பஸ்டாண்டில் செருப்படி...

|

காலேஜ் முடிச்சிட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேல பாத்துட்டிருந்தேன். பக்கத்து வீட்டு சுரேஷ் என்ன பாக்க வர, கிளாச பாதியில நிப்பாட்டிட்டு வெளியே வந்து 'என்னடா விஷயம்' னேன்.

அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். ப்ளஸ் டூ முடிச்சிட்டு பஸ்ல உதவி கண்டக்டரா ஓடிட்டு இருந்தான். என்மேல பாசமா இருப்பான். எந்த விஷயம்னாலும் என்கிட்டதான் சொல்லுவான். (நல்லதுன்னா உடனே, கெட்டதுன்னா கொஞ்சம் லேட்டா)

தயங்கி, தயங்கி 'அண்ணா நான் லவ் பண்றேன், நீதான் அத கன்பார்ம் பண்ணனும்’ னு ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான்.

அவன் குடும்பம் இருக்கிற சூழ் நிலையில லவ் பண்றாங்கறதே அதிர்ச்சி, அதுவுமில்லாம நான் வேற அதுல சம்மந்தப்படனும்ங்கறதால பேரதிர்ச்சியா இருந்துச்சி. ‘இரு’ன்னுட்டு உள்ள போயி, ஒரு ப்ரொக்ராம் பண்ண சொல்லிட்டு, 'ம், இப்போ சொல்லு' ன்னேன்.

'இத்தன நாளா உங்கிட்ட சொல்லாததுக்கு சாரிண்ணா. ஸ்கூல்ல பன்னண்டாவது படிக்குது, தினமும் எங்க பஸ்ஸில தான் வரும். ஒரு மாசமா பாத்துகிட்டிருக்கேன். குடும்பம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்தாத, அடுத்த மாசம் பை குடுத்துடுவாங்க(கண்டக்டர்). சரியா அஞ்சி பத்துக்கு ஸ்கூல் விட்டு வரும். நீ எங்கூட வா, காமிக்கிறேன். பாத்துட்டு ஓ.கே சொல்லறதுலதான் என் வாழ்க்கையே இருக்கு' ன்னான்.

'சரிடா, நான் பாத்து ஒன்னும் ஆகப்போறதில்லை, எல்லாம் நீ முடிவு பண்ணிட்ட, அதுவுமில்லாம இந்த விஷயத்துல என்னை கேக்கிறது சரியில்ல... சரி ஒருவேளை பாத்துட்டு வேணாம்னு சொல்லிட்டா?'

'சத்தியமா நேர்ல பாத்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்ட, பிளீஸ்னா' ன்னு கெஞ்ச, அரை மனசா ஒத்துட்டேன். ’அஞ்சு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்’னான்.

அஞ்சி பத்துக்கு கடைகிட்ட நின்னுட்டிருந்தேன், பக்கத்துல சுரேஷ். ஸ்கூல் விட்டு வரிசை வரிசையாய் பொண்ணுங்க வந்துட்டிருந்தாங்க.

'அண்ணா ரெண்டாவதா அந்த குரூப்ல வருது பாருங்க அதான்' ன்னான்.

பொண்ணு உண்மையிலெ ரொம்ப அழகா இருந்துச்சி, கொஞ்சம் பூசுன மாதிரி, சிவப்பா. எங்களை தாண்டி போகும்போது அவனை ஓரக் கண்ணால பாத்துட்டு போச்சு.

'எப்படிண்ணா இருக்கு, என்ன எப்படி லுக் உடுது பாத்தியா'ன்னு பூரிப்பா கேட்டான்.

'நல்லாருக்கு சுரேஷ், ஆனா' ன்னு இழுத்தேன்.

'அது போதும்' னுட்டு, நேரா தூரமா போயிட்டிருந்த அந்த பொண்ணுகிட்ட போனான். பாக்கெட்டில இருந்து லெட்டரை எடுத்து கையில கொடுத்தான். அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.

டக்குனு செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு அவன் தலையில, கன்னத்துல அடிக்க, பேயறைஞ்ச மாதிரி சிலையா அதிர்ச்சியில நின்னான்.

பெரிய களேபரமாயிடுச்சி. சனங்க சுரேஷ விடவும் அந்த பொண்ண அதிகமா திட்டினாங்க, ஒரு பொண்ணுக்கு அவ்வளவு திமிறான்னு.

அவனோட மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவனை அந்த பக்கமா இழுத்துட்டு போயிட்டாங்க. நான் வேகமா கிட்ட ஓடினேன்.

'அண்ணா நீங்க இங்க வரவேண்டாம், நாங்க பாத்துக்கறோம், நீங்க சென்டருக்கு போங்க' ன்னு ஒருத்தன் சொன்ன்னான்.

வேற வழியில்லாம நான் திரும்பி சென்டருக்கு வந்து சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.

ராத்திரி சுரேஷோட அம்மா வந்து எங்க வீட்டுல புலம்பிக்கிடிருந்தது. அத சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சி.

சுரேஷ ஆளயே காணும். நானும் கேட்கலை. ரெண்டு நாள் கழிச்சி கிளாஸ் எடுத்துக்கிட்டிருக்க்கும்போது யாரொ ஒரு பொண்ணு என்னை பாக்க வந்திருக்கிறதா சொல்லி கூப்பிட குழப்பத்தோடு வெளியே போனேன்.

சதீஷ அடிச்ச அந்த பொண்ணு ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸோட என்ன பாக்கிறதுக்காக உக்கார்ந்து இருந்துச்சி.

சல்லுனு கோபம் வந்துச்சி.'எதுக்கு வந்தே? அவன் உயிரோட இருக்கிறானான்னு கேட்டுட்டு போக வந்தியா'?

உடனே, தலையில அடிச்சிகிட்டு 'அய்யோ அண்ணா நீங்களும் என்னை திட்டாதீங்கண்ணா, இந்த பாவி தெரியாம பண்ணிபுட்டேன், அவரு ரொம்ப நல்லவருன்னு தெரியாம போச்சு. அடிச்சதுக்கு பரிகாரமா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன், நீங்கதான் நல்லபடியா முடிச்சு வெக்கனும்' னுச்சி.

கண்ணுல மாலை மாலையா தண்ணி. 'சரி மொதல்ல வெளிய வா' ன்னு கூட்டிட்டு வந்தேன்.

எனக்கு ஒண்ணும் புரியல. 'சரிம்மா, அவன் எங்க போனான்னே தெரியல, ரெண்டு நாளா தகவல் இல்ல, உசுரோட இருக்கானான்னே தெரியல' ங்கவும்,  திரும்பவும் அழ ஆரம்பிச்சது.

'சரி சரி, அவன் வந்தவுடன் பேசறேன்' னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பி வெச்சேன். கொஞ்ச நேரத்துல ஃபோன் வந்தது. சுரேஷ்தான் பேசினான்.

எடுத்த உடனே, அண்ணா அது வந்து உங்கள பாத்துச்சான்னா'ன்னு கேட்டான்.

'டேய் எங்கடா போன? எல்லாம் பயந்து போயிருக்கிறோம், எங்க இருக்க, ஏன் வீட்டுக்கு வரல' ன்னு கேட்க,

'அதெல்லாம் இருக்கட்டும், வந்துச்சின்னு தகவல் வந்துச்சி, என்ன சொல்லிச்சின்னு மொதல்ல சொல்லு' ன்னான்.

அப்போல்லாம் மொபைல்லாம் இல்ல. அதுக்குள்ள எப்படி தகவல் போச்சின்னு ஆச்சர்யப்பட்டுகிட்டு நடந்தத சொன்னதும், 'அதுக்காகத்தான் ரெண்டு நாளா தலைமறைவா இருக்கேன் உடனே வர்ரேன்' னான்.

அப்புறம் அந்த பொண்ணு வீட்ட விட்டு ஓடிவந்து கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு குழந்தைங்க, சந்தோஷமா இருக்காங்க.

இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...

கொஞ்சம் மாற்றங்களோடு ஒரு மீள் இடுகை...

23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

தல உங்களுக்கு விழுந்த அடியை மறைச்சிட்டீங்கதான???

அனுபவம் சூப்பரு...

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி

சூப்பர் பிரபா...

//நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்//

ஆமா... இது ஏன்..

புலிகேசி சொன்ன மாதிரியிருக்குமோ

Prathap Kumar S. said...

ஹஹஹ நானும் அடி உங்களுக்குத்தான் விழப்போவுதுன்னு நினைச்சேன்.
அண்ணே... நீங்க உண்மையிலேயே ஒரு நாட்டாமைதான் போங்க... இப்படின்னு தெரிஞசிருந்தா நானும் காரியங்களை உங்களை வச்சே பால காரியங்களை சாதிச்சுருப்பேன்...

அண்ணன் நாட்டாமை பிரபாகர் வாழ்க...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அடிவாங்கி கல்யாணம் முடிஞ்சது ..

Chitra said...

இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு.................நடத்துங்க........ நடத்துங்க......... இன்னும் எத்தனை பொண்ணுங்க, இந்த அண்ணனை தேடுதோ?

vasu balaji said...

ஊரு அக்கப்போரெல்லாம் இழுத்துவிட்டுக்குறது தானா? எனக்கென்னமோ புலிகேசிய வழிமொழியத் தோணுது.

துபாய் ராஜா said...

சுவாரசியமான சம்பவம். சுப முடிவு. சொல்லியிருக்கும் விதம் மிக அழகு.

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

அப்ப நீங்களும் ஒரு ஷாஜகான் விஜய்ன்னு சொல்லுங்க.... நல்லவேளை அவரு பின்னாடி நீங்க போகாம இருந்தீங்களே...

கல்யாணத்துக்கு முன்னாடியே அவரு அடிவாங்க ஆரம்பிச்சிட்டாரு....ரைட்டு....

கலகலப்ரியா said...

மீண்டும் ஒரு களேபரக் கதை... அந்தச் செருப்படி கண் முன்னாடி வருது.. ஆனா உங்க பாணிய யாராலையும் அடிச்சுக்க முடியாது... =)).. அருமையா இருக்குண்ணா..

Uthamaputhra Purushotham said...

அப்போ அடிக்கிற கைதான் காதலிக்குங்கிறீங்களா?

கலக்குங்க... நல்லாத்தான் இருக்கு...

பூங்குன்றன்.வே said...

/இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...//

ஸோ இந்த சம்பவத்தால் உங்களுக்கு ஒரு அன்பான தங்கை கிடைத்திருக்கிறார் பிரபு.

பழமைபேசி said...

நல்லவிதமான முடிவு...

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
தல உங்களுக்கு விழுந்த அடியை மறைச்சிட்டீங்கதான???

அனுபவம் சூப்பரு...
//
நமக்கு அடியெல்லாம் விழல... சீன்ல நாம இல்லல்ல! தூரமா இருந்து பாத்ததோட சரி...

//
ஈரோடு கதிர் said...
இஃகிஃகி

சூப்பர் பிரபா...

//நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்//

ஆமா... இது ஏன்..

புலிகேசி சொன்ன மாதிரியிருக்குமோ
//
கால பத்து கிண்டல் பண்ணுவேன் கதிர்....

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ நானும் அடி உங்களுக்குத்தான் விழப்போவுதுன்னு நினைச்சேன்.
அண்ணே... நீங்க உண்மையிலேயே ஒரு நாட்டாமைதான் போங்க... இப்படின்னு தெரிஞசிருந்தா நானும் காரியங்களை உங்களை வச்சே பால காரியங்களை சாதிச்சுருப்பேன்...

அண்ணன் நாட்டாமை பிரபாகர் வாழ்க...
//

ஆஹா, பிரதாப்பு புகழ்ந்தே கவுத்துடுவீங்க போலிருக்கே!

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
அடிவாங்கி கல்யாணம் முடிஞ்சது ..
//
நன்றி கிருஷ்ணா...

பிரபாகர் said...

//
Chitra said...
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு.................நடத்துங்க........ நடத்துங்க......... இன்னும் எத்தனை பொண்ணுங்க, இந்த அண்ணனை தேடுதோ?
//
வணக்கம் சித்ரா... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

//
வானம்பாடிகள் said...
ஊரு அக்கப்போரெல்லாம் இழுத்துவிட்டுக்குறது தானா? எனக்கென்னமோ புலிகேசிய வழிமொழியத் தோணுது.
//
என்னங்கய்யா பண்றது? விதி?

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
சுவாரசியமான சம்பவம். சுப முடிவு. சொல்லியிருக்கும் விதம் மிக அழகு.
//
நன்றி ராஜா! பின்னூட்டமும் மிக அழகு...

//
க.பாலாசி said...
அப்ப நீங்களும் ஒரு ஷாஜகான் விஜய்ன்னு சொல்லுங்க.... நல்லவேளை அவரு பின்னாடி நீங்க போகாம இருந்தீங்களே...

கல்யாணத்துக்கு முன்னாடியே அவரு அடிவாங்க ஆரம்பிச்சிட்டாரு....ரைட்டு....
//
பசங்க காப்பாத்திட்டாங்க நன்றி பாலாசி.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
மீண்டும் ஒரு களேபரக் கதை... அந்தச் செருப்படி கண் முன்னாடி வருது.. ஆனா உங்க பாணிய யாராலையும் அடிச்சுக்க முடியாது... =)).. அருமையா இருக்குண்ணா..
//
நன்றி சகோதரி! புண்பட்ட நெஞ்சம்ங்றது இதுதான் போலிருக்கு!

//
UthamaPuthra said...
அப்போ அடிக்கிற கைதான் காதலிக்குங்கிறீங்களா?

கலக்குங்க... நல்லாத்தான் இருக்கு...
//
முதல் வருகை மற்றும் பின்னூட்டத்த்க்கு நன்றி.

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
/இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன். சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...//

ஸோ இந்த சம்பவத்தால் உங்களுக்கு ஒரு அன்பான தங்கை கிடைத்திருக்கிறார் பிரபு.
//
ஆமாங்க பூங்குன்றன்... நன்றிங்க.

//
பழமைபேசி said...
நல்லவிதமான முடிவு...
//
ஆமாங்க! நன்றிங்க பழமைபேசி...

ஜெட்லி... said...

வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இடுகையா போடுறிங்க..
இப்பதான் நான் இதை முதல் தடவை படிக்கிறேன்...

jothi said...

அப்ப வாங்கின அடி, இன்னும் முடியல் போல இருக்கு

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
வேலை அதிகமா அண்ணே... ஒரே மீள் இடுகையா போடுறிங்க..
இப்பதான் நான் இதை முதல் தடவை படிக்கிறேன்...
//
அப்படி இல்ல ஜெட்லி, ஆரம்பத்தில எழுதினது, ரொம்ப கம்மியான பேர் படிச்சது. அதான் கொஞ்சம் மாற்றி மீள் இடுகையாய்....

//
jothi said...
அப்ப வாங்கின அடி, இன்னும் முடியல் போல இருக்கு
//
இது வாங்கினது இல்லங்க, வாங்கினத பாத்தது...நன்றிங்க!

ரோஸ்விக் said...

இந்த கதைக்குள்ள எங்க பொய் ஒளிஞ்சிருக்கோ தெரியலையே?? :-))

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB