ஈரோடு பதிவர் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம் - நேரில் காணாமலும்!...

|

வாழ்வின் சில நிகழ்வுகளை நான் தவறவிட்டதாய் எண்ணி பெரிதும் மன வருத்தம் அடைந்தவைகளில் இதுவும் ஒன்று. ஆம், இவ்வளவு அற்புதமான ஒரு சந்திப்பை சந்திக்க இயலாமல் போனது எனது துரதிஷ்டமே! அன்பு பழமைபேசி, செந்தில்வேலன் இருவரையும் இணைந்து பார்த்தல் என்று நிகழும் என மனம் ஏங்குகிறது.

பதிவர் சந்திப்பினை நடத்த உத்தேசித்துள்ள ஆரம்பப் புள்ளியிலிருந்து முடிவு வரை காதால் கேட்டு நேரில் இல்லாமல் மானசீகமாக பார்த்து வந்ததில் எனது மனம் எல்லையில்லா களிப்புறுகிறது.

முடிந்தபின் நடந்தது என்ன என ஆர்வமாய் அறிந்த போது அடைந்த சந்தோஷம் இருக்கிறதே, அது என் வாழ்வில் முதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் கிடைத்தாற்போல் இருந்தது. சங்கமத்தின் படங்கள் மனதிற்கு பெரிதும் மகிழ்வைத்தர, நேரில் பார்க்காத குறையை தீர்த்து வைத்தன.

நான் பெரிதும் மதிக்கும் என் ஆசான் வானம்பாடிகள் அய்யா, தண்டோர அண்ணன், கேபிள் அண்ணா, வண்ணத்துப்பூச்சியார், ஆரூரன், அப்துல்லா, அகநாழிகை, சீனா அய்யா என அனைவரையும் புகைப்படங்களின் வாயிலாய் கண்டு ரசிக்க, இன்னும் பல பதிவர்களை பார்த்து நேரில் பார்க்க மனம் ஆவலாய் காத்திருக்க, தொலை தூரத்திலிருந்து வந்து கலந்து கலந்துகொண்ட என்ன ஆட்கொண்டிருக்கும் இரு அன்பர்கள் பழமைபேசி மற்றும் செந்தில்வேலன் ஆகியோரிடம் பேசி மட்டும் எனது ஆதங்கத்தை அகற்றிக்கொள்ள முயல என சொலிக்கொண்டே போகலாம்...

இளவல் பாலாசி, கதிர் குறிப்பிட்டிருக்கும் இளவல் பாலாசி, அகல்விளக்கு, கோடீசுவரன் மற்றும் வாசகர்கள் ஜாபர், பைஜு ஆகியோரின் சீரிய பணிகளை வியந்து, நிச்சயம் உங்களை வரும்போது அவசியம் சந்திக்கவேண்டும் எனும் வைராக்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு விழாவினை எப்படி நடத்தவேண்டும், எப்படி அதற்கு ஆணிவேராய் இருந்து அசத்தவேண்டும், எப்படி வழிநடத்தவேண்டும் என்றெல்லாம் கதிர், ஆரூரன், பழமைபேசி, பாலாசி... ஆகியோர் இந்த பதிவுலகத்திற்கு ஓர் முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாய் பதிவர் சந்திப்பு எவ்வாறு நிகழவேண்டும் என எல்லோருக்கும் முன்னிறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், பதிவுலகில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமையாய் இருக்கிறது.

பின்குறிப்பு :


சந்திப்பின் புகைப்படங்கள் இங்கே...


கதிரின் நன்றி நவிலல் இங்கே...


நாகா, உங்களின் புகைப்படம் இல்லை. தாமதமாய் அறிந்தேன். இருவர் அல்ல, மூவர் என்பதே மிகச்சரி... உங்களையும் சேர்த்து!


15 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

உங்களை மாதிரியே இதை தவற விட்டு வருத்தப் படுபவரில் நானும் ஒருவன்

Anonymous said...

நானும் போகமுடியலையேன்னு தான் இருக்கு.

Chitra said...

///ஒரு விழாவினை எப்படி நடத்தவேண்டும், எப்படி அதற்கு ஆணிவேராய் இருந்து அசத்தவேண்டும், எப்படி வழிநடத்தவேண்டும் என்றெல்லாம் கதிர், ஆரூரன், பழமைபேசி, வால்பையன் ஆகியோர் இந்த பதிவுலகத்திற்கு ஓர் முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாய் பதிவர் சந்திப்பு எவ்வாறு நிகழவேண்டும் என எல்லோருக்கும் முன்னிறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், பதிவுலகில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமையாய் இருக்கிறது.////
.........சிறப்புற நடத்திய எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
ஐ..........ஐ............ நானும் பதிவுலகில் இருக்கேன் ........ஐ.....ஐ.........

ஈரோடு கதிர் said...

நேற்று... நள்ளிரவு நேரத்தில் தொடர்பு கொண்டு விழா நிறைவு குறித்த கேட்டு மகிழ்ந்தது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி பிரபா...

KARTHIK said...

// வாழ்வின் சில நிகழ்வுகளை நான் தவறவிட்டதாய் எண்ணி பெரிதும் மன வருத்தம் அடைந்தவைகளில் இதுவும் ஒன்று.//

அட அதுக்கென்னங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க மறுக்கா ஒரு கூட்டத்த போட்டா போச்சு :-))

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபா...... நீங்கள் இதில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமே. ஆனாலும், நள்ளிரவில் அலைபேசியில் பேசியது மிகுந்த் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அன்பிற்கு நன்றி

butterfly Surya said...

ஒரு விழாவினை எப்படி நடத்தவேண்டும், எப்படி அதற்கு ஆணிவேராய் இருந்து அசத்தவேண்டும், எப்படி வழிநடத்தவேண்டும் என்றெல்லாம் கதிர், ஆரூரன், பழமைபேசி, வால்பையன் ஆகியோர் இந்த பதிவுலகத்திற்கு ஓர் முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்///////////

பிரபா, 100 % நிதர்சனமான வார்த்தை.

கொங்கு நாட்டு உபசரிப்பு.. வாவ்..
வார்த்தைகள் இல்லை.

கதிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என்பது சிறிய வார்த்தை.

அளவில்லா மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.

முனைவர் இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே விழா மிகவும் நிறைவாக நடைபெற்றது..

அதன் ஒளிவடிவத்தை விரைவில் சங்கமம் லைவில் வெளியிடுவார்கள் என நினைக்கிறேன்

க.பாலாசி said...

தாங்கள் கலந்துகொள்ளாதது வருத்தமாகவே இருந்தது. விழாவினைப்பற்றி கேட்டறிந்ததாக கேள்விப்பட்டேன். நெகிழ்ந்தேன்.

உங்களுக்கும் நன்றிகள்...

அன்புடன் மலிக்கா said...

பதிவர்களின் சந்திப்பு பெரும்மகிழ்ச்சியே கூடியவிரைவில் அனைவரும் சந்திகும் நாள் வரும் பிரபாகரண்ணா.. உங்கள் தொகுப்பு அருமை..

நாங்களும் சந்திச்சோமுன்னு பதிவு போட்டிருக்கேண்ணா நீரோடையில்..

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

vasu balaji said...

கதிரோடு பேசிக் கொண்டிருக்கையில் உங்களையும் நினைவு கூர்ந்தோம். அருமை பிரபா. விரைவில் சந்திப்போம்.பார்க்காமலே இவ்வளவு அழகான தொகுப்பு மிகையேதுமின்றி.பாராட்டுகள்.

வால்பையன் said...

:)

ரொம்ப நன்றி தல!

பெயர் போட்டதுக்கும் பின்பு எடுத்ததற்கும்!

பிரபாகர் said...

பதிவர் சந்திப்பிற்கு இந்த நிகழ்வு ஓர் இலக்கணமாய் இருந்ததால்தான், இதனை ஆரம்பம் முதலே கவனித்து வந்தவன் என்ற முறையில், கலந்து கொள்ளாமல் எழுதுவது தவறுதான் என்றாலும் கதிரின் இடுகையை படித்தும், அனைவரிடமும் பேசிய பின் தான் இந்த இடுகையை எழுதினேன். இதனை படித்த, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிரபாகர், எங்களை நீங்களும், உங்களை நாங்களும் தவிர விட்டுவிட்டோம். மற்றுமொரு சந்திப்பிற்காகக் காத்திருக்கிறோம்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB