பீர் சாப்பிட்டதாய் கதை...

|

பசங்களுக்குள்ளே இந்த ஊர்ல யாரு தண்ணி தம்மு அடிக்காத ஆளுன்னு புள்ளிவிவரம் எடுத்திருக்கானுங்க. அப்போ என் பேரு மொதல்ல வந்திருக்கு. உடனே அங்கிருந்த ஒருத்தன்,

'பிரபு கூட நான் பீர் சாப்பிட்டிருக்கேன்' னு அடிச்சி சொல்லவும், என் தம்பி ஒரு மாதிரியா ஆயிட்டான். என்ன பத்தி அவனுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், எதையும் அவன்கிட்ட மறைச்சதில்லை.

கொஞ்ச நாள் கழிச்சி, என்கிட்ட இந்த விஷயத்தை சம்மந்தப்பட்ட அவன் கிட்ட கேக்க கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டு, 'பீர் சாப்பிட்டிருக்கியா' ன்னு கேட்டான்.

'இல்லடா, சாப்பிட்டா உன்கிட்ட சொல்லியிருப்பேனே, மறைக்கனும்னு அவசியம் இல்லயே' ன்னேன்.

'புரியுதுண்ணா, ஆன அவன் உன்கூட சேர்ந்து பீர் சாப்பிட்டேன்னு எல்லார் முன்னாலேயும் சொன்னான்' னான். சுர்ருனு கோவம் வந்துச்சி. 'இப்பவே அவன்கிட்ட நேர்ல கேக்கலாம்' னேன்.

'அதுக்குத்தான் உங்கிட்ட நான் கேக்கக்கூடாதுன்னு நினைச்சேன்' னான்.

ஆனாலும் எனக்கு பல்லுல மாட்டுன பாக்கு மாதிரி நிரடிட்டே இருந்துச்சி. சமயத்துக்கு காத்திருந்தேன். ரொம்ப வருஷம் கழிச்சு ஒருநாள், பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல அழகுவோட பேசிட்டிருந்தப்ப அவன் வந்தான். இதான் சமயம்னு நினைச்சுட்டேன்.

'எப்போ வந்தே, வேலயெல்லாம் எப்படி இருக்கு' ன்னு கேட்டான். சொல்லிட்டு மெதுவா, 'வாழ்க்கையில எதாச்சும் தப்பு பண்ணுனும்னா அப்பா அம்மாவுக்கு, சொந்தத்துக்கு பயப்படனும். உனக்கே நல்லா தெரியும் அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்'.

'எதையுமே அவங்ககிட்ட மறைச்சதில்லை. சப்போஸ் பீர் சாப்பிடனும்னு எனக்கு விருப்பம் இருந்தா அவங்ககிட்ட சொல்லிட்டே சாப்பிடுவேன், ஏன் வீட்டிலயே சாப்பிடுவேன். ஆனா எனக்கு புடிக்காது, உடன்பாடு இல்லை' ன்னு சொன்னேன்.

அவன் முகத்துல லேசா கறுப்பு தட்டுச்சி. 'புரியல, ஆமா இப்ப எதுக்கு சொல்லுறே?' ன்னான்.

'இல்ல, நான் உன்கூட பீர் சாப்பிட்டேன்ன்னு சொன்னியாமே? எப்போ? எங்கே?' ன்னேன்.

'அய்யய்யோ சத்தியமா அப்படி சொல்லவே இல்ல, உன்னை பத்தி எனக்கு தெரியாதா, பாக்குகூட போடமாட்டே (சரியான பொய்), ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான், அதெல்லாம் கண்டுக்காதே' ன்னுட்டு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான்.

'பீர்'லாம் உன்கூட குடிச்சதில்ல, ஆனா சாராயம் குடிக்க கத்து கொடுத்தது அழகு மாமாதான்' ன்னு அழகுவ பாத்து சொன்னான்.

அழகு பதறி போய், 'டேய், என்னடா அபாண்டமா பழி போடறே? நானா, உனக்கா' ன்னாரு. அழகு அவர விட சின்ன வயசு பசங்க கிட்ட அதிகமா வெச்சிக்க மாட்டாருங்கறது எல்லாருக்கும் தெரியும்.

'மாமா நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடி சாரயக்கடை வெச்சிருந்தீங்களா இல்லையா' ன்னான்.

'ஆமா, வெச்சிருந்தோம்'

'அப்போதான் கத்து குடுத்தீங்க' ன்னுட்டு சட்டுனு போயிட்டான்.

அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.

கொஞ்சம் மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை.

55 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

நான் தான் முதல்

ஈரோடு கதிர் said...

சரி கவலைய விடுங்க.... அடுத்தவாட்டி ஊருக்கு வர்றப்போ சாப்டுக்கலாம்....

ஈரோடு கதிர் said...

//புலவன் புலிகேசி said...
நான் தான் முதல்//

எதுக்கு நண்பா.... சியர்ஸ் சொல்லவா!!!??? இஃகிஃகி

புலவன் புலிகேசி said...

//Blogger ஈரோடு கதிர் said...

//புலவன் புலிகேசி said...
நான் தான் முதல்//

எதுக்கு நண்பா.... சியர்ஸ் சொல்லவா!!!??? இஃகிஃகி//

ஆமாம் தல..Cheers..இதே லிஸ்ட் எங்க தெருவுலயும் எடுத்துருக்காங்க..ஆனா என் பேரு இல்ல..இப்புடித்தான் ஊர ஏமாத்தி வச்சிருக்கேன்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பாவம் அழகு சார் ,..

ஸ்ரீ.கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஊடகன் said...

முடியலடா சாமிமிமிமி...........

vasu balaji said...

/கொஞ்சம் மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை/

என்ன மாற்றங்கள்? அது சொல்லலையே=)). பீர், சாராயம் தவிர மத்தத காணோமே? பாக்கு எப்ப போடுவீங்க? அய்யோ சாமி முடியல. ஊர்ல தினம் ஒரு வம்பிழுத்து விடுவிங்களோ பிரபா?

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
நான் தான் முதல்
//
வாங்க புலிகேசி...

//
ஈரோடு கதிர் said...

சரி கவலைய விடுங்க.... அடுத்தவாட்டி ஊருக்கு வர்றப்போ சாப்டுக்கலாம்....
//
ஆஹா! கண்டிப்பா, நான் சைட் டிஷ் மட்டும்தான்! ஓகே?

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...

//புலவன் புலிகேசி said...
நான் தான் முதல்//

எதுக்கு நண்பா.... சியர்ஸ் சொல்லவா!!!??? இஃகிஃகி
//
கதிர் நல்ல மூட்ல இருக்கீங்க போலிருக்கு?

//
புலவன் புலிகேசி said...

//Blogger ஈரோடு கதிர் said...

//புலவன் புலிகேசி said...
நான் தான் முதல்//

எதுக்கு நண்பா.... சியர்ஸ் சொல்லவா!!!??? இஃகிஃகி//

ஆமாம் தல..Cheers..இதே லிஸ்ட் எங்க தெருவுலயும் எடுத்துருக்காங்க..ஆனா என் பேரு இல்ல..இப்புடித்தான் ஊர ஏமாத்தி வச்சிருக்கேன்...
//
ம்... நடத்துங்க நடத்துங்க...

ஈரோடு கதிர் said...

//பாக்கு எப்ப போடுவீங்க?//

இருங்க கவுண்டமணி ஜோக்க பார்த்துட்டு வர்றேன்

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
பாவம் அழகு சார் ,..
//
அவரு உங்க காலேஜ்லத்தான் இருக்காரு ஜெய்...

//
ஊடகன் said...
முடியலடா சாமிமிமிமி...........
//
வாங்க ஊடகன், நன்றிங்க.

பிரபாகர் said...

// வானம்பாடிகள் said...
/கொஞ்சம் மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை/

என்ன மாற்றங்கள்? அது சொல்லலையே=)). பீர், சாராயம் தவிர மத்தத காணோமே? பாக்கு எப்ப போடுவீங்க? அய்யோ சாமி முடியல. ஊர்ல தினம் ஒரு வம்பிழுத்து விடுவிங்களோ பிரபா?

//

எழுத வந்த புதுசில வெளியிட்டது. படிக்கிறப்போ கொஞ்சம் ஜெர்க் இருக்க சரி செஞ்சு போட்டிருக்கேன்...(இடுகையைத்தான் அய்யா!)

ரொம்ப நல்ல பையன், வம்ப நல்லா கவனிப்பேன், கேட்டு தெரிஞ்சி வெச்சுப்பேன், பின்னால யூஸ் ஆகுமுன்னு...

மணிஜி said...

உவ்வ்வ்வ்வ்வ்வே

பிரபாகர் said...

//தண்டோரா ...... said...
உவ்வ்வ்வ்வ்வ்வே
//
அண்ணே, நம்ம நேர்மை யாருக்கு தெரியுதோ இல்லையோ, உங்களுக்கு தெரியுமில்ல?

மணிகண்டன் said...

பிரபாகர், இந்த உரையாடல் நடந்தபோது உங்க வயசு எட்டுன்னு சொல்லாம மறைச்சிட்டீங்களே ! இது நியாயமா ?

Raju said...

"புட்டித்" தங்கம்ண்ணே நீங்க..!

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
சரி கவலைய விடுங்க.... அடுத்தவாட்டி ஊருக்கு வர்றப்போ சாப்டுக்கலாம்....//

நானும் இதை வழிமொழிகிறேன்....

கலகலப்ரியா said...

இப்டி நிறைய பேரு இருக்கானுவ...! இஸ்கூல்ல ஒரு கிளாஸ்ல ஒண்ணாவது இப்டி இருக்கும்... lol...

romba interesting a katha solreenga.. thaaththaa paatti maathiri.. =)) superb annaa..!

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு//

ஹல்லோஓஒ மிஸ்டர் கதிர் தாத்தா.... நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)//

நீங்க தாத்தா வயசில அண்ணனை சூஸ் பண்ணினா நாங்க என்ன பண்ணமுடியும்...

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க

vasu balaji said...

அடடடா. யூத்துங்க நானு ப்ரபாகர்லாம் கம்னு இருக்கோம்ல. இந்த கிழடுங்க ஏன் லொட லொடன்னு சவுண்ட் விடுதுங்க.=)) this is called self aappu

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க//

ennathu... choose panraangalaa... annaa annaavaa poranthaarunga..! thapputhaan unga vayasila avanga irukkirathukku naan enna panna... avvvv..!

wottttt... oiii... yaarathu.. 'Peer' aa..? peer romba nallavangalaache.. avanga ean annaakku adikkiraanga... kathir... ithellaam romba overu..

vasu balaji said...

அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....//

பதில் சொல்ல முடியலைன்னா இப்டித்தான் கதைய மாத்துவாய்ங்களோ..! நம்ம இடுகைக்கு பின்னூட்டம் போடணும்னு ஒரு வெவஸ்த இல்ல... நம்ம அண்ணாவ பார்க்க வந்த இடத்திலவம்புக்கா இழுக்கிறீங்க... ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..

தராசு said...

ச்சியர்ஸ்

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச

Menaga Sathia said...

//எனக்கு பல்லுல மாட்டுன பாக்கு மாதிரி நிரடிட்டே இருந்துச்சி.//பழமொழி புதுசா இருக்கு.

உங்க அனுபத்தை படித்து ஒரே சிரிப்புதான் போங்க....

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச//

சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!

கலகலப்ரியா said...

அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க.../

ஓஓஓஓ. அப்போ அண்ணன் நொந்தவரு. அண்ணி நூடில்ஸா=))

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு//

ஆமாம்பா.... அமைதி ப்ளீஸ்... நீங்க கூச்சப்படுங்க கதிர்... டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க...

ஹேமா said...

இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்மாடி...கவனமாத்தான் இருக்கவேணும்.

பிரபாகர் said...

//
மணிகண்டன் said...
பிரபாகர், இந்த உரையாடல் நடந்தபோது உங்க வயசு எட்டுன்னு சொல்லாம மறைச்சிட்டீங்களே ! இது நியாயமா ?
//
மணி, காலேஜ் ஃபிரண்டு கூட பேசிட்டிருக்கறதா போட்டிருக்கேனே?
//
♠ ராஜு ♠ said...
"புட்டித்" தங்கம்ண்ணே நீங்க..!
//
வணக்கம் தம்பி... நல்லாத்தாய்யா கலாய்க்குறீங்க!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//ஈரோடு கதிர் said...
சரி கவலைய விடுங்க.... அடுத்தவாட்டி ஊருக்கு வர்றப்போ சாப்டுக்கலாம்....//

நானும் இதை வழிமொழிகிறேன்....
//
வந்து நேர்ல வெச்சுக்கறேன் பாலாசி...
//
கலகலப்ரியா said...
இப்டி நிறைய பேரு இருக்கானுவ...! இஸ்கூல்ல ஒரு கிளாஸ்ல ஒண்ணாவது இப்டி இருக்கும்... lol...

romba interesting a katha solreenga.. thaaththaa paatti maathiri.. =)) superb annaa..!
//
நன்றி சகோதரி....

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு
//
மனசால இன்னும் யூத்துதான் கதிர்... டிசம்பர் இருபத்து நாளுல வேற ஒரு வயசு குறையப்போகுது!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
thaaththaa paatti maathiri//

ஹல்ல்ல்ல்லோ... அதென்ன மாதிரி....
அதேதான்.....

உங்க அண்ணன் ஒன்னும் யூத்து இல்ல..... யூத்து மாதிரி....

பாருங்க புரபைல்ல போட்டிருக்கிற வயசில எத்தன தில்லாலங்கடினு//
ஹல்லோஓஒ மிஸ்டர் கதிர் தாத்தா.... நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)
//
தங்கச்சி, போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர்.... விட்டுத் தள்ளுஞ்க!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)//

நீங்க தாத்தா வயசில அண்ணனை சூஸ் பண்ணினா நாங்க என்ன பண்ணமுடியும்...

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க
//
அய்யா, நான் தொண்ணூறு வயசு கிழவன்னு கூட ஒத்துக்கறேன், செய்யாத ஒன்ன ஒத்துக்க மாட்டேன்!

//
வானம்பாடிகள் said...
அடடடா. யூத்துங்க நானு ப்ரபாகர்லாம் கம்னு இருக்கோம்ல. இந்த கிழடுங்க ஏன் லொட லொடன்னு சவுண்ட் விடுதுங்க.=)) this is called self aappu
//
அதானே, கதிர், புரிஞ்சுதா?

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
நம்ம அண்ணா எப்பவும் யூத்... (இல்லைனா என்னையும் சேர்த்தில்ல கெழவிம்பாங்க..)//

நீங்க தாத்தா வயசில அண்ணனை சூஸ் பண்ணினா நாங்க என்ன பண்ணமுடியும்...

இல்ல உங்க அண்ணன் யூத்துதான்னு சொன்னா..... பீர் அடிச்சதை ஒத்துக்கச் சொல்லுங்க//

ennathu... choose panraangalaa... annaa annaavaa poranthaarunga..! thapputhaan unga vayasila avanga irukkirathukku naan enna panna... avvvv..!

wottttt... oiii... yaarathu.. 'Peer' aa..? peer romba nallavangalaache.. avanga ean annaakku adikkiraanga... kathir... ithellaam romba overu..
//
தங்கச்சி தங்கம் எப்படி பாய்ண்ட புடிக்கிறாங்க பாத்தீங்களா?

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))
//
உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை அய்யா!

// ஈரோடு கதிர் said...
//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....
//
அய்யா, இப்படி என்ன தனியா விட்டுட்டு சாய்ச்சுபுட்டீங்களே?

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அதெப்புடி பிரபாகர். ஊர் லொள்ளெல்லாம் சேர்ந்து பண்ணிட்டு உங்கள ரொம்ப நல்லவராவே காட்றீங்க=))//

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை....//

பதில் சொல்ல முடியலைன்னா இப்டித்தான் கதைய மாத்துவாய்ங்களோ..! நம்ம இடுகைக்கு பின்னூட்டம் போடணும்னு ஒரு வெவஸ்த இல்ல... நம்ம அண்ணாவ பார்க்க வந்த இடத்திலவம்புக்கா இழுக்கிறீங்க... ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..
//
சகோதரி இருக்கும்போது எனக்கு கவலையே இல்ல, ஜாக்கிரத சொல்லிபுட்டேன்!

பிரபாகர் said...

//
தராசு said...
ச்சியர்ஸ்
//
அண்ணா... வணக்கம். உங்க பங்குக்கு நீங்களுமா?

//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச

பிரபாகர் said...

//
குடும்பத்தோட வெளிய கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள, இப்படி ஒரு புரளியா?

//
Mrs.Menagasathia said...
//எனக்கு பல்லுல மாட்டுன பாக்கு மாதிரி நிரடிட்டே இருந்துச்சி.//பழமொழி புதுசா இருக்கு.

உங்க அனுபத்தை படித்து ஒரே சிரிப்புதான் போங்க....
//
நன்றிங்க சகோதரி! உங்களின் அன்பும் ஆதரவும் சந்தோஷத்தை தருகிறது!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஈவ் டீசிங் கேஸ் போடுறேன் இருங்க... =))..//

அது யாருப்பா ஈவ் இங்கே....

சரி சரி...

பிரியா

எங்க உங்க அண்ணன்... இன்னும் சரக்கு தெளியலையோ...

சீக்கிரம் வரச்சொல்லுங்க பெருச//

சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!
//
வந்துட்டேன், நீங்க யாரும் இல்ல!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க...
//
படிச்சிட்டு மிஸ் பண்ணிட்டோம்னு நொந்து நூடுல்சா இப்பத்தான் உணர்றேன். குடும்பத்தோடு போயிட்டு இப்பத்தான் வந்தேன்!

//
வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/அண்ணா... அண்ணிக்கு நூடில்ஸ் வாங்க போயிருப்பாங்க.../

ஓஓஓஓ. அப்போ அண்ணன் நொந்தவரு. அண்ணி நூடில்ஸா=))
//
அய்யா, கேப்புல கால வார்றீங்க! ம்... நடக்கட்டும்!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு
//
தன்னடக்கம்.....

//
கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது... நல்லா சமாளிக்கிறீங்க கதிர்..!//

அட கை தட்டாதீங்கப்பா.... கூச்சமா இருக்கு//

ஆமாம்பா.... அமைதி ப்ளீஸ்... நீங்க கூச்சப்படுங்க கதிர்... டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க...
//
அப்படிப் போடுங்க!

பிரபாகர் said...

//
ஹேமா said...
இப்பிடியெல்லாம் இருக்காங்களா.
அம்மாடி...கவனமாத்தான் இருக்கவேணும்.
//
நன்றி சகோதரி!

ப்ரியமுடன் வசந்த் said...

பீரா?

அப்டின்னா?

சின்ன வயசா உங்களுக்கு? அந்த நிகழ்ச்சி நடக்கும் பொழுது...

ஆ.ஞானசேகரன் said...

//அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.//

ம்ம்ம்... சரி சரி

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
பீரா?

அப்டின்னா?

சின்ன வயசா உங்களுக்கு? அந்த நிகழ்ச்சி நடக்கும் பொழுது...
//
தம்பி, காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம்... இன்னமும் அப்படித்தான்.

//
ஆ.ஞானசேகரன் said...
//அழகு நொந்து போய்,'பிரபா, உங்க பாரத்தை எறக்கறேன்னு, அந்த கழிசடைகிட்ட பேசி என் தலையில பாரத்த ஏத்திவிட்டுட்டீங்களே' ன்னாரு.//

ம்ம்ம்... சரி சரி
//
நன்றிங்க ஞானசேகரன்.

Prathap Kumar S. said...

ஊருக்கு ஒருத்தன் இந்தமாதிரி இருப்பாங்க போல... அடுத்தவனை மாட்டவுட்ட ரசிப்பாய்ங்க...
ஆமா உண்மையிலேய நீங்க பீர் குடிச்சீங்களா இல்லையா??

பிரபாகர் said...

//நாஞ்சில் பிரதாப் said...
ஊருக்கு ஒருத்தன் இந்தமாதிரி இருப்பாங்க போல... அடுத்தவனை மாட்டவுட்ட ரசிப்பாய்ங்க...
ஆமா உண்மையிலேய நீங்க பீர் குடிச்சீங்களா இல்லையா??

//

பிரதாப், இது வரைக்கும் தண்ணி தம்மு இல்லை!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB