எங்கள் பள்ளி... பாட்டு, பேச்சுப்போட்டி

|

எனது பள்ளிப்பருவத்தில் ஆறு முதல் ஒன்பது வரை படித்தது மல்லியகரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில். அந்த சமயத்தில் கிடைத்திட்ட பல நட்புக்கள் இன்றுவரை தொடர்வதும் நிகழ்வுகள் இன்னும் நெஞ்சினில் பசுமையாய் இருந்தினிப்பதுவும் அதனை பகிர்தலில் ஏற்படும் எல்லையில்லா ஆனந்தமும்... ஆஹா சொல்ல வார்த்தைகளிலில்லை..

தமிழ்நாட்டிலேயே முழுக்க ஏரியில் அமைந்த பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்றாக அல்லது இதுதான் ஒன்றாக இருக்கக் கூடும். வண்டித்தடம் செல்லும் ஏரிக்கரை, அதன் முடிவில் ஊர், இதுதான் அடுத்த பகுதியிலிருந்து வரும் எங்கள் பார்வையில், அவ்வூரார்க்கு ஊரின் முடிவில் ஏரியில் பள்ளி.

கொஞ்சம் மழை பெய்தாலும் குட்டையாய் தண்ணீர் நிற்கும், சத்துணவு வாங்க எடுத்து செல்லும் எங்களது தட்டுகளையும், கற்செதில்களால் எத்தி விளையாடுவதற்கு ஏதுவாக.

கரையில் இரு மிகப்பழைமையான உரமான ஓடுகளால் வேயப்பட்டக் கட்டிடங்கள்,இடது புறம் ஒடுகலாளான புதிதாய் கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகளுடன் தாவிக்குதிக்கும் அளவிற்கு சிறிய சுவர்களுடன் ஒரு கட்டிடம் பத்து முதல் பன்னிரண்டு வகுப்புக்களுக்காக.பின்புறத்தில் புதியாய் ஒரு ஆய்வுக்கூடம். கொஞ்சம் உள்ளே சென்றால் வலது புறத்தில் கூரை வேய்ந்த ஆறு ஏழு வகுப்புக்களுக்காக ஒரு கட்டிடம் (கூரைக்கொட்டாய் என சொல்வோம்).

சிறு பள்ளம் தாண்டி (ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலின் முகத்துவாரம்) , சாரியாய் ஓடுகளை வேய்ந்த நீளமான ஓட்டுக்கட்டிடம் ஒன்பதாவதுக்காகாகவும், அடுத்து எட்டாம் வகுப்புக்கென ஒரு மெத்தை கட்டிடம், எதிரில் அந்த பள்ளமான மழைக்காலமல்லாத பொது விளையாடும் மைதானமாம், தண்ணீர் நிற்கும் ஏரியின் மையப்பகுதி, திறந்துவிடும் மதகுடன். இதுதான் எங்கள் பள்ளி. இவ்வளவு சொல்லக்காரணம் இதுதான் தொன்னூறில் கிரிக்கெட் விளையாட சென்றபோது நான் பார்த்த பள்ளி, இன்று எப்படி இருக்கிறது என பேருந்தில் பார்த்து ஏங்குவதொடு சரி. ஊருக்கு செல்லும்போது எனது மகனையும் அழைத்துச்சென்று உள்ளே சென்று பார்த்து எழுத உத்தேசம்.

அன்று எங்கள் பள்ளியில் பேச்சு மற்றும் பாட்டுப்போட்டி கோலாகலமாய் நடந்துகொண்டிருந்தது. பாடம் நடத்தாமல் நிகழும் எந்தொரு விசயமும் பெரும் மகிழ்ச்சியாய் குதூகலமாய்த்தானே இருக்கும்... இருந்தது, இருந்தோம். முன்னதாக எல்லா வகுப்பிலும் ஆர்வமுள்ளவர்களின் பெயர்களைக் கேட்டு வரிசைப் படுத்தியிருந்தார்கள்.

பேச்சுப்போட்டியின் தலைப்பு பாரதியார். எல்லோரும் படித்து வந்து ஒப்பிக்க, பெயர் கொடுத்திருந்த என்னை அழைக்க, கை கால்கள் மட்டும் உதற எனச் சொன்னால் மாபெரும் பொய். எல்லாம் உதற மேடைக்கு சென்றேன்.

'அவைத் தலைவர் அவர்களுக்கும்,பெரியோர்களுக்கும்,தாய்மார்களுக்கும், சகோதர சகோதரியர்களுக்கும், மற்றுமுள்ள மாணவ மாணவியருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, முன்னொரு காலத்தில் ஒரு அன்னப்பறவை இருந்ததாம், அதனிடம் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் அருந்தி விடுமாம்.

அதுபோல நான் சொல்லும் சொற்களில் குற்றங்கள் இருப்பின் குற்றத்தை நீக்கி குணத்தை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நான் இப்போது பேச இருக்கும் தலைப்பு' என ஆரம்பிக்க, ஒரே இரைச்சல். அதற்கு மேல் பேசவிடவில்லை, பேசவும் இல்லை. பயம் வெக்கத்தோடு ஓடி வந்துவிட்டேன். எனது தாத்தா அவ்வாறுதான் என்னை தயார்ப் படுத்தியிருந்தார். (ஓடுவதற்கல்ல, பேச ஆரம்பிப்பதற்கு...)

அடுத்து ரவி சென்று, பாரதி யார்? பாரதி யார்? என களைத்துப்போகும் அளவிற்கு திரும்ப திரும்பகேட்டு எல்லோரும் கத்த, என் வழியில் இறங்கி ஓடிவந்தான். அடுத்ததாய் அன்றைய விழாவின் நாயகன் இன்றும் என் இனிய நண்பன் வேலுமணி மைக்கை பிடித்து, 'எட்டயபுரம் தந்த எங்கள் பாரதி, அவர்தான் தமிழ்தேரின் சாரதி' என ஆரம்பித்து ஐந்து நிமிடம் மழை பெய்தாற்போல் மளமளவென ஆவேசமாய் பேசித்தள்ள அவனுக்குத்தான் முதல் பரிசு.

அடுத்து நடந்த பாட்டுப்போட்டிதான் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. பெயர் கொடுத்தவர்கள் நான்கைந்து பேர்தான். வழக்கம்போல் நமது வேலுவும் அதில். சிவகாமி, சூராங்கனி... சூராங்கனி என பாட எல்லோரும் நகைக்க, தலைமை ஆசிரியர் 'மொதல்ல இறங்கிப்போ புள்ள, பாட்டப்பாரு ஆளைப்பாரு' என விரட்டிவிட்டார்.

அடுத்து வந்த இருவரும் வேறுவிதங்களில் சொதப்பினார்கள். வேலு மேடையேறி, மைக்கைப் பிடித்து, ஒரு பாரதியின் பாட்டை அப்படியே ஆவேசமாக படித்தான். அதை எப்படி சொன்னான் என்பதை விவரமாக சொன்னால் தான் சிறப்பாயிருக்கும்.

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
(எல்லோரையும் பார்த்து கைகளைக் காட்டி)
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பயப்படுவதாய் முக பாவனைகளோடு)
வஞ்சனைப் பேய்கள் என்பார் -இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
(அருகே இருந்த மரத்தையும், தூரத்தே இருந்த தண்ணீர் தேங்கிய குட்டையையும் காட்டி)
துஞ்சுது முகட்டில் என்பார் -மிகத்
துயர்ப் படுவார் எண்ணி பயப்படுவார்...
(அருகே இருந்த மலைக்குன்றைக்காட்டி, பயப்படுவதுபோல் நடிப்புடன்)

பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், மேடையில் இருந்த ஆசிரியர்கள் உட்பட. கடைசியில் முதல் பரிசு வேலுவிற்குத்தான் மற்ற எவரும் சரியாய்ப் பாடாததால்.

பரிசு வழங்கும்போது தலைமையாசிரியர் 'என் வாழ்வில் முதல்முறையாக பாட்டுப்போட்டியில் வீராவேசமாய் பேசியதற்கு முதற்பரிசு வழங்குகிறேன்' என சொல்லி அளிக்க மரத்தடியே குழுமியிருந்த நாங்களெல்லாம் ஆராவரித்து கைத்தட்ட, குழுமியிருந்த மேகம் நாங்கள் எழுப்பிய சப்தத்தால் கலைந்தோடி இடிச்சப்தத்தை எழுப்ப, அவசர அவரமாய் கலைந்தோம் வீடு நோக்கி...

24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Chitra said...

பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், மேடையில் இருந்த ஆசிரியர்கள் உட்பட. கடைசியில் முதில் பரிசு வேலுவிற்குத்தான் மற்ற எவரும் சரியாய் பாடாததால்.

...... so cute! :-)

vasu balaji said...

எல்லா காமெடி பீசும் ஒரே பள்ளிலயா? வாத்தி பாவம் வாத்தி பாவம்:)

shortfilmindia.com said...

150 ஆவது பாலோயருக்கு வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்

க.பாலாசி said...

//நான் இப்போது பேச இருக்கும் தலைப்பு என ஆரம்பிக்க, ஒரே இரைச்சல். அதற்கு மேல் பேசவிடவில்லை,//

ச்ச்சே... ஒரு பேச்சாளர் மிஸ்ஸாயிட்டாரே....

பாரதி பாட்டும் பாட்டுதானுங்களே.... முதல் பரிசு கொடுத்த தலைமையாசிரியரை பாராட்டனும்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இருந்த தண்ணீர் தேங்கிய குட்டியையும் காட்டி)//

தேங்கிய குட்டி .. இன்னேரம் வளந்திருக்குமே சார்...

( நாங்க நக்கீரன் பரம்பரை..ஹா..ஹா)

பதிவு நலாயிருக்கு.. ஆனா பொசுக்குனு முடிஞ்சிடுச்சு பிரபாகர் ..

இராகவன் நைஜிரியா said...

அழகான மலரும் நினைவுகள்

settaikkaran said...

உங்க வேலு நவரச நாயகனாக இருப்பார் போலிருக்கிறதே! எதையோ செய்து பரிசைத் தட்டிக்கொண்டு போய் விட்டாரே! என்னே சாமர்த்தியம்! :-)))

சத்ரியன் said...

//பயம் வெக்கத்தோடு ஓடி வந்துவிட்டேன்.//

எல்லாரும் நல்லா கேட்டுக்கங்கப்பா....!
வெக்கங்கெட்டு ஓடி வந்ததும் இல்லாம “வெக்கத்தோடு ” ஓடினாராம்...!

(பாதுகாப்பு கருதி ஏரிகளின் ஓரம் வீடுகளே இருக்கக்கூடாது. பள்ளி என்னும் போது பிள்ளைகளை எண்ணி பகீரென்கிறது நெஞ்சம்... அரசாங்கம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

துபாய் ராஜா said...

மணம் வீசும் மலரும் நினைவுகள்.

ரோஸ்விக் said...

//வானம்பாடிகள் said...
எல்லா காமெடி பீசும் ஒரே பள்ளிலயா? //

சாமி இவரு நக்கலு தாங்கலையப்பா... :-))

வீராவேசப் பேச்சுக்கு பரிசு கொடுத்த வாத்தியார் வாழ்க...

Unknown said...

பட்டாபட்டி சொன்ன கருத்துத்தான் எனக்கும்.. சட்டுனு முடிச்சிட்ட மாதிரி இருக்கு

Prathap Kumar S. said...

//எல்லாம் உதற மேடைக்கு சென்றேன்.//

எல்லாம்னா--??? :))

நினைவுகள் அருமை...இன்னும் நீங்க பழைய நினைவுகளை மறக்காம இருக்கீங்க போல...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகு.

உங்கள் பள்ளி இருந்த சூழலைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

உங்கள் பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி அனுபவங்கள் மிகவும் அருமை!!

கலகலப்ரியா said...

நீங்க நடந்து வந்த பாதை ஃபுல்லா இப்பூடித்தானா அண்ணா... அவ்வ்... அன்னைக்கு பாரதி வரிகள் முன்னோட்டம்... இப்போ டீட்டெயிலா... நடக்கட்டு நடக்கட்டு...

சத்ரியன் said...

//எல்லாம்னா--??? :))//

பிரபா,

பிரதாப் கேட்டுட்டாருல்ல.!

வந்து பதிலச் சொல்லுங்க.

பனித்துளி சங்கர் said...

/////தமிழ்நாட்டிலேயே முழுக்க ஏரியில் அமைந்த பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்றாக அல்லது இதுதான் ஒன்றாக இருக்கக் கூடும். வண்டித்தடம் செல்லும் ஏரிக்கரை, அதன் முடிவில் ஊர், இதுதான் அடுத்த பகுதியிலிருந்து வரும் எங்கள் பார்வையில், அவ்வூரார்க்கு ஊரின் முடிவில் ஏரியில் பள்ளி.

கொஞ்சம் மழை பெய்தாலும் குட்டையாய் தண்ணீர் நிற்கும், சத்துணவு வாங்க எடுத்து செல்லும் எங்களது தட்டுகளையும், கற்செதில்களால் எத்தி விளையாடுவதற்கு ஏதுவாக.////

அனுபவங்களை மிகவும் அழகான நடையில் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ., மீண்டும் வருவேன்.

கவிதன் said...

பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், நானும்தான்..... !

ஆட்டோகிராப் நினைவுகளா? அருமை பிரபாகர் !!!

பிரபாகர் said...

//
Chitra said...
பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், மேடையில் இருந்த ஆசிரியர்கள் உட்பட. கடைசியில் முதில் பரிசு வேலுவிற்குத்தான் மற்ற எவரும் சரியாய் பாடாததால்.

...... so cute! :-)
//
நன்றிங்க சித்ரா. உங்கள் தொடர் ஊக்கம் நிறைய எழுத உதவியா இருக்குங்க!

//
வானம்பாடிகள் said...
எல்லா காமெடி பீசும் ஒரே பள்ளிலயா? வாத்தி பாவம் வாத்தி பாவம்:)
//
இன்னும் நிறைய இருக்குல்ல! நன்றிங்கய்யா!

//
shortfilmindia.com said...
150 ஆவது பாலோயருக்கு வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்
//
நன்றிங்கண்ணா!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//நான் இப்போது பேச இருக்கும் தலைப்பு என ஆரம்பிக்க, ஒரே இரைச்சல். அதற்கு மேல் பேசவிடவில்லை,//

ச்ச்சே... ஒரு பேச்சாளர் மிஸ்ஸாயிட்டாரே....

பாரதி பாட்டும் பாட்டுதானுங்களே.... முதல் பரிசு கொடுத்த தலைமையாசிரியரை பாராட்டனும்....
//
நன்றி இளவல். அன்பிற்கு, ஆதரவிற்கு!

//
பட்டாபட்டி.. said...
இருந்த தண்ணீர் தேங்கிய குட்டியையும் காட்டி)//

தேங்கிய குட்டி .. இன்னேரம் வளந்திருக்குமே சார்...

( நாங்க நக்கீரன் பரம்பரை..ஹா..ஹா)

பதிவு நலாயிருக்கு.. ஆனா பொசுக்குனு முடிஞ்சிடுச்சு பிரபாகர் ..
//
நன்றி பட்டா! உடனே மாத்திட்டேன். என்னா கண்ணோ!

//
இராகவன் நைஜிரியா said...
அழகான மலரும் நினைவுகள்
//
நன்றிங்கண்ணா!

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
உங்க வேலு நவரச நாயகனாக இருப்பார் போலிருக்கிறதே! எதையோ செய்து பரிசைத் தட்டிக்கொண்டு போய் விட்டாரே! என்னே சாமர்த்தியம்! :-)))
//
நன்றி சேட்டை நண்பா!

//
சத்ரியன் said...
//பயம் வெக்கத்தோடு ஓடி வந்துவிட்டேன்.//

எல்லாரும் நல்லா கேட்டுக்கங்கப்பா....!
வெக்கங்கெட்டு ஓடி வந்ததும் இல்லாம “வெக்கத்தோடு ” ஓடினாராம்...!

(பாதுகாப்பு கருதி ஏரிகளின் ஓரம் வீடுகளே இருக்கக்கூடாது. பள்ளி என்னும் போது பிள்ளைகளை எண்ணி பகீரென்கிறது நெஞ்சம்... அரசாங்கம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)
//
நன்றி நண்பா!

//
Saba said...
//பசுமையாய் இருந்தினிப்பதுவும் அதனை பகிர்தலில் ஏற்படும் எல்லையில்லா ஆனந்தமும்... ஆஹா சொல்ல வார்த்தைகளிலில்லை..//

உண்மை.... உண்மை....
//
ரொம்ப நன்றிங்க!

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
மணம் வீசும் மலரும் நினைவுகள்.
//
நன்றி ராஜா! எல்லாம் நாம் கிராம சூழலில் வளர்ந்ததால்..

//
ரோஸ்விக் said...
//வானம்பாடிகள் said...
எல்லா காமெடி பீசும் ஒரே பள்ளிலயா? //

சாமி இவரு நக்கலு தாங்கலையப்பா... :-))

வீராவேசப் பேச்சுக்கு பரிசு கொடுத்த வாத்தியார் வாழ்க...
//
வேற வழியில்ல தம்பி!

//
முகிலன் said...
பட்டாபட்டி சொன்ன கருத்துத்தான் எனக்கும்.. சட்டுனு முடிச்சிட்ட மாதிரி இருக்கு
//
நன்றி தினேஷ்... அடுத்து இந்தமாதிரி நிகழாம பாத்துக்கறேன்.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
//எல்லாம் உதற மேடைக்கு சென்றேன்.//

எல்லாம்னா--??? :))

நினைவுகள் அருமை...இன்னும் நீங்க பழைய நினைவுகளை மறக்காம இருக்கீங்க போல...
//
ஆமாம் பிரதாப்... அதெல்லாம் சொல்ல முடியுமா?

//
ச.செந்தில்வேலன் said...
அழகு.

உங்கள் பள்ளி இருந்த சூழலைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

உங்கள் பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி அனுபவங்கள் மிகவும் அருமை!!
//
நன்றிங்க செந்தில்!

//
கலகலப்ரியா said...
நீங்க நடந்து வந்த பாதை ஃபுல்லா இப்பூடித்தானா அண்ணா... அவ்வ்... அன்னைக்கு பாரதி வரிகள் முன்னோட்டம்... இப்போ டீட்டெயிலா... நடக்கட்டு நடக்கட்டு...
//
நன்றிங்க சகோதரி!

பிரபாகர் said...

//
சத்ரியன் said...
//எல்லாம்னா--??? :))//

பிரபா,

பிரதாப் கேட்டுட்டாருல்ல.!

வந்து பதிலச் சொல்லுங்க.
//
கம்பனி சீக்ரட்!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////தமிழ்நாட்டிலேயே முழுக்க ஏரியில் அமைந்த பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்றாக அல்லது இதுதான் ஒன்றாக இருக்கக் கூடும். வண்டித்தடம் செல்லும் ஏரிக்கரை, அதன் முடிவில் ஊர், இதுதான் அடுத்த பகுதியிலிருந்து வரும் எங்கள் பார்வையில், அவ்வூரார்க்கு ஊரின் முடிவில் ஏரியில் பள்ளி.

கொஞ்சம் மழை பெய்தாலும் குட்டையாய் தண்ணீர் நிற்கும், சத்துணவு வாங்க எடுத்து செல்லும் எங்களது தட்டுகளையும், கற்செதில்களால் எத்தி விளையாடுவதற்கு ஏதுவாக.////

அனுபவங்களை மிகவும் அழகான நடையில் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ., மீண்டும் வருவேன்.
//
நன்றி சங்கர்! உங்களின் மீண்டும் வருவேன்.... ரொம்ப பிடிக்கும்...

//
கவிதன் said...
பாட்டுப்போட்டியில் இவ்வாறு வேலு வீரவேசமாய் பேசவும் எல்லோரும் விழுந்து சிரித்தோம், நானும்தான்..... !

ஆட்டோகிராப் நினைவுகளா? அருமை பிரபாகர் !!!
//
நன்றிங்க கவிதன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பிரபா

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB