் அதிகம் அருமையான பதிவு சார் ..
அருமையான பகிர்வு... பிரவு
பங்காளி....
கண்கலங்கிருச்சு பாட்டியின் கதையைப் படித்ததும்.....
பிரவு என்பதைப் படித்ததும் எங்க பக்கத்து வீட்டு பாட்டி தனது பேரன்களை கோவு(கோபு), கோவி(கோபி)என்று அழைப்பது நினைவுக்கு வந்தது.
நல்ல பகிர்வு.இதே போன்ற பாட்டிகளையும் தாத்தாக்களையும் எங்க ஊரிலும் பார்த்திருக்கிறேன்.
நடையில் பழைய பிரபா எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு பிரவு அவசர பதிவோ?.
கதையோட்டம் இயல்பாக இருக்கிறது!!
உருக்கம்! நெகிழ்ச்சி! கலங்க வைத்த ஒரு பதிவு! ஆத்தூர் பாட்டி நெஞ்சில் நிறைந்தார்!
இது கதையா நெஜமா
நெகிழ வச்சிட்டீங்க தல...
நல்லாயிருக்கு பிரபாகர்...
//பாதிதான் இறங்கியது.//
எங்களுக்குள் முழுதாக இறங்கிவிட்டது.
நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் மனதின் எண்ண ஓட்டங்களை.
அருமையான பகிர்வு
நன்றாக இருந்தது.
பாட்டியின் நினைவு அழகாக..
எங்க ஆத்தா நினைவிற்கு வந்துவிட்டது எனக்கு !!
மொத்தத்துல பாட்டிக சொல்லை தட்டாத பிரவு. :-)
பரவாயில்ல கிழவியெல்லாம் இன்னும் நினைவில் இருக்கு. :-))
படிக்கும் பொழுது அழுதேன்
நானும் பாட்டியாக இருப்பதாலா?
சீதாம்மா
அருமை
கண்கள் கலங்க வைத்த நெகிழ்ச்சியான பதிவு. பழுத்த மட்டையை பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம் என்ற பழமொழியை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
நல்ல பகிர்வு நன்றி
கண்கலங்கிருச்சு பாட்டியின் கதையைப் படித்ததும்....
Nice post Prabahar,we have old ladies who are angry for unknown reasons.You've made the Paati your frnd.You have felt the loss of an elderly.Authoor means which Authoor-Salem,Dindigul-Tirunelveli?
//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாருங்கள் நண்பா!
//
சத்ரியன் said...
// 'ஒன்னுமில்லடா சாமி, இந்த வீட்டுல குஞ்சி குளவான்லாம் என்ன மெரட்டுது' என்று சொல்லும்.//
பிரபா,
இது முற்றிலும் உண்மை. வயதானவர்களை யாரும் கண்டுக்கொள்வதே இல்லை. அவர்களின் மன உணர்வுகளைக் கூட யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல், தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அவலங்களை நானும் பலமுறை கண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம், என் பாட்டியை இப்படி தனியாக இருக்க விடக் கூடாது என எண்ணிக்கொள்வேன்.
அதே போல், என் பாட்டி இறக்கும் வரை அனைவரும் ஒன்றாகவே, நன்றாகவே இருந்தோம்.
பாவப்பட்ட ஜென்மம் நான் மட்டும் (‘பிழைப்புக்காக’ வெளிநாடு வந்துவிட்டதால்) பாட்டி இறப்பின் போது ஊரில் இல்லாமல் மேலும் பாவங்களைச் சுமக்கும்படி நேர்ந்து விட்டது.
//
ஆம் நண்பா! இதெல்லாம் நாம் கொடுக்கும் விலை....
//
வானம்பாடிகள் said...
நல்லாருக்குப் பிரவு:))
/பிரபு, உன் மேலயும் பாசமா இருக்குமே, உன் கையாலையும் ஒரு வாய் ஊத்தேன்' என ஒரு ஆயா சொல்ல சிறு ஸ்பூனில் எடுத்து ஊற்றினேன், பாதிதான் இறங்கியது./
ங்கொய்யால. சிங்கை வந்தா தண்ணி குடுங்க ப்ரபான்னு கேட்றமாட்டனே:))
//
நன்றிங்கய்யா! என் கையால தண்ணி வாங்கி குடிக்கலாம், ஸ்பூன்லதான் கூடாது... ஹி....ஹி....
//
கலகலப்ரியா said...
நல்லாருக்கு அண்ணா... ம்ம்... பாட்டிகள் வாழ்க்கை அங்க கஷ்டம்தான் போல..
//
ஆமாம் சகோதரி! நன்றி.
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
இன்றும் பாட்டி என்றல் ஒதுக்கி வைக்கும் நபர்கள் தான் அதிகம் அருமையான பதிவு சார் ..
//
நன்றி ஜெய்...
//
ஈரோடு கதிர் said...
அருமையான பகிர்வு... பிரவு
//
நன்றி கதிரு....
//
Sangkavi said...
பங்காளி....
கண்கலங்கிருச்சு பாட்டியின் கதையைப் படித்ததும்.....
//
நன்றி பங்காளி..
//
நாடோடி இலக்கியன் said...
பிரவு என்பதைப் படித்ததும் எங்க பக்கத்து வீட்டு பாட்டி தனது பேரன்களை கோவு(கோபு), கோவி(கோபி)என்று அழைப்பது நினைவுக்கு வந்தது.
நல்ல பகிர்வு.இதே போன்ற பாட்டிகளையும் தாத்தாக்களையும் எங்க ஊரிலும் பார்த்திருக்கிறேன்.
நடையில் பழைய பிரபா எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு பிரவு அவசர பதிவோ?.
//
உங்களின் அறிவுறுத்தலுக்குப்பின் சரி செய்திருக்கிறென் பாரி...
//
சைவகொத்துப்பரோட்டா said...
கதையோட்டம் இயல்பாக இருக்கிறது!!
//
நன்றி அன் அன்பு நண்பரே!
//
சேட்டைக்காரன் said...
உருக்கம்! நெகிழ்ச்சி! கலங்க வைத்த ஒரு பதிவு! ஆத்தூர் பாட்டி நெஞ்சில் நிறைந்தார்!
//
நன்றி நண்பா!
//
சின்ன அம்மிணி said...
இது கதையா நெஜமா
//
உண்மைக்கதைங்க... பிரவு நாந்தான்...
//
புலவன் புலிகேசி said...
நெகிழ வச்சிட்டீங்க தல...
//
நன்றி புலிகேசி...
//
பட்டாபட்டி.. said...
நல்லாயிருக்கு பிரபாகர்...
//
நன்றி பட்டா...
//
அக்பர் said...
//பாதிதான் இறங்கியது.//
எங்களுக்குள் முழுதாக இறங்கிவிட்டது.
நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் மனதின் எண்ண ஓட்டங்களை.
//
நன்றி என் அருமை சினேகிதா!
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமையான பகிர்வு
//
நன்றிங்கய்யா...
//
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
நன்றாக இருந்தது.
//
ரொம்ப நன்றிங்க....
//
ச.செந்தில்வேலன் said...
பாட்டியின் நினைவு அழகாக..
எங்க ஆத்தா நினைவிற்கு வந்துவிட்டது எனக்கு !!
//
நன்றி செந்தில்வேலன், அன்பிற்கு, கருத்துக்கு...
//
ரோஸ்விக் said...
மொத்தத்துல பாட்டிக சொல்லை தட்டாத பிரவு. :-)
பரவாயில்ல கிழவியெல்லாம் இன்னும் நினைவில் இருக்கு. :-))
//
நன்றி தம்பி!
//
சீதாம்மா said...
படிக்கும் பொழுது அழுதேன்
நானும் பாட்டியாக இருப்பதாலா?
சீதாம்மா
//
ரொம்ப நன்றிங்கம்மா, உங்கள் வருகைக்கு.
//
*இயற்கை ராஜி* said...
அருமை
//
நன்றிங்க...
//
துபாய் ராஜா said...
கண்கள் கலங்க வைத்த நெகிழ்ச்சியான பதிவு. பழுத்த மட்டையை பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம் என்ற பழமொழியை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
//
நன்றி ரஜா... உண்மையதான்.
//
Sabarinathan Arthanari said...
நல்ல பகிர்வு நன்றி
//
ரொம்ப நன்றிங்க....
//
Sachanaa said...
கண்கலங்கிருச்சு பாட்டியின் கதையைப் படித்ததும்....
//
ம்.... எழுதிட்டு எனக்கும்தான்...
//
Muniappan Pakkangal said...
Nice post Prabahar,we have old ladies who are angry for unknown reasons.You've made the Paati your frnd.You have felt the loss of an elderly.Authoor means which Authoor-Salem,Dindigul-Tirunelveli?
//
வணக்கம் சார். சேலம் ஆத்தூர்....
Post a Comment