படியில் பயணம், குடியின் மரணம்...

|

சொந்தத்தில் உள்ள சிலர் நம் மீது வைத்திருக்கும் அதீதமான பாசம், அக்கறை அவர்கள் செய்யும் சில தவறுகளைக் கூட நம்மை எளிதில் ஜீரனிக்கச்செய்து, அவர்களின் மேல் அலாதியான அபிமானத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும்.

கிருஷ்ணனுக்கும் அப்படித்தான் அவனது மாமாவின் மேல். அவனது அத்தையின் கணவர். எப்போதாவது போதையில்லாமல் இருப்பார். அப்போது மட்டும்தான் அவனோடு பேசுவார். அவனாய் சில நேரங்களில் பேசினாலும் கூட 'வேணாம் கிருஷ்ணா, அப்புறம் பேசறேன், இப்போ நான் டபுள் ஆளு’ என சொல்லிவிடுவார்.

அன்றொருநாள் பக்கத்து நகருக்கு சென்று இரவு எட்டு மணியளவில் வீடு திரும்பும்போது பேருந்தில் இருக்கைகள் நிறைய இருந்தாலும் வழக்கம்போல் படியில் நின்று பயணம் வந்தான் கிருஷ்ணன். உட்கார்ந்து செல்லும் பழக்கம் இல்லாத கல்லூரி படிக்கும் வயது அவனுக்கு.  (இப்போது இருக்கை இல்லையென்றால் காத்திருந்து அடுத்த பேருந்தில் தான் செல்கிறான்....வயது அப்படி...)

பேருந்தில் இருந்த கிளி (உதவி கண்டக்டர்) முன்னால இருந்து வந்து, 'அறிவில்ல படியில நிக்கிற, சீட்டுல உக்கார மாட்டியா, எனக்கு இதே பொழப்பாப் போச்சு, எல்லாத்துகிட்டேயும் சொல்லி எழவெடுக்க முடியல...’ என கிருஷ்ணனைப் பார்த்து கடிந்து சொல்ல, பேருந்தில் இருந்த சிலர்  வேடிக்கைப் பார்க்க, மிகவும் நொந்து போனான்.

படியினை விட்டு மேலே ஏறச் சொல்லியிருக்கலாம். அவ்வாறின்றி, முகத்திலடித்தார்போல், சட்டென சொல்ல ரொம்ப அவமானமாய் வெட்கித்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அதன் பின் அந்த உதவி, இன்னுமொரு நண்பனுடன் படியினில் சிரித்து சிரித்து பேசி அவ்வப்போது கிருஷ்ணனனையும் நக்கலாய் பார்த்து வர மனம் பாரமாய் உணர்ந்தான்.

ஊர் வந்தவுடன் இறங்கி வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் புலம்ப, 'விடு கிருஷ்ணா, தெரியாம சொல்லிட்டான்னு நினைச்சிக்கோ' என ஆறுதல் சொன்னாலும் அவனது மனசு அடங்குவதாயில்லை.

சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருந்த சமயம் ஏதோ சப்தம் கேட்க விழித்தான். அவனைக் கேட்டு ஒரு நாலைந்து பேர் வந்திருந்தார்கள். எல்லாம் பக்கத்து வீடு, தெரு என சொந்தங்கள்தான்.

'கிருஷ்ணன மூலைக்கு கூட்டிகிட்டு போறோம், வந்தாத்தான் பிரச்சினை தீரும்'னு சொல்லி தூக்க கலக்கத்தில் அழைத்து, இல்லையில்லை இழுத்துச் சென்றார்கள் எனத்தான் சொல்ல வேண்டும்.

’என்னண்ணா விஷயம்’ என ஒருவரை கேட்டதற்கு, ’எல்லாம் உன் மாமன் பண்ற கூத்துதான் வந்து பாரு' என சொன்னார்கள்.

இரவு அவன் வந்த பஸ் திரும்பவும் கடைசி பஸ்ஸாக செல்லும்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, கிருஷ்ணனது மாமாவால். நிறைய குடித்திருந்தார். மரியாதைக் குறைவாக சொன்ன அந்த உதவி நடத்துனர் சினிமா போஸ்டர் இருக்கும் அந்த குச்சி கம்பத்தில் ஒரு துண்டால் கட்டிபோடப்பட்டிருந்தார். கையில் ஒரு அருவாள். கிருஷ்ணனுக்கு பகீரென்றிருந்தது.

 'எப்படி என் மருமகனை அப்படி சொல்லலாம், உனக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா?, என் மருமகன் யாரு தெரியுமா?' அது இது என சப்தமாய் கத்திக்கொண்டிருந்தார்.

கோபமாய் 'என்ன மாமா இது' என கிருஷ்ணன் கேட்க, 'மாப்ளே கம்முனு இரு. எப்படி இவன் உன்னை அறிவில்லைன்னு கேக்கலாம், பஸ்ஸில வந்த சுப்ரமணி சொன்னத கேட்டு எப்படி துடிச்சி போயிட்டேன் தெரியுமா? உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் பஸ் கிளம்பி போக முடியும்' என சொன்னார்.

கிருஷ்ணன் அவ்வளவு அதிகமாய் கோபப்பட்டது அன்றுதான். சட்டென ஆவேசமாய் அவரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு வேகமாய் அந்த உதவி நடத்துனரை அவிழ்த்துவிட்டு வண்டியை எடுக்கச் சொல்லி டிரைவர், கண்டக்டரிடம் அவரின் சார்பாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

கண்டக்டர் அந்த கிளியை ஓங்கி ஒரு அறை விட்டு, ’எப்படி பேசனும்னு தெரியல, வாயி ரொம்பத்தான் உனக்கு. உங்கள எனக்கு தெரியும் தம்பி, இந்த நா.. இப்பத்தா புதுசா வேலைக்கு சேந்துச்சி, எங்க பாத்தாலும் வம்புக்கு போறதே வேலயா போச்சு’ என சொல்ல,

கிருஷ்ணன் ’பாவம் விடுங்க, தப்பு என் மேல தான், அவரு சொன்ன விதம் சரியில்ல, பஸ்ஸுல வந்த யாரோ மாமாகிட்ட சொல்லியிருக்காங்க’ என சொல்ல 'தெரியும் தம்பி, அதைத்தானே உங்க மாமா நிமிஷத்துக்கு ஒரு தடவ சொல்லிகிட்டிருக்காரு, வர்றோம்’ என்று கிளம்பி சென்றார்கள்.

ஏதோ பேச வந்த மாமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசாமல் விடுவிடு என வீட்டுக்கு வந்த அவன், திரும்ப தூங்க நெடு நேரம் ஆனது.

அடுத்த நாள் காலை அதிகாலையே வந்து கிருஷ்ணனின் அப்பாவோடு மாமா பேசிக்கொண்டிருந்தார். அதிசயமாய் நெற்றியில் திருநீறெல்லாம் வைத்திருந்தார். நடந்த சம்பவத்துக்கு அவனிடம் மன்னிப்பு கேட்டவர், அவனது கோபம் அவரை நிறைய பாதித்துவிட்டது என்றும், இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்தார்.

அன்று முதல் ஒரு ரிக் வண்டியில் மேனேஜராக வடக்கே சென்று விபத்தில் மாண்டு பிணமாய் திரும்பிய நாள்வரை அவர் குடித்ததே கிடையாது. அதே போல் கிருஷ்ணனும் படியில் நின்று பயணம் செய்தது கிடையாது.

23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

பாசம் மிக்க மாமா.ன்கிருஷ்ணனுக்காக குடியை நிறுத்தியுருக்கிறார் என்றால் பாசம் எவ்வளவு இருந்திருக்கும். காட்சிகள் கண்முன் வந்தது தல...

இராகவன் நைஜிரியா said...

பாசம் வென்று விட்டது. மாமா எவ்வளவு பாசமா இருந்தா, கிருஷ்ண்னுக்காக குடியை விட்டு இருப்பார்..

நினைக்கவே கண் கலங்குகின்றது.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
பாசம் மிக்க மாமா.ன்கிருஷ்ணனுக்காக குடியை நிறுத்தியுருக்கிறார் என்றால் பாசம் எவ்வளவு இருந்திருக்கும். காட்சிகள் கண்முன் வந்தது தல...
//
நன்றி புலிகேசி!

//
இராகவன் நைஜிரியா said...
பாசம் வென்று விட்டது. மாமா எவ்வளவு பாசமா இருந்தா, கிருஷ்ண்னுக்காக குடியை விட்டு இருப்பார்..

நினைக்கவே கண் கலங்குகின்றது.
//
ஆமாங்கண்ணா! பாசத்தை விட விலையுயர்ந்த ஒன்று இருக்கிறதா என்ன? நன்றிங்கண்ணா...

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கூட மனித வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.

சொன்ன விதம் அழகு...

ரோஸ்விக் said...

நல்ல மாமா. நல்லாயிருக்கு.

Cable சங்கர் said...

:(((

ஜெட்லி... said...

குடியை நிறுத்தி இருக்காருனா
உண்மையிலே அவர் பெரிய மனிதர் தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்து ஓகே தான் தல.. ஆனா அந்த கிளி உண்மையிலேயே ரொம்பப் பாவம்

vasu balaji said...

க்ருஷ்ணனின் லீலையை வென்றார் உண்டோ:)). அருமையா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணா. சை. பிரபாகர்.

முனைவர்.இரா.குணசீலன் said...

கதை நன்றாகவுள்ளது நண்பரே..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

கதை நன்றாக இருந்தது ஆனால் இது
போன்று நடப்பது அபூர்வம்...

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பகிர்வு.

அனைத்து கேரக்டர்களுமே அருமை. மாமா, கிருஷ்ணன் சரி.அந்த கிளி, அப்புறம் என்ன ஆனார்....

கலகலப்ரியா said...

அண்ணா இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டாச்..! அப்பாலிக்கா வந்து படிச்சுக்கறேன்..!

Prathap Kumar S. said...

அண்ணே ரொம்ப டச்சிங்காத்தான் இருக்கு....:-(

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கூட மனித வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.

சொன்ன விதம் அழகு...
//
நன்றி ஆரூரன். அன்புக்கு நன்றி.

//
ரோஸ்விக் said...
நல்ல மாமா. நல்லாயிருக்கு.
//
நல்ல தம்பி...

பிரபாகர் said...

//
Cable Sankar said...
:(((
//
நன்றிங்கண்ணா!

//
ஜெட்லி said...
குடியை நிறுத்தி இருக்காருனா
உண்மையிலே அவர் பெரிய மனிதர் தான்..
//
அன்பால் எல்லாம் சாத்தியம் ஜெட்லி!

பிரபாகர் said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து ஓகே தான் தல.. ஆனா அந்த கிளி உண்மையிலேயே ரொம்பப் பாவம்
//
வாய் அதிகம் உள்ள கிளி, அதான்.

//
வானம்பாடிகள் said...
க்ருஷ்ணனின் லீலையை வென்றார் உண்டோ:)). அருமையா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணா. சை. பிரபாகர்.
//
நன்றிங்கய்யா, புரிந்தவர் நீங்கள்...

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
கதை நன்றாகவுள்ளது நண்பரே..
//
நன்றிங்கய்யா! அன்பிற்கு, ஆதரவுக்கு.

//
தமிழ் வெங்கட் said...
கதை நன்றாக இருந்தது ஆனால் இது
போன்று நடப்பது அபூர்வம்...
//
நடந்த ஒன்றுதான் வெங்கட். வருகைக்கு நன்றி.

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
நெகிழ்ச்சியான பகிர்வு.

அனைத்து கேரக்டர்களுமே அருமை. மாமா, கிருஷ்ணன் சரி.அந்த கிளி, அப்புறம் என்ன ஆனார்....
//
கண்டக்டர் ஆயிட்டார் அதே பஸ்ஸில!

//
கலகலப்ரியா said...
அண்ணா இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டாச்..! அப்பாலிக்கா வந்து படிச்சுக்கறேன்..!
//
படிச்சிட்டு சொல்லுங்க!

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே ரொம்ப டச்சிங்காத்தான் இருக்கு....:-(
//
நன்றி பிரதாப்.

நாகராஜன் said...

நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். உங்களது எழுத்தில் நாளுக்கு நாள் ஒரு மெருகு ஏறி வருகிறது... வாழ்த்துகள்... தொடருங்கள் உங்களது பயணத்தை...

கடந்த சில வாரங்களாக உங்களது இடுகைகளை நேரம் கிடைக்கும் போது படித்தாலும், பின்னூட்டம் இட இயலவில்லை... மன்னிக்கவும்... உங்களது நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்... மேன் மேலும் சிறப்பாக தொடரட்டும் உங்களது பதிவுலக பயணம்...வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். உங்களது எழுத்தில் நாளுக்கு நாள் ஒரு மெருகு ஏறி வருகிறது... வாழ்த்துகள்... தொடருங்கள் உங்களது பயணத்தை...

கடந்த சில வாரங்களாக உங்களது இடுகைகளை நேரம் கிடைக்கும் போது படித்தாலும், பின்னூட்டம் இட இயலவில்லை... மன்னிக்கவும்... உங்களது நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்... மேன் மேலும் சிறப்பாக தொடரட்டும் உங்களது பதிவுலக பயணம்...வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.
//
வாங்க ராசுக்குட்டி...
நிஜமாய் உங்களை நிறைய நினைந்திருந்தேன், ஏன் வரவில்லை என. வேலைப்பளுவாயிருக்கும் என எண்ணியிருந்தேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

அருமை....

பிரபா நீங்கதான் அந்த கிருஷ்ணனா...

அந்த மாமாதான் பெங்காலி சினிமா பார்த்தவரா?

பிரபாகர் said...

//ஈரோடு கதிர் said...
அருமை....

பிரபா நீங்கதான் அந்த கிருஷ்ணனா...

அந்த மாமாதான் பெங்காலி சினிமா பார்த்தவரா?
//
எப்படி கதிர்!

பெங்காலி சினிமா பார்த்தது அவரோட பையன்...

கதிர் தி கிரேட்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB