இடுகை எழுத அழைத்த நண்பர் முகிலன் எனக்கு பிடித்த படங்கள் பத்தினையும் சொல்லிவிட்டதால், கொஞ்சம் நினைவுகளை பின்னே செலுத்தி யோசித்ததில் சிறு வயதுமுதல் கவர்ந்த படங்களை ஒரு தொகுப்பாய்...
விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
பாசமலர்
நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது சிவாஜியும் படங்களுக்கு மட்டுமே தாத்தாவின் அனுமதி கிடைக்கும். கிடைத்ததும், வீட்டில் எல்லோரும் அருகிலிருக்கும் மல்லியகரை அண்ணாமலை தியேட்டரில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சென்று பார்த்த படம் பாசமலர். அண்ணன் தங்கை உறவுக்கான ஒரு அழகிய கவிதையாய் பிம்சிங்கால் எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் பார்வை போனபின் தேம்பி அழ ஆரம்பித்தவன், துண்டு நனைய அழுதுகொண்டிருந்தேன். திரையையும் என்னையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தார்கள். இன்றும் அய்யா என்னை ஸ்நேக் பிரபா அழைப்பது போல் என் தம்பிகள், மாமாவின் பிள்ளைகள் எல்லாம் மலர்களைப்போல் அண்ணன் என பாடி நக்கலாய் கலாய்ப்பார்கள். இன்று பார்த்தாலும் அழுகையாய் வருகிறது, காலமெல்லாம் என்னை ஓட்டுவதற்கு காரணமாயிருக்கிறதே என...
கர்ணன்
சிறு வயதில் வரலாற்று படங்கள் என்றால் என் மாமா தவறாமல் அழைத்துத் சென்றுவிடுவார். அப்போது பார்த்த மயில்ராவணன், தசாவதாரம் என பல படங்களில் என்னை கவர்ந்த படம் சிவாஜியின் கர்ணன். மகாபாரதத்தில் கர்ணனின் பாத்திரப்படைப்பு எல்லோரையும் சென்றடைய காரணமாயிருந்த ஒரு படம். அந்த சிறு வயதில் அதன் பிரம்மாண்டம் மிகவும் கவர அதிசயித்துப் பார்த்தேன். குதிரைகள், யானைகள், போர் என எல்லாம் சிலிர்ப்பாய் இருந்தது. அதில் கடைசியில் கர்ணன் (சிவாஜி) போரில் தேர்க்காலில் அம்பு பட்டு கிடந்ததில் இருந்து கிருஷ்ணர் (ராமராவ் என்பது பிறகுதான் தெரியும்) உள்ளத்தில் நல்ல உள்ளம்... எனப் பாடிவந்து தர்மத்தை யாசகமாகப் பெற்று சாகும் வரை தேம்பி தேம்பி, மாமா அது நடிப்புடா என அன்பாய், அதட்டி சொன்னாலும், புத்திக்கு புரிந்தும் மனசுக்கு புரியாமல் அழுததும், படம் பார்ப்பவர்களில் பலர் என்னையே பார்த்ததும் (ஹி..ஹி... ரெண்டாவது தடவ) இன்றும் நினைவுக்கு வருவதால் இதுவும் பிடித்த படங்களில் ஒரு இடம்.
அச்சமில்லை அச்சமில்லை.
சிறு வயதில் தனியே சென்று பார்த்த முதல் படம். இந்த படத்திற்கு சென்றதன் காரணம் இது வெளியாகி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். ஆத்தூர் வேல்முருகன் தியேட்டர்தான் அப்போது நிறைய பிரபலம். படம் போடுவதற்கு முன் அந்த மெருன் கலர் ஸ்கிரீன் சுருங்கிக்கொண்டு விளக்குகள் அணைந்து ஏறி மேலே செல்லுவதைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்த படம். டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருந்தபோது தம்பி இந்த படம் உனக்கெல்லாம் புரியாது என ஒரு பெரியவர் சொல்ல, பைக்குள் இருந்த விக்கிரமாதித்தன் கதைகள் பெரிய எழுத்து புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து அவரைப் பொருட்படுத்தாமல் பார்த்தேன். ஒரு நேர்மையான மனிதனை (ராஜேஷ்) அரசியல் எப்படி பாழ்ப்படுத்துகிறது எனபதைப் பற்றி சொன்னது சிறுவனானாலும் அப்போதே பிடித்திருந்தது. இந்தப் படத்தின் ஓடுகிற தண்ணியில, ஆவாரம்பூ இன்னும் அடிக்கடி கேட்கும் எனது அனைத்து இசைப்பான்களிலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
வாழ்வே மாயம்
ஒரு அழகான காதல் கதை... கமல் விரட்டி விரட்டி ஸ்ரீதேவியை காதலிப்பார். பின் தனக்கு கேன்சர் எனத் தெரிந்தவுடன் காதலிக்க உதவிய அதே விலைமாது ஸ்ரீப்ரியாவின் உதவியால் வெறுக்கவும் பயன்படுத்தி... வசனங்கள் பளிச்சென இருக்கும். பாலாஜியின் தயாரிப்பில் வந்த படம். இவரின் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் கதாநாயகியின் பெயர் ராஜா, ராதா எனத்தான் இருக்கும். இதில் கமல் ராஜா, ஸ்ரீப்ரியா ராதா. இந்த படத்தை இன்று பார்த்தாலும் கண்கள் கலங்கிவிடும். ஆர்வக்கோளாறில் சன் டிவியில் தனியே ஹாலில் வாழ்வே மாயம் என கமல் பாடும் கிளைமாக்சை கண்களில் நீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தேன், மனைவியும் மகனும் உள்ளே படித்துக்கொண்டிருந்தார்கள் என்ற நம்பிக்கையில். திடீரென ஹா, ஹா என சிரிப்புடன் எனது மகன், மனைவி முன்னால் வர, அன்று வழிந்தது இன்றும் பசுமையாய் நினைவில். நம்ம வாண்டு அழுவதைப்பார்த்துவிட்டு நைசாக அம்மாவிடம் சொல்லி அழைத்து வந்தது அப்புறம்தான் தெரிந்தது. நீலவான ஓடையில்... எனும் கங்கைஅமரனால் இசையமைக்கப்பட்டு இளையராஜாதான் என நிறைய பேர் நம்பும் பாடல் இடம் பெற்றது இந்த படத்தில் தான்.
குரு சிஷ்யன்
குரு சிஷ்யன்
என் தம்பியோடு பார்த்த இரண்டாவது படம். (காக்கிச்சட்டை முதல் படம்). அவன் எட்டாவது படிக்கின்ற சமயம். இந்த படத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்க்கவேண்டும் என முடிவு செய்து பலவிதமான திட்டங்கள் வகுத்து தம்பியை மீன் பிடிக்கப்போகிறோம் என சொல்லச் சொல்லி, டியூசன் சென்ற என்னோடு வந்து இணைய ஆத்தூர் சென்று பார்த்தோம். ரொம்ப ரசித்து சிரித்துப் பார்த்து பரோட்டா சாப்பிட்டுவிட்டு அவனை முதலில் அனுப்பி அடுத்த பஸ்ஸில் வீட்டிற்கு போனேன். என் தம்பி கண்கள் கலங்கி வாசலில் உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்ததும் உள்ளே ஓடி அப்பா அண்ணன் வந்தாச்சி என சொல்ல, அப்பாவின் கேள்விக்கு பளிச்சென சினிமாவுக்கு தம்பியோடுதான் சென்றேன் என சொல்லி தப்பித்தேன். அப்பா அடிக்காததால் தம்பிக்கு ஏமாற்றம். தம்பி மாமாவின் கடையில் தூண்டிலை வைத்துவிட்டு வர, பஸ் ஏறுவதையும் பார்த்து அப்பாவிடம் தகவல் சொல்ல... ஆனால் இன்று வரை குரு சிஷ்யர்களாக இருவரும் மாறி இருக்க ஒரு ஆரம்பக்காரணம் இந்த படம். கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் பாடல், சோவின் அரசியல் காமெடி என எல்லாம் அருமையாய் இருக்கும். ரஜினி முழுக்க காமடியாய் நடித்தது தில்லுமுல்லுவிற்கு பிறகு இதுதான் என எண்ணுகிறேன்.
இடுகை நீளமாக செல்வதால் இரு பிரிவுகளாக்கி க.மு க.பி என (அதாங்க, கல்லூரிக்கு முன், கல்லூரிக்குப்பின்) எழுதத் தோன்ற அடுத்த பகுதியில் இன்னும் ஐந்து கல்லூரிக்குப் பின்.
இதைத் தொடர அழைப்பது ஐவரை.
சங்கமித்ரன் (சங்கவி) (அருவா மேட்டர் நிறைய எதிர்பார்க்கிறேன்)
கதிர் (நோ எஸ்கேப்... ஒரு மாறுதலுக்காவது எழுதித்தான் ஆகவேண்டும்)
செந்தில் வேலன் (இதையும் உங்களின் அழகான பார்வையில்)
சேட்டைக்காரன் (சொல்லவே வேணாம், எப்படி பண்ணுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்)
மயில் (சகோதரி உங்களின் பார்வையை பகிர்ந்துகொள்ளுங்கள்)
30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
ஆஹா! நான் தான் ஃபர்ஸ்ட்டா? :-)))
நல்லாயிருக்கு! ஆனா, "ஏ" படத்தைப் பத்தி எழுதக்கூடாதுன்னா என்னை மாதிரி "யூ" படமே பார்க்காதவங்க என்ன செய்வாங்க? கொஞ்சம் கொறச்சுக்கக்கூடாதா....? :-))))
Present Praba
//"ஏ" படத்தைப் பத்தி எழுதக்கூடாதுன்னா என்னை மாதிரி "யூ" படமே பார்க்காதவங்க என்ன செய்வாங்க? கொஞ்சம் கொறச்சுக்கக்கூடாதா....? :-))))//
சேட்டை,
உனக்காக பிரபாவிடம் பேசி , கெஞ்சி, கூத்தாடி....னதுல, கொஞ்சம் கொறச்சிக்கிறதா சொல்லியிருக்கார்.
‘ஏ’ விலிருந்து ‘எ’ வுக்கு கொறச்சிருக்கார். இது போதுமா?
//சிறு வயதில் தனியே சென்று பார்த்த முதல் படம்.//அச்சமில்லை அச்சமில்லை.//
பார்ர்ரா,
சின்ன வயசுலயே ‘அச்சமில்லாம’ பாத்த படத்தோட தலைப்ப, எல்லாரும் கவனிச்சுக்கங்கப்பா.......!
இதில இருக்கிற எல்லாப் படமும் நான் இனிமேதான் பார்க்கனும்... பகிர்தலுக்கு நன்றிண்ணா...
படக்கதையோட உங்க கதையும் நல்லாருக்கு பிரபா:)
//குரு சிஷ்யன்
//
இந்த வாரம் ஒரு குரு சிஷ்யன் படம் வருது....
பாருங்க...
ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்கள். அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இந்த லி்ஸ்ட்ல கர்ணன் எனக்கு ரொம்ப பிடித்த படம்..
பங்காளி....
உங்க எல்லா படமும் எனக்கும் பிடித்த படம் தான் ஒவ்வொரு படத்தையும் நீங்க சொல்லிய விதமும் அருமை...
உங்கள் அழைப்பிற்கு இனங்க எனது பதிவும் விரைவில்......
அண்ணே ... இதுலயும் உங்க மலரும் நினைவுகளை கொண்டுவந்துட்டீங்களே...
பாசமலர் வரைக்கும் பின்னாடி போகனுமா???? :))
க.மு. அழகு...
க.பி. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
சூப்பர் ...காமெடி , சீரியஸ் என அனைத்தும் வெவேறு விதமான படங்கள் குரு சிஷ்யன் மட்டும் பார்த்தபடம் ...
சூப்பர் ...காமெடி , சீரியஸ் என அனைத்தும் வெவேறு விதமான படங்கள் குரு சிஷ்யன் மட்டும் பார்த்தபடம் ...
மிக நீண்ட நாட்களின் பின் என் வரவு.........படங்களின் தெரிவும் பகிர்வும் அழகாய் இருக்கிறது.
அனுபவங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் . தொடர் பதிவை எழுதப்போகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்
அண்ணா இபோழுதேல்லாம் ஆத்தூர் வேல் முருகனில் படம் போடுவது இல்லை.நான் ஆத்தூர் அரசு பள்ளியில் படிக்கும் போதது வெறும் 'ஏ' grade (இஃகி இஃகி)படம் தான் போட்டுட்டு இருந்தாங்க.
குருசிஷ்யன், வாழ்வே மாயம் தவிர எனக்கு எல்லாமே ரொம்ப பழசு... :-)
க.பி லயாவது என் வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன்.
படக் கதையோட பழைய கதையையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க... அருமை.
அழகா அனுபவங்களோட சொல்லியிருக்கீங்க!!! நல்லா இருக்குது
//ரோஸ்விக் said...
க.பி லயாவது என் வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன். //
க.பி லயாவது வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன்.
இப்படியும் சொல்லியிருக்கலாம்...
இஃகிஃகி... பிரபா... சும்மா தமாசுக்கு
என்னோட விருப்பங்கள்... பாசமலர்...மற்றும் கர்ணன்....
இந்தப் படத்துல குரு சிஷ்யன் தவிர மத்ததெல்லாம் நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்தது.. இஃகி இஃகி
//
சேட்டைக்காரன் said...
ஆஹா! நான் தான் ஃபர்ஸ்ட்டா? :-)))
நல்லாயிருக்கு! ஆனா, "ஏ" படத்தைப் பத்தி எழுதக்கூடாதுன்னா என்னை மாதிரி "யூ" படமே பார்க்காதவங்க என்ன செய்வாங்க? கொஞ்சம் கொறச்சுக்கக்கூடாதா....? :-))))
//
ஏ ல யூ படமா இருக்குறத எழுதுங்க வன்பா!
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
Present Praba
//
வருகைக்கு நன்றிங்கய்யா!
//
சத்ரியன் said...
//"ஏ" படத்தைப் பத்தி எழுதக்கூடாதுன்னா என்னை மாதிரி "யூ" படமே பார்க்காதவங்க என்ன செய்வாங்க? கொஞ்சம் கொறச்சுக்கக்கூடாதா....? :-))))//
சேட்டை,
உனக்காக பிரபாவிடம் பேசி , கெஞ்சி, கூத்தாடி....னதுல, கொஞ்சம் கொறச்சிக்கிறதா சொல்லியிருக்கார்.
‘ஏ’ விலிருந்து ‘எ’ வுக்கு கொறச்சிருக்கார். இது போதுமா?
//
இப்படிதான் சொல்லி அவரு 'எ'தையாவது எழுதிடப்போறாரு...
//
சத்ரியன் said...
//சிறு வயதில் தனியே சென்று பார்த்த முதல் படம்.//அச்சமில்லை அச்சமில்லை.//
பார்ர்ரா,
சின்ன வயசுலயே ‘அச்சமில்லாம’ பாத்த படத்தோட தலைப்ப, எல்லாரும் கவனிச்சுக்கங்கப்பா.......!
//
இப்படியெல்லாம் ரவுசு உடக்கூடாது!
//
கலகலப்ரியா said...
இதில இருக்கிற எல்லாப் படமும் நான் இனிமேதான் பார்க்கனும்... பகிர்தலுக்கு நன்றிண்ணா...
//
நன்றிங்க சகோதரி...
//
வானம்பாடிகள் said...
படக்கதையோட உங்க கதையும் நல்லாருக்கு பிரபா:)
//
நன்றிங்கய்யா, எல்லாம் உங்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதம்...
//
ஜெட்லி said...
//குரு சிஷ்யன்
//
இந்த வாரம் ஒரு குரு சிஷ்யன் படம் வருது....
பாருங்க...
//
பாத்துடுவோம் சரண்...
//
துபாய் ராஜா said...
ஒன்றுக்கொன்று வித்தியாசமான படங்கள். அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
//
நன்றி ராஜா!
//
ஜாக்கி சேகர் said...
இந்த லி்ஸ்ட்ல கர்ணன் எனக்கு ரொம்ப பிடித்த படம்..
//
முதல் வருகைக்கு நன்றிங்க!

Sangkavi said...
பங்காளி....
உங்க எல்லா படமும் எனக்கும் பிடித்த படம் தான் ஒவ்வொரு படத்தையும் நீங்க சொல்லிய விதமும் அருமை...
உங்கள் அழைப்பிற்கு இனங்க எனது பதிவும் விரைவில்......
//
ம்... கலக்குங்க பங்காளி...
//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே ... இதுலயும் உங்க மலரும் நினைவுகளை கொண்டுவந்துட்டீங்களே...
பாசமலர் வரைக்கும் பின்னாடி போகனுமா???? :))
//
பிடிச்ச சம்பவங்களோட படங்கள் தம்பி... அதான்!
//
இராகவன் நைஜிரியா said...
க.மு. அழகு...
க.பி. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
//
நன்றின்ங்கண்ணா...
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
சூப்பர் ...காமெடி , சீரியஸ் என அனைத்தும் வெவேறு விதமான படங்கள் குரு சிஷ்யன் மட்டும் பார்த்தபடம் ...
//
நன்றி ஜெய்...
//
நிலாமதி said...
மிக நீண்ட நாட்களின் பின் என் வரவு.........படங்களின் தெரிவும் பகிர்வும் அழகாய் இருக்கிறது.
//
வணக்கம் சகோதரி!
//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அனுபவங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் . தொடர் பதிவை எழுதப்போகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்
//
நன்றி நண்பா!
//
தரிசு said...
அண்ணா இபோழுதேல்லாம் ஆத்தூர் வேல் முருகனில் படம் போடுவது இல்லை.நான் ஆத்தூர் அரசு பள்ளியில் படிக்கும் போதது வெறும் 'ஏ' grade (இஃகி இஃகி)படம் தான் போட்டுட்டு இருந்தாங்க.
//
நன்றி ஜித்... நீங்களும் எழுத ஆரம்பிங்க, சீக்கிரம்....
//
ரோஸ்விக் said...
குருசிஷ்யன், வாழ்வே மாயம் தவிர எனக்கு எல்லாமே ரொம்ப பழசு... :-)
க.பி லயாவது என் வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன்.
படக் கதையோட பழைய கதையையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க... அருமை.
//
நன்றி தம்பி! எல்லாம் உங்க அன்புதான்!
//
Deivasuganthi said...
அழகா அனுபவங்களோட சொல்லியிருக்கீங்க!!! நல்லா இருக்குது
//
ரொம்ப நன்றிங்க!
//
ஈரோடு கதிர் said...
//ரோஸ்விக் said...
க.பி லயாவது என் வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன். //
க.பி லயாவது வயசுக்கேத்த படம் வருதான்னு பாக்குறேன்.
இப்படியும் சொல்லியிருக்கலாம்...
இஃகிஃகி... பிரபா... சும்மா தமாசுக்கு
//
நன்றி நாட்டாமை! ஒழுங்க தொடர்பதிவ எழுதுங்க...
//
க.பாலாசி said...
என்னோட விருப்பங்கள்... பாசமலர்...மற்றும் கர்ணன்....
//
நன்றி இளவல்...
//
முகிலன் said...
இந்தப் படத்துல குரு சிஷ்யன் தவிர மத்ததெல்லாம் நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்தது.. இஃகி இஃகி
//
நன்றி முகிலன்... என் லிஸ்ட் நீங்க சொல்லிட்டீங்க... அதான்!
Post a Comment