முற்பகல் செய்யின், முற்பகலே விளையும்...

|

இங்கு சிங்கப்பூரில் மிகவும் அரிதாகத்தான் பார்க்க இயலும், நம்மூரில் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்களை. உதாரணமாய் வாகனம் சம்மந்தமாக சிக்னலை மீறுதல், ஹார்ன் அடித்தல், புகை கக்கும் வாகனங்கள், வாகனங்களின் சிறு மோதலுக்குப்பின் ஏற்படும் சண்டை, கையில் செல்போனை வைத்து பேசியபடி வாகனம் ஓட்டுதல், (டாக்ஸி டிரைவர் காதில் இயர் போன் அல்லது ப்ளூடூத் வைத்து பேசுகிறார், பஸ் டிரைவர் எவரும் பேசி கண்டதில்லை).


பொது விஷயங்களை எடுத்துக்கொண்டால் கண்ட இடங்களில் சிறுநீர் கழித்தல், அரசியல் பேசுதல், பொது இடங்களில் சப்தமாய் மற்றவர் துன்புறும் வகையில் தரக்குறைவாய் பேசுதல், கடைகளில் மரியாதை குறைவாய் பேசுதல், சில்லறை சம்மந்தமாய் வரும் வாக்குவாதங்கள்... என சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது ட்ரெயினில் ஒரு அறுபது வயதொத்த சீனப்பெரியவரை உள்ளே சென்ற சீன மாது ஒருவர் தெரியாமல் லேசாய் மோதிவிட்டார். உடன் அந்த பெரியவர் சட்டென ஏதோ சொல்லிவிட அந்த பெண்ணுக்கு ஆற்றாமை தாள இயலாமல் அப்படியே பொங்கி பொங்கி அழ ஆரம்பிக்க, எங்களுக்கெல்லாம் ரொம்ப பரிதாபமாய் போய்விட்டது.

நினைத்து நினைத்து அழுத வண்ணம் வந்தது எல்லோர் மனதையும் கரைப்பதாய் இருந்தது. ஆனால் அந்த பெரியவர் கொஞ்சமும்  அலட்டிக்கொள்வதாய் இல்லை. ஏதோ திரும்பத் திரும்ப அந்த மாதுவைப் பார்த்து முனகித் திட்டிக்கொண்டிருந்தார்.

டிஸ்யூ பேப்பர் எடுத்து பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே வர, அந்த பெரியவர் இன்னும் விடாமல் முனகி சொல்லிக்கொண்டு வந்ததைக் கேட்டு இன்னும் அதிகமாய் வாய் விட்டு கதற, அந்த பெரியவரை நாங்கள் எல்லோரும் ஒரு புழுவைப்போல் பார்த்தோம்.

பேசியது சுத்தமாய் புரியவில்லை என்றாலும், உணர்ச்சிகள், செய்கைகள் காட்டிக் கொடுத்துவிடுமல்லவா? ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் ட்ரெயின் நின்றவுடன் அந்த மாது சட்டென வெளியே சென்றுவிட்டார். கண்டிப்பாய் சற்று முன்னதாக இறங்கிவிட்டார் என எண்ணுகிறேன்.

அப்போது இன்னொரு வயதான பெரியவர் உள்ளே போகும்போது வழியில் நின்றிருந்த அதே பெரியவர் மீது தெரியாமல் மோதிவிட, வழக்கம் போல் அதே மாதிரி ஏதோ சொல்ல, அவ்வளவுதான் புதிதாய் வந்த அவர் கோபமாய் பதிலடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் முன்பு அந்த  மாதுவை அவர் திட்டியதைவிட விட மிக அதிகமாய் மிக கோபத்தோடு கன்னா பின்னாவென திட்டி பேசவே வாயை திறக்கா வண்ணம் விளாசிக்கொண்டு வந்தார்.

ஏதோ பதில் சொல்ல பெரியவர் முயல மற்றவர் கடும் எச்சரிக்கையை விட மாதுவை திட்டியவர் இறுகிய முகத்தோடு வாயை மூடிக்கொண்டிருந்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது. எங்களில் யாருக்கும் திட்டு வாங்கி கட்டிக்கொண்ட பெரியவரின் மேல் கொஞ்சமும் பரிதாபம் ஏற்படவில்லை.

அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்கிவிட்டேன், என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்போது தோன்றியது ’முற்பகல் செய்யின், முற்பகலே விளையும்’ என்பதுதான்.

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

முற்பகல் செய்யின் முற்பகல் விளையும்....சரிதான்..அதனால் தான் நீங்கள் முற்பகல் போட்ட பதிவுக்கு முற்பகலில் இந்த பின்னூட்டமும்...வாக்குகளும்

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க பிரபா.....

பல நேரங்களில் ஆச்சரியப் பட்டிருக்கிறேன், அவர்களின் ஒழுங்குமுறைகளை பார்த்து.

நடந்து செல்பவர்களுக்காக முன்னுரிமை கொடுத்து காரை நிறுத்தி வழி விடுவதும், உள்ளூர் பஸ் நடத்துனர் பஸ்ஸில் ஏறும் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அந்த ஊரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

:(

துளசி கோபால் said...

பிரபா,

ரொம்பச் சரி.

சென்னையில் என்னை 'நாய் கடிச்சுருச்சுப்பா'

Anonymous said...

ஒரு சிலர் பொதுவுல நடந்துக்கறதைப்பாத்தா எரிச்சல்தான். கடவுளாப்பாத்து தண்டிச்சாதான் உண்டு.

நாடோடி இலக்கியன் said...

கைமேல் பலன்.

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்வியல் எதார்த்தங்களை அழகாகப் பதிவுசெய்கிறீர்கள்..

க.பாலாசி said...

சிலநேரங்களில் சில மனிதர்கள்...

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
முற்பகல் செய்யின் முற்பகல் விளையும்....சரிதான்..அதனால் தான் நீங்கள் முற்பகல் போட்ட பதிவுக்கு முற்பகலில் இந்த பின்னூட்டமும்...வாக்குகளும்
//
நன்றி புலிகேசி... அன்பிற்கு

//
ஆரூரன் விசுவநாதன் said...
சரியாச் சொன்னீங்க பிரபா.....

பல நேரங்களில் ஆச்சரியப் பட்டிருக்கிறேன், அவர்களின் ஒழுங்குமுறைகளை பார்த்து.

நடந்து செல்பவர்களுக்காக முன்னுரிமை கொடுத்து காரை நிறுத்தி வழி விடுவதும், உள்ளூர் பஸ் நடத்துனர் பஸ்ஸில் ஏறும் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அந்த ஊரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
//
நன்றிங்க ஆரூரன்...

பிரபாகர் said...

//
Cable Sankar said...
:(
//
சீக்கிரம் இங்க வாங்கண்ணா!

//
துளசி கோபால் said...
பிரபா,

ரொம்பச் சரி.

சென்னையில் என்னை 'நாய் கடிச்சுருச்சுப்பா'
//
நன்றி மேடம்... ஊர்ல ஜாக்கிரதையாத்தான் நடந்தும் போகனும்...

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
ஒரு சிலர் பொதுவுல நடந்துக்கறதைப்பாத்தா எரிச்சல்தான். கடவுளாப்பாத்து தண்டிச்சாதான் உண்டு.
//
நன்றிங்க அம்மணி....

//
நாடோடி இலக்கியன் said...
கைமேல் பலன்.
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
வாழ்வியல் எதார்த்தங்களை அழகாகப் பதிவுசெய்கிறீர்கள்..
//
நன்றிங்கய்யா... உங்களின் அன்பிற்கு, தொடர் ஆதரவிற்கு...

//
க.பாலாசி said...
சிலநேரங்களில் சில மனிதர்கள்...
//
நன்று பாலாசி...

துளசி கோபால் said...

//நன்றி மேடம்... ஊர்ல ஜாக்கிரதையாத்தான் நடந்தும் போகனும்...//

சரியாப்போச்சு போங்க.கார்லே போகும்போது 'நாய்' கடிச்சுருச்சுப்பா:-))))

பிரபாகர் said...

//துளசி கோபால் said...
//நன்றி மேடம்... ஊர்ல ஜாக்கிரதையாத்தான் நடந்தும் போகனும்...//

சரியாப்போச்சு போங்க.கார்லே போகும்போது 'நாய்' கடிச்சுருச்சுப்பா:-))))
//
மேடம், வளர்ப்பு நாய் செல்லமா கடிச்சதையெல்லாம் வெளிய சொல்லப்படாது... ஆமாம்.

துளசி கோபால் said...

வேணாம்...அழுதுருவேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபாகர் said...

//துளசி கோபால் said...
வேணாம்...அழுதுருவேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
மேடம், நாயக்குளிப்பாட்டி காருக்குள்ள வெச்சாலும், கடிக்காம இருக்காதுன்னு ஒரு புதுமொழிய உருவாக்கி இருக்கீங்க...

ஈரோடு கதிர் said...

.

vasu balaji said...

/ஈரோடு கதிர் said...

./

ரிப்பீட்டேய்

Prathap Kumar S. said...

ஆண்டவன் நின்று கொடுப்பதல்லாம் பழைய பேசன் .. இப்போ சிலசமயம் உடனே கொடுத்துருவான். நல்ல பகிர்வு.

இது எந்த ஊர் சிங்கப்பூர்...
ஆலமர காத்தும், ஏலேலேலோ பாட்டும்..
நம்மூருபோல ஊரு இல்ல...

கலையரசன் said...

பிரபா.. நீங்க எங்கயோ போயிட்டீங்க!!

Keddavan said...

குட்டக்குட்ட குனிபவனும் மடையன்..குனியக்குனிய குட்டுபவனும் மடையன்..

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
.
//
...

//
வானம்பாடிகள் said...
/ஈரோடு கதிர் said...

./

ரிப்பீட்டேய்
//
....

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஆண்டவன் நின்று கொடுப்பதல்லாம் பழைய பேசன் .. இப்போ சிலசமயம் உடனே கொடுத்துருவான். நல்ல பகிர்வு.

இது எந்த ஊர் சிங்கப்பூர்...
ஆலமர காத்தும், ஏலேலேலோ பாட்டும்..
நம்மூருபோல ஊரு இல்ல...
//
வாங்க பிரதாப்... பாட்டோட கலக்குறீங்க...!

//
கலையரசன் said...
பிரபா.. நீங்க எங்கயோ போயிட்டீங்க!!
//
வாங்க கலை... எங்கே?

//
rajeepan said...
குட்டக்குட்ட குனிபவனும் மடையன்..குனியக்குனிய குட்டுபவனும்
//
வாங்க ராஜீபன். முதல் வரவிற்கு நன்றி...

துபாய் ராஜா said...

உண்மைதான் பிரபாகர். இதைத்தான்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.ன்னு வள்ளுவர் அப்பவே குறளா எழுதிட்டார்.

venkat said...

//முற்பகல் செய்யின், முற்பகலே விளையும்’ \\

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
உண்மைதான் பிரபாகர். இதைத்தான்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.ன்னு வள்ளுவர் அப்பவே குறளா எழுதிட்டார்.
//

நன்றி ராஜா...

//
venkat said...
//முற்பகல் செய்யின், முற்பகலே விளையும்’ \\
//

முதல் வருகைக்கு நன்றி வெங்கட்...

ஹேமா said...

பிரபா வில்லனுக்கு வில்லன் எங்கேயோ ஒரு இடத்தில முளைப்பான்தானே !

பிரபாகர் said...

//ஹேமா said...
பிரபா வில்லனுக்கு வில்லன் எங்கேயோ ஒரு இடத்தில முளைப்பான்தானே !
//
ஆமாம் சகோதரி, அந்த அனுபவத்தில்தான் இந்த இடுகை.

அன்புசிவம்(Anbusivam) said...

நல்ல பதிவு பிரபா...:)

பிரபாகர் said...

//அன்புசிவம்(Anbusivam) said...
நல்ல பதிவு பிரபா...:)
//
நன்றிங்க நண்பா...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB