என்னவளின் சிறப்பு... - பிரபாகர்

|


விகடன் முகப்பு பக்கத்திலும் யூத்புல் விகடனிலும் வெளியாகியிருக்கும் கவிதை.


பூவெடித்து புறப்படும்
புதுமைசூழ் நறுமணமும்
பாவையுன்னை முகர்தலில்
பாதிகூட இல்லையேவீசுகின்ற தென்றலின்
வருடலதன் மென்மையும்
பேசும் சிற்பம் தொடுதலின்
பற்றுமின்பம் இல்லையேகலகல ஓசையுடன்
கைதவறி சில்லறை
எழுப்புமொலி என்னவள்
இதழ் சிரிப்பாய் இல்லையேவில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையேசேர்த்து வைத்த முத்துக்கள்
கண்பறிக்க இருப்பினும்
சேர்ந்திருக்கும் பல்வரிசை
சிரிப்பாயது இல்லையேஆரஞ்சு சுளையிரெண்டை
அடுக்கி பார்த்திடினும்
சேர்ந்திருக்கும் கொவ்வையிதழ்
சிறப்பாயது இல்லையேமருண்டோடும் மானிடம்
மங்கையவள் கண்கள்போல்
மறக்கடிக்க செய்கின்ற
கிறக்கமது இல்லையேகாட்டுக்குயில் கானமது
காதிற்கினிதாயினும்
பாட்டுப் பாடும் என்னவளின்
குரலினிமை இல்லையேஆடுமயில் அழகெனினும்
ஆடை கட்டும் பெண்மையின்
நாட்டியத்தின் நளினமது

மயிலிடத்தி லில்லையே...

37 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆ.ஞானசேகரன் said...

அருமை,.... வாழ்த்துகல் பிரபாகர்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆடுமயில் அழகெனினும்
ஆடை கட்டும் பெண்மையின்
நாட்டியத்தின் நளினமது
மயிலிடத்தி லில்லையே...//

அண்ணே கவனிப்பு பலமா இருக்கு

நீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..

ஈரோடு கதிர் said...

உன்னவளின் சிரிப்பில்
ஒருகுறையும் இல்லையே...

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
நீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..//

கல்யாணம் பேசியிருக்கிற பொண்ண மனசில நினைச்சுப் பாருங்க....
இதே மாதிரி கவிதை வரும் வசந்த்..
அப்புறம் நைனாவ பீட் பண்ணிடுவீங்க

அத விட்டுட்டு...நீங்க சட்னி சாம்பார பத்தியே எழுதினா....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான வரிகள் பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//வில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையே//

கவிஞன் நீர் கவிஞனய்யா.......வாழ்த்துக்கள்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கவித கவித.....

ஊடகன் said...

விகடன் பதிவிற்காக முதலில் வாழ்த்துக்கள்........
உங்கள் கவிதைகளிலே புதுமையான, முதிர்ச்சியான கவிதை...........

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை பிரபு...வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

எதைச்சுட்டிவிட்டு நன்றென்பது. மொத்த கவிதையும் முத்தாயிருக்கும்போது.

நேற்றே படித்தேன். நல்ல கவிதை.

vasu balaji said...

அருமையான கவிதை பிரபாகர். பாராட்டுக்கள். இதுக்குமா நெகடிவ். சை.ஃபேமஸ்னா அப்படித்தான்=))

/வில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையே/

ஆஹா

/மருண்டோடும் மானிடம்
மங்கையவள் கண்கள்போல்
மறக்கடிக்க செய்கின்ற
கிறக்கமது இல்லையே/

மான் பாவம் மான் பாவம்.

அசத்துங்க பிரபாகர்

ஜெட்லி... said...

உண்மையில் இந்த அடியனுக்கு
சில வரிகள் புரியவில்லை..
சுத்த தமிழ் ஆச்சே....

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
அருமை,.... வாழ்த்துகல் பிரபாகர்
//
நன்றிங்க ஞானசேகர்.

//
பிரியமுடன்...வசந்த் said...
//ஆடுமயில் அழகெனினும்
ஆடை கட்டும் பெண்மையின்
நாட்டியத்தின் நளினமது
மயிலிடத்தி லில்லையே...//

அண்ணே கவனிப்பு பலமா இருக்கு

நீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..
//
உருப்பட்டுகிட்டு இருக்கேன் தம்பி...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
உன்னவளின் சிரிப்பில்
ஒருகுறையும் இல்லையே...

November 21, 2009 11:52 AM

ஈரோடு கதிர் said...
//பிரியமுடன்...வசந்த் said...
நீங்களும் நைனாவோட சேர்ந்து கெட்டுபபோயிட்டிங்க..//

கல்யாணம் பேசியிருக்கிற பொண்ண மனசில நினைச்சுப் பாருங்க....
இதே மாதிரி கவிதை வரும் வசந்த்..
அப்புறம் நைனாவ பீட் பண்ணிடுவீங்க

அத விட்டுட்டு...நீங்க சட்னி சாம்பார பத்தியே எழுதினா....
//
அதானே, டயர் அது இதுன்னு... யோசிங்க தானா வரும்....

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான வரிகள் பிரபாகர்.
//
நன்றிங்க செந்தில்.

//
புலவன் புலிகேசி said...
//வில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையே//

கவிஞன் நீர் கவிஞனய்யா.......வாழ்த்துக்கள்
//
நன்றி புலிகேசி... உங்களின் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி.

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
கவித கவித.....
//
வணக்கம் தம்பி...

//
ஊடகன் said...
விகடன் பதிவிற்காக முதலில் வாழ்த்துக்கள்........
உங்கள் கவிதைகளிலே புதுமையான, முதிர்ச்சியான கவிதை...........
//
வயசாயிடுச்சில்ல.... நன்றி ஊடகன்...

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமை பிரபு...வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன். ரொம்ப சந்தோசம்...

//
க.பாலாசி said...
எதைச்சுட்டிவிட்டு நன்றென்பது. மொத்த கவிதையும் முத்தாயிருக்கும்போது.

நேற்றே படித்தேன். நல்ல கவிதை.
//
ஆஹா... நன்றி பாலாசி... அன்புக்கு, ஆதரவுக்கு..

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அருமையான கவிதை பிரபாகர். பாராட்டுக்கள். இதுக்குமா நெகடிவ். சை.ஃபேமஸ்னா அப்படித்தான்=))

/வில்லினின்று விரைந்திரை
வீழ்த்துமம்பு நுனியது
கொல்லும் விழி கூர்மையில்
கடுகளவும் இல்லையே/

ஆஹா

/மருண்டோடும் மானிடம்
மங்கையவள் கண்கள்போல்
மறக்கடிக்க செய்கின்ற
கிறக்கமது இல்லையே/

மான் பாவம் மான் பாவம்.

அசத்துங்க பிரபாகர்
//
நன்றிங்கய்யா.... எல்லாம் உங்க ஆசிர்வாதம்...

//
ஜெட்லி said...
உண்மையில் இந்த அடியனுக்கு
சில வரிகள் புரியவில்லை..
சுத்த தமிழ் ஆச்சே....
//
இதில அவ்வளவு கஷ்டமான வார்த்தை இருக்கான்னேன்? நன்றி ஜெட்லி...

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் பிரபாகர்.

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் அண்ணா! மிகவும் அருமையான வரிகள்..! மரபுக் கவிதைக்கு நிகரானது..!

அன்புடன் மலிக்கா said...

அண்ணே,,,,,,, காதல் கவிதை கலைகட்டுது.

அண்ணி மானை மயிலை குயிலை அனைத்தையும் மிஞ்சிட்டாங்க.
அடி சக்கைனான்னாம்..

ஹேமா said...

பிரபா,அழகான வர்ணனையோட கவிதை கலக்கல்.

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் பிரபா...

அஹோரி said...

Classic.

காமராஜ் said...

என்னாண்டே தெர்லப்பா போறத்திக்கெல்லாம் மோகினிப்பிசாசுகள் இருந்து மல்லிகையை பரப்புகிறது.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

Menaga Sathia said...

அருமையான வரிகள்!!

வாழ்த்துக்கள்!!!

நாகா said...

விகடனுக்கு வாழ்த்துக்கள், கவிதைக்குப் பாராட்டுக்கள்

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
நன்றிங்க பீர்.
//
mix said...
நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?
//
நன்றிங்க, சேர்ந்திடுவோம்.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
வாழ்த்துகள் அண்ணா! மிகவும் அருமையான வரிகள்..! மரபுக் கவிதைக்கு நிகரானது..!
//
நன்றி சகோதரி. எல்லாம் அய்யாவின் மெருகூட்டல்தான்.
//
அன்புடன் மலிக்கா said...
அண்ணே,,,,,,, காதல் கவிதை கலைகட்டுது.

அண்ணி மானை மயிலை குயிலை அனைத்தையும் மிஞ்சிட்டாங்க.
அடி சக்கைனான்னாம்..
//
நன்றி சகோதரி. எல்லாம் அன்பினால் விளைந்தவை.

பிரபாகர் said...

//
ஹேமா said...
பிரபா,அழகான வர்ணனையோட கவிதை கலக்கல்.
//
நன்றி ஹேமா. பெண்மையும் மேன்மையை உணர்ந்தால் தானே வரும் வரிகள் இவை.
//
நாஞ்சில் பிரதாப் said...
வாழ்த்துக்கள் பிரபா...
//
நன்றி பிரபாப்.
//

பிரபாகர் said...

அஹோரி said...
Classic.
//
வாங்க நண்பரே! மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.
//
காமராஜ் said...
என்னாண்டே தெர்லப்பா போறத்திக்கெல்லாம் மோகினிப்பிசாசுகள் இருந்து மல்லிகையை பரப்புகிறது.
//
வாங்கண்ணே! அது வேற... ரொம்ப சந்தொஷமண்ணே...

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
வாழ்த்துகள்!
//
நன்றிங்க பழமைபேசி...
//
Mrs.Menagasathia said...
அருமையான வரிகள்!!
வாழ்த்துக்கள்!!!
//
நன்றி சகோதரி...
//
நாகா said...
விகடனுக்கு வாழ்த்துக்கள், கவிதைக்குப் பாராட்டுக்கள்
//
நன்றி நாகா.

Anonymous said...

நல்ல வரிகள். இதைப் போன்ற ஒப்பனைகள் பிற கவிதைகளில் படித்திருப்பினும், அவற்றை வடித்த விதம், மற்றும் மொழி அழகாயிருக்கின்றன.

சந்தனா

மாதேவி said...

உன்னவளின் சிறப்பு வர்ணனைகள் அருமை.

பிரபாகர் said...

//
Anonymous said...
நல்ல வரிகள். இதைப் போன்ற ஒப்பனைகள் பிற கவிதைகளில் படித்திருப்பினும், அவற்றை வடித்த விதம், மற்றும் மொழி அழகாயிருக்கின்றன.

சந்தனா
//
நன்றிங்க சந்தனா.

//
மாதேவி said...
உன்னவளின் சிறப்பு வர்ணனைகள் அருமை.
//
நன்றிங்க மாதேவி....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB