கல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...

|

இந்த இடுகை காலேஜ்ல சேர்ந்த புதுசில சீனியருங்ககிட்ட ரேகிங்ல நாம பட்டது. நாம ரேக்கினது அடுத்த இடுகையில படுத்தியதுங்கற தலைப்புல...

டாக்டர் எஞ்சினீயர்னு அப்பா அம்மா கனவு கண்டுகிட்டிருக்க, நாம வாங்குன மார்க்குக்கு என்ட்ரன்ஸ் எழுதவே தகுதியில்லாம போக, நாடு ஒரு மருத்துவர, பொறியியல் வல்லுனர இழக்குதுன்னு நினைச்சிகிட்டு ரொம்பவும் பிடிச்ச ஃபிசிக்ஸ் சேர்றதுக்கு பதிலா, ஃபேமலி டாக்டர் சொன்னாருன்னு கம்ப்யூட்டர்ல சேர்ந்தேன்.

அப்போ ரேக்கிங் ரொம்ப அதிகமா இருந்துச்சி. டே ஸ்காலர் பிரச்சினை இல்ல, காலேஜ் சமயத்துல மட்டும்தான். ஹாஸ்டல்ல தங்கியிருந்த நாங்கல்லாம் வசமா சிக்கிகிட்டோம், பகல்ல காலேஜ், ராத்திரியில ஹாஸ்டல்னு.

காலேஜ்ல லன்ச் டயத்துல கூப்பிட்டு உனக்கு என்ன தெரியும்னு கேக்க, பெருமையா படம் வரைய தெரியும்னு சொன்னேன். ஒரு சீனியர், 'சரி போர்ட்-ல ஒரு பொண்ணோட முகத்த வரை’ ன்னு சொல்ல அதே மாதிரி செஞ்சேன்.

இன்னொடு சீனியர், ’அந்த பொண்ணு உதட்டுல ஒரு முத்தம் கொடு இல்லன்னா இவன் உதட்டுல ஒரு முத்தம் கொடு’ ன்னாங்க. போர்டே பரவாயில்லன்னு கொடுத்துட்டு வாயத் துடைக்கப்போக, அழிக்காத சாயங்காலம் வரைக்கும் இருக்கனும்னு சொன்னாங்க.(வெளிய வரும்போது அழிச்சிட்டேன்)

லுங்கிய மடிச்சி கட்டக் கூடாது, ஃபுல் ஹேண்ட் போடக்கூடாது, தலைய தூக்கி வாரி சீவக்கூடாது, எப்போ எங்கே பார்த்தாலும் வணக்கம் சொல்லனும், பாட்டு பாட சொல்றது, டேன்ஸ் ஆட சொல்றது, மேடையில மாதிரி பேச சொல்றதுன்னு அவங்க பண்ணுனத நிறைய சொல்லிக்கிட்டே போலாம்.

ஆரம்பத்துல யாரப் பார்த்தாலும் வணக்கம் வெப்போம், பதிலுக்கு சிரிச்சா, வழிஞ்சிகிட்டு ‘ஃபர்ஸ்ட் இயரா’ ன்னு கேட்டுக்குவோம்.

சில நேரங்கள்ல ரொம்ப அக்கறையாவும் நடந்துக்குறோம்ங்கற பேர்ல ரொம்ப படுத்துவாங்க. தலையில எண்ணை வெக்காம இருந்ததுக்காக எங்கள்ல ஒரு மூனு பேரை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணைய தடவி விட்டுட்டு டிராயரோடு எட்டு மணி வாக்குல கிரவுண்டுக்கு கூட்டிட்டு போனாங்க.

வார்டன் எதிர்ல வர ஆக தப்பிச்சோம்னு நினைச்சா, ’என்னப்பா கோலம்’ னு கேக்க, ஒரு சீனியர் ஜாகிங் சொல்லித்தர்றோம் சார்’ னு சொன்னதுக்கு, ’பாத்துப்பா... பசங்க மிரண்டுறப்போறாங்க’ ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.

கிரவுண்ட ரவுண்டு அடிக்க சொன்னவுடனே ஃபிரண்டு ரெண்டுபேரும் (மோகனும் சரவணனும்னு சொல்லத்தான் ஆசையா இருக்கு, ஆனா, தங்கச்சி, கதிர நினைச்சி பயமா இருக்கு, இத்தன கேரக்டரா இடுகையில?) ஓட ஆரம்பிச்சிட்டானுங்க. நான் ஓடாம அழுக ஆரம்பிச்சிட்டேன். என்ன சமாதானப்படுத்தறதுக்குள்ள அவங்களுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சி. ரிசல்ட் நான் ஓடல, அவனுங்க நாலு ரவுண்டு ஓடினானுங்க. நம்ம நடிப்புக்கு நல்ல மரியாதைன்னு தெரிஞ்சிகிட்டது அன்னிக்குத்தான் (அழுகையோட...).

சீனியருங்க விடிய விடிய நம்மல தூங்க விட மாட்டாங்க. ஒரே நேரத்துல பல ரேக்கிங் ஒரு ரூம்ல நடக்கும். இருந்த பதினொரு ரூம்ல ஃபர்ஸ்ட் இயர் செகண்ட் இயர் பசங்க போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்து படுக்க வெச்சி போத்திவிட்டுட்டு மூச்சு திணறி கத்தற வரைக்கும் விட்டுருப்பாங்க. என்ன அந்த மாதிரி செய்யும்போது கைய குறுக்க வெச்சி கேப்புல காத்து வர்ற மாதிரி செஞ்சிகிட்டேன்.

உள்ளாற புழுக்குமாவும் வேர்த்தும் வழிஞ்சாலும், மூச்சு திணறல் எதுவும் இல்ல. வெளியில ஒருத்தன பரத நாட்டியம் ஆடச் சொல்ல, தா தைன்னு ஆடவும் போர்வைக்குள்ள இருந்து சிரிச்சுட்டேன்.

யாரு சிரிச்சான்னு எல்லோரும் குழம்ப, நாந்தான்னு குத்துமதிப்பா கண்டுபிடிச்சி போர்வைய எடுத்துட்டு கேக்க, நானா, சிரிச்சேனா?ன்னு அப்பாவி மாதிரி நடிச்சி தப்பிச்சிட்டென்.

நான் எல்லாரையும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணாண்னு கூப்பிடறத பாத்துட்டு ஒருத்தர், 'டேய் ஓவரா நடிக்காதடா? கடைசி வரைக்கும் இதே மாதிரி கூப்பிடுவே?’ ன்னு கேட்டதுக்கு, 'அய்யோ அண்ணா, சாகிற வரைக்கும் உங்களை எல்லாத்தையும் அண்ணான்னுதான் கூப்பிடுவேன்' னு சொன்னேன்.

என்ன அந்த கேள்விய கேட்ட தனசேகர சிங்கப்பூர் வந்த புதுசில பார்த்தப்போ மொதல்ல 'என்ன தனா சௌக்கியமா'ன்னு கேட்டுத்தான் பேச ஆரம்பிச்சேன்.

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல கூத்து......

இனிமையான இறந்த காலத்தை நினைவுகூர்வது, என்றும் ஆனந்தமே....

சங்கர் said...

//ஆரம்பத்துல யாரப் பார்த்தாலும் வணக்கம் வெப்போம், பதிலுக்கு சிரிச்சா, வழிஞ்சிகிட்டு ‘ஃபர்ஸ்ட் இயரா’ ன்னு கேட்டுக்குவோம்.//

:)))

நான் கல்லூரிக்கு வந்த நேரத்துல இந்த கொடுமையெல்லாம் இல்ல

Anonymous said...

//என்ன தனா சௌக்கியமா'ன்னு//

காலேஜ்ல இருக்கவரைக்கும்தான் சீனியர் ஜூனியர் எல்லாம். வெளிய வந்தா இப்படிதான் . :)

கார்க்கிபவா said...

சகா இன்னும் மூணு ரன் தான். சீக்கிரம் சதமடிக்க வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

நடிச்சே எஸ்கேப்பா! பெரிய ஆளு தான்.
சீக்கிரம் மூன போடுங்க. இந்த வருசத்துக்குள்ள முடிச்சிருவீங்கனு நினைக்கிறேன். :-)

vasu balaji said...

ம்கும். இதுலயே படுத்தினது பாதி வந்துடுச்சே. இவ்வளவு கேனைங்களா உங்க சீனியர்ஸ். அதென்ன கதிரையும் தங்கச்சியவும் பார்த்து பயப்படுறது. சீனியர்னா:))

துபாய் ராஜா said...

//என்ன அந்த கேள்விய கேட்ட தனசேகர சிங்கப்பூர்ல வந்த புதுசில பார்த்தப்போ மொதல்ல 'என்ன தனா சௌக்கியமா'ன்னு கேட்டுத்தான் பேச ஆரம்பிச்சேன். //

'என்னடா தனா'ன்னு கேட்டு அவரை ராகிங் பண்ணியிருக்கலாம் தல. :))

நல்லவேளை. நானெல்லாம் ஹாஸ்டல்ல தங்கலை.'டேஸ் காலர்' தான். :))

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல கூத்து......

இனிமையான இறந்த காலத்தை நினைவுகூர்வது, என்றும் ஆனந்தமே....
//
நன்றிங்க ஆரூரன்...

//
சங்கர் said...
//ஆரம்பத்துல யாரப் பார்த்தாலும் வணக்கம் வெப்போம், பதிலுக்கு சிரிச்சா, வழிஞ்சிகிட்டு ‘ஃபர்ஸ்ட் இயரா’ ன்னு கேட்டுக்குவோம்.//

:)))

நான் கல்லூரிக்கு வந்த நேரத்துல இந்த கொடுமையெல்லாம் இல்ல
//
இப்போ ரொம்ப கம்மியாயிடுச்சி. அப்போ ரொம்ப அதிகம்.

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
//என்ன தனா சௌக்கியமா'ன்னு//

காலேஜ்ல இருக்கவரைக்கும்தான் சீனியர் ஜூனியர் எல்லாம். வெளிய வந்தா இப்படிதான் . :)
//
ஆமாங்க. அப்போ பண்ணின அழிச்சாட்டியம் ரொம்ப அதிகம். வெல்சம் ஃபீஸ்ட்னு ஒன்னு வெப்பாங்க, அதுவரைக்கும் அப்படித்தான்.

//
கார்க்கி said...
சகா இன்னும் மூணு ரன் தான். சீக்கிரம் சதமடிக்க வாழ்த்துகள்
//
நன்றி சகா, இன்னும் மூனு நாள்ல அடிச்சிடுவோம்...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
நடிச்சே எஸ்கேப்பா! பெரிய ஆளு தான்.
சீக்கிரம் மூன போடுங்க. இந்த வருசத்துக்குள்ள முடிச்சிருவீங்கனு நினைக்கிறேன். :-)
//
கண்டிப்பா தம்பி, நூத்தி ஒன்னு அடுத்த வருஷம் வர மாதிரி பாத்துக்கறேன்.

//
வானம்பாடிகள் said...
ம்கும். இதுலயே படுத்தினது பாதி வந்துடுச்சே. இவ்வளவு கேனைங்களா உங்க சீனியர்ஸ். அதென்ன கதிரையும் தங்கச்சியவும் பார்த்து பயப்படுறது. சீனியர்னா:))
//
அடுத்தத பார்ட் பாருங்கய்யா, நாம டரியல் ஆக்கி(ஆ)னது.

//
துபாய் ராஜா said...
//என்ன அந்த கேள்விய கேட்ட தனசேகர சிங்கப்பூர்ல வந்த புதுசில பார்த்தப்போ மொதல்ல 'என்ன தனா சௌக்கியமா'ன்னு கேட்டுத்தான் பேச ஆரம்பிச்சேன். //

'என்னடா தனா'ன்னு கேட்டு அவரை ராகிங் பண்ணியிருக்கலாம் தல. :))

நல்லவேளை. நானெல்லாம் ஹாஸ்டல்ல தங்கலை.'டேஸ் காலர்' தான். :))
//
தப்பிச்சீங்க... நன்றி ராஜா, வருகைக்கும் கருத்துக்கும்.

ஹேமா said...

கடந்த காலங்களுக்குள் எங்களையும் கொண்டு சென்றீர்கள் பிரபா.
இனிமையான நினைவுகள்.

Anonymous said...

I was a teaching in M.E. to my ex-B.E. senior.

He acted as if he did not remember me!!

elephant one day-cat one day :-)
-Reena

பிரபாகர் said...

//
ஹேமா said...
கடந்த காலங்களுக்குள் எங்களையும் கொண்டு சென்றீர்கள் பிரபா.
இனிமையான நினைவுகள்.
//
நன்றி சகோதரி... உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும்...

//
Anonymous said...
I was a teaching in M.E. to my ex-B.E. senior.

He acted as if he did not remember me!!

elephant one day-cat one day :-)
-Reena
//
Thanks Reena! Its quite interesting... It happends. Thanks for your fist visit and nice comment.

கலகலப்ரியா said...

//மோகனும் சரவணனும்னு சொல்லத்தான் ஆசையா இருக்கு, ஆனா, தங்கச்சி, கதிர நினைச்சி பயமா இருக்கு//

=))... சொல்லாம சொல்லிட்டீங்களே அண்ணா... கில்லாடிதான் போங்க....

செம காமெடி....=)) கலக்கல்...

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
//மோகனும் சரவணனும்னு சொல்லத்தான் ஆசையா இருக்கு, ஆனா, தங்கச்சி, கதிர நினைச்சி பயமா இருக்கு//

=))... சொல்லாம சொல்லிட்டீங்களே அண்ணா... கில்லாடிதான் போங்க....

செம காமெடி....=)) கலக்கல்...
//
நன்றி சகோதரி, அடுத்து வரப்போகிற பகுதியை படிங்க. அண்ணன் டரிய(லான)லாக்குன விஷயம் இருக்குது...

butterfly Surya said...

கொசுவத்திய சுத்த வச்சீடீங்க.

மலரும் நினைவுகள் அருமை..

பிரபாகர் said...

//butterfly Surya said...
கொசுவத்திய சுத்த வச்சீடீங்க.

மலரும் நினைவுகள் அருமை..
//

நன்றி சூர்யா, உங்களின் அன்பிற்கு, தொடர் ஆதரவிற்கு.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB