மாணிக்கம் எடிட்டர் ஆன கதை...

|

எஞ்சினீரிங் முடிச்சிட்டு சினிமா எடுத்தே ஆகனும்னு இன்னனும் போராடிக்கிட்டிருக்கிற என் நண்பன் வேல்முருகன் அப்போ சைதாப்பேட்டையில ஃபேன்பேட் செகண்ட் ஸ்ட்ரீட்ல இடிஞ்சி விழுவற மாதிரி ஒரு வீட்டுல தங்கியிருந்தான். பாழடைஞ்ச வீடுங்கறத அப்படி டீசண்டா சொன்னேன். சென்னைக்கு வேலை தேடி வர்றவங்களுக்கு அது ஒரு முகவரியா இருந்துச்சி.

அங்க போனால் எதாச்சும் சுவராஸ்யமான விஷயம் மாட்டும். அன்னிக்கும் அப்படித்தான் பர்ஸ்-ம் பெல்ட்-ம் அவன் கம்பனி-ல எடுத்து தர்றேன்னு சொன்னதால அவனை பாக்க போயிருந்தப்போ, அவன் இல்ல, ஆனா எனக்கு மாணிக்கம் அறிமுகம் கிடைச்சுது.

பார்த்த உடனே பேச ஆரம்பிச்சுட்டான், என்னப் பத்தி வேலு ஏற்கனவே சொல்லியிருப்பான் போல இருக்கு. அரியலூர் பக்கத்துல மாத்தூர் சொந்த ஊராம். அழகுவேல் ரெக்கமண்டேசன்ல வந்து இருக்கானாம். ஒரு எழுத்தாளர் வீட்டில வேலை செய்யுறானாம்.

சினிமா வாய்ப்ப தேடி வர்றவங்க அதிகமா சந்திப்பேன். அதால அவன்கிட்ட கேட்டேன், 'தம்பி, நீங்க என்னவா ஆகனும்னு வந்து இருக்கீங்க'ன்னு.

கொஞ்சமும் எதிர்பார்க்காத மாதிரி அதுக்கு அவன் எடிட்டிராவனும்னு சொன்னான். பதில் எனக்கு சர்ப்ரைஸ்-ஆ இருந்தது. ஏன்னா கிராமத்துல இருந்து சினிமா-வுக்கு வர்றவங்க பெரும்பாலும் டைரக்டர் ஆகனும், நடிகனாகனும், பாடலாசிரியராகனும்னு தான் வருவாங்க. அதுவும் மாத்துர்ல இருந்து எடிட்டர்னு நினைச்சாலே அவன்கிட்ட நிறைய பேசனும்போல இருந்தது.

'எப்போ வந்தே, சார் எழுத்தாளராச்சே, அவருக்கிட்ட வேலை பாக்கறதுக்கும் எடிட்டராவறதுக்கும் என்ன சம்மந்தம்னு கேட்டேன்.

'வந்து ஆறு மாசமாச்சு, அவர் மனசுல இடம் பிடிக்க போறேன்'னான்.

எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. வேலு இப்படித்தான், ஏதச்சும் வில்லங்கமா பண்ணிட்டே இருப்பான்.

'ஊர்ல என்ன பண்ணிட்டிருந்த?, எடிட்டிங் மேல எப்படி ஆர்வம் வந்தது, எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிக்கறதுக்கும், எடிட்டர் ஆவறதுக்கும் என்ன சம்மந்தம்'னேன்

'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'

தலைய சுத்தற மாதிரி இருந்தது. சரி மனசுல இடம் புடிச்சியான்னு அவன் பாணியிலேயே கேட்டான்.

உடனே புலம்ப ஆரம்பிச்சிட்டான். 'ஏன்னா நீங்க வேற, என்னை அடிமை மாதிரி நடத்துறாங்க. பாத்திரம் தேய்க்கறது, வீடு கழுவறது, பாத்திரம் சுத்தம் செய்யறது எல்லாமே நான் தான். சாரோட,  வைஃபோட எல்லாத் துணிங்களையும் கூட நான் தான் துவைச்சுப் போடறேன்.

ஆனா முந்த நாள் வீட்டு சாவிய தொலைச்சிட்டேன், அதுக்கு போயி கன்னா பின்னான்னு திட்டுறாங்க, மனசு கஷ்டமா இருக்கு, செத்துப்போயிடலாம்னு கூட இருக்கு, வேலு அண்ணாவுக்காகத்தான் பாக்கறேன். அவர்கிட்ட சொன்னா, இந்தமாதிரி கஷ்டப்பட்டாத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்னு சொல்லுறாரு'

'ஆமா, ஊர்ல என்ன பண்ணின, எடிட்டிங் மேல எப்படி இவ்வளவு ஆர்வம் உனக்கு' பேச்சை மாற்றினேன்.

'அதுவா, ஊர்ல பைக் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிட்டு இருந்தேன். அழகுவேல் அண்ணாவை (வேல்முருகன் அண்ணன்) லைப்ரரிக்கு தினமும் சைக்கிள்ல கொண்டு போய் விடுவேன். என் மேல் பாசமா இருப்பார். என் ஆர்வத்தை பாத்துட்டு என்னை இங்கு அனுப்பி வெச்சாரு'ன்னுட்டு ஊர்ல பண்ணின சாகசத்தை சொல்ல ஆரம்பிச்சான்.

'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.

ஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(?). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு. சரியானசமயத்துல வேலு அண்ணாகிட்ட கடவுள் மாதிரி அழகு அண்ணா அனுப்பி வெச்சாரு'ன்னான்.

எனக்கு அவன் மேல் கொஞ்சம் பரிதாபமா இருந்தது. கால் வேறு கொஞ்சம் ஊனம்ங்றத எழுந்து அவன் தண்ணி குடிக்கப்போகும் போதுதான் கவனிச்சேன்.

அவனுக்கு ஏதாச்சும் உதவி பண்ணனும்னு நினைச்சேன். 'செலவுக்கு காசெல்லாம் என்ன பண்ணுவ, எவ்வளோ வெச்சுருக்கே'ன்னு கேட்டேன்

'சாப்பாடு, தங்கறது எல்லாம் அங்கேதான். அப்புறம் செலவுக்கு எதுக்குன்னு என்னை கேட்டவன், பஸ் போக கையில அம்பது பைசா இருக்குன்னான். வேலு வந்தா அவன உண்டு இல்லன்னு பண்ணனும் நினைச்சிட்டிருந்தேன்.

அப்போல்லாம் செல் போன் கிடையாது. காத்திருந்தேன், கடைசியா ஒரு மணி வாக்குல வந்தான். வந்த உடனே அவசரப்படுத்தினான்.

'கிளம்பு, கிளம்பு டைமாச்சு, நீ எப்போ வந்தே?' மாணிக்கத்த கேட்டுட்டு அவனையும் கிளம்ப சொன்னான். சைதாப்பேட்டையில் ஏறினோம். டி.வி.எஸ் டிக்கட் வாங்கச் சொன்னான். வாங்கினேன்.

நானும் அவனும் பேசிட்டே வந்தோம். திடீர்னு பாத்தா ஒரு பஸ் ஸ்டாப்புல வேலு இறங்கி நடந்து போயிட்டுக்கான். அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.

மூச்சிறைக்க ஓடி பக்கத்துல போயி 'ஏன்டா இறங்கும் போது சொல்லக் கூடாதா? கடைசி நேரத்துலதான் கவனிச்சேன், இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'னேன். 'பாரீஸ்க்கு போயிருப்பே' ன்னான் கூலா.

வேற பஸ் புடிச்சு ராயப்பேட்டை தாண்டி ஜிம்மி பில்டிங் பக்கமா இறங்கி அவன் கம்பனிக்கு போகும்போதுதான் மாணிக்கம் ஞாபகம் வந்தது. 'டாய் மாணிக்கம் எங்கடா' ன்னு கேட்டேன். 'அவன் கூட வரலையா? சரி பரவாயில்ல வா' ன்னான்.

'டேய், அவன்கிட்ட காசு கூட இல்லடா! அம்பது பைசா தான் இருக்குன்னான். டிக்கெட் வேற என் கையில் இருக்கு, என்னாச்சோ தெரியலயே?' பதறினேன்.

'அம்பது பைசா வெச்சிருக்கானா? ஏது அவனுக்கு? என் கிட்ட சொல்லவே இல்ல... சரி சரி, ஏன் தேவையில்லாம டென்சன் ஆகற? நல்லா பாடம் கத்துக்குவான்' னான்.

அப்புறமா அதைப்பத்தி பேசவே இல்லை, மறந்தும் போயாச்சு. மூனு வருஷம் கழிச்சு, பொங்கல் சமயத்துல அழகுவேலுகிட்ட அவங்க வீட்டு திண்ணையில பேசிக்கிட்டிருக்கும்போது மாணிக்கம் ஞாபகம் வந்து கேட்டேன்.

'ஒ, அதுவா, நீங்க ரெண்டு பேரும் பஸ்ல விட்டுட்டு போனதுக்கப்புறம், செக்கிங்-ல மாட்டி நல்லா வாங்கி கட்டிட்டு, தாம்பரம் வரைக்கும் நடந்தே போனானாம். ரெண்டு நாள்-ல ராத்திரி லாரி புடிச்சி ஊருக்கு வந்துட்டான்.

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பொண்ணை இழுத்துட்டு ஓடி வந்துட்டான், நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன், நம்ம வீட்டிலதான் நடந்தது. இன்னைக்கு குடும்பத்தோடு பொங்கலுக்கு வர்ரான். தோ பாரு, அவனே வந்துட்டிருக்கான்'னு சொல்லவும் பாத்தேன்.

தூரமா வந்துகிட்டிருந்தான், காலை லேசா உந்தி உந்தி. பக்கத்திலே அவன் மனைவி, கைக்குழந்தையோடு. பக்கத்திலே வந்தான். பெரிசா மீசைய முறுக்கியிருந்தான்.

என்ன பாத்ததும் சிரிச்சான். 'மாணிக்கம் என்ன தெரியுதா'ன்னேன்.

'மறக்க முடியுமான்னே, டில்லில இருக்கீங்கலாமே?அண்ணாகிட்ட உங்களை பத்தி அப்பப்போ விசாரிப்பேன்' னான்.

'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்?

'இந்து' ன்னான்.

பின்குறிப்பு :  நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஜெட்லி... said...

//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.

//

சாகச வீரர் பிரபாகர் வாழ்க

ப்ரியமுடன் வசந்த் said...

//'இந்து' ன்னான்.//

ooho..

அந்த பாட்டு வந்த படத்து பேரையே பேராக்கிட்டாரா?

vasu balaji said...

/'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'/

நல்ல காலம் எடிட்டர் ஆவல. என்னிய மாதிரியே சுத்தி சுத்தி வராரு.=))

வெண்ணிற இரவுகள்....! said...

எடிட்டர் இல்லைனாலும் இந்து பேரு வச்சுஇருக்காரு நல்ல அனுபவம் நண்பா....................
சினிமா கலைஞர்களில் சிலர் தேவை இல்லாத காட்சி போல வெட்டி விடப்படுகிறார்கள் ..............

புலவன் புலிகேசி said...

ஆமாம் அவரோட கனவு எடிட்டரா இந்துவா??? நல்ல அனுபவம் தல

மணிஜி said...

36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்?????

Cable சங்கர் said...

இந்த மாதிரி நிறைய பேரின் கனவுகளுடன்.. சினிமா...

Raju said...

சூப்பர் அணுபவம். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல புனைவா வந்திருக்கும்.

ஊடகன் said...

உங்களுக்கு மட்டுமள்ள, சினிமா துறையில் முயற்சி செய்கிற அனைவருக்குமான ஒரு அனுபவம் இது..........

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.
//
சாகச வீரர் பிரபாகர் வாழ்க
//
ம்... நேரம், பாராட்டுக்கு நன்றி ஜெட்லி.

// பிரியமுடன்...வசந்த் said...
//'இந்து' ன்னான்.//

ooho..

அந்த பாட்டு வந்த படத்து பேரையே பேராக்கிட்டாரா?
//
அவரு எடிட்டரா ஆகனும்னு ஒரு தீர்மானமான முடிவுக்கு அந்த படம்தானே காரணம்.

//
வானம்பாடிகள் said...
/'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'/

நல்ல காலம் எடிட்டர் ஆவல. என்னிய மாதிரியே சுத்தி சுத்தி வராரு.=))
//
ஆமாங்கய்யா!

பிரபாகர் said...

//
வெண்ணிற இரவுகள்....! said...
எடிட்டர் இல்லைனாலும் இந்து பேரு வச்சுஇருக்காரு நல்ல அனுபவம் நண்பா....................
சினிமா கலைஞர்களில் சிலர் தேவை இல்லாத காட்சி போல வெட்டி விடப்படுகிறார்கள் ..............
//
நன்றி கார்த்திக்... உங்களின் அன்புக்கு.

//
புலவன் புலிகேசி said...
ஆமாம் அவரோட கனவு எடிட்டரா இந்துவா??? நல்ல அனுபவம் தல
//

இந்து படத்தோட ஞாபகத்துல...

//
தண்டோரா ...... said...
36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்?????
//
ம்...ஹூம்... நம்புங்கண்ணா...

பிரபாகர் said...

//
Cable Sankar said...
இந்த மாதிரி நிறைய பேரின் கனவுகளுடன்.. சினிமா...
//
நன்றிங்கண்ணா. உங்களின் வருகைக்கு.

//
♠ ராஜு ♠ said...
சூப்பர் அணுபவம். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா நல்ல புனைவா வந்திருக்கும்.
//
நடந்த சம்பவம் தம்பி....

//
ஊடகன் said...
உங்களுக்கு மட்டுமள்ள, சினிமா துறையில் முயற்சி செய்கிற அனைவருக்குமான ஒரு அனுபவம் இது........//

நன்றி ஊடகன்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் நல்லாயிருக்கு

ஈரோடு கதிர் said...

நல்லா..... எழுதறீங்க பிரபு

//'இந்து' ன்னான்.//
.................இது சூப்பரு

க.பாலாசி said...

கனவுங்கறது எடிட்டரோ இந்துவோ....ஆனாலும் உங்களது இயல்பான எழுத்துநடையில் அனுபவம் நல்லாருக்கு....

Menaga Sathia said...

//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.

//ஹா ஹா நல்லா திட்டு வாங்கிருப்பீங்க.சாகசம் கூட நல்ல செய்றீங்க.

உங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு..

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம் நல்லாயிருக்கு
//

நன்றிங்க நண்பா....

//
கதிர் - ஈரோடு said...
நல்லா..... எழுதறீங்க பிரபு

//'இந்து' ன்னான்.//
.................இது சூப்பரு
//

உங்க பின்னூட்டமும் சூப்பர்.

//
க.பாலாசி said...
கனவுங்கறது எடிட்டரோ இந்துவோ....ஆனாலும் உங்களது இயல்பான எழுத்துநடையில் அனுபவம் நல்லாருக்கு....
//
நன்றி பாலாசி.

//
Mrs.Menagasathia said...
//அவசரமா ரெண்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன்.

//ஹா ஹா நல்லா திட்டு வாங்கிருப்பீங்க.சாகசம் கூட நல்ல செய்றீங்க.

உங்க எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு..
//

நன்றிங்க மேடம், ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Prathap Kumar S. said...

ஹஹஹ எடிட்டர் ஆக வேண்டிய மாணிக்கம் உண்மையிலேயே டைரக்டர் ஆகி படத்துக்கு இந்துன்னும் பேரு வச்சிட்டாரு. மாணிக்கத்துக்க ஒரு ஓ போடுவோம்...

பிரபாகர் said...

//நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ எடிட்டர் ஆக வேண்டிய மாணிக்கம் உண்மையிலேயே டைரக்டர் ஆகி படத்துக்கு இந்துன்னும் பேரு வச்சிட்டாரு. மாணிக்கத்துக்க ஒரு ஓ போடுவோம்...
//

தேங்க்ஸ் பிராதாப். கண்டிப்பா ஒரு ஓ போடுவோம்...

பிரபாகர்.

துபாய் ராஜா said...

//'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.

ஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(?). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு...//

ஊரார் கொடுக்கும் ஊக்கம் ஒரு சாதாரண மனிதனை சாதனை மனிதனாக்க எண்ணம் கொடுக்கிறது...

//'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்?..

'இந்து' ன்னான்...//

அவரது நிறைவேறாத ஏக்கம் குறித்து வருத்தமாக இருக்கிறது...

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...

ஆம் ராஜா, எனக்கும்தான். ஆனாலும் ஏதாவது சாதிப்பார் எனும் நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB