வாத்தியார் Vs டி.வி.எஸ் 50

|
நான் நாலாவது படிச்சிட்டிருந்த சமயத்துல டி.வி.எஸ். 50 மார்கெட்ல அறிமுகம் ஆச்சு. அதிகமான புழக்கம் இல்ல, ரொம்ப வசதியானவங்க மட்டும்தான் வெச்சிருந்தாங்க.

எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் புதுசா வாங்கி, (ரொம்ப வசதியோன்னு கேக்காதீங்க, அவங்க மனைவியும் டீச்சரா இருந்தாங்க) ஒரு வாரம் ஓட்டறதுக்கு பழகிட்டு ஸ்கூலுக்கு கொண்டு வந்திருந்தாரு.

சில்வர் பிளஸ் வண்டிய ஒரு கம்பவுண்டர் அங்கிள் தினமும் எங்க வீட்டில விட்டுட்டு போவாரு, அது மேல ஏறி உக்காந்து கற்பனையா வண்டி ஒட்டுனதோட சரி.

பளபளன்னு பச்ச கலர்ல பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமாவும் பிரம்மிப்பாவும் இருந்துச்சி, சைக்கிளே அப்போ பெரிய விஷயம்.

சாயந்திரமா ரெண்டு வத்தியாருங்களுக்கு ஸ்டார்ட் பண்ணி எப்படி ஓட்டறதுன்னு படம் காமிச்சிகிட்டு இருந்தாரு. அதுல ஒரு சாரு, நல்லா நாமம் போட்டுகிட்டு வேஷ்டியை வித்தியாசமா கட்டியிருப்பாரு.

இந்தமாதிரி பெடலை மிதிச்சி கிளட்சை அழுத்தி பிடிச்சி விடணும், ஆக்ஸிலேட்டரை விடணும்னு அவருக்கு சிரத்தையா சொல்லிட்டிருந்தாரு.ஆர்வமா அவரும் அவர் பங்குக்கு கேட்க, அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.

'ஐயா நானும் முயற்சி பண்ணி பாக்கட்டுமா' ன்னு கேட்க, ’ஒ தாராளமா' ன்னு அவர்கிட்ட விட்டுட்டு அவரு எப்படி ஸ்டார்ட் பண்றாருன்னு பாத்துட்டிருந்தப்போ, தூரத்தில் ரெண்டு பசங்களுக்குள்ள ஏதோ சண்டை, கட்டி புடிச்சி உருண்டு கிட்டிருந்தாங்க. அத கவனிச்சிட்டு அய்யா இருங்க, வர்றேன்னு சொல்லிட்டு குச்செடுத்து விளாச கிளம்பிட்டாரு.

அவரு நகர்ந்தவுடன், அய்யா இன்னும் குஷியாகி பெடலை அழுத்தி கிளட்சை ரிலீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணிட்டாரு. ஆக்ஸிலேட்டர நல்லா முறுக்கிட்டு அவருக்கு விடறது எப்படின்னு தெரியல, பிரேக் பிடிக்கவும் தெரியல.

அப்போ பதட்டத்துல வண்டிய பின்பக்கம் அழுத்தவும் டயர் மோதி வண்டி ஸ்டேண்ட் ரிலீஸ் ஆகி வேகமா கிளம்பிடுச்சி. சார் மிரண்டு போயி வண்டிகூடயே வேகமா ஓட ஆரம்பிச்சிட்டாரு.

ஓடும்போது அவர் காலில் வேஷ்டி மாட்டி உறுவிட்டு வந்துவிட,கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது. கோவணத்தோட உயிரை கையில புடிச்சிகிட்டு வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு.வேஷ்டி கண்ணாடியெல்லாம் பொறுக்கி எடுத்திட்டு பின்னாலேயே கத்திட்டு ஓடினோம். 

இருபது இருபத்தஞ்சு மீட்டர் தூரம் ஓடி அடுத்த பில்டிங் சுவர்ல மோதி கீழே விழ, அவரு மேல வண்டி கிடந்தது. ஆக்ஸிலேட்டரை விடாம முறுக்கிட்டே இருந்தாரு.\

ரொம்ப கஷ்டப்பட்டு அவர வண்டியில இருந்து பிரிச்சோம். கிலி அடிச்ச மாதிரி இருந்தாரு. தண்ணியெல்லாம் தெளிச்சி தெளிய வெச்சோம். ஒருவாரம் எங்கள பாத்தா தலைய குனிஞ்சிகிட்டு போனாரு.

அன்னியிலிருந்து அவரை பார்க்கும் போதெல்லாம் அவரோட கோவண ரேஸ்தான் ஞாபகம் வரும். ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு. அது 'சைக்கிள் மட்டும்தான் ஓட்டறது' ங்கறதை.

பின்குறிப்பு.

நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை....

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நாடோடி இலக்கியன் said...

சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்திடுச்சு. நல்லாயிருக்குங்க கோவண ரேஸ்.

வால்பையன் said...

ஹாஹாஹா!

நினைச்சுபார்க்கவே பயங்கர காமெடியா இருக்கு தல! நேர்ல எப்படி பார்த்திங்க!

பூங்குன்றன்.வே said...

எனக்கும் சிரிப்பும் வந்தது,பழைய விஷயங்களை/பொருட்களை நாம எவ்ளோ மிஸ் பண்றோம் என்கிற சிந்தனையும் வந்தது பிரபாகர்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.

க.பாலாசி said...

//கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது.//

என்னமா கவனிச்சிருக்காங்கப்பா?

//ஒருவாரம் எங்கள பாத்தா தலைய குனிஞ்சிகிட்டு போனாரு.//

ஊர்கூடில்ல பார்த்திருக்கீங்க...வேற வழி....

நல்ல காமடி...

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல கூத்துதான்.......சிரிப்பை அடக்கமுடியவில்லை.

நையாண்டி நைனா said...

ஹா....ஹா....ஹா....ஹா.....
அடச்சே... பார்க்க நாம அங்கே இல்லாமே போய்ட்டோமே... என்கிற எண்ணமே மேலோங்குகிறது...

Prathap Kumar S. said...

டிவிஎஸ் 50 புதுசா வந்தகாலத்துல எல்லாரும் அதிகமா கோவணம் தானேகட்டிட்டியிருந்தாங்க... விஐபி ஜட்டி, பூம்புகார்ஜட்டில்லாம் லேட்டஸ்ட்டா வந்ததுதானன்ணே...
காடெியா இருந்துச்சு

vasu balaji said...

யப்பா சாமி. பிரபாகர். கேப் விட்டாலும் சூப்பர் வேட்டு. சிரிச்சி மாளலை.=))

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா...த்ல வடிவேல் வென்னிறாடை மூர்த்திக்கு சைக்கிள் கத்து கொடுத்தது நினைவுக்கு வருது...என்னமா வேடிக்கை பாத்துருக்கீங்க..

ஈரோடு கதிர் said...

உங்களுக்குள்ளே இப்படியொரு நகைச்சுவை உணர்வு இருக்கும்னு நெனைக்கலையே பிரபா.....

ஆனாலும் சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது சாமி

balavasakan said...

;-)...ஹி..ஹி.ஹி.ஹி.ஹி.

துபாய் ராஜா said...

படமும்,பகிர்வும் அருமை.

பதிவுலக வரலாற்றில் கோவண ரேஸ் பார்த்த/பதிவிட்ட முதல் பதிவர் நீங்கள் ஆகத்தான் இருக்கும். :))

பிரபாகர் said...

//
நாடோடி இலக்கியன் said...
சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்திடுச்சு. நல்லாயிருக்குங்க கோவண ரேஸ்.
//
நன்றி நண்பா... அன்பிற்கும் கருத்துக்கும்.

//
வால்பையன் said...
ஹாஹாஹா!

நினைச்சுபார்க்கவே பயங்கர காமெடியா இருக்கு தல! நேர்ல எப்படி பார்த்திங்க!
//
வாங்க வாலு! மிரட்சியோடத்தான்.

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
எனக்கும் சிரிப்பும் வந்தது,பழைய விஷயங்களை/பொருட்களை நாம எவ்ளோ மிஸ் பண்றோம் என்கிற சிந்தனையும் வந்தது பிரபாகர்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
//
ந்னறி பூங்குன்றன்... அன்பிற்கு நன்றி.

//
க.பாலாசி said...
//கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது.//

என்னமா கவனிச்சிருக்காங்கப்பா?

//ஒருவாரம் எங்கள பாத்தா தலைய குனிஞ்சிகிட்டு போனாரு.//

ஊர்கூடில்ல பார்த்திருக்கீங்க...வேற வழி....

நல்ல காமடி...
//
நன்றி பாலாசி... அழகான விமர்சனத்துக்கு.

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல கூத்துதான்.......சிரிப்பை அடக்கமுடியவில்லை.
//
நன்றி ஆரூரன்.

//
நையாண்டி நைனா said...
ஹா....ஹா....ஹா....ஹா.....
அடச்சே... பார்க்க நாம அங்கே இல்லாமே போய்ட்டோமே... என்கிற எண்ணமே மேலோங்குகிறது...
//
நன்றி நைனா... நம்மல மாதிரியே உங்களுக்கும் நிறைய வேலை போலிருக்கு...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
டிவிஎஸ் 50 புதுசா வந்தகாலத்துல எல்லாரும் அதிகமா கோவணம் தானேகட்டிட்டியிருந்தாங்க... விஐபி ஜட்டி, பூம்புகார்ஜட்டில்லாம் லேட்டஸ்ட்டா வந்ததுதானன்ணே...
காடெியா இருந்துச்சு
//
நன்றி பிரதாப்.

//
வானம்பாடிகள் said...
யப்பா சாமி. பிரபாகர். கேப் விட்டாலும் சூப்பர் வேட்டு. சிரிச்சி மாளலை.=))
//
நன்றிங்கய்யா! உங்களின் அன்பிற்கும், அறிவுறுத்தலுக்கும்.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
ஹா ஹா ஹா...த்ல வடிவேல் வென்னிறாடை மூர்த்திக்கு சைக்கிள் கத்து கொடுத்தது நினைவுக்கு வருது...என்னமா வேடிக்கை பாத்துருக்கீங்க..
//
நன்றி புலிகேசி.

//
ஈரோடு கதிர் said...
உங்களுக்குள்ளே இப்படியொரு நகைச்சுவை உணர்வு இருக்கும்னு நெனைக்கலையே பிரபா.....

ஆனாலும் சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது சாமி
//
நன்றி கதிர். அப்பப்போ வெளிய வருமில்ல!

பிரபாகர் said...

//
Balavasakan said...
;-)...ஹி..ஹி.ஹி.ஹி.ஹி.
//
நன்றி பாலவாசகன்.

//
துபாய் ராஜா said...
படமும்,பகிர்வும் அருமை.

பதிவுலக வரலாற்றில் கோவண ரேஸ் பார்த்த/பதிவிட்ட முதல் பதிவர் நீங்கள் ஆகத்தான் இருக்கும். :))
//
நன்றி ராஜா.

ரோஸ்விக் said...

//ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு.//

நான் கூட கோவணம் மட்டும் கட்டுரதன்னு நினைச்சேன். :-)))

தராசு said...

கோவண ரேஸ் சூப்பர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹா..ஹா.. ஒவ்வொருவருக்கும் இது போல முதல் வாகன அனுபவம் இருக்கத்தான் செய்கிறது :)

கலையரசன் said...

//கோவணத்தோட உயிரை கையில புடிச்சிகிட்டு வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு//

அவருக்கு அவமானம்.. உங்களுக்கு சிரிப்பா????
இருந்தாலும் சிரிப்பாதான்யா இருக்கு....

Raju said...

\\வால்பையன் said...
ஹாஹாஹா!
நினைச்சுபார்க்கவே பயங்கர காமெடியா இருக்கு தல!
நேர்ல எப்படி பார்த்திங்க!\\

மூக்கால பார்த்தாராம்..!

Menaga Sathia said...

sசிரித்து சிரித்து வயிறு வலிக்குது..செம காமெடி...

ஷங்கி said...

ஹிஹிஹி! சரியான காமெடிதான். எப்பவுமே இடுக்கண் வந்தா நகுகதான்!!!!

பிரபாகர் said...

ரோஸ்விக் said...
//ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு.//

நான் கூட கோவணம் மட்டும் கட்டுரதன்னு நினைச்சேன். :-)))
//
எப்படிங்க... இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க!

//
தராசு said...
கோவண ரேஸ் சூப்பர்.
//

வாங்கண்ணா... கடுமையான வேலைப்பளு. இப்போதான் மீண்டிருகேன்.

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ஹா..ஹா.. ஒவ்வொருவருக்கும் இது போல முதல் வாகன அனுபவம் இருக்கத்தான் செய்கிறது :)
//
நன்றி செந்தில்.

//
கலையரசன் said...
//கோவணத்தோட உயிரை கையில புடிச்சிகிட்டு வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு//

அவருக்கு அவமானம்.. உங்களுக்கு சிரிப்பா????
இருந்தாலும் சிரிப்பாதான்யா இருக்கு....
//
சின்ன வயசு. ரொம்ப கண்டிப்பான வாத்தியார். கொஞ்சம் முசுடு. அதனால... நன்றி கலை...

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
\\வால்பையன் said...
ஹாஹாஹா!
நினைச்சுபார்க்கவே பயங்கர காமெடியா இருக்கு தல!
நேர்ல எப்படி பார்த்திங்க!\\

மூக்கால பார்த்தாராம்..!
//
நக்கலு! வாங்க தம்பி...

//
Mrs.Menagasathia said...
sசிரித்து சிரித்து வயிறு வலிக்குது..செம காமெடி...
//
நன்றி சகோதரி!

//
ஷங்கி said...
ஹிஹிஹி! சரியான காமெடிதான். எப்பவுமே இடுக்கண் வந்தா நகுகதான்!!!!
//
நன்றி ஷங்கி...

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

நல்ல நகைச்சுவை - பாவம் அவர் - ம்ம்ம் - வி.வி.சி

நல்வாழ்த்துகள் பிரபாகர்

பிரபாகர் said...

//cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

நல்ல நகைச்சுவை - பாவம் அவர் - ம்ம்ம் - வி.வி.சி

நல்வாழ்த்துகள் பிரபாகர்
//
அய்யா,

உங்களின் மோதிரக்கையால் இன்றுதான் குட்டுப்பட்டிருக்கிறேன். சந்தோஷமாய் உணர்கிறேன்... நன்றி அய்யா!

பிரபாகர்.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB