பிடிச்ச, பிடிக்காதவங்க யாரு?

|

அழைத்த என் அன்பு கதிருக்கு நன்றிகள்.

இத் தொடர் இடுகையின் விதிகள்: 

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : கல்விக் கண்திறந்த கடவுள்.

பிடிக்காதவர் : தமிழினத்தின் முகவரி என சொல்லிக்கொள்பவர்.

எழுத்தாளர்

பிடித்தவர் : விஞ்ஞானத்தை எளிமையாய் அளித்த ரங்கநாதர்.

பிடிக்காதவர் : விரசத்தால் வெறுப்பேற்றும் சார்ந்தவர்.

கவிஞர்

பிடித்தவர் : கவிஞர் எனும் சொல்லுக்கு உண்மையில் பொருத்தமானவர், அர்த்தமானவர்.

பிடிக்காதவர் : கவிப்பேரரசு என சொல்லிகொல்லுபவர்.

இயக்குனர்

பிடித்தவர் : பா வரிசையில் படங்களை எடுத்து அசத்தியவர், எடிட்டரின் தந்தை.

பிடிக்காதவர் : பன்ச் டயாலாக்கோடு ஊரைக்கெடுக்கும் அரசர்(ன்).

நடிகர்

பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.

பிடிக்காதவர் : நாகரிகம் தெரியாத பத்ம விருதை சிபாரிசிலும் பணத்தாலும் பெற்ற விவேகமில்லாதவர்.

நடிகை

பிடித்தவர் : போதையால் மரணத்தை தழுவினும், நடிப்பில் திலகமாய் ஜொலித்தவர்.

பிடிக்காதவர் : போதையேற்றுகிறேன் என கண்றாவி கவர்ச்சியை நமக்கு தருபவர்.

இசையமைப்பாளர்

பிடித்தவர் : தேவ ராகங்களை அளித்தவர்.

பிடிக்காதவர் : தேவையில்லாத இடங்களுக்கும், தொடர்ச்சியாய் ஒரே மாதிரியான இசையால் தொல்லையளித்த ராஜகுமாரன்.

மாவட்ட ஆட்சியர்

பிடித்தவர் : சமுதாய நோக்கோடு பல செயல்களை செய்தும், கருத்துக்களை சொன்ன இறையில் அன்பானவர்.

பிடிக்காதவர் : ஆசிட் வாங்கி, அடித்தவரோடு சமரசம் செய்துகொண்டவர்.

பேச்சாளர் 

பிடித்தவர் : தினமும் ஒரு தகவல்களை சொல்லி சமீபத்தில் சாமியானவர்.

பிடிக்காதவர் : தெறித்து ஓடுமளவுக்கு அடுக்கு மொழிகளை பேசி பீதி கிளப்பும் தாடியுடையவர்.

விஞ்ஞானி

பிடித்தவர் : கனவுகானச்சொல்லி இளைஞர்களால் சலாம் போடப்படுபவர்.

பிடிக்காதவர் : கோவிலில் சென்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தியவர்.

அழைக்க விரும்புவது

1. டக்ளசு என அறியப்பட்ட அன்பு தம்பி ராஜு 

2. ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

60 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

பழமைபேசி said...

லேசுபாசாச் சொல்லிட்டு வுட்டுட்டீங்க போலிருக்கு? இஃகி!

Raju said...

அண்ணே, நீங்க பேசாம ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு கிசுகிசு எழுதப் போகலாம்.

\\பிடிக்காதவர் : தெறித்து ஓடுமளவுக்கு அடுக்கு
மொழிகளை பேசி பீதி கிளப்பும் தாடியுடையவர்.\\

என்னாது அவரு பேச்சாளரா....? சொல்லவே இல்ல. அவரு காம்பியர்.
:-)

பிரபாகர் said...

//பழமைபேசி said...
லேசுபாசாச் சொல்லிட்டு வுட்டுட்டீங்க போலிருக்கு? இஃகி!
//

ஆமாங்க... எதுக்கு வீண் வம்புன்னுதான். நன்றிங்க பழமைபேசி...

பிரபாகர் said...

//♠ ராஜு ♠ said...
அண்ணே, நீங்க பேசாம ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு கிசுகிசு எழுதப் போகலாம்.

\\பிடிக்காதவர் : தெறித்து ஓடுமளவுக்கு அடுக்கு
மொழிகளை பேசி பீதி கிளப்பும் தாடியுடையவர்.\\

என்னாது அவரு பேச்சாளரா....? சொல்லவே இல்ல. அவரு காம்பியர்.
//
அது இப்போ தம்பி... அவரு அரசியல் பேச்செல்லாம் கேட்டதில்லையா? ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டே. அவர பேச்சாளர் இல்லன்னு சொன்னா, குஜராத்துக்கே வந்து மீட்டிங் போடு பேசுவார், ஜாக்கிரத!

கார்க்கிபவா said...

டக்ளசு, இருக்கிறானா? என்ன டம்ப்ரீஈஈஈஈ

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான விவரிப்பு பிரபாகர்.. பெயர்களை ஊகிக்க முடிவது போன்ற விளக்கங்கள். அனைத்தும் ரசித்தேன் :)

பிரபாகர் said...

//கார்க்கி said...
டக்ளசு, இருக்கிறானா? என்ன டம்ப்ரீஈஈஈஈ
//
வங்க சகா.... இப்போதான் வந்திருக்கான்...தீபாவளிய முடிச்சிட்டு...

ஈரோடு கதிர் said...

ஏம் பிரபா.... இதுக்கு விளக்கம் கண்டுபிடிக்க.... கோனார் நோட்ஸ் வாங்கனும் போல இருக்கே...

ஆனாலும் சிந்திக்கவைத்த விதம் அருமை

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான விவரிப்பு பிரபாகர்.. பெயர்களை ஊகிக்க முடிவது போன்ற விளக்கங்கள். அனைத்தும் ரசித்தேன் :)//
நன்றிங்க. நேரடியா சொல்லாம புரியும்படி சொல்லலாம்னு நினைச்சதாலதான் அப்படி.

ஈரோடு கதிர் said...

// ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப்.//

அட்ர்ர்ரா சக்கை...அட்ர்ர்ர்ரா சக்கை......அட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா சக்கை

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
ஏம் பிரபா.... இதுக்கு விளக்கம் கண்டுபிடிக்க.... கோனார் நோட்ஸ் வாங்கனும் போல இருக்கே...

ஆனாலும் சிந்திக்கவைத்த விதம் அருமை//

ஏன் நேரடியா சொல்லனும்னுதான். நன்றி கதிர்...

மணிஜி said...

நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா?

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
// ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப்.//

அட்ர்ர்ரா சக்கை...அட்ர்ர்ர்ரா சக்கை......அட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா சக்கை
//
புரிஞ்சா சரி கதிர்...

Jawahar said...

சொல்லியிருக்கிற விதம் யாரையும் புண் படுத்தாமல் டிப்ளோமாட்டிக்காக இருக்கிறது. அப்படியே பிடித்த பதிவர், பிடிக்காத பதிவரையும் இதே கிசு கிசு பாணியிலே சொல்லியிருக்கலாமே?

http://kgjawarlal.wordpress.com

பிரபாகர் said...

//தண்டோரா ...... said...
நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா?//

இல்லையண்ணா... இன்று மாலை கண்டிப்பாய் பேசுகிறேன்...

பிரபாகர் said...

//
Jawahar said...
சொல்லியிருக்கிற விதம் யாரையும் புண் படுத்தாமல் டிப்ளோமாட்டிக்காக இருக்கிறது. அப்படியே பிடித்த பதிவர், பிடிக்காத பதிவரையும் இதே கிசு கிசு பாணியிலே சொல்லியிருக்கலாமே?
//

இருந்த பத்து கேள்விகளுக்கு மட்டும்தான் சொல்லியிருக்கிறேன்...

vasu balaji said...

கவிதை, கட்டுரை கலக்கியாச்சி. இப்போ கிசு கிசுவும் விட்டு வைக்கிறதில்லையா. அசத்துங்க.

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
கவிதை, கட்டுரை கலக்கியாச்சி. இப்போ கிசு கிசுவும் விட்டு வைக்கிறதில்லையா. அசத்துங்க.
//
வணக்கங்கய்யா. கொஞ்சம் வித்தியாசமா சொல்லலாம்னுதான். எல்லாம் உங்க ஆசிர்வாதம்...

பீர் | Peer said...

ஒண்ணும் புரியல.. :(

பிரபாகர் said...

// பீர் | Peer said...
ஒண்ணும் புரியல.. :(
//
நிஜமாகவா பீர்? தமாஷுக்குதானே சொல்றீங்கே? பிரதாப் மேட்டர் புரியலன்னா சொல்லுங்க, தனியே மெயிலில் அனுப்பறேன். அந்த பில்டப்புக்கு விளம்பரம் கொடுத்து என் பேர ரிப்பேராக்கிக்க விரும்பல...

வெண்ணிற இரவுகள்....! said...

//பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.

பிடிக்காதவர் : நாகரிகம் தெரியாத பத்ம விருதை சிபாரிசிலும் பணத்தாலும் பெற்ற விவேகமில்லாதவர்//
அப்பா தல அஜித்தா

பிரபாகர் said...

////பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.

பிடிக்காதவர் : நாகரிகம் தெரியாத பத்ம விருதை சிபாரிசிலும் பணத்தாலும் பெற்ற விவேகமில்லாதவர்//
அப்பா தல அஜித்தா
//

அப்பா தல அஜித்தா?

Unknown said...

உஙளின் புது ரசிகை நான். பிடித்தது, பிடிகாதது எழ்தி, எல்லர் மனதிலும் பிடிதவர் ஆகிவிட்டிர்கள். வாழ்த்துகள். KEEP IT UP...

கிறுக்கல்கள்/Scribbles said...

Really good. The way you expressed without hurting others' feelings is appreciated. Sorry for not writing in Tamil. Keep it up

பிரபாகர் said...

//Bharathy said...
உஙளின் புது ரசிகை நான். பிடித்தது, பிடிகாதது எழ்தி, எல்லர் மனதிலும் பிடிதவர் ஆகிவிட்டிர்கள். வாழ்த்துகள். KEEP IT UP...
//

ரொம்ப சந்தோசம்... எனக்கு மிகப்பிடித்த புலவன் பாரதியின் பெயரோடு இருக்கிறீர்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி. ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//கிறுக்கல்கள் said...
Really good. The way you expressed without hurting others' feelings is appreciated. Sorry for not writing in Tamil. Keep it up
//

வசிஷ்டர் வாயால்... ரொம்ப நன்றிங்க மாமா...

மாதவராஜ் said...

ரசித்தேன் நண்பரே....
பூடகமானாலும் வெளிப்படையானவை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஒன்னு ரெண்டு யாருன்னு இன்னும் புரியல ..
sir

பிரபாகர் said...

//மாதவராஜ் said...
ரசித்தேன் நண்பரே....
பூடகமானாலும் வெளிப்படையானவை.
//

ரொம்ப நன்றிங்க.. உங்கள் வரவால் மிக்க மகிழ்ச்சி...

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
ஒன்னு ரெண்டு யாருன்னு இன்னும் புரியல ..
sir//

கொஞ்சம் யோசிச்சா புரியும்... இல்லன்ன விட்டுடுங்க... நேரத்த வீணாக்க வேண்டாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஒருத்தர் பேரையும் காணோம்..

ம்ஹூம் சரியில்லையே, தில் எங்க போச்சு?

பிரபாகர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ஒருத்தர் பேரையும் காணோம்..

ம்ஹூம் சரியில்லையே, தில் எங்க போச்சு?
//
ஒரு வித்தியாசத்துக்காக வசந்த்... தில் இல்லாம இல்ல...

சங்கர் said...

பெயரோடே எழுதி இருக்கலாமே, சிலது புரியல, புது போட்டோ நல்லாருக்கு

பிரபாகர் said...

//சங்கர் said...
பெயரோடே எழுதி இருக்கலாமே, சிலது புரியல, புது போட்டோ நல்லாருக்கு
//
ஒரு பேங்க்ல பெர்மனன்ட் ஜாபுக்கு திடீர்னு கேட்க, அவசரகோலத்துல நம்ம கேமராவில வைப் உதவியோட எடுத்தது. சும்மா போட்டுவிட்டேன். உங்களையும் இப்போதான் போட்டோவில பாக்கிறேன்... ஜம்முனு இருக்கீங்க சங்கர்....

கேஸ் பண்ணி தெரிஞ்சிக்க அப்படி போட்டேன்.

நன்றி சங்கர்.

தராசு said...

சரி, சரி, இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க,

பிரபாகர் said...

//தராசு said...
சரி, சரி, இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க,
//

தொடர் பதிவு... பத்து கேள்வி பதில்... அதுக்கு ஏண்ணா இப்படி கலாய்க்கிறீங்க?

புலவன் புலிகேசி said...

எல்லாத்தையும் மறைத்து சொன்னாலும் எங்களுக்கு புரியுதுங்கோ.......

பிரபாகர் said...

//புலவன் புலிகேசி said...
எல்லாத்தையும் மறைத்து சொன்னாலும் எங்களுக்கு புரியுதுங்கோ.......
//

நன்றி நண்பா. மிக்க மகிழ்ச்சி... வரவு மற்றும் கருத்தால்....

ஊடகன் said...

//நடிகர்

பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.//

எனக்கு தெரிந்து தல அஜித் ஒருத்தர் தான் அப்படி இருக்கார்...........

சரிதானே..............?

பிரபாகர் said...

//ஊடகன் said...
//நடிகர்

பிடித்தவர் : நடிகராயிருந்தும் சிறிதும் நடிக்க தெரியாதவர், வாழ்வில்.//

எனக்கு தெரிந்து தல அஜித் ஒருத்தர் தான் அப்படி இருக்கார்...........

சரிதானே..............?
//
கார்த்திக்கும் இதையேத்தான் சொல்றார்...

நாடோடி இலக்கியன் said...

தொடரை வித்தியாசமா அனுகியிருக்கீங்க நண்பா.

பிரபாகர் said...

// நாடோடி இலக்கியன் said...
தொடரை வித்தியாசமா அனுகியிருக்கீங்க நண்பா.
//
நன்றிங்க நண்பா... வருகைக்கும் கருத்துக்கும்...

Prathap Kumar S. said...

//ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப். //

அது எந்த பதிவுன்னும் சொல்லிடவேண்டியதானே பிரபா...

உங்கள மாதிரி இலைமறைக்காய் போலஎனக்கு எழுத கஷ்டம்தான் பிரபா முயற்சிக்கிறேன்
அழைத்ததற்கு நன்றி...

Prathap Kumar S. said...

நீங்க சொன்ன சிலபேரை கண்டுபிடிக்கிறதுக்கு விக்கி(Wiki)யை கூப்பிட்டுக்கேன். புரிந்தது வரை கலக்கல்...

Prathap Kumar S. said...

யாரோட போட்டோவைப் புரொபைல்ல போட்டுருக்கீங்க... யாரோ இருக்காங்கன்னு தெரியுது. ஆனா யாருன்னனுதன் தெரில..:-)

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
//ஏதோ ஒரு பதிவில் பில்டப் அதிகமா இருக்கே என நக்கலடித்த நாஞ்சில் பிரதாப். //

அது எந்த பதிவுன்னும் சொல்லிடவேண்டியதானே பிரபா...

உங்கள மாதிரி இலைமறைக்காய் போலஎனக்கு எழுத கஷ்டம்தான் பிரபா முயற்சிக்கிறேன்
அழைத்ததற்கு நன்றி...
//
அவருக்கு விளம்பரம் கொடுத்து பேர கெடுத்துக்க வேணாம்னுதான்.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
நீங்க சொன்ன சிலபேரை கண்டுபிடிக்கிறதுக்கு விக்கி(Wiki)யை கூப்பிட்டுக்கேன். புரிந்தது வரை கலக்கல்...
//
அவ்வளவு கஷ்டமா என்ன? முயற்சித்ததுக்கு நன்றி.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
யாரோட போட்டோவைப் புரொபைல்ல போட்டுருக்கீங்க... யாரோ இருக்காங்கன்னு தெரியுது. ஆனா யாருன்னனுதன் தெரில..:-)
//
இதுக்கப்புறமும் மாத்தலைன்னா? மாத்திடறேன்...

Menaga Sathia said...

வித்தியாசமா பதில் எழுதிருக்கிங்க.அருமை!!ஆனா எனக்குத்தான் படிச்சு யோசிச்சு புரிஞ்சிக்க நேரமாச்சு..

ஜெட்லி... said...

அனைத்து பதில்களிலும்
உள்குத்து!! நடக்கட்டும்

கலகலப்ரியா said...

பிரபாகர்... இதானே வேணாம்கிறது...! இந்த கிசுகிசு மாதிரி.. இப்டி எழுதினா எனக்கு ஒரு மண்ணும் புரியாது சொல்லிப்புட்டேன்... அவ்வ்வ்...

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
வித்தியாசமா பதில் எழுதிருக்கிங்க.அருமை!!ஆனா எனக்குத்தான் படிச்சு யோசிச்சு புரிஞ்சிக்க நேரமாச்சு..
//

சாரிங்க, உங்க நேரத்த நிறைய எடுத்துகிட்டேன். உங்களின் அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
அனைத்து பதில்களிலும்
உள்குத்து!! நடக்கட்டும்
//

ஏதோ நம்மால முடிஞ்சது. நன்றி ஜெட்லி.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
பிரபாகர்... இதானே வேணாம்கிறது...! இந்த கிசுகிசு மாதிரி.. இப்டி எழுதினா எனக்கு ஒரு மண்ணும் புரியாது சொல்லிப்புட்டேன்... அவ்வ்வ்...
//

கரெக்ட் தான் ப்ரியா. வித்தியாசத்துக்காக பண்ணிட்டேன். மன்னிச்சுக்குங்கோ...

நர்சிம் said...

மிக ரசித்தேன்

சாரு மேட்டர்..

பிரபாகர் said...

//

நர்சிம் said...
மிக ரசித்தேன்

சாரு மேட்டர்..
//

நன்றி நரசிம். உங்களின் ரசிப்புக்கு என் பணிவான நன்றி...

துபாய் ராஜா said...

பிடித்தவர், பிடிக்காதவரை பீடிகையோடு கொடுத்திருப்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது நண்பரே......

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
பிடித்தவர், பிடிக்காதவரை பீடிகையோடு கொடுத்திருப்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது நண்பரே......
//

நன்றி ராஜா... என்னை, எல்லா இடுகைகளையும் படித்து மெருகேற்றும் உங்களின் அன்பு சிலிர்க்க வைக்கிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதில்கள் பிரபாகர்

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள் பிரபாகர்
//

நன்றிங்க நண்பா...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB