நான் தேடிக்கொண்ட பரிகாரம்...

|

என்னோட சின்ன வயசில நடந்த விஷயம் இது. மூனாவது படிச்சிகிட்டிருந்தேன். ஊர்ல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா உடனே ரேடியோ கட்டிடுவாங்க.

'போனால் போகட்டும் போடா...', 'சட்டி சுட்டதடா... கை விட்டதடா' ன்னு ஆரம்பிச்சா யாரோ மண்டையை போட்டுட்டாங்கன்னு அர்த்தம்.

'பூ மழை தூவி' இல்லன்னா 'திருமணமாம் திருமணமாம்னு' ஆரம்பிச்சா எதாச்சும் நல்ல விசேஷம்னு முடிவு பண்ணிடுவோம். ரெண்டுல எதுன்னாலும் ரொம்ப குஷியாயிடுவேன். ஏன்னா, ஊர்லருந்து ஆயா தாத்தா வருவாங்க.

நிறையா விததவிதமா செஞ்சு எடுத்துகிட்டு வருவாங்க. காட்ல விளைஞ்ச கடலை, கிழங்கு.... அதுவுமில்லாம கடையிலயும் வாங்கிட்டு வருவாங்க. போகும் போது காசெல்லாம் கொடுப்பாங்க.

ரேடியோ அல்லது பந்தல் கட்டிகிட்டு இருக்கிறத பாத்தா உடனே அம்மா கிட்டயோ அல்லது அப்பா, ஆயாகிட்ட போய் கேட்பேன். 'அவங்க நமக்கு சொந்தமா' ன்னு. ஆமான்னா, அடுத்த கேள்வி, 'ஊருக்கார ஆயா வருவாங்களா?'

வருவாங்கன்னு தெரிஞ்சா ஒரே குஷிதான். பள்ளிகூடம் முடிஞ்ச உடனே பைய வீட்டில போட்டுட்டு மூலை பஸ் ஸ்டாப்புக்கு போயிடுவேன். மாமா கடையில உட்காந்துகிட்டு வர்ற பஸ்ஸெல்லாம் பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

வந்து இறங்கும்போதே ஓடிப்போய் சந்தோஷமா பையையெல்லாம் வாங்கிட்டு தூக்க முடியாம தூக்கிகிட்டு வீட்டுக்கு போய் அவங்க ஒவ்வொன்னா எடுத்து தர.... சத்தியமா அந்த சந்தோஷம் என்னிக்கும் திரும்ப கிடைக்காது.

அன்னிக்கு ஒருநாள், மதியம் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு சாப்பிட போகும்போது வழியில ஒரு பெருசு செத்து போச்சுன்னு பந்தல் போட்டு மட்டை கட்டிகிட்டிருந்தாங்க. எங்க தெருவுக்கு முந்துன தெரு, அவ்வளவா சொந்தம் கிடையாது... இருந்தாலும் ஒரு நப்பாசை. சரி ஆயாவை கேக்கலாம்னு ஓடினேன்.

வீட்டுக்கு வெளியே நிறையா செருப்பு கிடந்தது. ஒரே ஆச்சர்யம். மெதுவா உள்ள நுழைஞ்சா ஊர்ல இருந்து ஆயா, தாத்தா, இன்னும் ஏழெட்டு பேரு வந்திருந்தாங்க.

ரொம்ப சந்தோஷமா, கை ரெண்டையும் சேர்த்து 'வாங்க தாத்தா, வாங்க ஆயா ... எல்லாரும் வாங்க' ன்னு பவ்வியமா கேட்டுட்டு அடுத்து கேட்டேன் பாருங்க ஒரு கேள்வி அதுதான் இந்த கதைக்கு ரொம்ப முக்கியம். அந்த கேள்வி, 'எல்லாரும் எழவுக்கு தானே வந்திருக்கீங்க?'

எல்லாருக்கும் மூஞ்சி செத்து போச்சு. ஏன்னா மணிங்கறவருக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க. மொதல்ல எங்க வீட்டுக்கு வந்துட்டு, அப்புறமா பொண்ணு பாக்க போலாம்னு ஐடியா போலிருக்கு. நான் அந்த மாதிரி கேட்டதும், பொண்ணயே பாக்காம போயிட்டாங்க.

இது நடந்தது 1978-ம் வருஷம். அதுக்கப்புறம் அவருக்கு கல்யாணமே செட் ஆகல. பொண்ணு பாக்கறதுல பி.ஹெச்.டி பண்ணியும் ஒன்னும் தேறல. நான் ஸ்கூல், காலேஜெல்லாம் முடிச்சிட்டேன். தொன்னூத்தாறுலதான் அவருக்கு கல்யாணம் செட் ஆச்சு.

கல்யாணத்துக்கு நான் எல்லா வேலையையும் பாத்தேன். பால் வாங்கி வர்றது, அய்யர கூப்பிடறது, வாழ இலை அறுத்து வர்றது, மளிகை சாமான், பந்தின்னு பம்பரமா வேலை செஞ்சேன்.

எல்லாம் நல்லபடியா நடந்துச்சி. மாமாவோட யாஷிகா கேமராவில போட்டோவும் அப்பப்போ எடுத்தேன்னா பாத்துக்கோங்களேன். கடைசியா பொண்ணு அழைப்பெல்லாம் முடிஞ்சு கிடா விருந்தப்போ, எல்லாம் முடிச்சிட்டு இருக்கறப்போ வயசான பாட்டி,

'பரவால்ல, 'பிரவு' (பிரபுங்கறத கொலை பண்ணி அப்படித்தான் கூப்பிடும்) பண்ணுன பாவத்துக்கு பம்பரமா வேலை செஞ்சி பரிகாரம் தேடிகிட்டான்' னு சொல்லவும்,

'ஆஹா, கிழவி இன்னமும் மறக்காமத்தாண்டா இருக்கு நம்மள மாதிரி' ன்னு நினைச்சிட்டேன்.

கொஞ்சம் மாற்றங்களோடு கூடிய மீள் இடுகை...

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

/எல்லாருக்கும் மூஞ்சி செத்து போச்சு. ஏன்னா மணிங்கறவருக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க. மொதல்ல எங்க வீட்டுக்கு வந்துட்டு, அப்புறமா பொண்ணு பாக்க போலாம்னு ஐடியா போலிருக்கு. நான் அந்த மாதிரி கேட்டதும், பொண்ணயே பாக்காம போயிட்டாங்க./

படிக்க தமாஷா இருந்தாலும் இப்படித்தாங்க நம்மாளுங்க. சொன்னா மாதிரி நாளாயின்னாலும் கலியாணமாச்சி. இல்லன்னா அதையும் உங்கள சொல்லிட்டே இருப்பாங்க.

என்ன 2 நாள் கேப் எஃபெக்டா விறு விறுன்னு இருக்கு இடுகை.

jay said...

//வருவாங்கன்னு தெரிஞ்சா ஒரே குஷிதான். பள்ளிகூடம் முடிஞ்ச உடனே பைய வீட்டில போட்டுட்டு மூலை பஸ் ஸ்டாப்புக்கு போயிடுவேன். மாமா கடையில உட்காந்துகிட்டு வர்ற பஸ்ஸெல்லாம் பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

வந்து இறங்கும்போதே ஓடிப்போய் சந்தோஷமா பையையெல்லாம் வாங்கிட்டு தூக்க முடியாம தூக்கிகிட்டு வீட்டுக்கு போய் அவங்க ஒவ்வொன்னா எடுத்து தர.... சத்தியமா அந்த சந்தோஷம் என்னிக்கும் திரும்ப கிடைக்காது.//

true word sir

Prathap Kumar S. said...

ஹஹஹ...நீங்க பண்ணியதை நினைச்சு சிரிக்கவா... அவர் கல்யாணம் தாமதமானதை நினைச்சு பரிதாபபடாவான்னு தெரில. ஆனா அப்படி நீங்க கேட்டதாலதான் அவர் திருமணம் தடைபட்டதுன்னு எல்லாரும் நினைச்சது கஷ்டமாத்தான் இருக்குது.
எப்படியோ கடைசில கல்யாணம் ஆச்சே...

Anonymous said...

//எல்லாரும் எழவுக்கு தானே வந்திருக்கீங்க?'
//

வெவகாரமான கேள்வியாச்சே. பாவம் அவரு.

கலகலப்ரியா said...

//தொன்னூத்தாறுலதான் அவருக்கு கல்யாணம் செட் ஆச்சு.//

தொன்னூத்தாறு வயசிலையா...=))...

கலகலப்ரியா said...

//எல்லாம் முடிச்சிட்டு இருக்கறப்போ வயசான பாட்டி,//

இவங்கதானே பொண்ணு... =))

கலகலப்ரியா said...

சரி சரி... ஜோக் ஒரு பக்கம்... வெவரமான கெழவி... வெவரமான அண்ணா...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/சரி சரி... ஜோக் ஒரு பக்கம்... வெவரமான கெழவி... வெவரமான அண்ணா.../

ம்கும். இது சரி இல்லை. வெவரமான கிழவி. வெவகாரமான அண்ணா. இதாஞ்செரி. என்ன கதிர் சரிதான?

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
/எல்லாருக்கும் மூஞ்சி செத்து போச்சு. ஏன்னா மணிங்கறவருக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க. மொதல்ல எங்க வீட்டுக்கு வந்துட்டு, அப்புறமா பொண்ணு பாக்க போலாம்னு ஐடியா போலிருக்கு. நான் அந்த மாதிரி கேட்டதும், பொண்ணயே பாக்காம போயிட்டாங்க./

படிக்க தமாஷா இருந்தாலும் இப்படித்தாங்க நம்மாளுங்க. சொன்னா மாதிரி நாளாயின்னாலும் கலியாணமாச்சி. இல்லன்னா அதையும் உங்கள சொல்லிட்டே இருப்பாங்க.

என்ன 2 நாள் கேப் எஃபெக்டா விறு விறுன்னு இருக்கு இடுகை.
//
மனச உறுத்திகிட்டே இருந்துச்சி, அவருக்கு கல்யாணம் ஆகற வரைக்கும்.
//
jay said...
//வருவாங்கன்னு தெரிஞ்சா ஒரே குஷிதான். பள்ளிகூடம் முடிஞ்ச உடனே பைய வீட்டில போட்டுட்டு மூலை பஸ் ஸ்டாப்புக்கு போயிடுவேன். மாமா கடையில உட்காந்துகிட்டு வர்ற பஸ்ஸெல்லாம் பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

வந்து இறங்கும்போதே ஓடிப்போய் சந்தோஷமா பையையெல்லாம் வாங்கிட்டு தூக்க முடியாம தூக்கிகிட்டு வீட்டுக்கு போய் அவங்க ஒவ்வொன்னா எடுத்து தர.... சத்தியமா அந்த சந்தோஷம் என்னிக்கும் திரும்ப கிடைக்காது.//

true word sir
//
நன்றி ஜெய்.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ...நீங்க பண்ணியதை நினைச்சு சிரிக்கவா... அவர் கல்யாணம் தாமதமானதை நினைச்சு பரிதாபபடாவான்னு தெரில. ஆனா அப்படி நீங்க கேட்டதாலதான் அவர் திருமணம் தடைபட்டதுன்னு எல்லாரும் நினைச்சது கஷ்டமாத்தான் இருக்குது.
எப்படியோ கடைசில கல்யாணம் ஆச்சே...
//
ரொம்ப சின்ன பையன், எழு வயசு. கும்பலா வந்தத பாத்துட்டு கேட்டுட்டேன். நன்றி பிரதாப்.

//
சின்ன அம்மிணி said...
//எல்லாரும் எழவுக்கு தானே வந்திருக்கீங்க?'
//

வெவகாரமான கேள்வியாச்சே. பாவம் அவரு.
//
இல்லங்க, அவருக்கு நிறைய லவ்வு. கொழுப்புல கல்யாணம் பண்ணாம இருந்தாரு.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//தொன்னூத்தாறுலதான் அவருக்கு கல்யாணம் செட் ஆச்சு.//

தொன்னூத்தாறு வயசிலையா...=))...
//
நக்கல்? அவருக்கு முப்பத்தேழு வயசு அப்போ...

//
கலகலப்ரியா said...
//எல்லாம் முடிச்சிட்டு இருக்கறப்போ வயசான பாட்டி,//

இவங்கதானே பொண்ணு... =))
//
அவரோட சின்னம்மா, அப்பாவோட ரெண்டாவது தாரம்.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
சரி சரி... ஜோக் ஒரு பக்கம்... வெவரமான கெழவி... வெவரமான அண்ணா...
//
அப்படில்லாம் இல்ல, பாசம் கண்ணா மறைக்குது...
//
வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/சரி சரி... ஜோக் ஒரு பக்கம்... வெவரமான கெழவி... வெவரமான அண்ணா.../

ம்கும். இது சரி இல்லை. வெவரமான கிழவி. வெவகாரமான அண்ணா. இதாஞ்செரி. என்ன கதிர் சரிதான?
//
அய்யா, கவுத்ததும் இல்லாம கதிரையும் கூப்பிட்டுக்கிறீங்களே?

Cable சங்கர் said...

ஆனாலும் உங்களுக்கு அபார ஞாபக சக்தி

நையாண்டி நைனா said...

/*பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்.*/

ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...
குருவே... இந்த சிறுவனை, சில நாள், வேலை என்னும் பளு தூக்க வைத்து விட்டனர்... பாவம் அவர்கள் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்து விட்டார்கள். அவர்களை மன்னித்து.. என்னை ஏற்று கொள்ளவும். ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...

Raju said...

அதுக்குத்தான் சொல்றது ஓவர் அறிவு உடம்புக்கு ஆகாதுன்னு..!

Raju said...

\\ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...
குருவே... இந்த சிறுவனை, சில நாள், வேலை என்னும் பளு தூக்க வைத்து விட்டனர்... பாவம் அவர்கள் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்து விட்டார்கள். அவர்களை மன்னித்து.. என்னை ஏற்று கொள்ளவும். ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...\\

அப்படியே...ஒரு 100000000000000000000000000 டாலர்களுக்கு டி.டி. எடுத்து அனுப்பவும்.

பிரபாகர் said...

//
Cable Sankar said...
ஆனாலும் உங்களுக்கு அபார ஞாபக சக்தி
//
அண்ணா வணக்கம், ரொம்ப நன்றி உங்களின் வருகைக்கு.

// நையாண்டி நைனா said...
/*பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்.*/

ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...
குருவே... இந்த சிறுவனை, சில நாள், வேலை என்னும் பளு தூக்க வைத்து விட்டனர்... பாவம் அவர்கள் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்து விட்டார்கள். அவர்களை மன்னித்து.. என்னை ஏற்று கொள்ளவும். ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...
//
சிஷ்யா, தன்யமானோம். தலைமை சிஷ்யர் ராஜுவாநந்தாவிடம் தீட்சை பெற்று ஜோதியில் ஐக்கியமாகவும்.

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
அதுக்குத்தான் சொல்றது ஓவர் அறிவு உடம்புக்கு ஆகாதுன்னு..!
//
நம்ம ஆசிரமத்துக்கும் ஆகாது. (நம்மள அதுக்கு மேல புது வேலையில பேண்ட கழட்டுறாங்க!)

//
♠ ராஜு ♠ said...
\\ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...
குருவே... இந்த சிறுவனை, சில நாள், வேலை என்னும் பளு தூக்க வைத்து விட்டனர்... பாவம் அவர்கள் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்து விட்டார்கள். அவர்களை மன்னித்து.. என்னை ஏற்று கொள்ளவும். ஜெய்.. பிரபானந்தா... (பிரேமானந்தா அல்ல.. அல்ல)...\\

அப்படியே...ஒரு 100000000000000000000000000 டாலர்களுக்கு டி.டி. எடுத்து அனுப்பவும்.
//
சிஷ்யா, பாத்து... பாத்து. என்ன டாலர்னும் சொல்லிடனும், ஜிம்பாப்வே டாலர் அனுப்பிடப் போறாரு!

புலவன் புலிகேசி said...

படிக்கும் போது வடிவேலுவின் அந்த மொட்டை காமெடி நினைவுக்கு வந்தாலும் இத் வருத்தப்பட வேண்டிய விசயம் தான்.

அன்புசிவம்(Anbusivam) said...

படிக்க ரொம்ப நல்லா இருக்கு.. ஒரு நிமிசம் பழசு எல்லாம் கண் முன்னாடி வந்திட்டு போச்சு... எங்க ஆயா அம்மாயி ஞாபகமும் வந்திச்சு..

ஈரோடு கதிர் said...

அடப் பாவி மக்கா. 1....9...78 லியே ஒருத்தர் கல்யாணத்துல மண்ணப் போட்ட பயபுள்ளையா இது....

அந்த வயசிலே என்ன ஒரு வில்லத்தனம்....

அது சரி அப்படியே தம்பிக்கு போன போட்டு இப்போ மணி அவங்க எப்படியிருக்காங்கனு கேளுங்க

மூனு நாளு லீவுல அடுத்த இடுகை போட்ரலாம்

ரோஸ்விக் said...

அறியாத வயசு...புரியாத மனசு ...அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல....

ஆனா, நீங்க ஆயா கொண்டு வர்ற திணிக்கும், காசுக்குமே யாரையாவது சாகச் சொல்லுவீங்க போலயே....:-)) (தமாசு அண்ணா)

உண்மையிலே சொந்தங்கள் வீட்டுக்கு வருவது அவ்வளவு சந்தோசமான விஷயம் தான். நான் கிராம வாழ்க்கைய நல்லவே அனுபவிச்சிருக்கேன்....ஆனா என் புள்ளைங்களுக்கு அது கிடைக்கதோனு வருத்தமா இருக்கு நண்பா....

க.பாலாசி said...

anubavatha ivvalavu dhooram gnabagama ezhuthurathu periya visayam. nalla idugai. (sorry. tamil font work aagala. athan short pinnoottam)

தாராபுரத்தான் said...

சுகமான அனுபவம்,,,

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
படிக்கும் போது வடிவேலுவின் அந்த மொட்டை காமெடி நினைவுக்கு வந்தாலும் இத் வருத்தப்பட வேண்டிய விசயம் தான்.
//
நன்றி புலிகேசி. சில சமயம் சில நினைவுகள் வருத்தமாவும் கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கும், அதுல இதுவும் ஒன்னு.

//
அன்புசிவம் said...
படிக்க ரொம்ப நல்லா இருக்கு.. ஒரு நிமிசம் பழசு எல்லாம் கண் முன்னாடி வந்திட்டு போச்சு... எங்க ஆயா அம்மாயி ஞாபகமும் வந்திச்சு..
//
நன்றிங்க நண்பரே, உங்களின் பகிர்தலுக்கு.

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
அடப் பாவி மக்கா. 1....9...78 லியே ஒருத்தர் கல்யாணத்துல மண்ணப் போட்ட பயபுள்ளையா இது....

அந்த வயசிலே என்ன ஒரு வில்லத்தனம்....

அது சரி அப்படியே தம்பிக்கு போன போட்டு இப்போ மணி அவங்க எப்படியிருக்காங்கனு கேளுங்க

மூனு நாளு லீவுல அடுத்த இடுகை போட்ரலாம்
//
நல்லாருக்காங்க. கல்யாணம்தான் லேட், குழந்த உடனே! பையன் ஸ்கூல படிக்கிறான்.

//
ரோஸ்விக் said...அறியாத வயசு...புரியாத மனசு ...அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல....

ஆனா, நீங்க ஆயா கொண்டு வர்ற திணிக்கும், காசுக்குமே யாரையாவது சாகச் சொல்லுவீங்க போலயே....:-)) (தமாசு அண்ணா)

உண்மையிலே சொந்தங்கள் வீட்டுக்கு வருவது அவ்வளவு சந்தோசமான விஷயம் தான். நான் கிராம வாழ்க்கைய நல்லவே அனுபவிச்சிருக்கேன்....ஆனா என் புள்ளைங்களுக்கு அது கிடைக்கதோனு வருத்தமா இருக்கு நண்பா....
//
அப்போ இந்த மாதிரி கம்யூனிகேஷன் இல்லை. விஷேசம்னாத்தானத்தான் வருவாங்க, நல்லதோ கேட்டதோ! அதான். தொடர்பு என் தாருங்கள் ரோஸ்விக், சந்திப்போம்.

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
anubavatha ivvalavu dhooram gnabagama ezhuthurathu periya visayam. nalla idugai. (sorry. tamil font work aagala. athan short pinnoottam)
//
நன்றி பாலாசி.

//
அப்பன் said...
சுகமான அனுபவம்,,,
//
வாங்க. உங்க முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

ஓஓஒ அவரா நீங்கள்???

ஷங்கி said...

அந்தக் குழாய் ரேடியோ, அதுல சத்தமா ஒலிக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள்... அப்புறம் ரஜினி, கமல், அப்புறம் மாரியம்மா பாட்டு.... அதெல்லாம் ஒரு காலம்!
இப்பல்லாம் sound pollution றாங்க! என்ன பண்ண?!

எனக்கு இன்னும் ஒரு பாட்டு காதுல ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.

“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மேடை” - கமல் பாட்டு.

உங்க அனுபவம் எசகு பிசகான அனுபவம்தான்!

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
ஓஓஒ அவரா நீங்கள்???
//
ஆமாங்க. நன்றி ஞானசேகரன்...

//
ஷங்கி said...
அந்தக் குழாய் ரேடியோ, அதுல சத்தமா ஒலிக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள்... அப்புறம் ரஜினி, கமல், அப்புறம் மாரியம்மா பாட்டு.... அதெல்லாம் ஒரு காலம்!
இப்பல்லாம் sound pollution றாங்க! என்ன பண்ண?!

எனக்கு இன்னும் ஒரு பாட்டு காதுல ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.

“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மேடை” - கமல் பாட்டு.

உங்க அனுபவம் எசகு பிசகான அனுபவம்தான்!
//
நன்றி ஷங்கி... இதெல்லாம் நினைச்சி பாக்க நம்ம தலைமுறைக்கு மட்டும் தான்....

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB